என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 4,387 
 
 

பாகம்-1 | பாகம்-2

ஆறு நாள் கழித்து கிருஷ்ணன் ஒரு நாள் சாயங்காலம் அக்காவைப் பார்க்க வந்தான்.

கிருஷ்ணன் கிட்டே லதா பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை குடுத்து விட்டு,தன் வெக்கத் தை விட்டு “என்னாலேயே முடியலையே நீ எப்படிடா பண்ணினே” என்று கேட்டாள்.
உடனே கிருஷ்ணன் சிரிச்சு கிட்டே” நீ கேப்பேனு எனக்கு நல்லா தொ¢யும்கா.இந்த லெட்டரை படி உனக்கு புரியும்”என்று சொல்லி விட்டு ஒரு லெட்டரை அக்கா கைலே திணித்து விட்டு, அவ கொடுத்த பத்தாயிரம் ரூபாய் செக்கை வாங்கிக் கொண்டு,தன் ‘ஸ்கூட்டரை ஸ்டார்ட்’ பண்ணி பறந்து போனான் கிருஷ்ணன்.

அவசர அவசரமாக லெட்டரை பிரிச்சு படிக்க ஆரம்பித்தாள் லதா.

“அக்கா,என் ‘கர்ள் ப்ரெண்ட்’ ரமா,ஒரு ‘ஹைலி ‘பேட்’ மாடல்’.அவ எனக்கு ரொம்ப நாளா ஒரு ‘க்ளோஸ் ப்ரெண்ட்’.இங்கு இருந்து நான் போனவுடனே நேரே அவ கிட்டப் போய் ‘ரமா,நீ எனக்கு ஒரு ‘ஹெல்ப்’ பண்ணனும்.பண்ணுவாயான்னு கெஞ்சினேன்.அவ உடனே ’சொல்லு ‘டார்லிங்க’ நான் உடனே செய்றேன்’ ன்னு சொன்னா.நான் அவ கிட்டே’ரமா, உன் ‘பாஸ்’ ரவி இருக் காரே, அவர் என் ‘சிஸ்டர்ஸ் ஹஸ்பெண்ட்’.அவர் மூனு மாசமா தாடி மீசை வச்சுக் கிட்டுத் தான் ஆபீஸ் போறாராம்.என் சிஸ்டருக்கு அவர் தாடி மீசை வச்சுக் கிட்டு இருப்பது கொஞ்சம் கூட பிடிக்கலே.நீ எப்படியாவது அவர் கிட்டே சொல்லி அவரை ‘டேய்லி க்ளீன் ஷேவிங்க்’ பண்ணி கொள்ளும்படி மாத்தணும்.செய்ய முடியுமான்னு கேட்டேன்.அவ உடனே ’நாளைக்கே செஞ்சு முடிக்கறேன் கிருஷ்’ன்னு சொன்னா.அடுத்த நாள் காலையிலே ஆபீஸ் நுழைஞ்ச ரவியை பாத்து “குட் மார்னிங்க் பாஸ்”ன்னு‘விஷ்’ பண்ணிட்டு,அத்தானை பாத்து ‘பாஸ்,நானும் மூனு மாசமா கவனிச்சுகிட்டு வறேன். நீங்க ‘க்ளீண் ஷேவிங்க்’ பண்ணிக்காம, தாடி மீசையோடு ஆபீஸ் வரீங்க.இந்த தாடி மீசை உங்க ‘ஏஜை’ இன்னும் ‘பைவ் யீர்ஸ்’ அதிகமா கூட்டி காட்டுது.’யூ வேர் லுக்கிங்க் மோர் ஸ்மார்ட் ஆண்ட் யங்க் இன் க்லீண் ஷேவன் பேஸ், பாஸ்’ன்னு கொஞ்சினாளாம்.

உடனே ரவி ‘இஸ் இட்.ஐ டிடிண்ட் நோடிஸ் தட்.நீ என் மேலே இவ்வளவு அக்கறை எடுத்துக்க றதே பாக்கும் போது உன்னை எப்படி ‘தாங்க்’ பண்றதுன்னு எனக்கு புரியலே ரமா.நாளைலே இருந்து ‘க்ளீன் ஷேவன் பேஸோடு’ தான் ஆபீஸ் வருவேன்’ன்னு சொல்லிட்டு அசட்டு சிரிப்பு சிரிச்சாராம் உன் ‘ஆசை ஹஸ்பெண்ட்’.இப்போ உனக்கு எல்லாம் புரிஞ்சு இருக்குமே!!” என்று எழுதி முடித்து இருந்தான் கிருஷ்ணன்.

லெட்டரை படித்து முடிச்ச லதாவுக்கு ஒரு பக்கம் தன் கணவன் மேலே கோவம் வந்தாலும், இன்னொரு பக்கம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வீண் போனாலும் பரவாயில்லை, ‘ஒரு வழியா நம்ம ரவி பழையபடி ‘க்ளீன் ஷேவிவிங்க’ பண்ணிக் கொள்ள ஆரம்பிச்சு இருக்காரே ’என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.

தம்பி கிருஷ்ணனுக்கு தன் மனதில் நன்றியை சொல்லிக் கொண்டு இருந்தாள் லதா.

ஆனால் தம்பி கிருஷ்ணனோ தன் ‘கர்ள்ப்ரெண்டுடன்‘ அக்கா கொடுத்த பத்தாயிரம் ரூபாயி ல் ஒரு “த்ரீ ஸ்டார் ஹோட்டலில்” ‘ஜல்சா’ பண்ணிக் கொண்டு இருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *