உல்லாசக் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,432 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கம் போல் அன்றும் அமுதா, புளோக்கின் கீழ்தளத்தில் அமைந்திருக்கும் லெட்டர் பாக்ஸை திறந்து பார்த்தபோது பல வண்ணங்களில் நிறைய கடிதங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்துக் கெண்டு மின்தூக்கி வழியாக பத்தாவது மாடிக்கு வந்தாள்.

வீட்டுக்குள் வந்தவுடன் முதலில், வந்திருந்த கடிதங்களைப் பார்த்தாள். வழக்கமான கடிதங்களுடன், பல புதிய கடிதங்களு இருந்தது.

அவற்றில் ஒன்று ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்திலிருந்து அமுதாவின் பெயருக்குத்தான் வந்திருந்தது. கடிதத்தைப் பிரித்து உள்ளே பார்த்தாள். ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு’ எடுத்துக் கொள்ளச் சொல்லி அமுதாவுக்கு அழைப்பு வந்திருந்தது.

அமுதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது தன் பெயர் முகவரி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு எப்படித் தெரிந்தது? ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்’ கார்டு கடன்பற்று அட்டை பயன்படுத்திக் கொள்ள தகுதியானவர்களுக்கு வருடத்திற்கு சுமார் ஐம்பதினாயிரம் வெள்ளிக்கு மேல் வருமானம் இருக்க வேண்டும்.

அமுதா சாதாரண பதவியில் மாதம் கமார் இரண்டாயிரம் வெள்ளி வருமானம் பெறுகிறாள். ஒரு வேளை, அமுதாவின் கணவன் பாண்டியன் அதிகமாக வருமானம் பெறுகிறான். அவன் ஏற்கனவே சிட்டி பேங்க் விசா கோல்ட் கார்டு ‘ பயன்படுத்தி வருகிறான். பாண்டியனுக்கு வருடத்திற்கு சுமார் எழுபத்தையாயிரம் வெள்ளி பணழ் சம்பாதிந்கிறாரீ. அதனால் பாண்டியனுக்கு இப்படிப்பட்ட கடன் பற்று அடடைகள பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அமுதாவுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடன் பற்று அட்டையை எடுத்து பயன்படுத்த ஸ்பெஷலாக அழைப்பு வந்திருந்தது.

பொதுவாக அமுதாவுக்கு இதுபோன்ற கடன் பற்று அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதில் ஈடுபாடு கிடையாது. நம்மிடம் பணமிருந்தால், பணத்தை கொடுத்து விட்டு பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவாள். ஆனால், கடன் பற்று அட்டைகள் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.

சிங்கப்பூரில் பல இளையர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கும் இந்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடன் பற்று அட்டையை அமுதா ஏனோ வெறுக்கிறாள்.

உல்லாசமான கடைகளில் விலை மதிப்புள்ள வைரம், தங்கம், ரோலக்ஸ் வாட்ச் போன்ற தரம் வாய்ந்த பொருட்களை வாங்கி விட்டு, தங்கள் பணப்பையிலிருந்து இதுபோன்ற சிட்டி பேங்க் தங்கநிற கடன்பற்று அட்டையை எடுத்துக் கொடுக்கும் போது கடைக்காரர்கள் அந்த நபர்களை நிமிர்ந்து பார்த்து பெருமிதம் கொள்வது உண்மைதான் அவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறது. ஆனால், அதெல்லாம் சில நிமிடங்கள்தான் பொருட்களை வாங்கிய சில’ தினங்களில் குறிப்பிட்ட அந்த சிட்டி பேங்க் நிறுவனத்திலிருந்து உடனே கட்டணத்தை செலுத்துமாறு கடிதம் வந்து விடுகிறது. அவர்கள் ந்டுக்கும் தேதிக்குள் நாம் காசோலையை உடனே அனுப்பி கடனை அடைத்துவிட வேண்டும் . கடனை அடைக்க தாமதித்தால் மாதம் இருபது வெள்ளி வட்டியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பொருள் கால் பங்கு கூலி முக்கால் பங்கு என்ற கதைதான். அது மட்டுமா? அந்த கடன் பற்று அட்டையை பயன்படுத்திக் கொள்ள வருடத்திற்கு (150) நூற்றைம்பது வெள்ளியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் இதில் என்ன இலாபம் என்று சலிப்படைந்தாள் அமுதா.

பெருமைக்காக, புகழுக்காக என்று எதையும் செய்வதில் அமுதாவுக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவள் கணவன் பாண்டியன் வருமானம் அதிகம் பெறுவதால் ‘சிட்டிபேங்க்‘ ‘விசா கார்டு‘ கடன்பற்று அட்டை பயன்படுத்த அமுதாவுக்கும் வாய்ப்புக் கிடைத்து அவள் ஏற்கனவே ஒரு கடன்பற்று அட்டை வைத்திருக்கிறாள். இப்போது இந்த ‘அமெரிக்கன் எக்ஸ்முரஸ்‘ கடன்பற்று அட்டையை அவள் எடுக்க விரும்பவில்லை. அதில் ஏதேதோ சலுகைகள் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதாவது முதல் வருடத்திற்கு சந்தா பணம் தேவையில்லை என்றும் ‘கோல்ப்’ விளையாட சலுகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதெல்லாம் மேல் மட்டத்தார்கள் பயன்படுத்தும் சொகுசு விஷயங்கள். பொதுவாக அமுதா கடைத் தொகுதியில் பொருடகளை வாங்கினால் அவள் பெயரில் உள்ள ‘வங்கி நெடஸ்’ அட்டையை பயன்படுத்திதான் பணத்தை கொடுக்கிறாள்.

‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற தத்துவம் இந்த கடன்பற்று அட்டையால் பொய்யாகிப் போனது. ஏற்கனவே வங்கியில் எக்கச்ரக்கவுக பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கடன் வசதி கலியுகததில இதுவும ஒன்று.

வருமானம் அதிகம் இருப்பவர்கள் இல்லாத மக்களுக்கு பண உதவி செய்ய வேண்டும என்று அமுதாவும், பாண்டியனும் பல பொது நிறுவனங்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். குறிப்பாக சிங்கப்பூர் ‘கிட்னி ஃபவுண்டேஷன்‘ என்ற அமைப்புக்கு மாதம் ஐம்பது வௌளியை நன்கொடையாக கொடுக்கிறார்கள்.

நல்ல மனைவி கிடைத்தவன் வாழ்க்கையில் வெற்றி நடை போடுவான் என்பரற்கு அமுதாவும் பாண்டியனும் நல்லதோர் உதாரணமாக திகழ்ந்தனர்.

அமுதாவின் தனிப்பட்ட விஷயங்களில் அவள் கணவன் பாண்டியன் தலையிடுவதில்லை. அதே போல பாண்டியன் விளையாட்டில் ஈடுபாடு உடையவன். டென்னிஸ், கேல்ப் விளயட்டில் பாண்டியனுக்கு விரும அதிகம். மாதம் ஒரு முறை இந்தோனேஷியாவின் ‘பிந்தான்’ தீல் கடற்கரையை ஒட்டிய இயற்கையழகு நிறைந்த மிகப் பிரம்மாண்டமான அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ‘கோல்ஃப்’ பிரிவில் உறுப்பினராக சேர்ந்து விளையாடி வருகிறான்.

பாண்டியன் சுதந்திரமாக விளையாட்டில் மன நிறைவு பெறுவதை அமுதா தடுக்க மாட்டாள் ஜாடிக்கு ஏத்த மூடியாக அமுதா இருந்தாள்.

பாண்டியனோடு அமுதாவும் சேர்ந்து ‘பிந்தான்’ தீவுக்கு படகு மூலம் சென்று அங்குள்ள இயற்கை அழகை ரசித்து விட்டு, மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டுவிட்டு , பாண்டியன் கோல்ஃப் விளையாடுவதை இரசித்துப் பார்த்து மகிழ்வாள் சில நேரங்களில் அமுதாவும் பாண்டியனோடு சேர்ந்து கோல்ஃப் விளையாட்டை விளையாடி மகிழ்வாள். பாண்டியனும் அமுதாவும் கணவன் மளைவியாக இருந்த போதிலும் நல்ல இனிய நண்பர்களாகவே பழகி வந்தனர். பார்த்தவர்கள் பரவசம் அடையும் வண்ணம் இருவரும் உடற்பயிற்சி செய்து உடற்கட்டோடு திருந்தனர். இரண்டு பிள்ளைகளுக்கு தாய், தந்தை என்று யாராலும சொல்ல இயலாது பாண்டியனுக்கு வயது 35 அமுதாவுக்கு வயது 33.

இருவரும் மனதை திருப்தியுடன் வைத்திருந்தார்கள். பிறர் விஷயங்களில் அனாவசியமாக தலையிடுவதை அநாகரீகமாக கருதினார்கள் மொத்தத்தில் பாண்டியனும், அமுதாவும் லட்சியத் தம்பதிகளாக வாழ்ந்தனர்.

ஆண்டுக்கு ஒரு முறை பிள்ளைகளின் பள்ளி விடுமுறைகளில், இரண்டு வாரம் வெளிநாட்டிற்கு பயணம் செய்து வருவார்கள்.

நல்ல மனம் சிறந்த கொள்கை, உயர்ந்த லட்சியம் (என்று பாண்டியனும், அமுதாவும்) அவர்கள் இருவரையும் சுறுசுறுப்பாக இயங்க வைத்தது.

பாண்டியுனும், அமுதாவும் பட்டாம்பூச்சிகளாக வானத்தில் சிறகடித்துப் பறந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இருவருமே தினமும் காலையில் எட்டு மணிக்கு ஒன்றாக கிளம்பி அவர்களின் கார் மூலம் அலுவலகத்திற்குச் சென்று, அவரவர்களின் வேலைகளை முடித்துவிட்டு மாலையில், அமுதாதான் முதலில் கிளம்பி காரை எடுத்துக் கொண்டு பாண்டியனின் அலுவுலகத்திற்கு சென்று அங்கு தயாராக நிற்கும் பாணடியனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

அமுதா சிங்கப்பூர் டெலிகம் நிறுவனத்தில் கணக்கராக பணி புரிகிறாள். பாண்டியன் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ‘டவர் பில்டிங்கில்’ எட்டாவது மாடியில் உலகப் புகழ் பெற்ற மேற்கத்திய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறான்.

பாண்டியன் அடிப்படையில் சாதாரண கல்வி கற்றவன், பின்பு வேலையில் இருந்து கொண்டே தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக பதவியில் முன்னேறினான்.

அன்று மாலை வேலை முடிந்து பாண்டியனும் அமுதாவும், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க அருகில் உள்ள ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி விட்டு பாண்டியன் தன்னிடமுள்ள ‘சிட்டி பேங்க்’ தங்கநிற கடன்பற்று அட்டையை பயன்படுத்தி கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு வந்தனர்.

தற்செயலாக பாண்டியன் தன் பணப்பையில் பார்த்தான். அவனுடைய சிட்டிபேங்க் விசா கார்டை மாயமாக காணவில்லை. அமுதாவும், பாண்டியனும் அதிர்ந்து விட்டார்கள் அந்த கடன்பற்று அட்டை வேறு யார் கையிலாவது கிடைத்து விட்டால், (அவர்கள்) எடுத்தவர்கள் பயன்படுத்தி பொருள் வாங்கினால் நஷ்டம் பாண்டியனுக்குத்தான். கட்டணம் பாண்டியன் தலையில்தான் வந்து விழும். காய்த்து கனிந்தது மரத்தில் என்றால், அதை எடுத்து சுவைப்பது இன்னொருவன் போல ஆகிவிடும்.

உடனே பாண்டியன் ராபின்ஸன் சாலையில் இருக்கும் ‘சிட்டி பேங்க்‘ நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன் சிட்டிபேங்க் தங்கநிற கடன்பற்று அட்டை காணாமல் போன செய்தியை தெரியப் படுத்தி வரவிருந்த நஷ்டத்தை காப்பாற்றிக் கொண்டான். உடனே சிட்டி பேங்க் நிர்வாகத்தினர் பாண்டியனின் கடன்பற்று அட்டையை வேறொருவர் பயன்படுத்த முடியாதபடி அவன் அட்டையின் இரகசிய எண்ணை கணிணி மூலம் அழித்தனர் அதன் சகல விபரங்களையும் கண்காணித்து பாதுகாத்தனர். பின்பு பத்து நாளில் பாண்டியனுக்கு வேறு புதிய ரகசிய எண்ணுடன் வந்து சேர்ந்தது. தலைக்கு வந்தது தவிர்க்கப்பட்டது.

எவ்வளவோ முன் ஜாக்கிரதையாக இருக்கும் அமுதாவும் தவறு எப்படி ஏற்பட்டது என வருந்தினாள்.

வழக்கம் போல அந்த மாத இறுதியில் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் பாண்டியனும், அமுதாவும் சிங்கப்பூரின் தானா மேரா ஃபேரி டெர்மினலுக்குத் தங்களின் இரு பிள்ளைகளோடு புறப்பட்டுச் சென்று படகுப் பயணத்திற்கு வேண்டிய நான்கு டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டு, பாண்டியன் தன்னிடமுள்ள சிட்டிபேங்க் தங்கநிற கடன்பற்று அட்டையை பயன்படுத்தி 150 வெள்ளிக்கான பணத்திற்கு கையெழுத்துப் போட்டு டிக்கட்டை எடுத்துக் கொண்டு காலை எட்டு மணிக்கு புறப்பட்டு கப்பல் போன்ற அந்த குளிர்சாதன வசதி கொண்ட மிகப் பெரிய படகின் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் ‘பிந்தான்’ தீவுக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த ‘பிந்தான்’ தீவு சிங்கப்பூருக்கு மிக அருகில் இருந்த போதிலும், ஏதே வெகு தொலைவில் இருக்கும் கனவு உல்லாச தீவு போல பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. தூய்மையான, பசுமை நிறைந்த எழில் கொஞ்கம் தேவதைகள் வாழும் இடம் போல காண கண் ஆயிரம் வேண்டும்.

வந்தவர்கள் அனைவருக்கும் உட்கார பச்சைக் கம்பளம் விரித்தது போல புல்தரை பச்சை பசேல் என்று பக்குவமாக வளர்த்து பராமரிக்கப்பட்டு தேவலோகத்து பூந்தோட்டம் போல காட்சியளித்தது. நீல நிறக் கடற்கரை, நீச்சல் குளங்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கின்றது.

‘பிந்தான் ‘ தீவுக்கு சென்று விட்டால் அமுதாவுக்கு மனம் இதமாகவும், புத்துணர்ச்சி பெற்றது போலவும் மனம் இன்பக் கடலில் மிதக்கும் பிள்ளைகள் இருவரும் அங்குள்ள பல விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தார்கள். பாண்டியன் ‘பிந்தான் சிடோனா’ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வந்து தங்குவதற்கு முன்கூட்டியே ஒர் அறை ‘புக்‘ பண்ணியிருந்தான்.

பின்பு வழக்கம் போல ‘கோல்ஃப் ‘ விளையாட தேவையான மட்டைகளையும், பந்துகளையும் எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் விளையாட்டுத் தளத்திற்கு வந்து பச்சை புல்வெளியில் சுமார் இரண்டு மணி நேரம் ஆசைதீர விளையாடி மகிழ்ந்தான். பாண்டியனைப் போல நிறைய கால்ஃப் விளையாட்டுப் பிரியர்கள் பலர் பல நாடுகளிலிருந்து வந்து அஙகு விளையாடினர். அமைதிப் பூங்காவாக இருக்கும் அந்தத் தீவு, ஆனந்த மாளிகையாக இருக்கும் அந்த ஹோட்டல், இயற்கையின் அழகு உயர்ந்த மலையின் அடியில் நீல கடற்கரை இவை அனைத்தும் பாண்டியனுக்கும் அமுதாவுக்கும் மனதிற்கு உற்சாகத்தை கொடுத்தது. ஒரு மாதம் சிங்கப்பூரில் இயந்திரமயமான வேலை உழைப்பு, வீடு என இருக்கும் அவர்கள் இந்த ‘பிந்தான்’ தீவின் அமைதியை அதிகமாகவே விரும்பினர்.

சொல்லப்போனால் இந்த ஓய்வை அவர்கள் விரும்பி வரவேற்றனர் மீண்டும் அவர்கள் சிங்கப்பூரில் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய இந்த ஒய்வு, மன உற்சாகம் மிகவும் உதவியது என்றே சொல்லலாம்.

பாண்டியனும், அமுதாவும் வாழ்க்கையில் உண்மையிலேயே சாதனை படைப்பவர்கள்தான். அமுதா தன் ஒய்வு நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள ‘தமிழ் முரசு’ பத்திரிக்கை, வானொலிக்கு கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறாள். ‘பிந்தான்’ தீவுக்கு சென்று வருவது, ஏதோ சரித்திர புகழ்பெற்ற பயணம் மேற்கொண்டு வந்தது போல அமுதாவும் பாண்டியனும் உணர்வார்கள்.

அன்று இரவு சுமார் ஏழு மணி அளவில் பாண்டியன் தன் மனைவி, பிள்ளைகளுடன் மீண்டும் கப்பல் போன்ற படகின் மூலம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தனா.

நாட்கள் சில சென்றன. அன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணி இருக்கும். அமுதா தன் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பழக்கடையில் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை வாங்கினாள். அதோடு புதிதாக வந்திருக்கும் கண்ணைப் பறிக்கும் செந்நிற மாதுளம் பழங்களையும்

வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் வழக்கம் போல அவள் புளோக்கின் கீழ் தளத்தில் அவள் வீட்டு எண் கொண்ட லட்டர் பாக்ஸை திறந்தாள். பல கடிதங்கள் இருந்தன. எல்லர் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

அந்த கடிதங்களில் ஒன்றில்தான் திகைக்க வைக்கும் சம்பவம் ஒன்று கத்திருக்கிறது.

அமுதா வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஆற அமர உட்கார்ந்து வாங்கி வந்திருந்த கவர்ச்சியான அந்த மாதுளம் பழம் ஒன்றை எடுத்து கழுவி வெட்டி உள்ளே வைர முத்துக்கள் போல காட்சியளிக்கும் அந்த விதைகளை எடுத்து ஆசையுடன் வாயில் போட்டாள். “ஐயோ ! புளிப்பு,” என்று முகத்தை சுஷித்தாள்.

பின்பு கடிதங்களை எடுத்து பிரித்து பார்த்தாள். சிட்டி பேங்க் விசா கார்டு நிறுவனத்திலிருந்து வந்த அந்த குறிப்பிட்ட கடிதத்தை திறந்து பார்த்து திகைத்து விட்டாள். மின்னல் வெட்டியது போல கண்கள் கூசின. கண்களை கசக்கி நன்றாக உற்றுப் பார்த்தாள். பாண்டியன் பெயருக்கு வந்திருந்த அந்த விசா கார்டு பயன்படுத்தி வந்த கட்டணம் 25,000 வெள்ளி என்று கடிதம் காட்டியது. அச்சுப் பிழையாக இரண்டு சைபர்களை அதிகமாக போட்டு விட்டார்களா? கடிதத்தில் எழுத்துக்கள் முத்துக்களாக பதிக்கப்பட்டிருந்தது.

கட்டணம் பில்லில் பொருட்கள் வாங்குயதற்கு ஆதாரபூர்வமாக விபரங்கள் இருந்தன. கடைகளின் பெயர்கள், வாங்கிய தேதி, கட்டண விபரம்; ‘பெஸ்ட் டெங்கி’ மெரின் பெரோடில் – 4000 வெள்ளி, ‘கே.எம். ஒலி முஹம்து ‘ ராயல் ஜுவல்லர்ஸில் பெனின்சுல் பிளாசாவில் – 6000 வெள்ளி, லீகுவா ஜுவல்லர்ஸ் – 2000 வெள்ளி, ‘முஸ்தபா சென்டர்’ சிராங்கூன் ரோடு – 5000 வெள்ளி, ‘ராபின்ஸன்’ ஆர்ச்சர்ட் – 2000 வெள்ளி, ‘சிப் லீ கோல்டு’ சுவா சு ஹாங் கடையில் – 3000 வெள்ளி, இறுதியாக ‘ஜான் லிட்டில்’ ஆர்ச்சர்ட் – 2000 வெள்ளி என்று பொருட்கள் வாங்கியது ஆதாரபூர்வமாக இருந்தது.

திட்டமிட்டு பணத்தை சிக்கனமாக செலவு செய்யும் பாண்டியன் எப்படி இவ்வளவு விலையுயர்ந்த பொருட்களை அமுதாவுக்கு தெரியாமல் வாங்கினான்? இது எப்படி சாத்தியம்? பாண்டியன் தாறுமாறாக செலவு செய்ய மாட்டான் ! எங்கோ தவறு நடந்திருக்கிறது. அமுதாவுக்கு தலையே சுற்றியது.

வெளியே சென்று வந்த பாண்டியனிடம் சிட்டி பேங்க் கட்டண பில்லை எடுத்து காட்டினாள் அமுதா. வாங்கிப் பார்த்த பாண்டியன் ‘ஆ’ என்று அலறியே விட்டான். எப்படி? யார்? “25,000 வெள்ளிக்கு நான் பொருள் வாங்கினேனா?, என்ன இது அநியாயமாக இருக்கு,” என்றான் பாண்டியன்.

உடனே தன் பணப்பையைத் திறந்து பார்த்தான் பாண்டியன். அதிர்ச்சி ! சிட்டி பேங்க் தங்க நிற கடன்பற்று அட்டையைக் காணவில்லை ஆம் ! பாண்டியனின் ‘விசா கோல்டு கார்டு’ காணாமல் போய் பல நாட்களாகி விட்டன. வேலை மும்முரத்தில் அதை கவனிக்கத் தவறி விட்டான் “எங்கே காணாமல் போனது?” எப்படி? கடைசியாக அவன் அந்த கடன்பற்று அட்டையை பயன்படுத்தியது ‘பிந்தான்’க்கு செல்ல படகு டிக்கட் வாங்கும் போது. பின்பு பிந்தான் தீவில் உள்ள ஹோட்டலில் மொத்தம் சுமார் 300 வெள்ளிக்கு கடன்பற்று அட்டையை பயன்படுத்தி விட்டு, பத்திரமாக பணப்பையில் வைத்தான். நன்றாக ஞாபகம் இருந்தது பாண்டியனுக்கு. அப்படி என்றால் ‘விசா கார்டு’ கடன்பற்று அட்டை காணாமல் போனது சிங்கப்பூரிலா? பிந்தானிலா?

கடன்பற்று அட்டையை எடுத்தவன் எல்லா பொருள்களையும் சிங்கப்பூரில் உள்ள உல்லாச கடைகளில் வாங்கியுள்ளான். இரண்டு வாரத்தில் 25,000 வெள்ளிக்கு திருடன் பொருட்களை ‘வாங்கியுள்ளான். உடனே, பாண்டியன் ‘சிட்டி பேங்க்‘ விசா கார்டு நிறுவனத்திற்கு கடன்பற்று அட்டை காணாமல் போன தகவலை தெரியப்படுத்தி மேற்கொண்டு இழப்பு வராமல் பார்த்துக் கொண்டான். இனி பாண்டியனின் கடன்பற்று அட்டையை திருடியவன் பயன்படுத்தினால் போலிசில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது ஆனால் விசயம் தெரிந்த திருடனாக இருந்தால் இதோடு தலைமறைவாகி விடுவான்.

வெளிநாட்டிற்குச் சென்றால் கையில் நிறைய பணமாக எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்பதால் இந்த கடன்பற்று அட்டையை பயன்டுத்துவது சௌகரியம்தான். ஆனால், அமுதா வாங்கிய பார்க்க கவர்ச்சியாக தெரிந்த மாதுளம் பழம் போல, தோற்றத்தில் கவர்ச்சியாகவும் அந்த கடன்பற்று அட்டையை வைத்திருப்பவர்களுக்கு மதிப்பும் கிடைத்தது. இப்போது அந்த மாதுளம் பழ புளிப்பைப் போல இந்த கடன்பற்று அட்டை மீது அமுதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இன்றும் ‘ஆங்காங் பேங்க்’ நிறுவனத்திலிருந்து பாண்டியனுக்கு கடன்பற்று அட்டை எடுத்துக் கொள்ள அழைப்பு வந்திருக்கிறது. அமுதா அந்த கடிதத்தை எடுத்து கக்குநூறாக கிழித்துப் போட்டாள்.

பாண்டியனுக்கு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல கடன்பற்று அட்டை மீது வெறுப்பு ஏற்பட்டது. எதிலுமே நல்லதும் கெட்டதும் கலந்தேதான் இருக்கிறது. நாம்தான் கவனமாக இருந்து செயல்பட வேண்டும். கடன்பற்று அட்டைகளை பயன்படுத்த தெரிந்த அளவுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

– தமிழ் முரசு, 24.08.2002, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *