ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 5,654 
 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

ராமசாமி விமலாவை அழைத்துக் கொண்டு அவர் அப்பா அம்மா வீட்டுக்குப் போனார். அப்பா வும் அம்மாவும் மத்தியானம் சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.’சரி, இது தான் நல்ல சமயம் என்று நினைத்து ராமசாமி தான் பண்ணி இருக்கும் யோஜனையை தன் அப்பா அம்மாவிடம் சொன்னார்.

உடனே சுசீலா “ராமு,நீ அப்படி பண்ணனும்ன்னு ஆசைப் பட்டா நாங்க ரெண்டு பேரும் இந்த கிராமத்லே தனியா இருந்துண்டு என்ன பண்ணப் போறோம்.நாங்களும் உன் கூடவே திருவண்ணா மலைக்கு வந்து உன்னோடவும் மாட்டுப் பொண்ணோடவும் இருந்த வரலாமே.ராமு சொன்ன ஐடியா உங்களுக்கு பிடிச்சி இருக்கா.நீங்கோ என்ன சொல்றேள்” என்று தன் கணவன் மார்க்கபந்துவைப் கேட்டாள்.

அவர் உடனே “எனக்கும் ராமு சொன்ன ஐடியா ரொம்ப பிடிச்சு இருக்கு.நாம செல்லமா வளத்த பொண்ணு மரகதம் அவ ‘புக்ககம்’ போயிட்டா.அவ அங்கே சந்தோஷமா இருந்துண்டு வறா.ராமு விமலாவை அழைச்சுண்டு திருவண்ணாமலைக்குப் போயிட்டானா,நாம ரெண்டு பேரும் இங்கே தனி யா இருந்துண்டு வந்து இந்த ’நித்திய கண்டம் பூரண ஆயுசு’ விவசாயத்தை’ நம்பிண்டு எதுக்கு கஷ்டப் பட்டுண்டு வரணும்.அதனால்லே நான் என்ன சொல்றேன்னா,நானும் ராமு சொல்றா மாதிரி என் நிலத்தை எல்லாம் வித்துட்டு,வர பணத்தை ராமு பண்ண ஆசைப் படற ‘பிஸினஸ்லே போட்டுட்டு, அவா கூடவே இருந்து வரலாமே” என்று சொல்லி மனைவி சுசீலா சொன்னதை ஆமோதித்தார்.

உடனே ராமசாமி “அப்பா,நீங்க சொல்றது ரொம்ப நல்ல ஐடியா.நான் என் கிராமத்துக்கு திரும் பிப் போய் எல்லா நிலங்களை விற்க ஏற்பாடு பண்றேன். நீங்களும் உங்க நிலங்களை விறக ஏற்பாடு பண்ணுங்கோ” என்று சந்தோஷமாக சொல்லி விட்டு,சாயங்காலம் அம்மா கொடுத்த ‘காபி’ ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு, தன்னுடைய கிராமத்துகு வந்து சேர்ந்தார்கள் ராமசமியும் விமலாவும்.

ராமசாமி தன் கிராமத்திற்கு வந்து,தான் பண்ணி இருக்கும் ‘ஐடியா’வை குப்புசாமி இடமும் மரகதத்திடமும் சொன்னார்.அவர்கள் இருவரும் ராமசாமி சொன்ன ஐடியாவை ஒத்துக் கொண்டார்கள்.

அடுத்த வாரமே ராமசாமி எல்லா நிலங்களையும்,வீட்டையும் நல்ல விலைக்கு விற்றார்.

குப்புசாமி மரகதம் தம்பதிகளிடம் சொல்லிக் கொண்டு அப்பா இருந்த கிராமத்துக்கு விமலாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் ராமசாமி.

இதற்கிடையில் மார்க்கபந்துவும் தன் நிலங்களை எல்லாம் வந்த விலைக்கு விற்றார்.ராமசாமி வந்தவுடன் அந்த பணத்தை ராமசமியின் கையிலே கொடுத்தார்.
ராமசாமி, தன் பெற்றோர்களையும், மணைவியையும் திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொ ண்டு வந்து வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கினார்.பிறகு ஒரு நல்ல இடமாகப் பார்த்து,தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் போட்டு ஒரு துணிக்கடையை ஆரம்பித்தார்.

ராமசாமியின் துணிக் கடை லாபகரமாக நடந்து வந்தது.

மார்க்கபந்துவும், சுசீலாவும் தங்கள் பிள்ளை மாட்டுப் பெண்ணுடன் அந்த வீட்டிலே சந்தோஷ மாக இருந்து வந்தார்கள்.பிள்ளை நடத்தி வரும் துணிக்கடை நல்ல லாபகரமாக நடந்து வருவதைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அந்த வருஷம் பருவ மழை தவறி லேசான மழை பெய்தால்,குப்புசாமி வசித்து வந்த கிராமத்தி லே இருந்த ஐயர் குடும்பங்கள் வெறுமனே புஞ்சை விவசாயம் செய்து வந்து. அந்த புஞ்சை நிலத்தில் விளையும் விளைச்சலில் வந்த பணத்தில் கூலிகாரர்களுக்கு கூலி கொடுத்து விட்டு குடும்பம் நடத்தி வந்தார்கள்.

சந்தோஷமாக வாழ்ந்து வந்த ராமசமி தம்பதிகளுக்கு அந்த வருடமே ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு மார்க்கபந்துவும்,அவர் மணைவி சுசீலாவும் ‘ராமநாதன்’ என்று பெயர் வைக்க ஆசைபட்டார்கள்.ராமசாமிக்கும்,விமலாவுக்கும் அந்த பெயர் மிகவும் பிடித்து இருந்தால் “எங்க ரெண்டு பேருக்கும் இந்த பேர் ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று ‘கோரஸாக’க் சொன்னார்கள்.

தரகர் மூலமாக விஷயத்தைக் கேள்விப் பட்ட குப்புசாமி, தன் மணைவி மரகதத்தையும் அழை த்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு தன் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார்.பத்தாவது நாள் எல்லோ ரும் குழந்தைக்கு தொட்டில் போட்டு சந்தோஷமாக கொண்டாடினார்கள்.அடுத்த நாள் வாத்தியாரை அழைத்து வந்து புண்யாவசனம் செய்து விட்டு, குழந்தைக்கு ‘ராமநாதன்’ என்று ‘நாமகரணம்’ செய்து சந்தோஷப் பட்டார்கள்.

பிறகு சாப்பிட்டு விட்டு குப்புசாமியும்,மரகதமும் எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு,ஒரு ‘பஸ்ஸை’ப் பிடித்து தங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

நான்கு வருடங்கள் போனதும் குப்புசாமி ஐயர் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு கண்கள் மிக அழகாக இருந்தது.தங்கள் குடும்பத்தில் இனிமேல் எல்லாம் மங்களகரமாக அமையட்டும் என்று ஆசைப் பட்டு குப்புசாமி அந்த குழந்தைக்கு ’மங்களம்’ என்று பெயர் வைக்க ஆசை பட்டு தன் மனைவி இடம் சொன்னார்.

’மங்களம்’என்னும் பெயர் மரகதத்துக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.இருந்தாலும் கணவர் ரொம்ப ஆசைப் படுகிறாரே என்று வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டாள்.
விஷயம் கேள்விப் பட்டு மார்கபந்து தமபதிகள் பிள்ளையையும்,மாட்டுப் பொண்ணையும், குழந் தை ராமநாதனையும் அழைத்துக் கொண்டு குப்புசாமி கிராமத்திற்கு வந்தார்கள்.
குப்புசாமி தம்பதிகள் பத்தாவது நாள் ‘தொட்டில்’ போட்ட விழாவிலும், அடுத்த நாள் அந்த ஊர் வாத்தியார் பண்ணின ‘புண்யாவசனம்,குழந்தைக்கு மங்களம் என்று ‘நாம கரணம்’பண்ன விழாவிலும் கலந்துக் கொண்டு,மத்தியானம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு,திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்கள்.

’நமக்கு அடுத்த ஒரு குழந்தை பொறந்தா,அதுக்கு நாம நமக்கு பிடிச்ச ஒரு பேரே வைக்கலாம்’ என்று தன் மனதில் நினைத்து கொண்டு ‘தனக்கு சீக்கிரமா இன்னொரு குழந்தை பொறக்க வேணும்’ என்று அம்பாளை தினமும் வேண்டிக் கொண்டு மரகதம்.

ராமநானுக்கு ஐந்து வயது ஆனதும்,அவனை திருவண்ணாமலையில் இருந்த ஒரு பணக்காரர் கள் படித்து வரும் ஒரு பெரிய பள்ளிக் கூடத்திலே சேர்த்து படிக்க வைத்தார்கள் ராமசாமி தம்பதிகள்..

ராமசாமி துணிகடையில் வந்த லாபத்தையும் தன்னிடம் இருந்த மீதி பணத்தையும் போட்டு மாடியும் கீழுமாக கடைக்குப் பக்கத்திலேயே,இருந்த ஒரு பெரிய வீட்டைப் பார்த்து விலை பேசி வாங்கினார்.மார்க்கபந்துவும்,சுசீலாவும் தங்கள் பையன் மாடியும் கீழுமாக இருக்கும் ஒரு பெரிய வீட் டை வாங்கி இருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அடுத்த நாளே மார்க்கபந்து வத்தியாரைப் பார்த்து,வாங்கின வீட்டுக்கு ‘கிரஹப்பிரவேசம்’ பண்ண ஒரு நல்ல நாள் பார்க்கச் சொன்னார்.

வாத்தியாரும் பஞ்சாங்கத்தைப் பார்த்து விட்டு அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நாள் மிக நன்றக இருக்கிறது என்று சொன்னார்.அந்த வாத்தியாரையே ’கிருஹப் பிவேசத்துக்கு’ வேண்டிய எல்லா வைதீக சாமான்களை எல்லாம் கொண்டு வரச் சொல்லி விட்டு,காத்தாலே காபி,டிபனும், மத்தியானம் ஒரு நல்ல ‘ஸ்பெஷல் சாப்பாட்டுக்கும் ஒரு சமையல்காரரை ஏற்பாடு பண்ணச் சொன் னார் மார்க்கபந்து.

வாத்தியாரும் மார்க்கபந்து சொன்ன எல்லா ஏற்பாட்டையும் பண்ணுவதாக ஒத்துக் கொண்டார்.

உடனே விமலாவும்,ராமசாமியும் மாக்கபந்துவிடமும்,சுசிலாவிடமும் சொல்லிக் கொண்டு குப்பு சாமியையும்,அவன் குடும்பத்தையும் அவர்கள் வீட்டுக்கு‘கிரஹப்பிரவேசம்’ பண்ணும் ‘பன்ஷனு’க்கு அழைக்க குப்புசாமி இருந்த கிராமத்துக்கு கிராமத்திற்கு ஒரு ‘பஸ்’ ஏறி வந்தார்கள்.

விமலாவையும் ராமசாமியையும் பார்த்த குப்புசாமி “வாங்கோ அத்திம்பேர்,வா அக்கா” என்று சொல்லி வீட்டுக்கு உள்ளே வரவேற்றார்.சமையல் ரூமில் இருந்த மரகதம் ரூமை விட்டு வெளியே வந்து “வா அண்ணா, வாங்கோ மன்னி” என்று சொல்லி அவளும் வரவேற்றாள்.

மரகதம் சமையல் ரூமுக்குப் போய் இருவருக்கும் ‘காபி ‘போட்டுக் கொண்டு வந்து கொடுத் தாள்.விமலாவும் ராமசாமியும் மரகதம் போட்டுக் கொடுத்த ‘காபி’யை ரசித்துக் குடித்தார்கள்.

மரகதம் தன் மன்னி விமலா கட்டிக் கொண்டு இருந்த விலை உயர்ந்த பட்டுப் புடவையும், கழுத்திலே நாலு சங்கிலிகளையும்,காதுகளில் ஜொலிக்கும் வைரத் தோட்டையும், அண்ணா கட்டிக் கொண் டு இருந்த பட்டு மயில் கண் வேஷ்டியையும் கவனிக்கத் தவறவிலலை.

அவளுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தன் மன்னியிடம் சகஜமாக சகஜமாக பழகினாள் மரகதம்.

ராமசாமியும்,விமலாவும் குப்புசமி இடமும்,மரதம் இடமும் கொஞ்ச நேரம் லோகா பிராமமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரமானதும் ராமசாமி குப்புசாமியைப் பார்த்து “குப்பு,நான் துணிகடைக்குப் பக்கத்தி லேயே ஒரு புது வீடு வாங்கி இருக்கேன். அந்த புது வீட்டுக்கு வருகிற ஞாயிற்றுக் கிழமை ‘கிருஹப் பிரவேசம்’ பண்ண முடிவு பண்ணீ இருக்கோம்.நீயும், மரகதமும்,மங்களமும் தவறாமல் அந்த புது வீட்டு ‘கிருஹப் பிரவேசத்திற்கு’ வரணும்” என்று சொல்லி அழைத்தார்.கூடவே ராமசாமி அந்த புது வீட்டு விலாசத்தை குப்புசாமி கிட்டே கொடுத்தார்.

அந்திம்பேர் கொடுத்த விலாசத்தை வாங்கிக் கொண்டார் குப்புசாமி. ராமசமி சொன்ன விஷயத்தைக் கேட்டு மிகவும் குப்புசாமியும் மரகதமும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
இருவரும் “கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.நாங்க நிச்சியமாக ‘கிருஹப் பிரவேசத்திற்கு’ வறோம்” என்று சொன்னார்கள்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ராமசாமியும்,விமலாவும் குப்புசாமி, மங்களம் இருவா¢டமும் சொல்லிக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்கள்.

குப்புசாமி மரகத்தையும்,மங்களத்தையும் அழைத்துக் கொண்டு,அதிகாலையில் கிளம்பும் ‘பஸ்’ ஸில் ஏறி திருவண்ணாமலைக்கு வந்து,ராமசாமி வாங்கி இருக்கும் புது வீட்டு ‘அட்ரஸ்ஸை’ விசாரித் துக் கொண்டு அந்த வீட்டுக்கு வந்துசேர்ந்தர்கள்.

குப்புசாமி குடும்பம் வந்ததுமே மார்க்கபந்துவும்,சுசீலாவும் அவர்களை புது வீட்டுக்கு உள்ளே வரவேற்று,அவர்கள் அப்போது தான் ‘பால் காய்ச்சி’ குடித்த மீதி பாலில் ஆளுக்கு ஒரு ‘டம்ளர்’ பாலை கொடுத்து குடிக்கச் சொன்னார்கள்.குப்புசாமியும்,மரகதமும் மங்களமும்,அவர்கள் கொடுத்த பாலைக் குடித்தார்கள்.

குப்புசாமியும்,மரகதமும் அவர்கள் வாங்கி இருந்த அந்த பெரிய ‘புது வீட்டை’ சுற்றிப் பார்த்தார்கள்.

மாடியும் கீழுமாக இருந்த அந்த வீட்டில் ஐந்து ரூம்கள் இருந்தது.வீட்டை சுற்றி ஒரு தோட்ட மும் இருந்தது.சுசீலாவும்,மன்னி விமலாவும் விலை உயர்ந்த பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டு இருந் தார்கள்.மார்க்கபந்துவும்,அத்திம்பேர் ராமசாமியும் நல்ல சில்க் ஜிப்பா போட்டுக் கொண்டு கையில் ரெண்டு மோதிரங்களுடன் இருந்தார்கள்.மொத்தத்தில் அவர்கள் ஒரு நல்ல பணக்கார வாழக்கையை வாழ்ந்துக் கொண்டு இருந்ததை குப்புசாமியும் மரகதமும் கவனிக்கத் தவறவில்லை.

மரகதத்துக்கு ‘நாம இப்படி ஒரு ரொம்ப சாதாரணமான புடவையைக் கட்டிக் கொண்டு இருக் கோம்.அவரும் ஒரு சாதாரண ஷர்ட்,வேஷ்டி,துண்டோடு வந்து இருக்கார், மங்களத்துக்கும் ஒரு சாதா ரண சீட்டி பாவாடையுடன் வந்து இருக்கோமே’ என்று நினைத்து வெட்கப் பட்டாள்.

சுசீலா வீட்டு ‘கிருஹப் பிரவேசத்துக்கு’ வந்து இருந்த அனைவரும் விலை உயர்ந்த ‘டிரஸ்’க ளைப் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

சமையல் காரர் ‘கிருஹப் பிரவேசத்திற்கு’வந்து இருந்த அனைவருக்கும் காபி,’டிபன்’ பறி மாறினார்.எல்லோரும் மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள். உண்மையிலே சமையல் காரர் போட்ட காபி, ’டிபன்’ ரொம்பவே ‘சூப்பராகவும்’’ ஹெவியாக’வும் இருந்தது.’டிபனு’க்கு நிறைய ‘ஐயிட்டங்’கள் பண்ணி இருந்தார் அந்த சமையல்காரர்.

பத்து நிமிஷம் ஆனதும் வாத்தியார்,தன் சக வாத்தியார் மூன்று பேரை அழைத்துக் கொண்டு வந்து வந்து,அந்த ‘புது வீட்டுக்கு’ கிருஹப் பிரவேசம் கிரமாக பண்ணீ வைத்து விட்டு அவருடைய தக்ஷணையை வாங்கிக் கொண்டு போனார்.

வாத்தியார்,தன் சக வாத்தியார்களை எல்லாம் அழைத்துக் கொண்டு போன பிறகு ஒரு பன்னி ரண்டு மணி அளவில் அந்த சமையல் காரர் ‘கிருஹப் பிரவேசத்திற்கு’ வந்து இருந்த எல்லோருக்கும் நுனி வாழை இலைப் போட்டு அவர் செய்து வந்து இருந்த ‘ஸ்பெஷல்’ சாப்பாட்டை பறிமாரினார்.

எல்லோரும் அந்த ஸ்பெஷல்’ சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள்.பிறகு ‘கிருஹப் பிரவேசத்திற்கு’ வந்தவர்கள் எல்லோரும் கொஞ்ச நேரம் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டார்கள்.

மணி மூனு அடித்ததும் குப்புசாமியும்,மரகதமும்,மங்களமும் விமலா போட்டுக் கொடுத்த ‘காபி’யைக் குடித்தார்கள்.பிறகு மார்க்கபந்துவும் சுசீலாவும் கொடுத்த ‘கிருஹப் பிரவேச’ தாம்பூல த்தை வாங்கிக் கொண்டு,எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு, மணைவியையும்,மகளையும் அழைத் துக் கொண்டு ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து சேர்ந்தார் குப்புசாமி.
அது வரை பொறுமையாய் இருந்த மரகதம் வெடிக்க ஆரம்பித்தாள்.

தன் கணவனைப் பார்த்து “அவா வாங்கி இருக்கும் புது ஆத்தைப் பாத்தேளா.நம்ம ஆம் எங்கே, அவா ஆம் எங்கே.மாடியும் கீழுமா ஐஞ்சு ரூம் இருக்கு.ஆத்தை சுத்தி ஒரு தோட்டம் இருக்கு.அந்த மாதிரி ஒரு ஆம் நம்மாலே வாங்க முடியுமா சொல்லுங்கோ.சம்மந்தி மாமியும்,மன்னியும் கட்டிண்டு இருந்த பட்டுப் புடவையைப் பாத்தேளா.குறைஞ்ச பக்ஷம் ஒரு எட்டாயிரம் ரூபாயாவது இருக்கும் அந் த பட்டுப் புடவைகள் விலை.அத்திம்பேரும்,சம்மந்தி மாமாவும் போட்டுண்டு இருந்த சில்க் ஜிப்பாவை ப் பாத்தேளா.அவா ரெண்டு பேருடைய விரல்களிலும் போட்டுண்டு இருந்த மோதிரங்களைப் பாத்தே ளா.அவா ஆத்து ‘கிருஹப் பிரவேசத்துக்கு’ வந்து இருந்த பொம்மணாட்டிகள் எல்லாம் விலை ஒசந்த பட்டுப் புடவை தான் கட்டிண்டு இருந்தா.நாம மூனு பேரும் தான் என்னமோ ரொம்ப பரம ஏழையைப் போல ‘டிரஸ் பண்ணிண்டு இருந்தோம்.உங்க அம்மாவும் அப்பாவும் பண்ணது ரொம்ப பெரிய தப்பு. அவா சொத்து பூராத்தையும் ‘பிள்ளையான’ உங்களுக்கு முழுக்க எழுதி வக்க வேணாமா.என்னமோ பிள்ளைக்கு பாதி,பொண்ணுக்கு பாதின்னு ஒரு ‘உயில்’ வேறே எழுதி வச்சிட்டு,ரெண்டு பேரும் பர லோகம் போயிட்டாளே.இப்ப அவாளைப் போய் நாம ஏதாவது கேக்க முடியுமா” என்று தான் நின்றுக் கொண்டு இருப்பது ஒரு ‘பஸ் ஸ்டாண்டு’ என்று கூட பார்க்காமல் கத்தினாள் மரகதம்.

உடனே குப்புசாமி “மரகதம்,நாம் இப்போ நிக்கற இடம் ஒரு ‘பஸ் ஸ்டாண்டு’ன்னு உனக்கு ஞாபகம் இல்லையா.இங்கேயே உன் கோவத்தை எல்லாம் இப்படிக் கொட்டிண்டு இருக்கியே.வா,நாம ஆத்துக்கு போய் எல்லாத்தையும் நிதானமா பேசலாம்” என்று சொல்லி தன் மணைவி மரகதத்தை பேசாமல் இருந்து வரச் சொன்னார்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லே.என் வாயை அடைச்சிடுங்கோ.அது ஒன்னு தான் உங்க ளாலே முடியும்.நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்.உங்க அப்பா அம்மா பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான்.அவா சொத்தெ பிரிச்சது சரியே இல்லே”என்று சொல்லிக் கொண்டு இருக் கும் போது,அவர்கள் கிராமத்திற்கு போக வேண்டிய ‘பஸ்’ வந்து விடவே எல்லோரும் பஸ் ஏறினார்கள்.

வீட்டுக்கு வந்ததும் குப்புசாமி ‘மரகதம் விடாம சண்டை போடுவா, அதை தன் குழந்தை மங்களம் பாக்க வேணாம்’ என்று நினைத்து மங்களத்தை விளையாட அனுப்பி விட்டார்.

மரகதம் தன் கணவனைப் பார்த்து “’பஸ் ஸ்டாண்டிலே’ என்னமோ சொல்லி என் வாயை அடை ச்சேளே.இப்போ சொல்லுங்கோ.உங்க அம்மா அப்பா பண்ணது தப்பு தானே.பூரா சொத்தையும் உங்க ளுக்குத் தானே அவா ரெண்டு பேரும் எழுதி வச்சு இருக்கணும்” என்று மறுபடியும் சொத்து விஷயத் தைப் பற்றீ பேசினாள் மரகதம்.

குப்புசாமிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அவர் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார்.கொஞ்ச நேரம் போனதும் தன் அம்மா அப்பாவை விட்டு க் கொடுக்காமல் “மரகதம்,அந்த பெரிய ஆத்தை,அத்திம்பேர் தன் துணிக் கடையிலே வந்த லாபத்தை யும்,அவா அப்பா அம்மா ஊர்லே இருந்து அவா நிலத்தை வித்த வந்த பணத்தையும்,போட்டு தான் வாங்கி இருக்கார்.என் அம்மா அப்பா குடுத்த ‘பங்க்லே’ வந்த பணத்திலே வாங்கலே” என்று சொன் னாரே ஒழிய அவருக்கும் உள்ளுர ‘அம்மா,அப்பா அவா சொத்து பூராத்தையும் தனக்குத் தான் எழுதி வச்சு இருக்கணும்’ என்று மனதிலே பட்டது.

“ஏதோ பூசி மொழுகாதீங்கோ.நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்.ஊர் உலகத்லே எல்லா அம்மா,அப்பாவும் சொத்து பூராத்தையும் பிள்ளைக்கு தான் எழுதி வப்பா.உங்க அம்மா அப்பா தான் ‘புதுசா’ இப்படி எழுதி வச்சுட்டுப் போய் இருக்கா.நம்ம காலத்துக்கு அப்புறம,நாம நம்ம பூரா சொத்தை யும்,நமக்கு பொறக்கப் போற பிள்ளைக் குழந்தைக்குத் தானே எழுதி வக்கணும்.இல்லையா சொல்லுங்கோ” என்று விடாமல் சண்டைப் போட்டு வந்தாள் மரகதம்.

குப்புசாமி மரகதத்தைப் பார்த்து “ஏதோ நடந்தது நடந்து போச்சு.அவா ரெண்டு பேரும் இப்போ உயிரோடு இல்லே.ஒரே நாள்ளே இந்த லோகத்தே விட்டு போய் சேந்துட்டா.இப்ப அவா பண்ணது தப் பா,சரியான்னு அலசி பாக்கறதிலே என்ன் லாபம் சொல்லு.எனக்கும் ஒரு விதத்லே நீ சொல்றது ரொம் ப நியாயம்ன்னு தான் படறது.நீ சொல்றா மாதிரி,நம்ம காலத்துக்கு அப்புறமா,நம்ம சொத்து பூராவும் நமக்குப் பொறக்கப் போற பிள்ளைக் குழந்தைக்கு தான் சேரணும்ன்னு நாம உயில் எழுதி வைக்கணும் அது தான் முறை.நியாயமும் கூட.நான் இல்லேலன்னு சொல்லலே.ஆனா இது வரைக்கும் அந்த பக வான் இன்னும் கண்ணேத் தொறக்கலையே அவர் கண்ணைத் தொறந்து நமக்கு ஒரு பிள்ளைக் குழந் தையை அனுக்கிஹம் பண்ணனும்.அப்படி பண்ணலேன்னா,நாம நம்ம சொத்தே மங்களத்துக்குத் தானே எழுதி வக்கணும்.இல்லையா சொல்லு” என்று கேட்டார்.

”எப்பவும் உங்களுக்கு அவசர புத்தி தான்.அந்த பகவான் கண்ணேத் தொறந்து நிச்சியமா பாப் பார்.நமக்கு ஒரு பிள்ளைக் குழந்தே நிச்சியமா பொறக்கும்.நம்ம சொத்தே அந்த பிள்ளை குழந்தைக்கு த் தான் நாம எழுதி வக்கணும்.மங்களத்துக்கு இல்லே.அவ கல்யாணம் பண்ணீண்டு வேறே ஆத்துக் குப் போகப் போற பொண்ணுங்கறது உங்களுக்கு ஞாபகம் இருக்கட்டும்” என்று அடித் தொண்டையில் கத்தினாள்.

உடனே குப்புசாமி “சரி, மரகதம்.நீ சொல்றா மாதிரி பகவான் கண்ணேத் தொறந்து, நமக்கு ஒரு பிள்ளைக் குழந்தையைக் குடுத்தான்னா,நாம நம்ம சொத்தே அந்த பிள்ளைக் குழந்தைக்கே சொந்தம் ன்னு எழுதி வச்சிடலாம். நீ இப்போ நிம்மதியா இருந்து வா” என்று சொன்னதும்,மரகதம் மனம் சமாதா னப் பட்டவளாக சண்டை போடுவதை நிறுத்திக் கொண்டு தான் கட்டிக் கொண்டு பட்டுப் புடவை யை மாற்றிக் கொள்ளப் போனாள்.

அம்மா அப்பா பண்ணது ‘ரொம்ப தப்பு’ என்று அவருக்கு தெரிந்தாலும்,அவரால் இப்போது ஒன்னும் செய்ய முடியாதே.குப்புசாமி ஒரு பெரு மூச்சு விட்டார்.

அவரால் இப்போது அது ஒன்று தானே செய்ய முடியும்!!.

அன்றில் இருந்தே மரகதம் குப்புசாமி இருவருக்கும்,விமலா ராமசாமி குடும்பத்தின் மேல் ஒரு பொறாமை வளர்ந்து வர ஆரம்பித்தது.

ஐந்து வயது ஆனதும் மங்களத்தை அந்த ஊரில் இருந்த ‘எலிமெண்டா¢’ பள்ளி கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தார்கள் குப்புசாமி தம்பதிகள்.

மங்களம் பிறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குப்புசாமி தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை இருவரும் ‘நமக்கு ‘ஆசை’க்கு ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டாள்,ஆனால் ‘ஆஸ்தி’ க்கு ஒரு பிள் ளை குழந்தை பிறக்கவில்லையே’ என்று மிகவும் ஏங்கி வந்தார்கள்.

குப்புசாமி அதிகமாக கோவிலுக்குப் போக மாட்டார்.எப்போதாவது பண்டிகை நாட்களில் மட்டு ம் அந்த ஊர் கோடியில் இருந்த சிவன் கோவிலுக்கு,தன் மணைவி மரகதத்தையும் அழைத்துக் கொ ண்டு போய் தங்களுக்கு மங்களம் பிறந்த பிறகு இன்னும் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லையே என்று மனம் உருகி வேண்டிக் கொண்டு வந்தார்.தன் கணவன் மற்ற நாட்களில் கோவிலுக்கு வராவிட்டாலு ம் மரகதம் தவறாமல் தினமும் அந்த சிவன் கோவிலுக்குப் போய் சிவனை ‘தங்களுக்கு இன்னும் ஒன் னோ ரெண்டொ குழந்தைகள் பிறக்க வேண்டும்’ என்று வேண்டி வந்தாள்.

அந்த காலத்தில் வாழ்ந்து வந்த அனைவரும்,தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் மருத்துவரீதியாக ‘தங்களுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை’ என்பதை ஆராயமல் வெறுமனே கட வுளைத் தான் வேண்டி வந்துக் கொண்டு இருந்தார்கள்.

குப்புசாமியும், மரகதமும் அதற்கு விதி விலக்கு இல்லையே!!.அவர்களும் கடவுளைத் தான் வேண்டிக் கொண்டு வந்தார்கள்.

மரகதம் தன் கணவனையும்,மங்களத்தையும் அழைத்துக் கொண்டு ராமேஸ்வாரம் போய், சமுத் திர ஸ்நானம் செய்து விட்டு ராமநாத ஸ்வாமியையும் அம்பாளையும் வேண்டிக் கொண்டு வந்தாள். வாதியாரை வீட்டிற்கு வரவழைத்து,நிறைய பூஜைகள்,விரதங்கள் எல்லாம் எல்லாம் செய்து வந்து பக வானை தினமும் வேண்டி வந்தாள்.

மார்க்கபந்துவும்,சுசிலாவும் தங்கள் பையன் மாட்டு பெண்ணுக்கு ராமநாதன் பிறந்து நாலு வரு ஷம் ஆகியும் அடுத்த குழந்தை பிறக்கவில்லையே என்று கவலைப் பட்டு,குப்புசாமி மரகதம் செய்து வந்தது போலவே ராமேஸ்வாரம் போய்,சமுத்திர ஸ்நானம் செய்து விட்டு ராமநாத ஸ்வாமியையும் அம் பாளையும் வேண்டிக் கொண்டு வந்தாள்.

வாத்தியாரை வீட்டிற்கு வரவழைத்து,நிறைய பூஜைகள்,விரதங்கள் எல்லாம் எல்லாம் செய்து வந்து பகவானை தினமும் வேண்டி வந்தார்கள்.கவலையும் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

மார்க்கபந்துவும், சுசீலாவும் ‘அந்த காலத்து’ வழக்கத்துக்கு விதி விலக்கு இல்லையே!!.

ராமசாமி விமலாவுக்கு ராமநாதன் பிறந்த பிறகு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை.

’இந்த ஜென்மத்திலே நமக்கு பகவான் ராமநாதனுக்கு அப்புறமா இன்னொரு குழந்தை பாக் கியம் தரலையே’ என்று ராமசாமியும் விமலாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.
நால்வரும் ’அது வரைக்கும் நாம வேண்டி வந்த பகவான்,நம்ம ‘வம்சம்’ தழைக்க ஒரு பேரனை யாவது கொடுத்தானே’ என்று நினைத்து தங்களை தேற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

கொஞ்ச நாள் ஆனதும் மார்க்கபந்துவும்,சுசீலாவும் பத்ரிநாத்,கேதார்நாத் பார்த்து வர ஆசை பட்டார்கள்.ஒரு நாள் தங்கள் ஆசையை பிள்ளை மாட்டு பொண்ணிடம் இருவரும் சொன்னார்கள். உடனே ராமசாமி சென்னைக்குப் ‘போன்’ பண்ணீ ‘கேதார் நாத்,பத்ரி நாத் டூர்’ அழைத்துப் போகும் ஒரு யாத்ரா சர்வீஸ் மானேஜர் கிட்டே தன் அம்மா அப்பா பேர் வயசு எல்லாவற்றையும் சொல்லி ரெண்டு ‘சீட் புக்’ பண்ணி விட்டு அந்த மானேஜர் சொன்ன பணத்தை ஒரு ‘ட்ராப்டா’ வாங்கி அனுப்பினார்.

அப்பா அம்மா பத்ரிநாத்,கேதார்நாத் போய் வர வேண்டிய எல்லா குளிர் உடைகளும் வாங்கிக் கொடுத்தான்.மார்க்கபந்துவும்,சுசீலாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
அவர்கள் இருவரும் ‘நாம கேதார் நாத், பத்ரிநாத் போய், அந்த சிவனை நன்னா தா¢சனம் பண்ணீட்டு ராமநாதனுக்கு சீக்கீரமா ஒரு பொண் குழந்தை பொறக்கணும்’ என்று வேண்டிக் கொண்டு வரணும் என்று ஆசைப் பட்டார்கள்.

சென்னையிலே இருந்து ‘டூர்’ ஆரம்பிக்கும் முன் தினம்,ராமசாமி ஒரு காரை சென்னைக்கு ஏற்பாடு பண்ணினார்.அப்பா கையிலே ஒரு பத்தாயிரம் ரூபாயையும் கொடுத்து “ரெண்டு பேரும் ஜாக்கிற தையா போய், சௌக்கியமா திரும்பி வாங்கோ” என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார்கள் ராமசமியும்
விமலாவும்.

”நாங்க ஜாக்கிறதையா போயிட்டு,சௌக்கியமா திரும்பி வறோம்.நீங்க கவலைப் படாம நிம்மதி யா இருந்துண்டு வாங்கோ” என்று மார்க்கபந்துவும் சுசீலாவும் சொல்லி விட்டு காரில் ஏறி சென்னைக்கு வந்தார்கள்.

அடுத்த நாள் அந்த ‘டூர் சர்வீஸ்’ நடத்தும் கம்பனி பணம் கட்டின அத்தனை யாத்ரிகர்களையும் அழைத்துக் கொண்டு சென்னையில் இருந்து புது டில்லிக்குப் போகும் ஏற்றீக் கொண்டு கிளம்பினார்.

மார்க்கபந்துவும் சுசீலாவும் கேதார்நாத போகும் போது அவர்கள் பிரயாணம் பண்ன ‘பஸ்’ ஒரு 200 அடி ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விட்டது.விஷயம் கேள்விப் பட்ட அந்த ‘யாத்ரா சர்சீஸ்’ மானேஜர் புது டில்லிக்குப் போன் பண்ணி தன்னுடைய ‘ப்ரான்ச்சில்’இருந்த மானே ஜருக்கு போண் பண்ணி விஷயத்தை சொன்னார்.அந்த ‘ப்ரான்ச்சு’ மானேஜர் ஒரு ‘ஹெலிகாப்டர்’ ஏற்பாடு பண்ணி,அதில் போய் அந்த ‘பஸ்’ விழுந்த இடத்தைத் தேடினார்.அவர் முழுக்க தேடியும் அந்த ‘பஸ்ஸில்’ பிரயாணம் செய்த ஒரு ‘யாத்ரிகர்’ உடல் கூட கிடைக்க வில்லை.அந்த மானேஜர் ‘பஸ் ஸில்’ போன எல்லா ‘யாத்ரிகர்களும்’ இறந்து போய் இருப்பார்கள் என்று முடிவு பண்ணி,சென்னைக்கு ‘’போன்’ பண்ணீ அந்த துக்க சமாசாரத்தை சொன்னார்.

உடனே ‘யாத்ரா சர்வீஸ்’ நடத்தி வந்த மானேஜர் ராமசமிக்கு ஒரு தந்தி கொடுத்து இந்த துக்க செய்தியை தெரிவித்தார்கள்.

தந்தியைப் படித்த ராமசாமியும் விமலாவும் கதறி கதறி அழுதார்கள்.

“இன்னும் ஒரு குழந்தை வேனும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டா அம்மாவும் அப்பாவும்.ஆனா எனக்கு எவ்வளவு வேண்டி வந்தும் இன்னொரு குழந்தை பொறக்கவே இல்லே.நாங்க சௌக்கியமா தரும்பி வறோம்,என்னையும்,விமலாவையும் நிம்மதியா இருந்து வர சொன்னா,ஆனா அவா திரும்பி யே வரலையே.அவா முகத்தே கூடஎங்களாலே பாக்க முடியலையே” என்று தன் தலையிலே அடித்து க் கொண்டு அழுதார் ராமசாமி. தன் கணவனுடன் விமலாவும் அழுதுக் கொண்டு இருந்தாள்.

கேதார்நாத்,பத்ரிநாத் ‘க்ஷத்ராடனம்’ பண்ணப் போன மார்க்கபந்துவும்,சுசில்லாவும் இப்படி அகாலமாக இறந்துப் போன விஷயம் கேள்விப் பட்ட குப்புசாமி தம்பதிகள் ’இந்த மாதிரி சமயத்லே, நாம போய் துக்கம் விசாரிக்காம இருக்க கூடாது’ என்று நினைத்து,உடனே ‘பஸ்’ ஏறி,திருவண்ணா மலைக்கு வந்து இருவரையும் துக்கம் விசாரித்து விட்டு,அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு,பதி மூன்று நாளைக்கு அவர்கள் கூட இருந்து விட்டு,பிறகு தன் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆறு வருடங்கள் கழித்து,குப்புசாமி தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

விஷயம் கேள்விப் பட்ட ராமசமியும்,விமலாவும்,ராமநானும் குப்புசாமி இருந்து வந்த கிராமத்தி ற்கு வந்து, ‘தொட்டில் போடும் விழா,‘புண்யாவசனம்’ ‘நாமகரணம்’ பண்ணும் விழா எல்லாவற்றுக்கும் இருந்து விட்டு,ரெண்டு நாளும் சாப்பிட்டு விட்டு,அடுத்த நாள் மூவரும் திருவண்ணாமலைக்கு கிளம்பிப் போனார்கள்.

அந்த ஆண் குழந்தைக்கு ‘ரகுராமன்’ என்று பெயர் வைத்து குப்புசாமி தம்பதிகள் மிகவும் செல் லமாக வளர்த்து வந்தார்கள்.ரகுராமனுக்கு ஐந்து வயது ஆனதும் அவனை மங்களம் படித்துக் கொண்டு வந்த பள்ளீக் கூடத்திலே சேர்த்தார் குப்புசாமி.

இருவரும் ஒன்றாகப் பள்ளிகூடம் போய் நன்றாக படித்துக் கொண்டு வந்தார்கள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *