என் பொண்ணு தலை எழுத்தே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 5,029 
 
 

“ராணீ,நான் உன் கிட்டே எத்தினி தடவை சொல்லி இருக்கேன் கவனமா இருன்னு. நீ இப்படி பண்ணிக்கிட்டு வந்து நின்னா,நான் என்ன பண்றது. வர ‘கஸ்டமர்ங்க’ உன்னை வேணாம்ன்னு தானே சொல்வாங்க.நீ எனக்கு காலணா கூட சம்பாதிச்சுத் தராம இருந்தா,உனக்கு தண்ட சோறு போட நான் என்ன தர்ம சத்திரமா இங்கு வச்சு இருக்கேன்” என்று கத்தினாள் விடுதியின் ‘அக்கா’.

“எனக்குத் தெரியாம தப்பு நடந்துப் போச்சு.நான் ஏமாந்து போயிட்டேன்க்கா” என்று தன் தலை யை தொங்கப் போட்டுக் கொண்டு பதில் சொன்னாள் ராணீ.

”நான் இனிமே ஒன்னே இங்கே வச்சுக்க முடியாது” என்று பிடிவாதமாகச் சொன்னாள் ‘அக்கா’.

”இப்படி சொன்னா எப்படி அக்கா,நான் எவ்வளவு வருஷமா உங்கக் கிட்டே இருக்கேன்…” என்று சொல்லி விட்டு அழுதாள் ராணீ.

கொஞ்சம் மனம் இளகியது ‘அக்கா’வுக்கு.

”சரி,நான் ஒரு ஆயிரம் ரூபாய் உனக்கு ‘அட்வான்ஸா’த் தறேன்.நீ இந்த குழந்தையை பெத்துக் கிட்டு,அந்த குழந்தையை எங்காவது ஒரு அனாதை இல்லத்லே வுட்டுட்டு,உன் உடம்பே பழையபடி ‘சிக்’ன்னு வச்சுக்கிட்டு,மறுபடியும் இங்கே ‘தொழில்’ பண்ண வா.நான் உன்னை இங்கே மறுபடியும் வேலைக்கு வச்சுக்கிறேன்.என்ன புரிதா” என்றாள் ‘அக்கா’.
அவள் குரலில் கண்டிப்பு தெரிந்தது.”சரி அக்கா நான் அப்படியே செய்றேன்” என்று சொல்லி விட்டு அக்கா கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு விடுதியை விட்டு வெளியே வந்தாள் ராணீ.

பல வருஷங்களுக்குப் பிறகு வெளி உலகத்தை பார்த்தாள் ராணீ.

’நாம எங்கு போறது, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவது,எப்படி இந்தக் குழந்தையேப் பெத்துக்க றது.அப்புறமா பொறந்த குழந்தையே எங்கே விடறது’ போன்ற பல கேள்விகள் ராணீயின் தலையில் ஓடியது.

ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

நேரே கடை வீதிக்குப் போய் அக்கா கொடுத்த பணத்தில் ஒரு தாலி கயிற்றை வாங்கினாள். மறைவான ஒரு இடத்திற்குப் போய் தன் கழுத்திலே அந்த தாலியைக் கட்டிக் கொண்டாள் ராணி.

மாத கோவில் மணி பன்னண்டு அடித்து ஓய்ந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் ராணீ நேராக மாதா கோவிலுக்குப் போனாள்.

அப்போது எதிரே தனியாக வந்த ஒரு சிஸ்டரைப் பார்த்து “சிஸ்டர் எனக்கு நீங்க ஒரு உதவி பண்ண முடியுமா”என்று தயக்கத்துடன் கேட்டாள் ராணீ.ராணீயை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ”சொல் லுமா,உனக்கு என்ன உதவி வேணும்” என்று கேட்டாள் சிஸ்டர் நிர்மலா.

சிஸ்டர் ¨தா¢யம் அளிக்கவே ராணீ மெதுவாக “என் பேர் மல்லிகாங்க.நான் இன்னிக்கு காலை வரைக்கும் விழுப்புரத்லே இருந்து வந்தேனுங்க.என் புருஷன் என் கிட்டே பணம் கேட்டு தொல்லைக்குடுத்து இட்டு இருந்தாரு.தினமும் குடிச்சுட்டு வந்து அடிச்சு கிட்டு இருந்தாரு.அதை எல்லாம் தாங்க முடியா¡ம கஷ்டப்பட்டு வந்தேங்க.எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போசுங்க.நான் மனம் உடைஞ்சுப் போய் விழுப்புரத்தை விட்டு இங்கு ஓடிவந்துட்டேன்.நான் முழுகாம வேறே இருக்கேன் சிஸ்டர்.நீங்க தாங்க என்னை காப்பாத்தணும்” என்று சொல்லி விக்கி விக்கி அழுதாள்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சிஸ்டர் “அழாதே,மல்லிகா.நான் உனக்கு எல்லா உத விகளும் பண்றேன்.என்னுடன் வா” என்று சொல்லி விட்டு ராணியை அழைத்துக் கொண்டு போய் ராணியின் கஷ்டத்தையும்,அவ முழுகாம இருப்பதையும் ‘மதர் சுபீ¡£யர்’ கிட்டே விளக்கி சொன்னாள் சிஸ்டர் நிர்மலா.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின ‘மதர் சுபீரியர்’”சரி இந்த பெண்ணே,அவளுக்கு பிரசவ ம் ஆகும் வரை உன்னோடு வச்சுக்க.செலவுக்கு வேண்டிய பணத்தை நான் சொன்னேன்னு சொல்லி ‘ஆபீஸி’ல் இருந்து வாங்கிக்க” என்று சொன்னார் ‘மதர் சுபீரியர்’.

ராணீயை தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்,அவளுக்கு தங்க ஒரு இடம் கொடுத்தாள் சிஸ்டர் நிர்மலா.

மூன்று மாதம் சர்ச்சில் தங்கி இருந்த ராணீக்கு அங்கு உள்ளவர்கள் நடத்தி வரும் தூய வாழ்க் கையை எண்ணி எண்ணி வியந்தாள்.இவ்வளவு தூய வாழ்க்கையை கடைப் பிடித்து வாழ்ந்தவர்களை அவள் இது வரை பார்த்ததில்லை.அவள் ‘வாழ்ந்து வந்த உலகில்’ ’தூய வாழ்க்கை’ என்கிற சொல்லுக் கு யாருக்கும் அர்த்தமே தெரியாது.

தன் வாழ்க்கையில் பாதி வருஷங்களை இப்படி ஒரு ‘நரகத்தில்’ அவள் வீணடித்து விட்டதை எண்ணி மனம் வருந்தினாள் ராணீ.

‘மறுபடியும் அந்த ‘நரக வாழ்க்கை’ நானும் போகக் கூடாது,எனக்குப் பொறக்கப் போற குழந் தையும் போகக் கூடாது’ என்று சபதம் எடுத்துக் கொண்டாள் ராணீ.
சில நாட்களுக்குள் ராணி எல்லா சிஸ்டர்களின் நல்ல மதிப்பை பெற்று வந்தாள்.ஏழு மாசம் ஆனதும் ராணிக்கு சர்ச்சில் இருந்த மருத்துவ மணையிலே ஒரு பெண் குழந்தை பிறந்தது.குழந்தை நல்ல வெள்ளைக்கார குழந்தைப் போல மிகவும் அழகாக இருந்தது.

குழந்தை பிறந்த இருபது நாளைக்கெல்லாம் ராணீ மறுபடியும் விடியற்காலமே எழுந்து சர்ச் பூராவும் சுத்தமாக பெருக்கி தண்ணீர் தெளித்து,வாசல் குழாயில் இருந்து குடிக்கும் தண்ணீர் பிடித்து வந்து எல்லா முக்கிய இடங்களில் இருக்கும் பானைகளில் நிரப்பி வைத்து விட்டு,மத்த சிஸ்டர்கள் சொன்ன வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

அந்த சர்ச்சுக்கு தினமும் காலை எட்டு மணிக்கு ஒரு பணக்கார தம்பதிகள் ஒரு விலை உயர்ந்த காரில் வந்து ஏசு நாதர் சிலை முன்பு நின்று கொண்டு,மனம் லயித்து பிரர்த்தணை செய்துக் கொண்டு ண்டு இருந்து விட்டு,அப்புறம் ‘மதர் சுபீரியர்’,மற்ற எல்லா சிஸ்டர்களுடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, காரில் ஏறிப் போய்க் கொண்டு இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த பணக்கார தம்பதிகள் கிளம்பிப் போன பிறகு சிஸ்டர் நிர்மலா ராணீயிடம் “மல்லிகா,இப்போ கார்லே வந்தாங்களே ஒரு கணவன் மணைவி.இவங்க ரொம்ப பெரிய பணக்கார ங்க.ஆனா இவங்களுக்கு குழந்தையே இல்லே.எனக்கு தெரிஞ்சு இவங்க எட்டு வருஷமா தினம் தோறும் காலை எட்டு மணிக்கு சர்சுக்கு வந்து ஏசு நாதர் முன் பிரார்த்தணை செஞ்சு விட்டு போறா ங்க.ஒரு நாள் கூட தவறினதே இல்லே.அந்த ஏசு நாதப் பிரபு தான் இவங்களுக்கு சீக்கிரமா ஒரு குழந்தை பாக்கியம் தரணும்”என்று சொன்னாள்.உடனே ராணீ “அப்படிங்களா.நீங்க சொல்ற வேளே அவங்களுக்கு சீக்கிரமா ஒரு குழந்தே போறக்கணும்” என்று சொன்னாள்.

வேலை பண்ணி முடித்துவிட்ட அசதியில் ராணீ ஒரு மர நிழலில் உட்கார்ந்துக் கொண்டு யோ ஜனை பண்ண ஆரம்பித்தாள்

இவ்வளவு பணக்கார வூட்லே தன் பொண்னு வாழ்ந்து வந்தா நல்லா இருக்குமே.எப்படி நம்ம குழந்தைக்கு அந்த வாழ்க்கை கிடைக்கும்.நானோ ஒரு கன்னித் தாய்.என் குழந்தைக்கு அப்பா யார் ன்னு தெரியாத அவலம்.என்னால் இந்த குழந்தைக்கு ஒரு ‘ப்ராக்’ கூட வாங்கிக் கொடுக்க முடியாத ஏழ்மை நிலை” என்று எண்ணும் போது அவள் கண்கள் கலங்கியது.

அடுத்த நாள் காலை சிஸ்டர் ராணீயின் குழந்தையை துக்கிக் கொண்டு எதோ விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள்அந்த பணக்கார தம்பதிகள் அப்போது சர்ச்சுக்கு வந்தார்கள்.

சிஸ்டர் கையில் இருந்த குழந்தையைப் பார்த்ததும் ”குழந்தை ரொம்ப அழகாக இருக்குதே.யார் குழந்தை சிஸ்டர் இது” என்று அந்த பணக்கார அம்மா சிஸ்டர் நிர்மலாவைக் கேட்டாள்.

உடனே சிஸ்டர் நிர்மலா ”இங்கே வேலை செய்ற ஒரு அம்மாவுடைய குழந்தைங்க” என்றாள்.

அந்த அம்மா சிஸ்டர் நிர்மலாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.அந்த பணக் காரரும் குழந்தையின் அழகைப் பாராட்டி விட்டு,அந்த குழந்தை கையை தொட்டு முத்தம் கொடுத் தார் இப்படியே தினமும் ராணீயின் குழந்தையை அந்த பணக்கார தம்பதிகள் வாங்கி வைத்துக் கொ ண்டு கொஞ்சி விளையாடி வந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.அந்த பணக்கார தம்பதிகள் சிஸ்டர் நிர்மலவையும்,தன் குழந்தை யையும் எடுத்து கொண்டு “மதர் சுபீரியர்’ ஆபீஸில் நுழைவதைப் பார்த்தாள் ராணீ.அவளுக்குத் துக்கி வாரிப் போட்டது.

பதினைந்து நிமிஷம் கழித்து சிஸ்டர் நிர்மலா மட்டும் வெளியே வந்தாள்.

வந்த சிஸ்டர் நேரே ராணீ வேலை பண்ணி கொண்டு இருந்த இடத்திற்கு வந்து ”மல்லிகா, உன்னை ‘மதர் சுபீரியர்’ கூப்பிடறாங்க. வா” என்று அழைத்துப் போனாள்.

பயந்துப் போன ராணீ“சிஸ்டர்,நான் ஒரு தப்பும் பணணலையே,என்னை எதுக்கு பெரிய சிஸ்டர் கூப்பிடறாங்க” என்று கேட்டாள்.” பயப் படாம நீ உள்ளே வா”என்று சொல்லி அழைத்து போனாள் சிஸ்டர்.உள்ளே நுழைந்தவுடன் “வணக்கம்மா” என்று வணக்கம் சொல்லி விட்டு பயந்தபடி நின்றுக் கொண்டு இருந்தாள் ராணீ.

”மல்லிகா,உன் கதை பூராவும் சிஸ்டர் நிர்மலா என் கிட்டேசொல்லி இருக்காங்க. இவங்க நம்ம கோவிலுக்கு ரொம்ப வேண்டியவங்க.நல்ல பண வசதி உள்ளவங்க.எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க. உன் குழந்தையை இவங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்குதாம். உன் குழந்தை ஒரு நல்ல பணக்கார வீட்டில் வாழ்ந்து வர நீ ஆசைப்படறயா….” என்று சொல்லி ராணீயின் முகத்தைப் பார்த்தார் ‘மதர் சுபீரியர்’.

ராணீ கம்மென்று இருந்தாள்.

“மல்லிகா,நான் விஷயத்தை உனக்கு நோ¢டையாவே சொல்றேன்.இவங்களுக்கு உன் குழந்தை யை நீ தத்து கொடுக்க முடியுமா.உன்னை யாரும் வற்புருத்தலே.முடியாதுன்னா சொல்லு”என்று சொல்லி நிறுத்தினார் மதர் சுபீரியர்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீனாள் ராணீ.பிறகு “நான் குழந்தையை தத்து குடுக்கறே னுங்க.ஆனா….”என்று இழுத்தாள் ராணி.அந்த பணக்காரர் உடனே “மல்லிகா,உனக்கு எவ்வளவு பணம் வேணும்ன்னு தயங்காம கேளு.நாங்க தரோம்.ஆனா குழந்தையை மட்டும் மறுக்காம எங்களு க்கு தத்து குடு” என்று கெஞ்சினார்.

மறுபடியும் சற்று நேரம் யோஜனை பண்ணி விட்டு ராணீ “எனக்கு பணம் வேணாங்க.உங்க வூட்லே என்னை ஒரு வேலைக்கு வச்சுகுங்க.நீங்க பயப்பட வேணாங்க.நான் இந்த ‘பெரிய மதர்’ முன்னாடி,இந்த குழந்தை தலை மேல் அடிச்சு நான் ‘சத்தியம்’ பண்ணித் தரேணுங்க.என் மூச்சு இரு க்கிற வரைக்கும் நான் ஒரு நாளும் அந்த குழந்தைக்கு கிட்டே ‘நான் தான் உன் அம்மா’ன்னு சொல்லவே மாட்டேன்.எனக்குன்னு இந்த உலகத்லே யாரும் இல்லீங்க.உங்க வூட்கே ஒரு ஒரத்திலே என் னை இருக்க வச்சா,நான் காலம் பூராவும் உங்களுக்கு நாயா உழைப்பேனுங்க” என்று சொல்லி அந்த அம்மா காலைத் தொட்டு வணங்கிணாள் ராணீ.

உடனே அந்த பணக்கார அம்மா “சரிங்க,மல்லிகா நம்ப வீட்டுலேயே வேலை செய்யட்டுங்க” என்று சொன்னாள்.கடவுளுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள் அந்த பணக்கார தம்பதிகள்.

தன் உடமைகளை எடுத்துக் கொண்டு சிஸ்டருக்கும்,’மதர் சுபீரியருக்கும்’ தன் நன்றியைத் தெரிவித்து விட்டு அவர்கள் பங்களாவுக்கு வந்தாள் ராணீ.

ராணீ செய்ய வேண்டிய எல்லா வேலைகலையும் சொல்லி விட்டு,அவள் இரவில் தங்க இடத்தையும் காட்டினாள் அந்த பணக்கார அம்மா ஜூலி.

அந்த பணக்கார தம்பதிகள் ராணீயின் குழந்தைக்கு ‘ஜென்னி’ என்று பெயர் வைத்து செல்ல மாக வளர்த்து வந்தார்கள்.

ஜென்னி அந்த வீட்டுக்கு வந்த வேளை ஜூலிக்கு அடுத்த வருஷமே ஒரு ஆண் குழந்தை பிறந்து விட்டது.

அன்று ஜென்னி மூன்றாவது பிறந்த நாள் விழா ஏற்பாடு ஆகி இருந்து.வீடு பூராவும் மிக மிக அழகாக அலங்கா¢க்கப்பட்டு இருந்தது.அந்த விழாவுக்கு ஜிப்பா வேஷ்டியுடன் வந்த ஒரு பெரிய மனிதர் உள்ளே வந்தவுடன் அவரை ஓடிப் போய் கட்டிக் கொண்டு கை குலுக்கினார் ஜூலியின் கண வர் ஜோஸப்.

“எங்கே ரெண்டு வருஷமா உங்களைக் காணோம் ராஜர்.நீங்க சிங்கப்பூர் போய் இருந்தீங்கன்னு கேள்விப் பட்டேன்” என்று விசாரித்தார் ஜோசப்.“ஆமாம் ஜோ,நான் ஒரு ‘பிஸினஸ்’ விஷயமா சிங்கப் பூர் போய் இருந்தேன்.சென்னை வந்து ஒரு வாரம் தான் ஆவுது.சென்னைலே உன் ‘பிஸனஸ்’ எப்படி இருக்கு ஜோ”என்று கேட்டார் வந்த பெரிய மனிதர்.”கர்த்தர் அருளாலே என் ‘பிஸினஸ்’ நல்லா போய்க் கிட்டு இருக்கு”என்று சொன்னார் ஜோஸப்.

“இந்த குழந்தையை நாங்க மூனு வருஷத்துக்கு முன்னாலே தத்து எடுத்துகிட்டோம்” என்று சொல்லி விட்டு “மல்லிகா,ராஜருக்கு சீக்கிரமா ‘கூல் டிரிங்’ கொண்டு வா” என்று சொல்லி விட்டு அந்த நண்பருடன் பேசிக்கிட்டு இருந்தார் ஜோஸப்.

உடனே ராணீ ‘கூல் டிரிங்க்கை’ ஒரு பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு அவர்கள் முன்னால் வந்தாள்.வந்த பெரிய மனிதரைப் பார்த்த ராணீக்கு பாம்பை மிதிததது போல இருந்தது.

அவரும் ராணீயை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டு இருந்தார்.ராணீ உடனே அவள் கொண்டு வந்த ‘கூல் டிரிங்க்கை’க் அவரிடம் கொடுத்து விட்டு பயத்துடன் வேகமாக உள்ளே போய் விட்டாள்.

‘கூல் டிரிங்கை’ சுவைத்துக் கொண்டே அந்த பெரிய மனிதர் ஜோஸப் காதுகளில் ஏதோ ரகசிய மாக சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தார்.

‘பார்ட்டி’க்கு வந்து இருந்த அந்த பணக்கார நண்பர்,ராணீ முன்பு இருந்த ‘விடுதி’க்கு அடிக்கடி வந்துப் போய் கொண்டு இருந்த ஒரு ‘ரெகுலர் கஸ்டமர்’.

தன் ரூமுக்கு வந்து ’இவர் இங்கு எங்கே வந்தார்,இவருக்கு என்னை நல்லா தெரியுமே.நம்மை பத்தின எல்லா விவரமும் ஜோஸப்புக்கு சொல்லிடுவாரே.இப்போது உண்மை தெரிஞ்சுட்டா நம்ம கதி என்னாவது.தன் குழந்தை கதி என்னாவது’ என்று நினைத்த ராணீக்கு மயக்கமே வந்து விட்டது.

‘பார்ட்டி’ முடிந்து எல்லோரும் போய் விட்டார்கள்.எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ராணீ படுக்கப் போனாள்.அவளுக்கு தூக்கமே வரவில்லை.

ஜூலி ஏதோ வேலையாக என்று காலையிலேயே வெளியே போய் இருந்தாள்.

மணைவி வீட்டில் இல்லாத சமயத்தில் ஜோசப் மல்லிகாவை தனியாக அழைத்து ”மல்லிகா, உன்னைப் பத்தின எல்லா விஷயங்களையும் என் சிங்கப்பூர் நண்பர் எனக்கு விவரமாச் சொன்னார். அவரை உனக்குத் தெரியுமா ராணி” என்று ஒரு குறும்பு சிரிப்புடன் கேட்டார் ஜோசப்.

தன்னை ‘ராணீ’என்று ஜோஸப் கூப்பிட்டதும் ராணீக்கு ‘ஷாக்’ அடித்தது போல் இருந்தது. ராணிக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.அவர் சொன்னதை ராணீ ஒத்துக் கொள்ளவும் இல்லை,மறுக்கவும் இல்லை.

தயங்கி தயங்கி நின்றுக் கொண்டு இருந்தாள் ராணீ.அவள் கண்களில் நீ முட்டியது.

குறும்பு சிரிப்புடன் ”இந்த விவரத்தை நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் ராணீ.ஏன்,என் மணைவி ஜூலி கிட்டே கூட நான் சொல்ல மாட்டேன் பயப் படாதே.நீ கவலைப் படாதே” என்று சொல்லி விட்டு ராணியின் முகத்தைப் பார்த்தார் ஜோசப்.

கொஞ்ச நேரமானதும் ”சரி உன் வேலையை போய் பார்” என்றார் ஜோசப்.ராணியும் நிம்மதியாக தன் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.

ஒரு நாள் ஜூலி இல்லாத சமயம் ஜோசப் மல்லிகாவை அழைத்து அவளை தன் ‘ஆசை’ க்கு அடி பணிய சொன்னார்.ராணிக்கு என்ன பணணுவது என்றே தெரியவில்லை.
‘நாம மறுத்தா தன்னையும்,தன் குழந்தையையும்,ஏதாவது காரணம் சொல்லி வெளியே அனுப்பி விடுவாரே.அப்போ நாம் எங்கே போவோம்’ என்று யோஜனை பண்ணினாள் ராணீ.

தன் குழந்தையின் எதிர் கால நன்மைக்காக,பொறுத்துக் கொண்டு மனதைக் கல்லாக்கிக் கொ ண்டு ஜோசப் ‘ஆசை’யை நிறைவேற்றினாள் ராணீ.நாளடைவில் ஜோசப் நண்பருக்கும் ராணீ ‘தீனி’ ஆனாள்.

‘நாம இந்த நரக வாழ்க்கையே விடணும்’ன்னு தானே சர்ச்சில் இருக்கும் போது முடிவு எடுத் தோம்.இப்போ மறுபடியும் அந்த நரக வாழ்க்கையே வாழ்ந்துக் கிட்டு வறோமே’என்று மனம் புழுங்கி னாள் ராணீ.ஜென்னிக்கு ஐந்து வயது ஆனதும் ஒரு ‘டான்ஸ்’ வாத்தியாரை பண்ணீ அவளுக்கு நடனம் கற்று கொடுக்க ஏற்பாடு பண்ணினார்கள் ஜோசப்பும் ஜுலியும்.

ஜென்னியும் வேகமாக நடனம் கற்றுக் கொண்டு நன்றாக ஆடி வநதாள்.

ஜோசப் தன் சினிமா நண்பர் ஒருவரைப் பிடித்து சினிமாவில் ஜென்னிக்கு குழந்தை வேடம் ஒன்றில் நடிக்க சான்ஸ் வாங்கி நடிக்க வைத்தார்.படம் நன்றாக ஓடி நல்ல பேர் எடுத்தது. உடனே ஜோசப் தம்பதிகளுக்கு ஜென்னியை சினிமாவில் நடிக்க வச்சு பணம் பண்ண வேண்டும் என்று ஆசை வந்தது.

சினிமா நண்பர்களைப் பிடித்து நிறைய சான்ஸ் வாங்கி ஜென்னியை நடிக்க வைத்தார் ஜோசப்.

ஜென்னியும் அடிக்கடி சினிமா ‘ஷ¥ட்டிங்க்’என்று போக வேண்டியதாய் இருந்ததால்,அவள் ஸ்கூல் போவது தடை பட்டது.ஜோசப் தம்பதிகள் கவலைப் படவே இல்லை.அவர்கள் ஜென்னி சம்பா தித்து வரும் பணத்திலேயே குறியாக இருந்தார்கள்.

ராணீக்கு இது துளிக்கூட பிடிக்கவி ல்லை.அவளுக்கு தெரியும் சினிமா உலகம் எப்படி என்று. என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்தாள்.

மெல்ல ஒரு நாள் ஜூலி அம்மா தனியாக இருக்கும் போது ராணீ ”அம்மா,நான் சொல்றேன்னு தப்பா எடுத்துகாதீங்க.நம்ம ஜென்னி படிப்பு இந்த சினிமா ‘ஷ¥ட்டிங்காலே’ ரொம்ப தடை படுதுங்க. அவ படிக்காம பா¢¨க்ஷயை எப்படிங்க ‘பாஸ்’ பண்ணுவா.பா¢¨க்ஷக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு” என்று மெல்ல சொன்னாள்.

உடனே அந்த அம்மா “பரவாயில்லை மல்லிகா,அவ பெரிய சினிமா நக்ஷத்திரம் ஆனா போதும். அவ கோடி கோடியாக சம்பாதிக்க ஆரம்பிப்பா.படிப்பைப் பத்தி நாம வீணா கவலை பட வேணாம்.நீ உன் வேலையை போய் கவனி.நாங்க பாத்துக்கறோம்” என்று சற்று கோபமாக சொல்லவே ராணீ பயந்து போய் தன் வேலைகளை கவனிக்கப் போய் விட்டாள்.

பதினைந்து வயதை அடைந்த பேபி ஜென்னி,இப்போது ‘குமா¢’ ஜென்னியாக ஆகி சினிமாவில் கதா நாயகி வேஷத்தில் நடிக்க ஆரம்பித்தாள்.

நிறைய ‘அசிஸ்டென்ட் டைரக்டர்கள்’,இளம் கதா நாயகர்கள் இவர்களுடன் நெருக்கமாக பழகி வர ஆரம்பித்தாள் ஜென்னி..

ஜென்னியைப் பற்றி பத்திரிக்கைகளில் நிறைய ‘கிசு’’கிசு’ செய்திகள் வர ஆரம்பித்தது.

ராணீக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.

அடிக்கடி தன் ‘உடம்பை’ ஜோசப்புக்கும்,அவர் நண்பர்களுக்கும் ‘அளித்து’ வாழ வேண்டிய நிர்பந்தம் இருந்து வந்தது ராணீக்கு.

‘நம்ம பொண்ணு நல்லா படிச்சு,ஒரு நல்ல வாழக்கை வாழ்ந்து வறணும்’ என்கிற ஓரே காரணத் துக்காக தானே,நாம இந்த வீட்லே ‘எல்லாத்தையும்’ பொறுத்துக் கிட்டு வந்து கிட்டு இருக்கோம். ஆனா அது நடக்கவே நடக்காது போல இருக்குதே’ என்ற வருத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது ராணீக்கு.

ஜென்னி ஒரு நாள் அதிகமாக குடித்து விட்டு,இரவு ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்தாள். ராணீ தான் வாசல் கதவை திறந்தாள்.அலங்கோல டிரஸ்ஸ¥டன்,குடி போதையில்,சிகரெட் வாடையுடன் இருந்த ஜென்னியை நாலு வாலிபர்கள் காரில் இருந்து கைத்தாங்கலாக அழைச்சு வந்து ‘ட்ராப்’ பண்ணினதைப் பார்த்த ராணீயின் மனசு கொதித்தது.

உடனே ராணீ ஓடிப் போய் ஜென்னி கைத்தாங்கலாப் பிடித்துக் கொண்டு அவள் ‘பெட் ரூமி’ல் விட்டு விட்டு வந்தாள்.

ஜென்னி வாழ்ந்து வரும் வாழ்க்கையை பார்த்த ராணீ இடிந்துப் போய் ஒரு நடை பிணம் போல வாழ்ந்து வந்தாள்.

அன்று வெளியில் ஏதோ வாங்கப் போய் இருந்தாள் ராணீ.

வெத்திலைப் பாக்கு கடையில் தொங்கிக் கொண்டு இருந்த அன்றைய தினசரி பேப்பா¢ன் விளம்பர காகிதத்தில் “ப்ளூ படத்தில் பிரபல நடிகை ஜென்னி.போலீஸ் தீவிர வேட்டை” என்று போட்டு இருந்தது.

ராணீக்குத் தூக்கி வாரிப் போட்டது.

விடு விடுவென்று வீட்டுக்கு வந்தாள்.

ராணீ திரும்பி பங்களாவுக்கு வந்ததை கவனிக்காத ஒரு வேலைக்காரன் மற்றவனிடம் மெதுவா ன குரலில் ”தெரியுமா ராஜ்,நம்ப சின்ன அம்மாவை வச்சு நம்ப ஐயா “ப்ளூ பிலிம்’ தயாரிச்சிருக்காராம். பேப்பர் கடை வாசலில் இருந்த போஸ்டர்லே கொட்டை கொட்டை எழுத்துலே போட்டு இருக்காங்க. போஸ்டர் தொங்குது.நீ போய் பாரு”என்று சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தது ராணீயின் காதில் விழுந்து விட்டது.

தன் ரூமுக்கு வந்து தலை மேல் கையை வைத்துக் கொண்டு யோஜனை பண்ணினாள் ராணீ. சர்ச்சில் இருந்த போது ‘மறுபடியும் அந்த ‘நரக வாழ்க்கை’ நானும் போகக் கூடாது,எனக்குப் பொறக்க ப் போற குழந்தையும் போகக் கூடாது’ என்று சபதம் எடுத்துக் கொண்டோமே.ஆனா, நமக்குப் பொறந்த குழந்தை நாம செஞ்சு வந்த ‘கேவலமான’ தொழிலை தானே செஞ்சுண்டு வறா” என்று எண்ணும் போது அவளுக்கு ஏற்கெனவே இருந்து வந்த நெஞ்சு வலி இன்னும் அதிகம் ஆயிற்று.

‘நம்ப ஐயாவே இந்த வேலையை செஞ்சு வறாரா.கடவுளே இது என்ன சோதனை.ஒரு அப்பா பொறுப்லே ஜென்னியை நல்ல முறைலே வளப்பாருன்னு தானே நாம் குழந்தையை தத்து கொடுக்க சம்மதிச்சோம்.இப்போ என்னடான்னா இவரே ஜென்னியை வச்சு இந்த ‘ஆபாச தொழிலை’ செஞ்சு பணம் சம்பாதிச்சு வறாரே.எங்கே செஞ்சாலும் ‘தொழில்’ஒன்னு தானே.இந்த ‘தொழில்’ பண்ணவா, நாம் இத்தனை வருஷமா எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக்கிட்டு,இங்கே ஒரு ‘நரக வாழ்க்கையை’ வாழ்ந்துக் கிட்டு இருக்கோம்’ என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

ராணீ யோஜனைப் பண்ணினாள்.

‘மதர் சுபீரியர்’ கிட்டே சொல்லி நாம நியாயம் கேக்கலாம்ன்னா,அவங்க நாம சொல்வதை நம்பு வாங்களா.’மதர் சுபீரியர் இவங்களை தனக்கு ‘ரொம்ப வேண்டியவங்க’, ’பணக்க்காரர்,ரொம்ப பழக்கமா னவர்’ன்னு தானே நம்ம கிட்டே சொல்லி இருக்காங்க.ஒரு வேளை நாம் சொல்வதை கேட்டு ‘மதர் சுபீரியர்’ ஜோசப்பை கூப்பிட்டு விசாரிச்சா,ஜோசப் நம்மை பத்தின விவரத்தை எல்லாம் சொல்லி விடு வாரே.உடனே இவங்க நம்மை இந்த பங்களாவை விட்டு வெளியே அனுப்பிட்டா,நமக்கு வெளி உலக த்லே தெரிஞ்ச ஒரே இடம் அக்கா நடத்தி வந்த ‘விடுதி’ ஒன்னு தானே.மறுபடியும் அங்கே போய் அந் த நரக வாழக்கை வாழ்ந்து வர வேண்டியது தானா’என்று நினைத்துப் பார்த்த ராணீக்கு தலையை சுற்றியது.

ராணீ பலமாக யோஜனைப் பண்ணீனாள்.நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே சுவற்றில் சாய்ந்து விட்டாள் ராணீ.

சற்று நேரத்திற்கெல்லம் அவள் உயிர் பிரிந்து விட்டது.

‘தன் வயிற்றிலே பிறந்த குழந்தை தான் செய்து வந்த ‘கேவலமான’ தொழிலை செய்ய கூடாது, அவள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வரணும்’என்று ஆசைப் பட்டு,அதற்காக இத்தனை வருஷங்கள் ஏற்பட்ட பல வித ‘கஷ்டங்களை’ எல்லாம் தாங்கிக் கொண்டு வந்தாள் ராணீ.

தன் மகள் ‘தலை எழுத்தை’ ராணீயால் மாற்ற முடிந்ததா. இல்லையே!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *