உறவின் மேலொரு விலைச்சீட்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 7,921 
 
 

“கொழும்பிலிருந்து போன்கோல்” என்றார்கள். ஹா¢கேசனுக்கு மனது கலவரப்பட்டது. என்ன துன்பமோ, தொந்தரவோ? பதட்டத்துடன் ¡¢சீவரைக் கையில் வாங்கினால். மறுமுனையில் இருந்து இருந்து ஜெயமோகன் “சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம் ” என்றான்.

“அப்படியா சந்தோஷம்……………. ! ”

” என்ன மாப்பிளே பெர்லின்ல கூலாய் இருந்துகொண்டு சந்தோஷமென்கிறாய்………. கடாறமுதல் அக்கரையிலிருந்து அந்தத் தாடகையல்லே வந்து கழுத்தில ஏறிமிதிக்கப்போறாள்? ”

ஜெயமோகன் அதட்டியதுந்தான் சுப்பையா அப்பாவின் வைகுந்த யாத்திரை உண்டாக்கப்போகும் சிக்கல்கள் அவன் முன் விசுபரூபங்கொண்டன.

புதைத்து எப்போதோ மறந்துபோய் விடப்பட்ட கண்ணிவெடி அசந்தர்ப்பமாய் இப்போது வெடித்திருக்கு. டெலிபோன் சார்ஜ் ஏறுவதுடன் நெடுநேரம் மெளனம் காக்க முடியவில்லை, ஏதாவது பேசி அவனைச் சமாதானப்படுத்த வேண்டும் கேட்டான்.

“இது உறுதி செய்யப்பட்ட செய்திதானே? ”

“உறுதியான செய்திதான்……….. ஊ¡¢லிருந்து நடராசா வாத்தியார் வந்தவர், அவர் தான் தகவல் கொண்டு வந்தது, சுககி புத்தூருக்கும் ஆளனுப்பி எல்லாருக்கும் அறிவிச்சாவாம் . . . . மனுஷவன் வாழ்ந்த மண்ணல்லே? ”

“ஏதும் வருத்தமாய் கிடந்துபட்டு……….? ”

“சாச்சாய் . . . அப்படியொண்டுமில்லை . . . செத்த அன்றுகூட மகளுக்கு மிளகாய்ப்பழம் ஆய்ஞ்சு குடுத்தவராம் . . . பிறகு தோட்டத்தால வந்து குளிச்சுச் சாப்பிட்டுட்டுப் படுத்தவர்தானாம் . . . . விடிய எழும்பேல்லயாம் . . . . மனுஷனுக்கு நல்லசாவு. ” நிம்மதியாய் தூக்கத்திலேயே போய்விட்டார் என்பதில் இருவரும் மகிழ்ச்சிப்பட்டனர்.

மனுஷன் கன்னிக்கடன்களோ இதர லெளகீகக் கடன்களோ எதுவும் இல்லாமலும், நோயில் பாயில் கிடந்து உத்தரியாமலும், ‘யாரது பிள்ளை இந்த தோளில் ஒரு முட்டு முட்டிவிடும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்றேன் ’

என்று யாரையும் கெஞ்சி யாசித்துக்கொண்டிராமலும் கைகாலாய் ஓடிக்கொண்டிருக்கும்போதே கண்ணை மூடிக்கொள்வது எவ்வளவு உத்தமமான விஷயம்!

ஹா¢கேசன் தன் நிதி நிலைமையை சற்றும் மனதில் கொள்ளாமலே சொன்னான், ” நீ தயங்காமல் நடந்த எல்லாத்தையும் விளக்கி சுககிக்கு கடிதம் ஒன்று எழுதி நடராசா வாத்தியாரிடம் கொடுத்துவிடு. அவ உண்மை அறிந்து பிராணனை விடாமலிருக்க வேணும். இந்தக்கிளாலிக் கடல் தாண்டி கொழும்பு வந்து என்ன பண்ணப் போறா? அவவை எது விதத்திலும் எதிர்கொள்ளாமல் ஜேர்மனிக்கு வரவேணுமெண்டாலும் நான் ஒழுங்குகள் செய்வன். எதுக்கும் பாஸ்போட்டை எடுத்துவை. பதறாதை”

நடராசா வாத்தியார் கொண்டுபோகும் கடிதத்தைப் பார்த்து சுப்பையாக் கிழவனைப் பராமா¢க்க வேண்டி வந்த (அவவைப் பொறுத்த அளவில்) அவலத்தை எண்ணி ரெளத்திரமேறி எப்படி வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பா, அவமானம் ஏமாற்றம் தாங்காது துடிப்பா, தங்களிருவரையும் எப்படியெல்லாம் அறமுறியத்திட்டுவா என்பதை எண்ணிப் பார்க்க நடந்தது எல்லாம் ஒரு நம்பமுடியாத குழப்பமான கனவைப் போலிருந்தது அவனுக்கு.

இங்கே சிலாகிக்கப்படும் சுப்பையா அப்பாவானவர், ஆத்ம நண்பர்களான ஹா¢கேசனுக்கோ ஜெயமோகனுக்கோ உறவுக்காரரல்ல. அவர்கள் ஊரான புத்தூ¡¢ல் பலராலும் கருதிக் கொண்டபடி ஒரு அனாதைக் கிழவர். எல்லோ¡¢டமும் அன்பாகப்பழகி வாழ்ந்தவர். அதிலும் ஹா¢கேசனுடைய சித்தப்பாவான சந்தானத்தார்தான் அவரை ஒரு உறவினரைப் போல தன் வீட்டிலேயே தங்க வைத்து ஆதா¢த்தவர். கிழவரும் இனிமேல் தன் கடைசிக் காலம் அவருடன்தான் என்றுதான் இருந்தார்.

சந்தானத்தார் மனைவி எவ்வளவுதான் மறுத்தாலும் உரலில் மாவிடித்துக் கொடுப்பது, தோட்டத்து நல்ல தண்ணீர்க் கிணத்திலிருந்து தண்ணீர் மொண்டுவந்து கொடுப்பது, வீட்டுக் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் கூட்டிச் செல்வது, கடைகண்ணி, சந்தைக்குப் போவது, மாடு கன்றுகளுக்குத் தீவனம் தேடுவது என்று மிகவும் ஒத்தாசையாகவே இருந்தார்.

அந்தக் கால நாடக நடிகரான சுப்பையா அப்பா ஒரு கதைப் பொக்கிஷம். இரவானதும் எல்லாக் குழந்தைகளையும் கூட்டிவைத்துக் கதை கதையாய்ச் சொல்லுவார். ஹா¢கேசனும் ஜெயமோகனும் கூட ஊ¡¢ல் இருந்தபோது அவா¢டம் நிறையவே கதை கேட்டிருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாமே கதை கேட்டுத் தூங்கியபின்னால், ஒரு சாக்கை வி¡¢த்து அதில் உட்கார்ந்து தனக்குத் தூக்கம் வரும்வரையில் அந்தக் காலத்தில் காஸ்விளக்கு வெளிச்சத்தில் மைக் லவுட்ஸ்பீக்கர் செட் எதுவுமின்றித் தாம் நடித்த கோவலன்கண்ணகி , வள்ளிதிருமணம், பவளக்கொடி, நந்தனார், இந்திரஜித்து கூத்துப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு சுருட்டுச் சுத்துவார்.

சுப்பையா அப்பாவுக்குத் தொ¢ந்திருந்த கதைகளும் எண்ணிலடங்காது. எத்தனை முறை சொல்ல நோ¢ட்டாலும் கதாபாத்திரங்களின் பெயர்கள், குணாதிசயங்கள், சம்பவங்களை அப்படியே திரும்ப விபா¢ப்பார். அவருடைய கதை சொல்லுங்கலையும் ஞாபகசக்தியும் அலாதியானவை. மதன காமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதைகள், தவிட்டுச் செட்டியும் மாணிக்கச் செட்டியும், ஜெளவனபூ¢ இளவரசியும் கோசலைநாட்டு இராஜகுமாரர்களும், உலோபிச் செட்டியும் ஊதா¡¢ மகனும்……… இப்படிப் பல நூறு. இன்றைய கணக்கில் ஒரு 500 G.Bytes ஆவது தேறும். இவற்றையெல்லாம் அச்சேற்றாது விட்டது உண்மையில் எமக்குப் பேரிழப்பே. காலத்தில் கொக்குவிலில் குமாரசுவாமிப்புலவரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து கொஞ்சம் நன்னூல் , நிகண்டு, தொல்காப்பியமும் கூடப் படித்ததுண்டாம்.

சனிக்கிழமைகளில் முழுக்கென்றால் துரையர் (சந்தானத்தாரை அப்படித்தான் அவர் அழைப்பார்) ஐந்துரூபாய்கள் கொடுத்தாலோ அல்லது தன் சுருட்டை விற்றவழியில் ஏதாவது பணம் மடியில் தொங்கியிருந்தாலோ பொழுது சாய்ந்து மைம்மலாக ஓசைப்படாது எங்காவது போய் லேசாகக் கீறிவிட்டு வந்து புன்னகையோடு சூ¡¢யப்பிரகாசமாயிருப்பார்.

ஒரு ‘புழுகம்’ வந்துவிட்டால் அருகில் உள்ள தொ¢ந்தவர்கள் வீடுகளுக்கு ஒரு ‘விசிட்’ அடிப்பார். ஆனால் அவர்கள் அவரை வரவேற்பவர்களாக இருக்க வேண்டும். அவர் அதிகம் ‘விசிட்’ பண்ணுவதென்பதெல்லாம் ஹா¢கேசன் வீட்டுக்குத்தான். அவரைக் கண்டுவிட்டால் போதும் ஹா¢கேசன் சகோதா¢கள் “அப்பா ஒரு கதை சொல்லுங்கோ . . . சொல்லுங்கோ . . . ” என்று பிடித்துக் கொள்ளுவார்கள்.

அவரும் ‘பிகு’ ஏதும் பண்ணமாட்டார். தட்டத்துள் ஒரு கை நிறைந்த சீவலையள்ளி முழுவெற்றிலை ஒன்றைச் சேர்த்துச் செழிக்கப் போட்டுக் கொண்டு ஒரு பிரசங்கியாரைப் போலச் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு தொடங்கிவிடுவார். ஏற்றிய ‘சுப்பா’வுக்குத் தக்க விகிதத்தில் பாட்டுக்களுடனான கதைகளின் வர்ணிப்பும் விஸ்தாரமும் அமையும்.

சந்தானமானவர் தங்கமான ஒரு மனிதர். வாடுகின்ற பயிர் கண்டு வாடும் தீனதயாளன். யாழ் தனியார் மருத்துவமனையொன்றில் கணக்காளராய் வேலை பார்த்தவர். 1970 களின் நடுப்பகுதியில் பணியிலிருந்து ஓய்வானபோது, கிடைத்த சேமலாப நிதியம் அதுவரை உருவாக்கியிருந்த கடன்களில் அடைபட, ஓய்வூதியம் இல்லாத குடும்பம் தள்ளாடத் தொடங்கியது. வறுமையை அதற்குமேல் சகிக்கப் பொறுக்காததாலோ அடுத்த ஆண்டில் அவரும் வண்டியைப் பூட்டிவிட்டார்.

சந்தானத்தார் பி¡¢வின்போது “நான் இரண்டாம் தரமும் அனாதையாக்கப்பட்டு விட்டேன் ” என்று சுப்பையா அப்பா கலங்கினார்.

ஏலவே பொருளாதாரத்தால் தள்ளாடிக் கொண்டிருக்கும் குடும்பத்திற்கு சுமையாக தான் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இருப்பேன் என்று புலம்பியவர் தான் வேறு எங்காவது போய்விட வேணும் என்று விரும்பினார். எங்கேயென்பதுதான் அவருக்குத் தொ¢யாமலிருந்தது.

சந்நிதி கோவிலுக்குப் போகிறேன் என்று போவார். பின் நாலைந்து நாட்கள் கழிய வயிறு ஒட்டி கண்கள் பஞ்சடைந்து போயிருக்கத் திரும்பி வருவார். நடைபிணமாய் அலைந்து கொண்டிருந்த சுப்பையா அப்பாவை ஹா¢கேசனுக்குக் காணப்பொறுக்கவில்லை. ஜெயமோகனுடன் சேர்ந்து ஒருநாள் கைதடி முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாமென்று கூட்டிச் சென்றான்.

அவர்கள் போட்ட முதல் கேள்வியே “உணவுப்பங்கீட்டுக் கூப்பன் இருக்கா? ”

சுப்பையா அப்பா அவர் வன்னியில் இருந்த காலத்தில் ஒருநாள் தன் கூப்பனை மாடு தின்ற கதையை விஸ்தாரமாகச் சொல்லப் புறப்பட அங்கிருந்த அதிகா¡¢ சொன்னார் “உந்த விவரணங்கள் எங்களுக்குத் தேவையில்லை. இப்போது உம்மிடம் கூப்பன் இருக்கா இல்லையா சொல்லும்? ”

“இல்லை”

“வெறி சொறி…… வெறிசொறி…… கூப்பன் இருக்கிறவர்களுக்கே டி.ஆர்.ஓவின் சிபார்சு வேணும். இங்கை பாருங்கோ ஐநாறுக்கு மேல குவிஞ்சிருக்கிற விண்ணப்பங்களை . . . . எங்களால ஒன்றுமே செய்ய முடியாது. தயவு செய்து மன்னிக்க வேணும.; ”

எழுந்து கொள்ளவும் நாம் வெளியேற வேண்டிய வழியைக் கண்களால் காட்டினார் அதிகாரி.

நம்பியிருந்த கடைசிப்புகலிடம்……………… அதுவும் இல்லையென்றாயிற்றே……. இந்தப் பதிலால் சுப்பையா அப்பா எவ்வளவுக்கு உள்ளே நொருங்கிவிட்டிருந்ததைக் கடைவிழியோரம் துளிர்த்திருந்த துளிகள் காட்டின.

வீடு வந்து சேர்ந்த பின்னால்தான் சொன்னார். “கூப்பன் இருந்தாலுந்தான் டி.ஆர்.ஓ நான் அனாதையென்று சிபார்சு பண்ணுவாரோ தொ¢யாது.”

“ஏன் ” இருவரும் ஒரே சமயத்தில் கேட்டனர்.

” நான் அனாதையாக்கப்பட்டவனே தவிர அனாதையில்லையே? ”

” இது புதிசாயிருக்கு . . . கொஞ்சம் விளக்கமாய்த்தான்

சொல்லுங்கோவன். ”

சற்றே மெளனத்தை நிலவவிட்டார். சுப்பையா அப்பா தன் கதையைச் சொல்லப் போகிறார் என்ற ஆவலில் ஹா¢கேசனின் அம்மா, சகோதரிகள், சித்தியுட்பட நிறையப்பேர் கூடிவிட்டார்கள்.

“எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். சற்று நிறுத்திவிட்டுச் சொன்னார், என்ரை பிறந்த மண்ணில.”

“அந்தத் திருவூர்தான் யாதோ? ” யாரோ கேட்டார்கள்.

” ஊர்காவற்றுறை.”

” ஊர்காவற்றுறை பற்றி நீங்கள் ஒருநாளும் மூச்சுக்கூட விடேல்லயே எங்களோட? ”

“அட………………… அந்த ஊரைப்பற்றி, அங்கேயுள்ள என்ரவுறவுகள் பற்றி யாரோட என்னத்தைப் பேசுவன்? ”

ஹா¢கேசனின் அம்மா கேட்டார், “சா¢ ஊர் கிடக்கட்டும்…………….. அங்கையிருக்கிற உங்கட மற்ற உறவுகளும் கிடக்கட்டும்…….. உங்க மகள்கா¡¢ அவரை நீங்கள் ஏன் விட்டுப்பிரிஞ்சிருக்கிறியள்……………… அவள் ஏன் உங்களை

வைத்துப் பார்க்கக் கூடாது…………… இதுகளின்ர விபரத்தைச் சொல்லுங்கோ”

“மகள் வயிற்றுப்பேரனும் ஒருவன் நீர்கொழும்பில பொ¢ய போஸ்ட்மாஸ்டராய். இருக்கிறான்……………. முன்னால போய் நின்றாலும் என்னை யாரென்று தெரியவராது! ”

“இந்த உறவுகள் அறுந்த கதை பொ¢சு. அவளுக்கும் தாயைப் போலத்தான் செறிஞ்ச பிடிவாதமும் கெருவமும் உடம்பு முழுக்க. நானும் சில பிழையளை அந்தநாளில விட்டிட்டன்தான்…….. இதுகள் எல்லாம் சேர்ந்து என்னை நடுத்தெருவில கொண்ணந்து விட்டிட்டுது”

“மகள்கா¡¢க்கு என்ன பெயர்? ”

“சுககி ”

“அந்தக் காலத்திலேயே மொடேனாய் லக்க்ஷ்மியின்ரை பெயரைத் தேர்ந்து வைத்திட்டியள். ”

“மகம் நட்ஷத்திரக்காரி இப்பவும் அவள் மகாலக்க்ஷ்மியாய்த்தான் வாழுறாள். அந்த அயலட்டை காணியள் நகையள் எல்லாம் ஈடு பிடிக்கிறது அவள்தானே? ”

” அந்தப் பொ¢ய பணக்கா¡¢க்கு சொந்தத் தகப்பனைப் பேணக் கசக்குதாக்கும்? ”

“அவளும் பிறந்து இரண்டு வயசு நடக்க தாய்க்காறிக்கு காயாசுவாதம் வந்து ‘போய்விட்டாள்’. சிறியதாய்தான் அவளை வளர்த்து எடுத்தது. பிறகு நானும் வன்னிக்குப் போய் கொஞ்சக் காலம் நெல்லு வியாபாரம் அது இது என்று ஓடித்திரிஞ்சிட்டு, பிறகு மரக்காலை ஒன்றை மன்னா¡¢ல போட்டுக்கொண்டு தாரமுமொன்றைச் சேர்த்தனா, அப்பா – பிள்ளை என்ற உறவு வி¡¢ஞ்சு போச்சு. சுககியை படிப்பித்ததென்றாலென்ன, கல்யாணம் செய்து வைத்ததென்றாலென்ன சிறியதாய் குடும்பம்தான். ”

“உங்கட இரண்டாந்தார மனிசி, பிள்ளையைக் கூட்டிவாங்கோ, சேர்ந்திருப்பம் என்று கேட்கயில்லையோ? ”

“கொஞ்சம் வளரட்டும் பள்ளிக்கூடம் போற வயது வரட்டும் என்று நான்தான் சாக்குகள் சொல்லிட்டன். சிறியதாய்க்கா¡¢யும் வன்னிக்குப் பிள்ளையை விடவேமாட்டன். அது எங்களோடயே வளரட்டும், படிக்கட்டும், நாங்கள் விரும்பித்தான் அவளை வச்சிருக்கிறம் என்டிட்டா. எனக்கும் அந்தக்காலத்திலை சாதகம் எழுதிவைக்கேல்ல…….. என்ரை கிரகங்களுக்குத்தான் தார தோஷமாக்கும். மற்றத் தாரமும் நோய் கண்டு நாலைஞ்சு வருஷத்துக்குள்ளே கண்ணை மூடியிட்டா…… குடும்பத்தில பிறகொரு நல்லகாரியமெண்டால் சுககியின்ர கலியாணந்தான். மாப்பிள்ளையையும் எனக்கு முதல்லயே தொ¢யும். கவுண்மேந்தில கட்டிடங்கள் கொண்டிராக்ட்டுக்கள் எடுத்துச் செய்து கொண்டிருந்த மனுஷன் நல்ல குணசாலி. இந்தக் கறுப்பியைச் செய்ய ஒத்துக்கொண்டதே பொ¢ய விஷயம். நகையள் உட்படத் தாய்க்காரி கொண்டுவந்த அவ்வளவு சீதனமும் கொடுத்தன். கலியாணத்துக்குப் பிறகு நடந்ததுதான் சின்ன முசுப்பாத்தி……… இல்லையில்லை முசுப்பாத்தியில்லை. அவள் என்னைப் பிறங்கையால எத்தின சம்பவம்.

அது ஆயிரத்தித் தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு. வன்னியிலே இருக்கிறன். புது வருஷம் வரவும் கட்டிக்ககொடுத்த மகளைப் போய்ப் பார்க்க வேணுமென்று ஒரு ஆசை பிறந்துது. அங்ஙின நெல்லுக்கட்ட வந்த ஒரு லொறியில பத்து மூட்டை நெல்லும் கட்டிக் கொண்டு வெளிக்கிட்டன். அது எனக்கு நல்லாய் மடியில புழங்கின நேரம். வரும் போதே யாழ்ப்பாணத்தில வெள்ளைப் போத்தல் எடுத்து ‘ஏத்தி’யாச்சு……. அதால நேர மீன் சந்தைக்கு லொறியை விடச் சொல்லி நாலு அடி நீட்டில திரியாப்பாரை மீன் ஒன்றும் வாங்கிக்கொண்டு நேர மகள் வீட்டையே வந்து இறங்கினன். மருமோன்காரன் வீட்டில இல்லை. வெளியில எங்கேயோ போயிருந்தார்…… என்னையும் பற்றிக் கொண்டு நின்ற சனியன் கேட்க வைச்சுதோ……… இல்லை உள்ளே போன வெட்டிரும்புதான் மயக்கிச்சிதோ……….. இல்லை நாக்கில ராகு நிண்டவேளையோ ஒரு வார்த்தையை விட்டிட்டன். ”

மீண்டும் சிறிய இடைவெளிவிட்டுவிட்டு நனவிடை தோயத்தொடங்கினார்.

“அப்பிடி என்னத்தைக் கேட்டியள்? ” என்று ஹா¢கேசனின் தாய் மெளத்தை உடைத்தார்.

” மீனை அவள் கையிலை கொடுத்து, அவள் அதை உள்ள கொண்டு போக எடுத்தொரு அடிவைக்கேல்ல கேட்டன். உன்ர புருஷனும் இப்பிடிப் பொ¢ய மீன் வாங்கிவந்து தாறவரோ? ” எண்டிட்டன்.

” அப்ப அவர் வேண்டித்தராட்டா நீ என்ன மசிருக்கு அப்படிப் பொ¢ய மீன் வேண்டித்தாற மாப்பிள்ளையைக் கட்டித்தரேல்ல…………….. எண்டவள் உமலோட தூக்கிச் சுழட்டிவிட்டாள், மீன் போய் படலேக்கை விழுந்துது.”

‘உந்த xxxxxxxடரியத்து மீன்தான் ஒரு வாழ்க்கையெண்டு இஞ்சை மனிசரிரிருக்கேல்ல…….. அப்பிடி அற்பமாய் நினைக்கிற அப்பனுந்தேவையில்லை’ எண்டவள் தலைவாசல் கதவை அடிச்சுச் சாத்திப்போட்டு உள்ள போட்டாள்……… அண்டு மிதிச்ச முற்றந்தான், இண்டைக்கு முப்பது வருஷமாச்சு. “பேரனும் கலியாணம் கட்டிவிட்டானாம்” என்றவர் மீண்டும் மெளனித்தார்.

குரல் கம்மி வேறு யாரோ பேசுவது போலிருக்கிறது.

“மருமோன் அங்க நிண்டிருந்தாரெண்டால் அப்பிடி ஒரு வார்த்தை என்னிட்டயிருந்தும் வந்திருக்காது. கெளவுரமாயிருந்திருப்பன்………….. ஏதோ கஷ்டகாலம். நானாய் முன்னின்று தனக்குக் கலியாணம் பண்ணி வைக்கவில்லையென்றும் ஏற்கெனவே உள்@ர அவளுக்கு மன்னை போதாக்குறைக்குச் சித்தப்பன் தேடிக் கட்டிவைச்ச மாப்பிள்ளையையும் ‘பகிடி’ பண்ணிறனென்டுதான் அவளுக்குப் வெப்பிகாரம்……. பொறுக்காமல் போனது. அவள் பக்க ஞாயத்தையும் நாம யோசிக்கத்தானே வேணும். இங்கை அவள் புருஷன் பொ¢ய மீன் வேண்டிவரவில்லையென்றால், அதனால எனக்குக் கவலையோ இல்லை சந்தோஷமோ என்றொரு கேள்வியுமிருக்கல்லே………….. இதையெல்லாம் யோசிக்க வெறி எங்ஞினை விட்டுது? ”

சுப்பையா அப்பாவின் தர்க்க நியாயங்கள் கேட்பவர்களுக்கு ஆச்சர்யம் தந்தன.

“இதெல்லாம் நடந்து ஒரு பத்து வருஷம் கழித்து பெற்றோல் செட்டு ஏரம்புவும், சமாதான நீதவான் தம்பிநடராசாவும் சேர்ந்து வயசான காலத்தில இனிமேலும் தனியாய் வன்னிக் காடு கரம்பையென்று தி¡¢யப்போறியோ, போயும் போயும் யாரவள் நீ பெத்த மகள்தானே. எங்களோட வா ஒற்றுமையாக்கி விடுறமென்று நாண்டுகொண்டு நின்று என்னை அவளிட்ட கூட்டிப்போச்சினம்……… நானும் மிச்சமிருந்த சூடு, சுரணை, வெட்கம், மானம், கவுரவத்தையெல்லாம் விட்டிட்டு இரண்டு பொ¢ய மனுஷர் கேட்கினமேயென்று அவர்கள் பின்னாலை போனனான்தான்……….. ”

“மோள்க்காரி வரவேற்றாளா? ”

“அவள் என்ர முகத்தைப் பார்க்கக் கூட மறுத்திட்டாள். போதாததுக்கு ‘வேண்டாமென்று விட்டதுகள் பிறகேனிஞ்ச தி¡¢யுதுகள்’ என்று முத்தத்தில படுத்திருந்த நாய்க்குத் தண்ணியை ஊத்திக் கலைக்கிறாள்.”

சம்பவங்களின் ரணங்கள் இன்னும் வலிப்பது அவர் முகபாவங்களில் தொ¢கிறது.

“வயசும் ஆகஆக வன்னி வாழ்க்கையும் தோதுப்படேல்ல . . . காட்டுக் குளிரும் கருங்கல்லுத் தண்ணியும் ஒத்துக் கொள்ளேல்ல வந்திட்டன். தம்பிநடராசரை ஒருநாள் எங்கேயோ கண்டபோது கேட்டாளாம், ‘கையாய் காலாய் ஓடேயில உழைச்சதுகளையெல்லாம் வன்னியில கரைச்சுப்போட்டு இப்ப சதுரம் ஒடுங்கினாப்போல வந்தவரோ உறவுதேடி’ என்று…… அதிலும் நியாயம் இருக்குத்தானே. நானும் பரதேசியாய்ப் போய் நின்றால் யார்தான் ஏற்பினம்? ”

“உங்களின் பிற்காலத்தை நினைத்தென்றாலும் ஏதும் தேடி வைத்திருக்கலாந்தானே? ”

“தேடேல்ல…… தப்புத்தான். சும்மா நாடோடியாய்த் தி¡¢ஞ்சு காலத்தை விட்டிட்டன்…… இந்தத் தவறை திருத்திறதென்டாலினி இன்னொரு அவதாரம் எடுத்தல்லோ! ”

சிரிக்கிறார். எவ்வளவு வாஸ்தவமான வார்த்தைகள்!

கோடிக்குப் போய்விட்டு வந்த ஜெயமோகன் கேட்டான்: ஒரு பேச்சுக்கு உங்களிட்டை “ஒரு ஐம்பதோ அறுபதோ இருக்கென்று வைப்பம். அப்ப மோள் சேர்த்துக் கொள்ளுவாவோ அப்பாவை? ”

“பணவாஞ்சை இருக்கிறதைப் பார்த்தால்……. ” மீண்டும் சி¡¢க்கிறார்.

************

அன்று ஹா¢கேசன் அறையில் அவனும் ஜெயமோகனும் சுப்பையா அப்பாவின் பிற்காலம் பற்றித் தீவிரமாக யோசித்தார்கள். விவாதித்தார்கள்.

ஜெயமோகன் கேட்டான் “தார்மீக நியாயங்களின்படி , அறத்தின்படி , தர்மத்தின்படி பார்த்தால் இன்னும் சுப்பையா அப்பாவை பராமா¢க்க வேண்டிய கடமை யாருக்கிருக்கு? ”

“அவர் மகள் சுககிக்குத்தான் ”

“ஏன்? ”

“அவா¢ன் தனிப்பட்ட குணநலன்களையோ, கடமைகளையோ, கடந்த காலங்களில் அவர் நடந்து கொண்ட விதங்களையோ கணக்கில் கொள்ளாது பார்த்தாலும், அவர் அவளுடைய இரத்த உறவுடைய தந்தை. இதனால அந்தக் கடமையின் முதல் பாத்யத்தை அவளுக்குத்தான். சாத்திரங்கள் பிதுரார்ஜிதம் பற்றி என்ன சொல்கின்றன ? ”

“அதுவெல்லாம் எனக்குத் தொ¢யாது….. அப்படியொரு கடமை அவளுக்கு இருக்கென்று எப்படி உணர்த்துவது? இவ்வளவு கர்வியாகவும், ஆணவக்கா¡¢யாகவும், கல்;நெஞ்சுக்காரியாயும் இருக்கிறாளே! ”

“இதற்கு அவளது பலவீனப் பகுதியைத்தான் தாக்கித்தான் ஜெயிக்கவேணும் .”

” அவளது பலவீனம் என்ன ? ”

” அதுதானே சுப்பையா அப்பாவே சொன்னாரே………. பணவாஞ்சை. ”

” ஆள் மூஞ்சையே தெரியாமல்……………. இது எப்பிடிச் சாத்தியம்? ”

ஹா¢கேசன் சொன்னான் ” நாம் கொஞ்சம் வினைக்கெட்டால எல்லாம்; சாத்தியம். ”

அவர் சொன்ன கதையை வைத்தே நாமொரு நாடகம் போடவேண்டியிருக்கும். சுப்பையா அப்பாவோட சேர்ந்து நாமும் இரண்டு சின்ன ‘றோல்ஸ்’ செய்யிறம்…….. உனக்கு அவர் சொன்ன ‘மற்றப் பொக்கிஷங்கள்’ கதை ஞாபகமிருக்கா?

“இருக்கு……… ஆனால் பின்னால முதுகுக்கு மட்டைகட்ட வேண்டி வரேக்க முழுப்பொறுப்பையும் நீ ஏற்றுக்கொள்ளிறதென்றால் நான் தயார். ! ”

“பதறாத பரதேசி……….. அப்பிடியொண்டும் வராது.”

இருவரும் இரவு முழுவதும் கண்விழித்து திட்டத்தின் ஒவ்வொரு காட்சியையும் எப்படி நகர்த்துவதென்பதை விவாதித்து வரையறுத்தனர்.

விடிந்ததும் சுப்பையா அப்பாவிடம் தமது திட்டத்தைப் பூராவும் விளக்கினர். சுப்பையா அப்பா முதலில் மறுத்தார். இந்த விளையாட்டில் உள்ள அறத்தை அவருக்கே திருப்பி போதிக்க வேண்டியதாயிற்று.

அரைமனதோடு சம்மதித்தார்.

காலைச்சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஹா¢கேசனும் ஜெயமோகனும் சைக்கிளில் ஊர்காவற்துறைக்குப் புறப்பட்டனர். சுப்பையா அப்பா சொன்ன குறிப்புக்களின்படி அவ்வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை. முன்விறாந்தையில், சுககியின் புருஷனாக இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்த ஒருவர் கன்வேஸ் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தபடி புத்தகம் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். வாசலில் இவர்களைக் கண்டதும் எழும்பிவந்து விசா¡¢த்தார்.

“நாங்கள் அடைவொன்று வைக்க வந்தனாங்கள் .”

“இந்த அலுவல்களை நம்ம வீட்டுக்கா¡¢தான் கவனிக்கிறவ……… அவ வெள்ளிக்கிழமைகளில செல்வச்சந்நிதி கோயிலுக்குப் போய்விடுவா………… அடைவு காரியஞ்செய்யிறேல்ல. எதுக்கும் நீங்கள் நாளைக்குக் காலமெ வாறதுதான் பாருங்கோ நல்லது. ”

‘வெள்ளிக்கிழமைகளில சந்நிதி கோயிலுக்குப் போறவ’ புதிய தகவலொன்று கிடைத்த மகிழ்வில் வீடு திரும்பினர்.

அச்சுவேலியில் கணபதிப்பிள்ளைப் பத்தர் என்றொருவர் யாழ்ப்பாணத்தில் நகைக்கடைகளுக்குப் பொ¢ய அளவில் ஓடர் வேலைகள் எடுத்துச் செய்பவர். ஹா¢கேசன் குடும்பத்திற்கு நன்கு தொ¢ந்தவர். அவர் காலில் போய் சாஷ்டாங்கமாக விழுந்து ஆறேழு பவுண் தேறக்கூடிய மாதிரி ஒரு கழுத்துச் சங்கிலியும், கல்லுவைத்தும் வையாததுமாக நாலு மோதிரங்களும் இரவல் வாங்கினர். ஜெயமோகன் தன் அப்பாவின் கல்யாணத்துக்கு எடுத்ததென்று நாலு விரல் அகலத்தில் பச்சை சிவப்பு மாறுகரைகள் கொண்ட வேஷ்டி சால்வைசெட் ஒன்று கொண்டுவந்தான். அதற்கு பொருத்தமான சில்க் துணி வாங்கிச் சேர்ட் ஒன்றும் தைப்பித்தனர்.

அடுத்த வெள்ளிக்கிழமை………

ஹா¢கேசனும் ஜெயமோகனும் சுப்பையா அப்பாவுடன் வாடகை வண்டி ஒன்றை அமர்த்திக் கொண்டு காலைப் பூசைக்கு முதலே தொண்டமானாறு செல்வச் சந்நிதிகோயில் வசந்த மண்டப வாசலில் போய் நின்றனர். சுப்பையா அப்பா விபூதி சந்தனத்தோடு தங்கச்சங்கிலியும் மோதிரமும் ‘பளபள’க்க பட்டு உத்தரீயத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு மைசூர் மகாராஜா பாங்கில் பூசை புனஸ்த்தானங்களைப் பார்த்துக் கொண்டு நிற்க மற்ற இருவரும் தூண்களின் மறைப்புக்களில் நின்று கொண்டு அங்கு வரக்கூடிய நடுத்தர வயதுப் பெண்களை ஆராய்ந்தனர்.

ஒரு கால்மணி நேரம் கடந்திருக்கும். கழுத்தேயில்லாத பெண்ணொருத்தி, கரடியொன்று புடவையுடுத்தி வருவது போல லொங்கு லொங்கென்று வந்தாள். நல்ல குண்டு வாய்ப்பன் முகம். தலையைச் சிரமேல் குவித்து

“என்னப்பனே……. மயிலேறும் பெருமாளே……. முருகா…..” என்றபடி வந்தவள் சுப்பையா அப்பாவைக் கண்டதும் ஒரு பக்கமாய் விலகிப் போய் நின்று வில்லி நடிகை சி.கே.சரஸ்வதி பாணியில் கண்களை உருட்டி அவரை உற்று நோக்கினாள். சிரசில் குவித்த கைகள் மெல்லக் மெல்ல கீழ் இறங்கவும் வாய் மெல்ல மெல்லத் பெரிதாகத் திறக்கிறது. அவளுக்கு நம்ப முடியாத ஆச்சர்யம். பிறகு வேறொரு கோணத்தில் போய் நின்று அவரைப்பார்த்தாள்.

சுப்பையா அப்பா இகநிகழ்வுகள் எதனாலுமே பாதிக்கப்படாதவர் போல செட்டாக மூலஸ்தானத்தையும் தெற்குக்கேணியையும் மாறிமாறிப் பராக்குப் பார்த்தபடி நின்றார். பின் ஏதோ நினைத்துக் கொண்டவர் போல உள்ளே போய் சற்று நேரம் சேவித்தார்.

இவைகளைக் கவனித்த இருவரும், சுப்பையா அப்பாவை அணுகவும் கேட்டார்: “கண்டியளோ…….. ? ”

“ஓம் . . . ஓம் . . . ஓம் . . . முருகா. . . ஓம்! ”

அவர்கள் வெளியே வந்து கடலையெல்லாம் வாங்கிக் கொண்டு வெற்றிக் களிப்பில் நிற்கவும் சுககி மீண்டும் வசந்த மண்டபத்தில் ஒரு ஓரமாக நின்று இவர்களையே ·போக்கஸ் பண்ணுவது தொ¢ந்தது. அரையில் இருந்த உத்தரீய த்தைத் தோரணையுடன் உதறித் தோளில் போட்டுக் கொண்டு உத்தரவிட்டார் சுப்பையா அப்பா.

“புறப்படுகிறம். ”

ஜெயமோகன் போய் காரைத் தேர்முட்டி வரையும் அழைத்து வந்தான். சுப்பையா அப்பா பந்தாவாக ஏறி பின் சீட்டில் அமரவும் கார் புறப்பட்டது.

அரவிந்தம் வேஷ்டியும் அரைக்கை சேட்டுமாய்த் தி¡¢ந்த கிழவன் மைனர் சங்கிலிக்கும், கல்லுமோதிரத்துக்கும் மாறின வித்தாரந்தானென்ன…….. ? லொத்தர் தான் ஏதும் விழுந்ததோ………? சுககியால் அன்றுமுதல் தூங்க முடியவில்லை. ‘ யாரைத்தான் கேட்பது இருபது வருஷமாய்த் தொட்டல் தொடுகல் இல்லாமல்

இருந்திட்டமே….அவற்றை செல்வத்தை அனுபவிக்கத்தான் பெடியங்கள் இரண்டும் பின்முன்னாய்த் தி¡¢யுறாங்கள்போல. ’

மனம் பேயாய் அலைந்தது.

அடுத்த வெள்ளிக்கிழமையும் சுப்பையா அப்பா கா¡¢யிருந்து இறங்கி மாறுகரை வேஷ்டியின் கரைகள் தரையில் படாத வண்ணம் செல்லமாய் ஒரு கையால் உயர்த்திப் பிடித்தபடி கேணிக்குப் போய் கால் அலம்பிவிட்டுக் கற்பூரம் வாங்கித் தீச் சட்டியுள் இட்டுவிட்டுக் கோயிலினுள் உள்ளே நுழையவும் இரண்டாம் மண்டபப்படி வாசலில், ஏற்கனவே வந்துவிட்ட சுககி இவர்களை எதிர்பார்ப்பது போல நின்றிருந்தாள்.

சுப்பையா அப்பாவுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தைக் காட்டு முகமாக ஹா¢கேசனும் ஜெயமோகனும் தம்முள் வச்சிரம் வைத்ததுபோல் ஒட்டி அவரை வாலாகத் தொடர்ந்தார்கள்.

விபூதி சந்தனமெல்லாம் பூசித்தீவிரமாகத் தியானித்துக் கொண்டிருந்த ஹா¢கேசனுக்கு பக்கமாய்ப் போய் சுககி நின்றாள். அவனும் கண்களைத் திறந்துகொண்டு சற்றே இவ்வுலகம் வரவும் அவனைப்பார்த்து மெல்ல முறுவலித்தாள். அவன் அந்நியமாக அவளை நோக்கிவிட்டு அப்பால் நகர்ந்தான். அவளும் ஒரு விநாடி தயங்கிவிட்டுக் மீண்டும் அவன் பக்கம்போய் “தம்பி உங்களோடை ஒரு விஷயம் பேசவேணும் ” என்றுவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தா. அந்த இடமும் சூழலும் தம் பேச்சுக்குத் தோதாயில்லை என்பதாக.

ஹா¢கேசன் ஜன நெருக்கமில்லாத ஒரு பக்கமாய் வரவும் தொடர்ந்து வந்தவ கேட்டா, “தம்பி உங்களோடை கா¡¢ல வந்ந அந்தப் பொ¢யவர் யார்? ”

கேள்வியால் துணுக்குற்றது போலவும்………….. உடனே பதில் சொல்லத் தயங்குவது போலவும் நடித்தான்.

“இல்லை . . . அவர் பார்வைக்கு எங்க ஊர்க்காரர் ஒருவர் போல

இருந்தார். அதுதான் கேட்டனான்..”

“உங்களுக்கு எந்தவூர் ? ”

“ஊர்காவற்துறை……..”

“இருக்கும்……. அவருக்கும் பூர்வீகம் கரம்பனோ ஊர்காவற்துறைப் பக்கம்தான். பொ¢யவர் பெயர் நாராயணன் சுப்பையா. இப்ப பத்துப் பதினைஞ்சு வருஷமாய் எங்களோடதான் இருக்கிறார். ”

“உங்களோடயென்று…… ? ”

“எங்களுடைய சித்தப்பா சந்தானத்தார் குடும்பத்தோட……. புத்தூ¡¢ல அவைதான் இவரைப் பார்க்கிறது. ”

“உங்களோட வந்த மற்றத் தம்பி யாரு? ”

“அவனும் என்ர ·ப்றென்ட்தான். எப்பவும் என்னோடதானிருப்பான்.”

இவர்கள் சம்பாஷிப்பதைக் கவனியாதது போல ஜெயமோகன் கோவிலுள் நுழைந்த காவடிக் கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டான்.

” ஊர்க்காரரெண்டதாலதான் விசா¡¢ச்சியளாக்கும் ? ”

“தம்பி……. நான் உண்மையைச் சொல்லுறன்…… நான் வேறு யாரோவல்ல…… அவர் பெத்த மகள்தான். கொஞ்சம் கருத்து வேற்றுமைகள், மனத்தாங்கலுகளால நாங்கள் கனகாலம் பி¡¢ஞ்சு இருந்திட்டம்……. இப்ப என்னை யாரெண்டு மட்டெடுப்பரோவுந்தொ¢யாது. ”

அவா¢ன் குரல் தளதளத்தது. பின் அழலானார், உடனே அந்நியன் முன் அழநேர்ந்ததிற்கு வெட்கப்பட்டவர்போல அவசரமாக கண்களைச் சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டார்.

சுககியின் வாக்குமூலத்தினால் பொ¢தும் ‘ஆச்சா¢யம்’ அடைந்தவன் போல ஹா¢கேசன் அபிநயிக்க சுககி தொடர்ந்தார்.

“இப்ப உங்களோட இருக்கிறாரெண்டால் அவருக்கு இன்னும் தனியான வரும்படியள் உண்டோ ? ஆள் வசதியாய் இருக்கிற மாதி¡¢க்கிடக்குப் பார்க்க…….”

“அவர் தனக்கு ஒரு மகள் இருக்கிற விஷயத்தை இப்ப இரண்டு வருஷம் முதல்தான் எங்களுக்கே வெளியிட்டவர். மகளோட தனக்குச் சா¢வரேல்ல என்றுதான் சொன்னார். மனுஷன் தன்ரபாட்டிலயிருந்து சுருட்டுச் சுத்திக் கொண்டே இருப்பார்……. அப்பிடியே சுத்திச் சுத்திச் சம்பா¡¢ச்சுத் தன்ர மகளுக்கெண்டு அவர் தேடி வைத்திருக்கிறதைப் பார்த்தால்……. ”

‘பட் ‘டென்று நிறுத்தினான்.

“என்ன நிறுத்தியிட்டியள்? ” ஆவலாய்க் கேட்டாள்.

” அவற்றை அந்தரங்க விஷயங்களை நீங்கள் அவற்றை உண்மையான மகள்தானோ என்பதை உறுதிப்படுத்தாமல் நான் சும்மா என் பாட்டுக்கு விளம்பிக் கொட்டிறன்.”

“இந்தச் சந்நிதி முருகனறிய…… இந்தச் சந்நிதானத்தில நின்று யாரும் பொய்யும் பறைவினமோ ? ”

“ச்சாய்……. பறையாயினந்தான். எண்டாலும் யாரோட பேசிறன் எண்டதில நான் தெளிவாயிருக்க வேணுமல்லே ? அப்ப வாங்கோ அங்கால தள்ளிப்போய் நின்று கதைப்பம். சுப்பையா அப்பா தா¢சனம் செய்திட்டு வரச் செல்லும். ”

வா¢சையாயிருந்த கடலை வியாபா¡¢களையும், காப்பு மணிச்சாமான் கடைகளையும் தாண்டி பிரக்கிராசிமடம் மட்டும் வந்தார்கள். இவர்களைக்கண்டு மடத்துத் திண்ணையில் ஒண்டியாயிருந்த பிச்சைக்காரன் எழுந்து போனான்.

ஹா¢கேசன் திண்ணையில் கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்து கொண்டே கேட்டான்:

“உங்களை ஏன் அவர் விலகிப் போனார், நீங்களும் அவரைத் தேடிச் சேர்க்காமல் கொள்ளாமல் தேடாய்க் கூறாய் விட்டதென்ன?”

“தம்பி, இவ்வளவு விபரமாய் அறிவாய்ப் பேசிற உங்களிட்டச் சொன்னால் என்ன. மனுஷன் என்ர தேப்பன்தான் ஆனால் சா¢யான முன்கோபி. ஒரு சுடுசொல்லுப் பொறுக்கமாட்டார். ஒரு கதைவழியில கோவிச்சுக் கொண்டு வன்னி காடு கரம்பையென்று வெளிக்கிட்டாரென்று வையுங்களன்…. அவரை வச்சுப் பார்க்கிற நிலவரத்திலயும் அப்ப நாங்களிருக்கேல்ல. ”

சுககி உண்மைகளைப் பேசவும் அவர் அணிந்திருந்த பூட்டுக் காப்புக்களையும் தேர்வடம் மாதி¡¢யிருந்த தாலிக் கொடியையும் பார்த்தபடி ” நீங்கள் இப்படிச் சொல்லியிட்டியள்….. ஆனால் மனுஷனோ தன் மகளின்ரை கோபத்தையோ உதாசீனத்தையோ பொ¢சு பண்ணாமல் உங்களுக்கு என்னவெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். இதுவல்லோ பாசம்…. இப்படியொருவருக்குப் பிள்ளையாய்ப் பிறக்க மாதவஞ்செய்திருக்க வேணும். ” என்று முடித்தான் ஹா¢கேசன்.

“முன்னையும் துவக்கி நிறுத்தியிட்டியள். அப்பிடி என்னதான் சேமித்து வைத்திருக்கிறா¡ர்………. அந்த விபரத்தையுந்தான் கொஞ்சம் சொல்லுங்கோவன்.”

“தான் மறுதாரங் கட்டினதாலும், தேசாந்தி¡¢யாகத் தி¡¢ந்ததாலும் தன்னுடைய ஒரே மகளைக் கூடத் தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் வளர்க்கவில்லையே என்ற சோகம் அவருக்கு ஒவ்வொரு மூச்சிலுமிருக்கு….. அதை நிவர்த்தி பண்ணிற மாதி¡¢ அவர் உங்களுக்காகத் தான் சிறுகச் சிறுக உழைத்ததையெல்லாம் சேர்த்து எப்பிடி ஒருங்குவித்து வைத்திருக்கிறாரென்று அறிவியளோ ? ”

இதைக் கேட்டதும் சுககியின் முகம் ஜெகஜோதியாகியது! மணல் தவளை போல கண்கள் வெளியில் வர “மெய்யாலுமோ? ” என்றார்.

உதட்டில் விரலை வைத்து எச்சரிப்பது போல் செய்துகொண்டு

” எப்பவுமே இதை நான் சொன்னதாய்இருக்கவேண்டாம்……………… இருபத்தைந்து வருஷத்திற்கு மேலாய் மனுஷனின் ஒழுங்கான சேமிப்பு. இப்ப போன வருஷந்தான் போஸ்ட் ஒபிஸால இலட்சத்துச் சொச்சம் திரட்டி எடுத்து மக்கள் வங்கியில பதினெட்டு வீத வட்டிகிடைக்கவல்ல சேமிப்புப் பத்திரங்கள்; ‘தனக்குப் பின் தன் மகளுக்கும் வா¡¢சுகளுக்கும்’ என்று வாங்கிவைத்துக்கொண்டு அசுக்கிடாமலிருக்குக் கிழவன்! ”

சுககியின் கண்களால் நீர் தாரைதாரையாகக் கொட்டியது.

“இதுகளோடை ‘ லை·ப் இன்சூரன்ஸ் ’ சமாச்சாரங்களும் வேறையிருக்கு ஆளிட்டை. ”

சுககியால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மெய்தானரும்பி விதிர்விதிர்க்க , கொண்டை அவிழ்ந்து காற்றில் பறக்க ‘என் அப்பனே….. ஐயா!’ என்றபடி ஓடிப்போய் உட்பிரகாரத்தில் நின்ற சுப்பையா அப்பாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். ‘தன் தவறையெல்லாம் மன்னித்து இப்போதே தன்னுடன் வீட்டுக்கு வராதுபோனால் தான் தொண்டைமானாற்றுக் கடலில்தான் மிதப்பேன்’ என்று செல்வச்சந்நிதி முருகன் மேல் ஆணையிட்டாள்.

இவ்வளவு விரைவில் நாடகம் உச்சக்கட்டத்தை அடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். ஆனால் உடனேயே அவர்களது பிரியாவிடைக்கட்டமும் வந்ததுதான் இரட்டிப்பு அதிர்ச்சி!

Storyபி¡¢யாவிடையின் போது, உச்சத்திற்கு உச்சமாக சுப்பையா அப்பா ‘என்னை இதுவரை காலமும் தாங்கி ஆதா¢த்த செல்வங்களுக்கு’ என்று தான் சூடியிருந்த ஆபரணவகைகளை ஹா¢கேசனுக்கும் ஜெயமோகனுக்கும் பா¢சளித்தார். வங்கிச் சேமிப்பு மற்றும் இன்ஸ_ரன்ஸ் பத்திரங்கள் ‘தயார்’ பண்ண அவர்களுக்கு மேலும் ஐந்நூறு ரூபாய் செலவாகியது. ‘சுககி ஜெயமோகனின் கடிதம் கண்டு எப்பிடித்தான் கெம்பினாலும் பின் சாந்தமாகிவிடுவாள். புரைதீர்த்த ஒரு பொய்யைத்தான் நாம் சொல்லியிருக்கிறோம். எம்மைச் சந்நிதிவேலன் மன்னித்துவிடுவான்’என்று ஹா¢கேசன் நம்புகிறான்.

[கதையின் தலைப்பு மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றிலிருந்து கொய்தது. அவருக்கு நன்றி.]

03.01.1996 பாலம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *