ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 5,373 
 
 

அத்தியாயம்-1

பதினோறு மணி நேரம் கடலில் குளித்து விட்டு தன் சிவந்த மேனியை தண்ணீர் போக சிலிர் த்து விட்டு,மெல்ல தன் தலையை கடல் தண்ணீரில் இருந்து மேலே தூக்கி, வெளியே வந்தான் சூரியன்.

அவன் சிவந்த மேனியில் இருந்து வெளி வந்த கிரணங்களால் தன்னை சுற்றி இருந்த வானம், மேகம்,இவற்றை சிவப்பு மயமாக்கினான்.கடலோரம் இருந்த உயர்ந்த கட்டிடங்களின் கிழக்கு பக்க சுவர்கள் இளம் சிவப்பு நிற வண்ணம் பூசப் பட்டது போல் காணப்பட்டன.பூமியைக் கவ்விக் கொண்டு இருந்த பனி மூட்டம் இனி மேல் நாம் இங்கு இருக்க முடியாது என்று போலீஸ்காரனைக் கண்ட திரு டன் போல் மறைய ஆரம்பித்தது.வெளியே வந்த சூரியன் தன் பயணத்தைச் செய்யத் தொடங்கினான்.

இருள் போய் லேசாக வெளிச்சம் வரவே இரவு நேரத்தை மரக் கிளைகளில் கழித்த பறவை களும்,கட்டிடத்தில் இடுக்கு புரத்தில் இரவை கழித்த பறவைகளும் சத்தம் போட்டுக் கொண்டு வெ ளியே சிறகடித்துக் கொண்டு பறந்து வந்து, இரவு நேரத்தில் இறந்துப் போய் இருந்த ஜந்துகளையும், வெளியே தூக்கி எறியப் பட்ட உணவுப் பொருள்களையும் சாப்பிட அவைகளை தேட ஆரம்பித்தன. சீக்கிரம் போனால் தானே அவைகள் தங்களுக்குக் கிடைக்கும் என்று வேகமாக சிறகடித்து பறந்து வெளியே வந்தன.கூடவே தன் சோம்பேறி இனத்தவர்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டே பறந்துக் கொண்டு இருந்தன.

காலை மணி ஐந்தரை ஆயிற்று.

அலாரம் தன் வேலையை தவறாமல் செய்தது.‘கண’ ‘கண’ வென்று அலறிய அலாரம் சத்தம் கேட்டு கண் விழித்துக் கொண்ட ராமநாதன் அலாரத்தின் தலையில் தட்டி அதை ஓயப் படுத்தினார். சா¢யாக தட்ட வில்லையோ என்னவோ அலார மணி இன்னும் அடித்துக் கொண்டு இருந்தது. ‘இன்னு ம் கொஞ்ச நேரம் தூங்கலாமே’ என்று எண்ணிய ராமநாதன் அலாரத்தை மனதில் திட்டிக் கொண்டே மறுபடியும் அதன் தலையில் தட்டினார்.

அலார மணி அடிப்பது நின்றது.

மெல்ல கண்ணை திறந்துக் கொண்டு எழுந்தார் அவர்.கைகள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று நன்றாக உரசி பிறகு தன் கண்ணில் ஒத்திக் கொண்டார்.

பிறகு கடவுளை நன்றாக வேண்டிக் கொண்டார்.தன் குடும்ப பொறுப்பை செய்தாக வேண்டு மே என்று எண்ணிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கினார்.
செக்கு மாடு மாதிரி தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.அம்மா காலையிலே குளித்து விட்டு,சமையல் கட்டில் சுவாமி மந்திரங்களை மெதுவாகச் சொல்லிக் கொண்டு ‘டிபன்’ செய்துக் கொண்டு இருந்தாள்.ராமசாமி தன் மணைவி விமலா கொடுத்த முதல் ‘டிகாஸ்க்ஷ¡னில்’ இறக்கிய ‘ஸ்ட்ராங்கான ’காபியை ரசித்து குடித்துக் கொண்டு இருந்த போது,வழக்கமாக ‘ஹிண்டு பேப்பர்’ போடும் பையன் ‘ஹிண்டு பேப்பரை’ அவர்கள் வீட்டில் ஏறிந்து விட்டுப் போனான்.

ஒவ்வொரு வீட்டுக்கும் நிதானமாகப் போய் பேப்பரைப் போட அந்தப் பையனுக்கு ‘டயம்’ இல் லையே.கிட்டத்தட்ட அறுபது வீட்டுக்குக் காலையிலேயே போய் அவன் அந்த பேப்ப்ரை போட்டு விட்டுப் போனாலே,அவன் தன் வீட்டுக்கு வந்து குளித்து விட்டு,அம்மா கொடுக்கும் நாஷ்டாவை சாப்பிட்டு விட்டு அவன் பள்ளி கூடத்துக்கு சில நாள் லேட்டாகப் போய்,அவன் வகுப்பு வாத்தியாரிடம் திட்டு வாங்கி வருவது அவனுக்கு பழக்கம் ஆகி விட்டது.

“பேப்பரை நிதானமா ஆத்துக்கு உள்ளே வந்து குடுத்து விட்டுப் போக மாட்டானா அந்தப் பையன்.அவன் போடும் ‘ஹிண்டு பேப்பர்’ ராத்திரி மழைப் பேஞ்ச மழையில்,வாசல் திட்டில் இருக்கும் தேங்கி இருக்கும் ஜலத்தில் நனைச்சுப் போய் இருக்கே.இந்தப் பேப்பரை நான் எப்படி படிப்பது.சுத்த முட்டாப் பையனா இருக்கானே,இந்த பேப்பர் போடும் பையன்.அவன் முதலாளி மாச முதல்லே பேப் பர் பணம் போடும் போது அவர் கிட்டே ‘கம்ப்லெயிண்’ பண்ணணும்”என்று திட்டிக் கொண்டே மெல்ல எழுந்து அந்த ‘ஹிண்டு பேப்பரை’ மெல்ல குனிந்து எடுத்துக் கொண்டு வந்து ‘டைனிங்க் டேபிளீல்’ உட்கார்ந்தார் ராமசாமி.

கையிலே இருந்த ‘ஹிண்டு பேப்பரை ‘டைனிங்க் டேபிளீன்’ மேல் பிரித்து வைத்து ‘பேனை’ ‘புல்’ ஸ்பீடில்’ வைத்து விட்டு மணைவி கொடுத்த மீதி ’காபி’யை ருசித்துக் கொண்டு இருந்தார்.

‘காபி’யை முழுக்கக் குடித்த பிறகு,மெல்ல அவர் ‘பேனின்’ காற்றில் காய வைத்து இருந்த ‘ஹிண்டு பேப்ப்ரை’ கையில் எடுத்து காய்ந்து இருந்த பக்கத்தில் இருந்த செய்திகளை மெல்ல படிக்க ஆரம்பித்தார்.

ராமசாமிக்கு தினமும் காலையிலே ‘ஹிண்டு பேப்பரை’ படிக்கா விட்டால் பயித்தியமே பிடித்து விடும்.சென்னையிலே தினமும் தவறாமல் அன்றைய ‘ஹிண்டு பேப்பரை படிக்கும் பல “பயித்தியங்க ளில்” இவரும் ஒருவர்.

‘பாத் ரூமுக்கு’ ப் போய் தன் பல் தேய்த்து விட்டு,குளித்து விட்டு ஈர டவலைக் இடுப்பில் கட் டிக் கொண்டு சுவாமி படத்தின் முன் இருந்த விபூதியை எடுத்து தன் நெற்றியில் இட்டுக் கொண்டு கைகளை கூப்பிக் கொண்டு கடவுளை வணங்கினார் ராமநாதன்.‘எங்க குடும்பத்துக்கு ஒரு கஷ்டமும் தராம,நல்லா வச்சு வாப்பா,முருகா’ என்று அவர் குல தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு ‘கந்த ஷஷ்டி’ கவசத்தை உரக்கப் படித்துக் கொண்டு இருந்தார்.

ராமநாதன் படுக்கையை விட்டு எழுந்த ஐந்தாவது நிமிஷம் மங்களம் ‘பெட்டில்’ இருந்து மெ ல்ல எழுந்துக் கொண்டு சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு ‘பாத் ரூமுக்கு’ ப் போய் தன் பல் லை தேய்த்து விட்டு,குளித்து விட்டு சுவாமி படத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி விட்டு மாமியாரு க்கு ‘டிபன்’ பண்ண கூட மாட உதவிகள் பண்ணி வந்தாள்.
அவள் மனதில் நேற்று அவன் வேலை செய்து வந்த இடத்தில் நடந்த ‘அமர்களம்’ அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துக் கொண்டு இருந்தது.நேற்று இரவு அதிக நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கணவ னிடம் சொல்லாதது வேறு அவள் மனதை உறுத்திக் கொண்டு இருந்தது.’அவர்’ப்¡£யா’ இருக்கும் போது மெல்ல அவர் கிட்டேயும்,மாமனார்,மாமியார் கிட்டேயும் சொல்லணும்’ என்று துடித்துக் கொண்டு இருந்தாள்.

மங்களம் யோஜனைப் பண்ணினாள்.

’இப்போ அவர் அம்மா குடுக்கும் ‘காபி’யை குடிச்சுட்டு ‘வாக்கிங்க்’ கிளம்புவார்.அவர் தினமும் ‘வாக்கிங்க் போவது அவருக்கு தவறக் கூடாது.’வாக்கிங்க்’ தடைப் பட்டால் அவருக்கு ரொம்ப கோபம் வருமே,நம்ம ‘சமாசாரத்தை’ இப்போ சொன்னா கவனமாகக் கேட்டுக் கொள்ள மாட்டாரே.நமக்கு ஒரு ‘வழியும்’ சொல்ல மாட்டாரே.அவர் ‘வாக்கிங்க்’ போய் வந்த பிறகு சொல்லிக் கொள்ளலம்’ என்று நினைத்து மங்களம் ஒன்னும் சொல்லாமல் அவர் ‘வாக்கிங்க்’ போவதை தடுக்க வில்லை.

‘காபி’யை நன்றாக ஆற்றி விட்டு,அந்த ‘காபி’யை ரசித்து குடித்தார் ராமசாமி.மாமியார் போ ட்டுக் கொடுத்த ‘காபி’ வழக்கம் போல் நன்றாக இருந்தும்,மங்களத்துக்கு அந்த ‘காபி’ அன்று ருசி யே தரவில்லை.

அவள் மனம் அலை மோதிக் கொண்டு இருந்தது.

காபியைக் குடித்து முடிந்ததும் ராமநாதன் வழக்கமாக ‘வாக்கிங்க்’ போவதை ஒரு தினசா¢ வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்தார்

அந்த வழக்கப்படி ராமநாதன் எல்லோர் இடமும் “நான் கொஞ்சம் ‘வாக்கிங்க்’ பண்ணிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு ஒரு பழைய ஷர்ட்டைப் போட்டுக் கொண்டு,ஒரு வாக்கிங்க் அரை டிராயரையும் போட்டுக் கொண்டு,காலில் ‘வாக்கிங்க் ஷ¥ சாக்ஸையும்’ மாட்டிக் கொண்டு மெதுவாக பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவில் ‘பார்க்கு’க்கு ‘வாக்கிங்க்’ செய்ய புறப்பட்டார்.

இருட்டாய் இருந்த பூமியை லேசாக ஒளி மயமாக்கி கொண்டு இருந்தார் சூரிய கடவுள். ராம நாதனுக்குக்கு முன்னால் பலர் அந்த ‘பார்க்கில்’ மங்கிய ஒளியில் நடந்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்களோடு ஒருவராக ராமநாதன் சேர்ந்துக் கொண்டார்.சிலர் வாயை ஊசி போட்டு தைத்தார் போல் ஒன்றும் பேசாமல் நடந்துக் கொண்டு இருந்தார்கள்.

மற்றும் சிலர் அப்போதைய நாட்டு நடப்பைப் பற்றியும்,சிலர் அரசியலைப் பற்றியும்,சிலர் ‘ஷேர் மார்கெட்டை’ப் பற்றியும் தங்களுக்கு தொ¢ந்த விஷயங்களை நண்பர்களோடு பரிமாறிக் கொண்டு நடந்துக் கொண்டு இருந்தார்கள்.

ராமநாதன் யாருடனும் அதிகமாகப் பேச மாட்டார்.மற்றவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு நடந்து வந்தார்.

மங்களம் மாமியார் கொடுத்த ‘காபி’யை யோஜனைப் பண்ணிக் கொண்டு மெல்ல குடித்து முடித்தாள்.

ஐந்து சுற்று நடந்து முடிந்தவுடன்,ராமநாதனுக்கு அன்று தன் ‘பாங்குக்கு’ சீக்கிரமாக போக வேண்டி இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.அவர் தனக்கு தொ¢ந்த நண்பர்கள் சிலா¢டம் சொல்லிக் கொண்டு விட்டு ‘நடந்தது போதும்’ என்று எண்ணி வீட்டை நோக்கி நடந்தார்.ராமநாதன் அன்று முழு ‘வாக்கிங்கை’ப் பண்ணவில்லை.அது அவருக்கு வருத்தம் தான்.
வீட்டிற்கு வந்த ராமநாதன் தன் சோர்வு போக சற்று நேரம் சோபாவில் அமர்ந்தார்.

சற்று நேரம் ஆனதும்,குளிக்கப் போகலாம் என்று அவர் எண்ணி மெல்ல எழுந்த போது மங்க ளம் தன் கணவனைப் பார்த்து “கொஞ்சம் இருங்கோ.நீங்க அப்புறமா குளிக்கப் போகலாம்.நான் நேத் து ராத்திரி பூரா தூங்கலேன்னு உங்களுக்குத் தொ¢யுமோ.நீங்க ராத்திரி ரொம்ப லேட்டா ஆத்துக்கு வந்தேள்.சா¢ இப்போ நம்ப ‘ப்ராப்ளெத்தே’ சொல்ல வேணாம்.காத்தாலே சொல்லிக் கொள்ளலாம்ன்னு நான் சும்மா இருந்துட்டேன்” என்று சொன்னதும் மாமனாரும்,ராமநாதனும் ஒரே சமயத்தில் “ஏன் பத் மா என்ன ஆச்சு,நீ நேத்து ராத்திரி பூரா ஏன் தூங்கலே”என்று கேட்டார்கள்.

மாமியாரும் சமையல் ‘ரூமி’ல் இருந்து வெளியெ வந்து “என்ன சமாசாரம் மங்களம்.என்ன ஆச்சு.ஏன் நேத்து ராத்திரி பூரா நீ தூங்கலே.நீ சமையல் ‘ரூமு’க்கு வந்தப்ப நான் உன் கண்களே கவனிக்கலே.ஒரு வேளை கவனிச்சு இருந்தா,நான் உடனே உன்னே உடனே கேட்டு இருப்பேன்” என்று கா¢சனமாக விசாரித்தாள் விமலா.

உடனே பத்மா “நேத்து எங்க ‘ப்ரான்ச்சிலே’ சாயங்காலம் நாங்க மூனு காஷியரும் ‘கலெக்ஷன்’ ஆன பணத்தை ஆபீஸில் கட்ட வரும் போது ஒரு பத்தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்டா’ இருந்தது.நாங்க மூனு ‘காஷியர்களும்’ ‘திரு’ ‘திரு’ன்னு முழிச்சோம்.எங்க ‘ப்ரான்ச்சிலே’ மொத்தம் மூனு ‘காஷியர்’ தான் வேலை பண்ணோம் நேத்திக்கு.ரெண்டு ‘காஷியர்கள்’ ‘லீவு’ போட்டு இருந்தா.’இன்னைக்கு போய் அந்த ‘ஷார்ட்டை’ எப்படியாவது சா¢ப் படுத்தணும்.எப்படி பத்தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்’ வந்துதுன் னு எங்க மூனு பேருக்கும் தொ¢யலே” ன்று சொல்லும் போது மங்களம் கண்களில் ஒரு கலக்கம் தொ¢ந்தது.

உடனே ராமநாதன் ”அப்படியா மங்களம்.ஏன் அப்படி ஆச்சு.நீங்க மூனு பேரும் ஒன்னா கலந்து பேசி ‘அதை’ எப்படியாவது சா¢ பண்ணுங்க.இந்த சமாசாரத்தே மேலிடம் போகம பாத்து வாங்கோ.மே லிடத்துக்கு தொ¢ஞ்சா நிலைமை மோசம் ஆயிடும்.இது ரொம்ப முக்கியம்”என்று சொன்னார்.

உடனே ராமசாமி “ஆமாம் மங்களம்,ராமு சொல்றது ரொம்ப கரெக்ட்.’காஷ் ஷார்ட்’ எல்லாம் மேலிடத்துக்கு தொ¢ஞ்சா வேலைக்கு ஆபத்தா போயிடும்.நீங்க மூனு பேரும் இதை நன்னா யோஜ னைப் பண்ணி எப்படியாவது நிலைமையை சா¢ பண்ணிடுங்கோ” என்று எச்சாரித்தார். விமலாவும் “நீங்க மூனு காஷியார்களும் கலந்து பேசி எப்படியாவது இந்த ‘ஷார்ட்டை’ சா¢ பண்ணுங்கோ மங்களம். ‘அவர்’ சொல்றா மாதிரி இந்த விஷயம் மேலிடத்துக்கு போகாம பாத்துகோ” என்று அவள் பங்குக்கு சொல்லி விட்டு கவலையுடன் சமையல் வேலையைக் கவனிக்கப் போனாள் விமலா.

சமையல் வேலையைப் பண்ணிக் கொண்டே“அப்பா முருகா,நீ தான் இந்த விஷயத்திலே பத் மாவுக்கு உதவி பண்ணி மங்களத்துக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்கணும்” என்று சொல்லி தன் கன்ன ங்களில் போட்டுக் கொண்டாள் விமலா.

உடனே மங்களம் ”ஆமாம் நாங்க மூனு பேரும் இதைப் பத்தி நேத்தியே யோஜனைப் பண்ணி இருக்கோம்.ஏதாவது பண்ணி நிலமையே சமாளிச்சு ஆகணும்” என்று கவலையுடன் சொன்னாள்,

மங்களம் சொன்னதைக் கேட்டு விட்டு ராமநாதன் குளிக்கப் போனார்.

குளித்து விட்டு சுவாமி அறையில் மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு ‘டைனிங்க் டேபிளில்’ உட்கார்ந்தார் ராமநாதன்.அம்மாவை ‘டிபன்’ கொடுக்க அவசரப் படுத்தினார் அவர்.”கொஞ்சம் இரு ராமு.இன்னிக்கு பாத்து நான் மங்களம் ‘சமாசாரம்’ கேக்க அவசரப் பட்டு,நான் குக்கரை இன்னும் ரெ ண்டு ஓசை விடாம அவசரப் பட்டு அணைச்சுட்டேன்.பொங்கல் சா¢யாவே வேகலே” என்று சொல்லி விட்டு பொங்கலை இன்னும் ரெண்டு ஓசை வர ‘குக்கா¢’ல் வேக வைத்துக் கொன்டு இருந்தாள் விமலா.

ராமநாதன் கோவம் வந்தவனாக “இன்னிக்கு நான் சீக்கிரமா ‘பாங்கு’க்கு போகணும்மா. இன்னி க்கு பாத்து நீங்க ‘டிபனை’ லேட்டா தறேள்.என்னிக்கு நான் சீக்கிரமா பாங்குக்குப் போகனுமோ அன்னைக்கெல்லாம் நீங்க ‘டிபனை’ லேட்டா தறேள்” என்று வெறுத்துக் கொண்டார்.

மங்களம் குளித்து விட்டு வந்தவுடன் வழக்கம் போல் ரமா குளிக்கப் போனாள்.அவள் சீக்கிர மாகக் குளித்து விட்டு தன் ‘யூனிபாரத்தை’ப் போட்டுக் கொண்டு ‘டிபனு’க்காக காத்துக் கொண்டு இருந்தாள்.மங்களம்,தன் பிள்ளைக்கும்,ரெண்டாவது பேத்திக்கும் தட்டில் அவள் பண்ண பொங்கல்
சட்னியைக் கொடுத்தாள்.

ஒரு பத்து நிமிஷம் கழித்து அம்மா கொடுத்த பொங்கல் சட்னியை ‘பர’ ‘பர’ என்று சாப்பிட்டு விட்டு,கைகளை கழுவிக் கொண்டு தன் ரூமுக்கு வேகமாக போய் ஒரு நல்ல ‘பாண்ட் ஷர்ட்’ போட்டு க் கொண்டு,காலில் சாக்ஸ் ஷ¥வை,போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்து தன் ‘ஸ்கூட்டரை’ வெளி யே எடுத்துக் கொண்டு வந்து,அதை ‘ஸ்டார்ட்’பண்ணிக் கொண்டு,அம்மா,அப்பா,மங்களம் மூவருக் கும் ‘பை’ ‘பை’ சொல்லி விட்டு ஆபீசு’க்கு வேகமாக கிளம்பிப் போனார் ராமநாதன்.

மங்களமும் குளித்து விட்டு,சுவாமிக்கு தனக்குத் தொ¢ந்த சில அம்பாள் ‘ஸ்த்தோத்திரங்களை’ எல்லாம் சொல்லி விட்டு,நமஸ்காரத்தை பண்ணி விட்டு மாமியார் கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு ‘ஆபீஸ் விஷயத்தே என்ன பண்ணலாம்’என்று யோஜனை பண்ணிக் கொண்டே தன் ‘ரூமு’ க்குள் போய் ‘டிரஸ் பண்ணிக் கொள்ள ஆரம்பித்தாள்.

நேற்று இரவு தூக்கம் அதிகமாக வந்ததால் தான் ராத்திரி போடாமல் வைத்து இருந்த ‘ஹோம் வர்க்’ கணக்குகளை போட்டு முடித்து விட்டு,தன் பாட புஸ்தகங்களை எல்லாம் ‘ஸ்கூல்’ பையில் எடுத் து வைத்துக் கொண்டு அம்மா குளித்து விட்டு வந்த பிறகு குளிக்கப் போனான் சுதா.

அவளைப் பார்த்து விமலா “ஏண்டி,சுதா,நீ காத்தாலே எழுந்து மீதி ‘ஹோம் வர்க்’ கணக்குகளை போடறே.ராத்திரியே எல்லா ‘ஹோம் வர்க்’ கணக்குகளையும் போட்டுட்டு படுத்துக்கக் கூடாது.காத்தா லே எழுந்து உன் ‘ஹோம் வர்க்கை’ பண்றே” என்று பேத்தியை கோவித்து கொண்டாள் விமலா.

“நான் என்ன பண்ணட்டும்.அந்த ‘ஹோம் வர்க்கை’ப் பண்ணும் போது எனக்கு தூக்கம் தூக்க மா வந்தது.நான் படுத்துக்க போயிட்டேன்.இப்ப காத்தாலே மீதி ‘ஹோம் வர்க்கை’ போட்டுட்டு, என் ‘ஸ்கூல்’ பையில் எல்லா புஸ்தங்களையும் எடுத்து வச்சுண்டு வர கொஞ்சம் லேட்டாயிடுத்து.என்னை பண்ணச் சொல்றே பாட்டி” என்று சொல்லி விட்டு ‘பாத்’ ரூமுக்குள் போய் ‘பாத் ரூம்’ கதவை கோவத் திலே படாரென்று சாத்தினாள் சுதா.

அவள் தலை மறைந்ததும் ’இந்த ‘ஏழாம் ‘க்லாஸ்’ ‘ஹோம் வர்க்கை’ போட்டு முடிக்கறதுள்ளே யே,உனக்கு தூக்கம் வந்துடுத்துன்னா,இன்னும் மேல் ‘க்லாஸ்’ கணக்குகளை இவ எப்படி போட்டு முடிச்சுட்டு தூங்கப் போகப் போறா.’ஒரு பொண் குழந்தை இப்படி சோமபேறித்தனமா இருந்து வரக் கூடாதே.சுதாவுக்கு அப்பா அம்மா கண்டிப்பு இல்லே.ரெண்டு பேரும் செல்லம் குடுத்துண்டு வறா. தினமும் ஏதோ காரணத்தாலே கால்லெ கஞ்சியே விட்டுண்டு ஓடிண்டு இருக்கா ரெண்டு பேரும். ரெண்டு பேரும் கண்டிப்பா இருந்து வந்து பொண் குழந்தையை வளக்க வேணாமோ.அதே ரமா எவ் வளவு சுறுசுறுப்பா இருந்து வறா.அவளேப் பாத்தாவது சுதா கத்துக்க வேணாமோ.பொண் குழந்தை களுக்கு சோம்பேறித்தனம் கூடவே கூடாதே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள்.

‘டிரஸ்’பண்ணிக் கொண்டே’மத்த ரெண்டு பேரும் ஒரு வழியும் சொல்லாட்டா,பேசாம நாம அந் த பத்தாயிரம் ரூபாயை நம்ம ‘அக்கவுண்டில்’இருந்து எடுத்துப் போட்டு சா¢ப் படுத்தி விடலாம்’ என்று முடிவு பண்ணினாள்.வீட்டுக்கு வெளியே வந்து தன் ‘ஸ்கூட்டரை’ வெளியே எடுத்துக் கொண்டு வந்து,அதை ‘ஸ்டார்ட்’ பண்ணி கொண்டு,மாமனார்,மாமியார் இருவருக்கும் ‘பை’ ‘பை’ சொல்லி விட் டு, அவள் வேலை செய்து வரும் ‘ஆபீசு’க்கு வேகமாக கிளம்பிப் போனாள் மங்களம்.
‘ஸ்கூட்டா¢ல்’ போய்க் கொண்டு இருந்த அவள் மனம் இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந் தது.’எப்படியாவது நாம இந்த ‘ப்ராப்லெத்தை’ சமாளிச்சே ஆகணும்’என்று நினைத்தாள்.

சுமதி குளித்து விட்டு ரூமுக்குள்ப் போய் ‘ஸ்கூல் யூனிபாரத்தை’ப் போட்டுக் கொண்டு “பாட்டி,’டிபனை’க் குடுங்கோ நானே இப்ப ரொம்ப லேட்.நீங்க வேறே என்னை இன்னும் ‘லேட்’ பண் ணாதீங்கோ”என்று கத்தினாள்.’அப்பா மிரட்டினான்.போறாததுக்கு இப்போ பேத்தி என்னை மிரட்ட றா’ என்று முணு முணுத்துக் கொண்டே சமையல் ரூமுக்குப் போய் ஒரு எவர் சில்வர் தட்டிலே பொங் கலை யும் சட்னியையும் போட்டுக் கொண்டு பேத்தி சுதாவுக்குக் கொடுத்தாள்.

’கப’ ‘கப’ என்று பொங்கலையும் சட்னியையும் சாப்பிட்டு விட்டு,அப்புறமா பாட்டி கொடுத்த ‘காபி’யையும் குடித்து விட்டு,தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு,‘ஷ¥ சாக்ஸ்ஸை’ப் போட்டுக் கொண்டு,’ஸ்கூல்’ பையை முதுகுப்புறமாக மாட்டிக் கொண்டு,பள்ளி கூடத்திற்கு ஓடினாள் சுதா.

சுதா பள்ளி கூடத்திற்கு கிளம்பிப் போன பிறகு விமலா தன் கணவனிடம் ”இந்த சுதா கிட்டே கொஞ்சம் கூட சுறுசுறுப்பே இல்லே பாத்தேளா.நாளுக்கு நாள் சுத்த சோம்பேறியா ஆயிண்டு வறா” என்று சொன்னதும் ராமசாமி “அம்மா,அப்பா செல்லம்.நாம் என்ன பண்றது.இதோ ரமா சுறு சுறுப்பா இருந்து வறாளே.அவளைப் பாத்து சுதா கத்துக்கக் கூடாதோ.பொண் குழந்தைகளுக்கு பிறவியிலே உடம்பிலே சுறுசுறுப்பு இருக்கணும்.சுதாவுக்கு அந்த சுறுசுறுப்பு இல்லையே” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்.
தன் கணவன் பேச்சில் இருந்த் துக்கத்தை கவனித்தாள் விமலா.உடனே அவள் “ஆமாண்ணா, நீங்க சொல்றது நுத்துக்கு நூறு நிஜம்.அந்த அம்பாள் தான் சுதாவுக்கு இந்த சோம்பேறித்னைத்தை போக்கணும்”என்று தன் ஆதங்கத்தை சொல்லிக் கொண்டாள்.

ராமசாமி ‘ஹிண்டு’ பேப்பரை மடித்து வைத்து விட்டு,விமலா கொடுத்த பொங்கல் சட்னியை சாப்பிட்டு விட்டு “ரெடியா ரமா,நாம ஸ்கூலுக்குக் கிளமபலாமா”என்று கேட்டதும் ரமா “நான் ரொம்ப நேரமாவே ரெடியாத் தான் இருக்கேன்.நீங்க தான் அந்த பேப்பரைப் படிச்சுண்டு இருந்தேள்” என்று சொன்னதும் ராமசாமி வழக்கமாக காய்கறி வாங்கும் பையை எடுத்துக் கொண்டு ரமா கையைப் பிடி த்துக் கொண்டு கிளம்ப தயாரானார்.

“சுதாவுக்கு பண்ணீ வந்த ‘தாத்தா’ வேலையை,மறுபடியும் இப்போ ரமாவுக்கு பண்ண கிளம் பறேன்.குழந்தைகளுக்கு அம்மா அப்பா வேலைக்குப் போயிண்டு இருந்தா இந்த ‘தாத்தாக்களுக்கு’ இந்த வேலையே பண்ணிண்டு வந்து தான் ஆகணும்” என்று அந்த வாரம் தான் ‘நர்ஸா¢’ ஸ்கூலில் சேர்த்த ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு இருக்கும் போது விமலா “வெறுமனே இதெ சொல்லி அலுத்துக்காதீங்கோ.வேலைக்குப் போய் வர பிள்ளை மாட்டுப் பொண்ணு இருக்கிற எல்லா ஆத்லே யும் இந்த ‘பாட்டிகள் ’பண்ற வேலையைத் தான் இன்னும் நானும் தான் பண்ணீண்டு வறேன். என்ன பண்றது.நம்ம கையிலே ‘காபி’’ டிபன்’ கொண்டு வந்து குடுக்கிற ‘ஆமா’ இல்லையே இது. ரெண்டு பொண் குழந்தைகள நன்னா படிக்க வச்சு,துணிகணிகள் வாங்கிக் குடுத்து,அப்புறமா நகை நட்டு எல்லாம் போட்டு ஒரு நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் குடுக்க வேண்டாமா சொல்லுங்கோ. நமக்கும் சாதம் போட்டு,துணி மணிகள் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் அவா ரெண்டு பேருக்கும் இருக்கே.இல்லையா சொல்லுங்கோ” என்று சொல்லி வருத்தப் பட்டாள்

“பாத்தேளா,நீங்கோ சொன்னப்ப நானும் ஏதோ புலம்பிண்டு இருத்தேன்.நல்ல வேளை நான் மறக்கலே.இதோ பாருங்கோ.’ப்ரிட்ஜில்’ இருந்த காய்கறி எல்லாம் தீந்துப் போச்சு.இன்னை சமையலு க்கே காய் ஒன்னும் இல்லே.நா¨ளைக்கு சனிக்கிழமை,குழந்தைகள் ஆத்லே இருப்பா.ஞாயித்துக் கிழ மை மங்களமும்,ராமநாதனும் ஆத்லே இருப்பா.பாவம் அவா ரெண்டு பேரும் வாரம் பூராவும் வெளி யிலே மத்தியான சாப்பாட்டை சாப்பிட்டுண்டு வறா.அதனால்லே நாலு நாளைக்கு ஆறா மாதிரி கொ ஞ்சம் நிறைய காய் கறிகள் வாங்கிண்டு வாங்கோ” என்று சொன்னதும் ராமசாமி “நீ என்னைக்கு என் னை முழுக்க ‘ஹிண்டு பேப்ப்ரை’ படிக்க விட்டே.இன்னைக்கு படிக்க விடறதுக்கு.தினோ ஏதோ ஒன்னு வாங்கிண்டு வரச் சொல்லுவே.இன்னிக்கு காய் கறி,நாளைக்கு,ஏதாவது மளிகை சாமான், அடுத்த நாளைக்கு சுவாமிக்கு தேங்காய் பழம் பூ,இப்படி ஏதாவது சொல்லிண்டு இருக்கே.நான் ஒரு நாள் கூட இந்த ‘ஹிண்டு’ பேப்பரை முழுக்கவே படிக்க முடியறதில்லே” என்று தன் மணைவியைத் திட்டிக் கொண்டே ‘நர்ஸா¢’ பள்ளிக் கூடத்திற்கு மெதுவாகக் கிளம்பிப் போனார்.

மனது கேட்காமல் விமலா தன் கணவனைப் பார்த்து “இதோ பாருங்கோ.காய்கறி பை ரொம்ப கனமா இருந்தா,நீங்க இந்த வெய்யிலெ அந்த பையை தூக்கிண்டு வந்து கஷ்டப் படாதீங்கோ.ஒரு ஆட்டோவை வச்சுண்டு ஆத்துக்கு வாங்கோ.பணம் போனாப் போறது.பையை தூக்கிண்டு வந்து அப்புறமா கையே வலிக்கறதுன்னு சொல்லாதீங்கோ” என்று சொன்னதும் “சா¢,சா¢,நான் பாத்து பண்றே ன்.நீ வீணா கவலைப் பட்டுண்டு இருக்காதே” என்று சொல்லி விட்டு கிளம்பிப் போனார் ராமசாமி.

ரொம்ப நேரம் ஏதோ எண்ணத்தில் மூழ்கி இருந்த விமலா கவனிக்காமல்,அவள் குடிக்க வைத் து இருந்த ‘எவர் சிலவர்’ டம்ளரை கீழே தள்ளி விட்டாள்.நிறைய தண்ணீருடன் இருந்த அந்த ‘டம்ள ர்’ விமலாவின் காலின் மேல் விழுந்து,புடவை அடிப்பாகம் பூராவும் நனைந்து விட்டது.’புடவையை மாற்றிக் கொள்ளலாம்’ என்று நினைத்து அவள் தன் எண்ணங்களில் இருந்து வெளியே வந்தாள்.

பொங்கல்,சட்னி சாப்பிட்டு முடிந்து வெறும் தட்டின் முன்னால் சும்மா உட்கார்ந்து இருப்பது தொ¢ந்ததும்,அவன் சட்டென்று எழுந்துக் கொண்டு மணியைப் பார்த்தாள்.
மணி பதினொன்னரை காட்டியது.

‘இத்தனை நேரமாவா நாம யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தோம்’ என்று நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டே ‘இவ்வளவு நேரம் ஆகியும் காய்கறி கடைக்குப் போன தன் கணவர் இன் னும் வீட்டுக்கு வரவில்லையே’ என்று கவலைப் பட்டு வாசல் கதவைத் திறந்து பார்த்தாள்.

தன் கணவர் ஆட்டோ டிரைவா¢டம் பணத்தைக் கொடுத்து விட்டு தூக்க முடியாமல் ரெண்டு பை நிறைய காய்கறிகளுடன் மெல்ல ஆட்டோவை விட்டு கீழே இறங்கினார்.
உடனே விமலா வேகமாகப் போய் ஒரு காய் கறிப்பையை தன் கணவா¢டமிருந்து வாங்கிக் கொ ண்டு வீட்டுக்குள் வந்தாள்.’இந்த வேகாத வெய்யிலிலே ரெண்டு பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து இருக்கும் கணவரைப் பார்த்து,இப்போ ஒன்றும் கேட்கக் கூடாது’ என்று நினைத்து விமலா கொஞ்ச நேரம் சும்மா இருந்தாள்.
தன் ரூமுக்குப் போய் நனைந்த புடவையை மாற்றிக் கொண்டு வந்து ”நீங்க காத்தாலே பத்து மணிக்கு எல்லாம் ஆத்தை விட்டு காய்கறி கடைக்குக் கிளம்பிப் போனேள்.இப்ப மணி பதினொன்ன ரை ஆறது.ஏன் உங்களுக்கு இவ்வளவு லேட்டாச்சு”என்று நிதானமாகக் கேட்டாள் விமலா.தன் கையி ல் இருந்த காய்கறி பையை வேகமாக கீழே வைத்து விட்டு ஓடிக் கொண்டு இருந்த ‘பான்’ அடியிலே உட்கார்ந்துக் கொண்டு தன் முகத்திலே விழுந்துக் கொண்டு இருந்த வேர்வையை மெல்ல ஒரு துண் டை எடுத்து துடைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

”அந்த அவஸ்தையை ஏன் கேக்கறே விமலா.மார்கட்டிலே இருக்கிற மொத்த மூனு காய்கறி கடையிலே இன்னிக்கு ஒரு கடை தான் திறந்து இருந்தது.ஒரு கடைகாரன் அம்மா திடீர்ன்னு நேத்து ராத்திரி செத்துப் போட்டான்னு கடையே அவன் தொறக்கலே.இன்னொருத்தன் காய்கறி வாங்கிக் கொண்டு வந்த லாரி பாதி வழியிலே ‘பஞ்சர்’ன்னு அவன் கடையே தொறக்கலே.ஒரு காய்கறி கடை தான் தொறந்து இருந்தது.அவன் கடையிலே கூட்டமான கூட்டம்.போறாத குறைக்கு பக்கத்து ரெண் டு காய்கறி கடைகளும் தொறக்கலே ‘இன்னிக்கு நாம சொல்ற விலை தான் எல்லா காய் கறிக்கும்’ என்கிற ¨தா¢யத்திலே அந்த காய் கறிக் கடைகாரன் எல்லா காய் கறிகளுக்கும் விலையே ஏத்தி சொல் லிண்டு இருந்தான்.காய்கறி வாங்க வந்தவாளுக்கும் கடைகாரனுக்கும் வாய் சண்டை வந்து அது அடி தடியா ஆயிடுத்து.மெல்ல ஒரு வழியா அவா எல்லாம் சண்டைப் போட்டு வாங்கிக் கொண்டு போன பிறகு,என்னாட்டம் ஒரு பத்து ‘பெரிசுகள்’ நிதானமா கடைகாரன் சொன்ன விலைக்கே எல்லா காய்கறி களையும் வாங்கி வர ரொம்ப லேட்டாயிடுத்து” என்று வெறுப்புடன் சொல்லி விட்டு தன் ‘ரூமு’க்குப் போய் அவர் போட்டு இருந்த ‘டிரஸ்சை’ எல்லாம் கழட்டி விட்டு குளிக்கப் போனார்.

மணி அதிகம் ஆகி விட்டதே என்று நினைத்து விமலா தன் கணவர் வாங்கிக் கொண்டு வந்த காய்கறிகளை எல்லாம் ‘ப்ரிட்ஜில்’ எடுத்து வைத்து விட்டு,அன்னைக்கு சமையலுக்கு வேண்டிய காய் கறிகளை மட்டும் எடுத்துக் கொண்டு சமையல் ரூமுக்குப் போனாள்.காய்கறிகளை நறுக்கி முடிந் த பிறகு சமையலை சமைக்க ஆரம்பித்தாள் விமலா.ஏதோ யோஜனை பண்ணிக் கொண்டே சமைய லை பண்ணிக் கொண்டு இருந்தாள்.

கணவர் குளித்து விட்டு கொடியிலே மடியாகப் போட்டு இருந்த வேஷ்டியை கட்டிக் கொண்டு, தன் மேல் துண்டைப் போர்த்திக் கொண்டு சுவாமி ரூமுக்குள் போய் மந்திரங்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்.வாசல் ‘காலிங்க் பெல்’ அடித்தது.

‘யார் இந்த நேரத்லே ‘காலிங்க் பெல்லை’ அழுத்தறா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டே, விமலா வாசல் கதவைத் திறந்தாள்.

வாசலில் மாட்டுப் பெண் மங்களம் கண்களில் கண்ணிர் மல்க நின்றுக் கொண்டு இருந்தாள்.

”என்ன மங்களம்,நீ இவ்வளவு சீக்கிரமா ‘ஆபீஸ்’லே இருந்து ஆத்துக்கு வந்து இருக்கே. உனக்கு உடம்பு ஏதாவது சா¢ இல்லையா.நீ அழுதுண்டு வேறே இருக்கே” என்று கலவரத்துடன் கேட்டாள் விமலா.

பாதி மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்த ராமசாமி பூஜை ரூமை விட்டு வெளியே வந்து “என்ன மங்களம், ‘ஆபீஸ்’லே ஏதாவது அமக்களமா.உங்க பண ‘ஷார்ட்’ விஷயம் மேலிடத்துக்கு தொ¢ஞ்சுப் போச்சா.நீ ஆத்துக்கு சீக்கிரமா வந்து இருக்கே” என்று பயத்துடன் கேட்டார்.

மங்களம் நிதானமாக “ஆமாம்ப்பா.நீங்க சொன்னது தான் நடத்து இருக்கு.நான் நேத்திக்கு ஆத்துக்கு வந்தப்புறமா எங்களில் யாரோ ஒருத்தன் ‘சீப் மானேஜர்’ கிட்டே,இந்த பண ‘ஷார்ட்’ விஷயத்தே ரகசியமா சொல்லிட்டு இருக்கான்.நாங்க மூனு பேரும் இன்னிக்கு ‘ஆபீஸ்’ வந்ததும், எங்க ‘சீப் மானேஜர்’ எங்க மூனு பேரையும் கூப்பிட்டு ‘ஏன் நீங்க மூனு பேரும் இந்த பத்தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்டை’ நேத்திக்கே சொல்லலே.நீங்க மூனு பேரும் பண்ணது ரொம்ப தப்பு.சாயங்காலம் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ‘ட்ரெஷா¢லே’ பணம் கட்டுவதிலே பத்தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்’ இருந் தா உடனே என் கிட்டேசொல்ல வேணாமா.அந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை உங்களில் யாராவது ஒருத்தர் தன் வீட்டு செலவுக்குக் கொண்டு போய் செலவு பண்ணி விட்டு,இன்னிக்கு காத்தாலே ‘ஆபீஸ்’க்கு வந்து அந்த ‘ஷார்ட்’ பணத்தை கட்ட முயற்சி பண்ணி இருக்கீங்க.இது ஒரு மன்னிக்க முடியாத ‘ப்ராட் கேஸ்’.உண்மை என்னன்னு தொ¢கிற வரைக்கும் நான் என் அதிகாரத்தை உபயோக ப் படுத்தி நான் உங்க மூனு பேரையும் வேலையிலே இருந்து ‘சஸ்பெண்ட்’ பண்றேன்.’ஹெட் ஆபீ ஸில்’ இருந்து ஒரு ‘விசாரணை குழு’ வந்து உங்க மூனு பேரையும் விசாரிச்சு ஒரு ‘ரிப்போர்ட்’ குடுப்பா ங்க.அந்த ‘ரிப்போர்ர்டின்’ படி தான் நான் ‘ஆக்ஷன்’ எடுக்க வேண்டி இருக்கும்’ என்று கொஞ்சம் கோவமாகச் சொல்லி விட்டு தன் சீட்டுக்குப் போயிட்டார்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணரைத் துடைத்துக் கொண்டாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *