என் அம்மாவின் கொழும்பு பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 6,921 
 
 

என் அம்மா சிவகாமி யாழ்ப்பாணத்தில் இருந்து ரயில் ஏறி கொழும்புக்கு போறாளாம். இது தான் அவலளின் முதல் கொழும்பு பயணம்.

இந்த பயணம் பற்றி ஊரில்பலருக்கு அவள் பல தடவைகள் சொல்லிப் போட்டாள் பக்கத்து வீட்டு பாக்கியத்தைத் தவிர.

“ஏன் அம்மா உன் சினேகிதி பாக்கியத்துக்கு எதுக்காக நீ கொழும்புக்கு போவதை சொல்லவில்லை?”. நான் அம்மாவைக் கேட்டேன்.

“எடேய் செல்வன் உனக்குத் தெரியாது அவளைப் பற்றி.அவவின்டை மூத்த மகள் குடும்பம் கொழும்பிலை இருக்கினம். அது பெரிய குடும்பம். நான் கொழும்புக்கு போவது பாக்கியத்துக்கு தெரிந்தால் அது போதும், அவளுடைய மகள் குடும்பம் இருப்பது வெள்ளவத்தையில் , அதனால் சொல்லத் தேவையில்லை. இரண்டு நல்லெண்ணெய் போத்தல்கள் கறுத்தக் கொழும்பான் மாம்மபழம் ஒரு பெட்டி. முருங்கைகாய் ஒரு கட்டு. பயித்தம் பணியாராம் , முறுக்கு, ஊறுகாய் , வடகம் என்று பெரிய பார்சல் என் தலையில் கட்டி கொழும்புக்கு அவர்களிடம் கொண்டு போய் கொடுக்க சொல்லுவாள். எனக்கு கொழும்பு தெரியாது அதாலை அவவையளின் வீடுகளுக்கு போக முடியாது. அக்காவும் ஓம் படுபாவோ தெரியாது நான் போறது உன் அக்காவின் முதல் பிரசவத்துக்கு.சரக்கு இடித்து அவள் பிள்ளை பெற்றவுடம் கொடுக்க வேண்டும். மருத்துவ இலைகளை அவித்து அந்த சுடுதண்ணீரில் அவளைகுளிப்பாட்ட வேண்டும் அது என் கடமை. என் அம்மா எனக்கு செய்தவ அது போல நான் என் மகளுக்கு செய்ய வேண்டும் “அம்மா தான் கொழும்பில் அககாவீட்டில் தான் செய்ய இருக்கும் வேலைகளை பட்டியல் இட்டு சொன்னாள். எனக்கு அதைக் கேட்க சிரிப்பு வந்தது.

***

எங்கள் குடும்பத்தில் என் அக்கா வாசுகி எனக்கு பத்து வருஷம் மூத்தவ. கொழும்பு பல்கலை கழகத்தில் பெளதீக துறையில் அவள் படிக்கும் போது அந்த துறையில் முனைவர் பட்டம் பெற்று விரிவுரையாளராக இருந்த தயாரத்தினா என்ற சிங்களவரோடு அவளுக்கு காதல். தயாரத்தினாவின் பெற்றோர் பம்பலபிட்டியாவில் வசிப்பவர்கள். வசதி படைத்தவர்கள் தயாரத்தினாவின் தந்தை சோமரத்தினாவும் தாய் சந்திரவதியும் அரசில் பரிபாலன சேவையில்அதிகாரிகள். அதனால் அவர்களின் வீடடு வேலைக்கும் சமையலுக்கும் மாத்தறையில் பிறநது வளர்ந்த மகிநோனா இருந்தாள். இது அக்கா எனக்கு சொன்னது.

படித்து பட்டம் பெற்றவுடன் ஒரு நாள் திடீர் என்று அம்மாவுக்கும் அப்பாவுக்கு தன் காதலை பற்றி அக்ககா சொன்னாள். தன் காதலனின் பெற்றோர் படித்தவர்கள் இனத் துவேசம் இல்லாத சிங்களவர்கள். அவர்களின் பூர்வீகம் கண்டி கொழும்பில் அவர்களுக்கு இரண்டு வீடுகள் உண்டு.வீட்டில் சமையலுக்கு ஒருத்தி தோட்டத்தையும் வீட்டையும் கவனிக ஒரு வேலைக்காரன். அவர்களிடம் ஒருகார் இருந்தது. லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் வானியல்பௌதீகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் தயா. அவர் படித்தது கொழும்பு ராயல் கல்லூரியில். அவருக்கு சகோதரங்கள் இல்லை. அதனால் அவருக்கு பொறுப்பு இல்லை “குடும்பத்தை பற்றி அப்பாவுக்கு விபரம் சொன்னாள்.

“என்ன படித்த குடும்பமாயும். வசதி உள்ள குடும்பமாய் இருந்தாலும் அவர்கள் சிங்கள பெளத்தர்கள். நாமோ இந்து யாழ்பாணத்து தமிழர்கள். எங்கள் கலாச்சாரம் வேறு, அவர்கள் கலாச்சாரம் வேறு. சிங்களவர்களிடையே இனத் துவேசம் ஊறி கிடக்கு. இலங்கைக்கு சசுத்திரம் கிடைக்க முன்அப்படி இல்லை. அதுக்கு பின் எத்தனையோ இணக்கலவர்களால் தமிழர்கள் பாதிக்கப் பட்டார்கள் என்று உனக்கு தெரியுமா. பதவியாவில் அப்போதிகரியாக இருந்த உன் சித்தப்பா சிங்களவரால் 1958 இனக்கலவத்தின் போதுகொலை செய்யப் பட்டவர் நல்ல காலம் அப்போது அவருக்கு திருமணமாகவில்லை. அதோடு எங்கள் ஊரில் நீ ஒரு சிங்களவனை திருமணம் செய்தவள் என்று தெரிந்தால் ஊர் சனங்ககள் எப்படி பேசும் என்று தெரியாது. உன் அப்பா தமிழரசு கட்சி ஆதரவாளர். பிறகு கட்சியில் பல கேள்விகள் எழும் “அம்மா தன் கருத்தை அக்காவுக்கு சொன்னாள்.

“அம்மா வாழ்ப் போகிறவள் நான் எனக்கு பிடித்தவனை நான் திருமணம் செய்வதில் தவறு என்ன? நீங்கள் சீதனம் ஒண்டும் அவருக்கு கொடுக்க வேண்டாம். உங்கள் சொத்து முழுவதும் தம்பிக்கு குடுங்கள். எனக்கு தேவை இல்லை என்னை படிபித்த காசை நான் உழைத்து தருகிறன்”

அக்கா அம்மாவுக்கு சொன்னாள்.

அவள் சரியான பிடிவாதக்காரி. அவள் முடிவெடுத்தால் அதில் இருந்து மாறமாடாள். அது என் அம்மாவுக்கும் அப்பாவுக்கு தெரியும். சாதகப் பொருத்தம்பார்க்கவில்லை. சிங்களவர்களில் தயாவின் பெற்றோர் உடரட்ட சிங்கள் சாதி அதனால் நல்ல சாதி. இது என்ன மாமா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அக்காவின் காதலை பற்றி மாமாவுக்கு அவர்கள் சொன்ன போது அவர் சொன்ன பதில் இது.

என் பெற்றோரின் முடிவு அக்காவுக்கு ஏற்ற வாறு அமைந்தது. அவர்களின் திருமணம் கண்டியில் நடந்தது. அப்பாவும் அம்மாவும் போகவில்லை. அக்கா அதையிட்டு கவலைப் படவில்லை. அக்காவும் அத்தானும் தேனிலவுக்கு சிங்கப்பூர் போய்வந்தார்கள். ஒரு தடவை அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்கள். அப்பா அவர்களோடு அதிகம் பேசவில்லை அவர்கள் இருவருக்கும் ஊர் கண்ணகி அம்மன்கோவிலில் அம்மா பூசை செய்தாள் எனக்கு அத்தான் தயாவை பிடித்துக் கொண்டது சிங்கப்பூரில் தேனிலவு முடித்து வரும் போதுஎனக்கு ஒரு லப் டாப் கணனி வாங்கி வந்து தந்தார்

. எனக்கு பொளதீக பாடத்தில் உள்ள சந்தேகங்களை விளக்கினார். நான் விரும்பிய ஐஸ் கிறீம் வாங்கித்தருவார். சிங்கள தமிழ் துவேசம் இல்லாதவர். அவருக்கு தமிழ் பேச வராது.என்னோடு ஆங்கிலத்தில் பேசுவார். அப்பாவோடு ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசினார். அம்மா அவருக்கு முட்டை அப்பம் செய்து கொடுத்தாள். எங்கள் வீடு கிணற்றில் குளிப்பது அவருக்கு புது அனுபவம்.அவருக்கு பத்தினி தெய்வத்தின் மீது நம்பிக்கை உண்டு.

****

“அம்மா நீ இவ்வளவுச்சாமாங்களோடு அக்காவின் முதல் பிரசவம் பார்க்க கொழும்புக்கு நீ போக வேண்டுமா? அவவை இங்கை கூப்பிடலாமே இங்கை அப்பம்மாவும் உனக்கு உதவிக்கு இருப்பா. அவவுக்கு என்ன பத்திய சாப்பாடு அக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரியும்”அப்படி நான் அவளுக்கு நான் சொன்னேன்.

“உன் அக்கா எனக்கு சொன்னா தனது முதல் பிரசவத்துக்கு உண்டை அத்தான் தன்பக்கத்தில் இருக்க வேண்டுமாம். அதோடு அவவுடைய குடும்ப டாக்டர் சமரநாயக்கா கைராசிக் காரணாம் தண்டை அத்தானின் பெற்றோர் முழு பிரசவ செலவை பொறுப்பு எடுப்பினமாம் அதாலை இங்கை வர மாட்டன் எண்டு சொல்லிப் போட்டா “அம்மா சொன்னாள்

“நீயம் அக்கா குடும்பமும் பட்ட பாடு. எழு மணி ரயிலுக்கு இப்ப ஒரு மணிக்கே என்ன மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி உடுத்துக் கொண்டு ரெடியாய் நிக்கிறாய் ”

“எதுவும் நான் அவசரப் படாமல் செய்கிறவள் எண்டு உனக்கு தெரியும் தானே செல்வன் “:

கந்தர் மடத்தடி மணியம் நான்கு மணிக்கே வாடகை ஆஸ்டின் காருடன் வந்து விட்டான். அப்பாவின் முதலாம் வகுப்பு ரயில்வே வாரண்டில் கீழபெர்த் புக் செய்து அப்பா அம்மாவுக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தார். அம்மா மேல் அப்பாவுக்கு கவனம்.

நானும் ரயில்வே ஸ்சனுக்கு ன் அம்மாவோடு போயிருந்தேன். இனி ஒரு மாதத்துக்கு பிறகு தான் அம்மா கொழும்பில் இருந்து திரும்பி வருவா. எனக்கு என் பிரச்சனைகளை சொல்ல ஒருவரும் இல்லை. ராணி தியேட்டரில் படம் பார்க்க காசு தருவா. முட்டை பொரித்து இடியப்பதோடு தருவா. அதெல்லாம் இனி எனக்கு ஒரு மாசத்துக்கு இல்லை.

காங்கேசன்துறையில் இருந்து சரியானநேரத்துக்கு கொழும்புக்கு போகும் ரயில் வந்தது. சனம் அதிகம் அதிகம் இல்லை. நானும் அப்பாவும் போட்டரின் உதவியோடு ரயில்பெட்டிக்குள் ஏற்றினோம். ரயில் பளை யை தாண்டியவுடன் இரவு சாப்பாட்டுக்கு அம்மா தோசை சம்பல். சாம்பார் செய்து கொண்டு போயிருந்தாள் ஒரு பிலாஸ்க் நிறம்ப சுக்கு போட்ட கோப்பி. அது இல்லாமல் அவள் இருக்க மாட்டாள். கொழும்பு கோட்டை ஸ்டேசனில் அத்தான் அக்காவும் காரில் வந்து அம்மாவை கூட்டி போவினம்

“நீர் அங்கை போய் சேர்ந்ததும் எங்களுக்கு டெலிபோன் எடுத்து சொல்லிப்போடும். மறந்திடாதையும்”அப்பா அம்மாவுக்கு சொன்னார் அப்பாவுக்கு அம்மாவை பிரிய விருப்பமில்லை. முப்பது வருஷ தாம்பத்திய வாழ்க்கை

***

கொழும்புக்கு போய்மூன்று நாளில் அம்மாவிடம் இருந்து இரண்டவது கோல்அப்பாவுக்கு வந்தது.

தான் திரும்பவும் ஊருக்கு வரப் போவதாக அவள் அழுத படி சொன்னாள்

“என்ன சிவகாமி என்ன உங்கை நடந்தது? ஏன் நீர் இவ்வளவு கெதியிலை திரும்பி வரப்போறீர் “அப்பா பதட்டத்தோடு கேட்டார்.

“இந்த வீட்டில் உங்கள் மகளை தவிர வேறு ஒருவருக்கும் தமிழ் பேச வராது ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் தான் பேசுகினம். எனக்கு தமிழ் தவிர சிங்களமும் ஆங்கிலமும் பேசத் தெரியது. இந்த சிங்கள சாப்பாடு எனக்னகு பிடிக்க வில்லை. ரேடியோவில் சிங்கள பிரித் தான் போகுது. காலையில் சுப்பிரபாதம் கேட்ட எனக்கு இந்த மந்திரம் பிடிக்கவில்லை நான்வாசுகியின் பிரசவத்தை கவனித்துக் கொள்ளத் தேவை இல்லையாம் எல்லாம் இந்த வீட்டு வேலைக்காரி மகி நோனா கவனித்துக் கொள்வாளாம் அதோடு ஒரு மாததுக்கு நேர்ஸ் ஒருத்தி தினமும் ஒரு மணித்தியாலம் வருவாளாம் நான் ஒண்டுமே செய்ய வேண்டியதில்லையாம் வாசுகியின் மாமி எனக்கு சொன்னாள்”.

“நீ சொல்வது உண்மையே சிவகாமி”அப்பா அம்மாவை கேட்டார்

“நான் ஏன் உங்களுக்கு பொய் சொல்லப் போறன்.எங்கள் சம்பந்தி மாருக்கு தாங்கள் பணக்காறர்கள் என்ற எண்ணம். நாங்கள் எங்கள் மகளை இந்த சிங்கள் குடும்பத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்திட்டோம் இனி எனக்குஇந்த வீட்டில் இருக்க விருப்பமில்லை. என்னை கெதியிலை உங்கை கூப்பிடுங்கோ “என்றாள் அம்மா டேலிபோனில் அழத படியே

“செல்வன் எனக்கு அப்பவே தெரியும் இது நடக்கும் எண்டு. உன் அம்மாவுக்கு எல்லாம் தன் விருப்பப் படி நடக்க வேண்டும் உண்டை அம்மா தன்மகளிடம் போக வேண்டும் எண்டு பிடிவாதம் பிடித்தா இப்ப பார் என்ன நடந்தது எண்டு”அப்பா சொல்லிவிட்டு தன் அறைக்குள் போனார்.

நான் ரேடியோவை போட்டேன் அதில் நீங்கள் கேட்டவை பாடல் போய் கொண்டிருந்தது

“உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி”

(யாவும் புனைவு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *