உண்டியல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 6,460 
 

அகிலாவுக்கு வயது பதின்ரெண்டு.சுட்டியான பெண். படிப்பிலும் அவள் கெட்டிக்காரி. சற்று மாறு பட்ட சிந்தனைகள் உள்ள்வள். துரு துருத்த கண்கள். ஓரிடத்தில் இருக்க மாட்டாள். புத்தகப் பிரியை அந்த வீட்டு கூட்டுக் குடும்பத்தில் அவள் செல்லப்பிள்ளை, காரணம் வேறு ஒரு குழந்தைகளும் அந்த வீட்டில் இல்லை. அவளின் பெற்றோர் தாத்தா பாட்டி , சித்தி, சித்தப்பா, மாமா மட்டுமே அந்த பெரிய வீட்டில் வாசித்தார்கள். அகிலாவின் தந்தை மகாதேவன் என்ற தேவன் ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டைரக்டர் வேலை. நிறுவனம் அவருக்கு கார் கொடுத்து இருந்தது.. அகிலாவின் தாய் தேவகி கல்லூரி ஒன்றில் தமிழ் ஆசிரியை அகிலாவின் அம்மப்பா சிவராமன் ஓய்வு பெற்ற அரச அதிகாரி. அகிலாவின் அம்மம்மா லட்சுமி ஓய்வு பெற்ற ஆசிரியை. சித்தாப்பா ராகவன், சித்தி துளசி , திருமணம் ஆகாத அகிலாவின் மாமன் சுந்தரும் வேலை செய்பவர்கள். வீட்டை துப்பரவாக வைக்கவும், கடையில் போய் சமான்கள் வாங்கி வரவும், சமையல் செய்யவும் ராசம்மா என்று விதவை ஒருத்தி மாத சம்பளத்கில் இருந்தாள்., வீதடையும் சமையலையும் லட்சுமி மேல் பார்வை பார்த்தா;ள். வீட்டில் வருமானம் வருபவர்கள்ஓன்று சேர்ந்து பங்கு போட்டு அந்த பெரிய வீட்டில் கூட்டு குடும்பம் நடந்தினர்.

.அகிலாவின் தாய் தேவகி ,. அம்மாம்மா. சித்தி ஆகிய மூவருக்கும் கடவுள் பக்தி அதிகம். அடிகடி மூவரும் அகிளாவுடன் மூக்கு குத்தி அம்மன் ஊர் கோவிலுக்கு போய் வருவார்கள். தேவன் தன் வேலையும் தானும் என்று. இருப்பவர் அடிக்கடி வெளி ஊருக்கு வேலை விசயமாக போய் வருவார்.. நேரம் கிடைத்தால் மட்டுமே மனைவியுடன் கோவிலுக்கு போவார்.

தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டி அடிக்கடி கோவிலுக்குப் தேவகி போய் வருவாள். அம்மனுக்கு நேர்த்தி வைத்து ஒரு உண்டியலில் தினமும் பணம் போட்டு சேர்த்து வந்தாள். தங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தால் உண்டியலில் சேர்த்த பணத்தில் அம்மனுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுத்து கும்பம் வைத்து பூஜை ஓன்று செய்வதாக அம்மனை வேண்டிக் கொண்டாள். கோவிலுக்கு போகும் பொது அபிசேகத்துக்கு தவறாது பால் கொண்டு போய் கொடுபாள். தினமும் உண்டியலில் இரவு துயில முன்பு பணம் போட தவரமாட்டாள்..

பல மாதங்களுக்கு முன் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு தேவகி தேவன் அகிலாவுடன் போன போது அங்குள்ள கடைக்காரன் ஒருவன் வராக தோற்றத்தில் உள்ள உண்டியல் ஒன்றை காட்டி சொன்னான்

“அம்மா இந்த உண்டியல் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரத்தை நினைவூட்டும். இதை கொண்டு போய் பணம் சேர்த்து கோவிலுக்கு கொடுத்தால் நீங்கள் வேண்டிய காரியம் நடக்கும்”.

***

அன்று ஸ்ரீ ரங்கம் கோவிலில் வாங்கி வந்த அழகிய பன்னி உருவத்தில் உள்ள உண்டியலில் தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று இறவனை வேண்டி தினமும் காசு போட தேவகி ஆரம்பித்தாள்..

***

“என்னம்மா பன்னி குட்டிக்கு சாப்பாடு போடுகிறாயா”?என்று சிரித்தபடி கேட்டாள் தாய் உண்டியலுக்குள் காசு போடுவதை பார்த்து

“நீ என்ன சொல்லுகிறாய் அகிலா”? என்று தேவகி கேட்டாள்

“இல்லை அம்மா அந்த பன்னிக்குட்டி உண்டியலில் காசு போடுகிறாயே அது அதனுடைய வைத்துக்குள்ளே தானே போகிறது அது தான் சொன்னேன்”என்றாள் சிரித்தபடி அகிலா

“அடியே என் செல்ல குட்டி நான் உண்டியலில் காசு போடுவது உனக்கு ஒரு தம்பி கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி தான்”

“எனக்கு தம்பி கிடைக்க வேண்டும் என்று வேண்டி தினமும் நீ அந்த பன்னி குட்டிக்கு காசு போட்டால் எப்படி அம்மா எனக்கு ஒரு தம்பி வரும்”? என்று அகிலா கேட்டாள்.

“எங்கள் ஊர் மூக்குத்தி அம்மனுக்கு நான் நேர்த்தி வைத்திருக்கிறன் உனக்கு ஒரு தம்பி கிடைக்க வேண்டும் என்று. அம்மன் எனக்கு ஒரு ஆண்குழந்தை தந்தால் அம்மனுக்கு சேரத்த காசில் தங்கத்தில் தாலி செய்து கும்பம் வைத்து பூஜை செய்வேன் என்று வேண்டுதல் வைத்திருக்கிறான். அது தான் இந்த உண்டியலில் பணத்தை சேர்க்கிறேன் “.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவகியின் கணவன் தேவன் சொன்னான்”இங்கே பாரு தேவகி உன் மகளுக்கு இதை சொல்லி அவள் நம்பக்கூடியதாக இல்லை அவள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல உன்னால் முடியாது”.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவகியின் தங்கை துளசி சொன்னாள்”அக்கா அததான் சொல்வது சரிதான். கடவுள் நம்பிக்கை உங்கள் மகள் அகிலாவுக்கு இருக்கிறதோ என்று எனக்கு தெரியாது

அவள் கோவிலுக்கு உங்களோடு போகும் போது அவள் முகம் சுழிப்பதை நான் கவனித்தேன். நீங்கள் அவளை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தாய் லட்சுமி சொன்னாள்

“இங்கை பார் துளசி நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது அவள் அகிலா உதை கேட்டால் இன்னும் அவளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் அகி லா மனதில் ல் முற்போக்குச் சிந்தனைகளை வளர்த்து விடாதே அவள் சிலசமயங்களில் முற்போக்கு நூல்களை வாசிப்பதை நான் பார்த்திருக்கிறேன் நான் ஒன்றும் அதைப்பற்றி அவளோடு பேசுவதில்லை அதைப் பற்றி பேசினால் அவளுடன் வாதாட வேண்டும் என்பதால் அதை தவிர்த்து விட்டேன்”என்றாள் லட்சுமி.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அகி;லா சொன்னாள்

“அம்மம்மா எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்று யார் சொன்னார்கள்”

“என்ன சொல்லுகிறாய் மகள்”என்று கேட்டாள் தேவசி.

“இல்லை அம்மா நான் கடவுளை கோயில் வாசலில் கண்டேன்”..

“நீ என்ன சொல்ல வருகிறாய் அகிலா சொல்வதை விளக்கமாய் சொல்”

கோவிலுக்கு வெளியே எத்தனை பிச்சைக்காரர்கள் இருப்பதை பார்த்தீர்களா ?அப்படி நீங்கள் கண்டாலும்அவர்களிடம் இருந்து தூர விலகி செல்வீர்கள் இல்லையா ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள் அவர்களை தொட்டால் உங்களுக்கும் வியாதி வந்து விடும் என்று அவர்களுக்கு நீங்கள் கோயிலுக்குப் போக முன்பு காசு கொடுத்து இருக்கிறீர்களா இல்லவே இல்லை. அது மட்டுமா கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்து கொண்டு வரும் நைவேத்தியங்களை கொண்டு வந்து அந்த சிலைகளுக்கு பகிர்ந்து கொடுத்து இருக்கிறீர்களா அதுபோல் செய்யவில்லை அம்மா நீங்கள் கோயிலுக்குப் போகும்போது ஒரு செம்பில் பால் கொண்டு போய் அந்த சிலைக்கு அபிஷேகம் செய் கொடுஜிர்ர்கள் அந்த பால் வழிந்து கீழே ஓடுகிறது அங்கே பாருங்கள், பசியால் அழும் குழந்தைகோடு பிச்சை எடுக்கும் பிச்சைகாரிகளை பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்தீர்களா? பூகைக்கு பின் கிடைக்கும் பிற சாதத்தை திருப்பி வீட்டுக்கு கொண்டு வந்து விடுகீ’றீர்கள் இது சரியா அம்மா”? என்று கேட்டாள் அகிலா

எல்லோரும் அவள் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனார்கள்

“என் மகளுக்கு இவ்வளவு முற்போக்கு சிந்தனைகள் இருகிறது என்று எனக்கு தெரியதே”

“எனக்கு தெரியும் அவளுடைய ஆசிரியர் ஒருவர் பொதுவுடமைவாதி வகுப்பில் ஏழை மக்களை எப்படி நடத்த வேண்டும் என்று அடிக்கடி தன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார் அதுதான் அவ ளுடைய மனதிலும் பதிந்து விட்டது “தேவன்

ஐயோ கடவுளே வளர்ந்தபின் இவள் ஒரு பொதுவுடமைவதியாகி கடவுள் மேல் நம்பிக்கை வைக்காமல் இருக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் என்னுடைய பாட்டனார் கோவிலுக்கு தேர் செய்து கொடுத்தார் எனது பூட்டினர் கோவிலுக்கு கோபுரம் கட்டிக்கொடுத்தார் நாங்கள் கோவிலில் தானங்கள் செய்து வந்தோம் அப்படி இருக்கும்போது எனக்கு இருக்கும் மகள் இப்படி பேசுகிறாளே என்பதுதான் என்னுடைய கவலை”என்றாள் தேவகி.

இவர்கள் பேசுவதை கேட்ட்தும் கட்ட அகிலா சொன்னாள் “அம்மா நான் ஒரு கேள்வி உங்களிடம் கேட்கலாமா?”

“என்ன கேள்வி அகிலா?”

“நீங்கள் எப்போதாவது வேறு மதங்களின் வழிபடும் இடங்களுக்கு போயிருக்கிறீர்களா?”

“என்ன சொல்லுகிறாய் அகிலா நான் ஏன் போகவேண்டும் நான் ஒரு இந்து ஆகவே நான் ஒரு இந்து கோவிலுக்கு தான் போவேன்”.

“அம்மா இந்து. கத்தோலிக்ன். முஸ்லிம்கள், பௌத்தர்கள் ஆனாலும் சரி எல்லோருக்கும் இறைவன் ஒருவனே/ ஆனால் இந்த வேறுபாட்டை மனிதன்தான் உருவாக்கினான். நான் எப்போதும் ஒரு இறவனை மட்டுமே என் மனதில் நினைக்கிறேன்” என்றாள் அகிலா.

தன் மகளின் சொல்வதை கேட்டு தேவகி தன் கணவனை கேள்விக் குறியோடு பார்த்தாள்.

“அகிளா படிக்கும் கல்லூரியில் பொதுவுடமை கொள்கை உள்ள ஆசரியர் ஒருவர் இருகிறார் போல எனக்கு தெரியுது அந்த சிந்தனைகள் இவள் மனதிலும் வேரூன்றி விட்டது போல எனக்குத் தெரிகிறது நானும் இப்படித்தான் எனது இளமைக்காலத்தில் முற்போக்கு கொள்கை கொண்டவன் காலப்போக்கில் வேலை கிடைத்து பணம் கையில் வந்தவுடன் எனது சிந்தனைகள் மாறத் தொடங்கி விட்டது இப்போது நான் டைரக்டர் சொல்லப்போனால் முதலாளித்துவத்தின் கீழ் வேலை செய்பவன் என் சிந்தனைகள் இப்பொது மாறுபட்டதாக இருக்கிறது உன் மகளை கவனமாக அவதானித்து கொள் அவளோடு போய் வாக்குவாதம் செய்யாதே இந்த காலத்தில் இளம் சமுதாயம் நாங்கள் சொல்லி கேட்கப்போவதில்லை. அவர்களே அதை உணர்ந்து எது சரி எது பிழை என்று தீர்மானிக்கட்டும் என்றார் தேவன் ப்துவுடமி சிந்த்னிகள் தேவன் மனதிலும் இருந்து பின் காலப் போக்கில் பொதுவுடமைக் கொள்கைகளை கைவிட்டார. ஆனால் இன்றும் தேவன் சாதி மதம் பார்க்காத ஒருவனாகவே வாழ்ந்து வருகிறார் சிலசமயங்களில் தன் மனைவி தேவகி அடிக்கடி கோவிலுக்குச் சென்று தானம் செய்து வருவதை அவர் விரும்பவில்லை என்ன செய்வது அவள் தன் சொந்த ஊதியத்தில் வரும் பணத்தில் கோவிலுக்கு கொடுத்து வருகிறாள் தன்னுடைய ஊதியத்திலிருந்து பயன்படுத்தவில்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

***

இந்த உரையாடல் நடந்தது சில மாதங்களின் பின் தேவகி கருவுற்றாள் அவள் தன் கணவனுக்கு சொன்னாள்.

“பார்த்தீர்களா அத்தான் மூக்குத்தி அம்மன் எனக்கு ஒரு ஆண் குழந்தை தரப் போறாள். உண்டியலில் நான் பணம் போட்டு செர்கக்கும் பணம் பலன் கொடுத்து விட்டது” தேவகி கணவனுக்கு சொன்னாள்.

“கொஞ்சம் பொறு தேவகி நாளை போய் டாக்டரிடம் பரிசோதனையும் ஸ்கானும் செய்து பார்த்துவிட்டு உனக்கு கிடைக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று பார்ப்போம்” என்றார் தேவன்.

அடுத்தநாள் அவர்களுடைய குடும்ப வைத்தியரிடம் சென்று தேவாகிக்கு பரிசோதனை செய்து ஸ்கேன் செய்தார்கள் டாக்டர் சொன்னார் “இரு நாட்களில் உங்களுடைய ஸ்கேன் ரிப்போர்ட் வரும் உங்களுக்கு கிடைக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று நான் உறுதியாக சொல்லுகிறேன்”

இரு நாட்களுக்குப் பின் டாக்டரின் ரிப்போர்ட் வந்தது.

டாக்டர் போன் செய்து சொன்னார் அவர்களுக்கு கிடைக்க போவது ஆண் குழந்தை என்று.

தேவகியை கவனமாக உடலை கவனிக்கச் சொன்னார். அடிக்கடி செக்கப்புக்கு வரும் படி சொன்னார்.

செய்தி அறிந்து குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோசத்தில் கைதட்டினார்கள்.

அவர்கள் கைதட்டி சந்தோஷப் படுவதை கண்டு அகிலா சொன்னாள் “அம்மா ஏன் இப்படி சந்தோஷப்படுகிறார்கள் என்ன விசேஷம்”

அதுக்கு தேவன் சொன்னார் “மகள் அகிலா உனக்கு ஒரு தம்பி கிடைக்கப்போகிறது அம்மாவின் வயிற்றில் உருவாகிவிட்டான் பார்த்தாயா அம்மா வேண்டியது சரியாக நடைபெறப் போகிறது” என்று.

தேவகி சொன்னாள் அகிலா “நான் அந்த உண்டியல் ரொம்ப காசு போட்டு சேர்த்து விட்டேன் இப்போது உனக்கு ஒரு தம்பி பிறக்கும் என்று உறுதியாகிவிட்டது வருகிற வெள்ளிக்கிழமை அந்த பணத்தை கொண்டுபோய் அம்மனுக்கு அர்ச்சனைக்கும் தங்கத்தில் தாலி செய்ய கொடுக்க வேண்டும்” என்றாள்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அகிலா சொன்னாள்.

“அம்மா என்னை மன்னிக்கவும்.அந்த உண்டியலில் உள்ள காசு எல்லாத்தையும் நான் எடுத்துட்டேன்”

“என்ன சொல்லுகிறாய் அகிளா”? என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் தேவகி.

“ஆமாம் அம்மா நேற்று நான் கல்லூரியில்இருந்து வரும்போது கோவில் வழியாக வந்தேன். அந்த சில பிச்சைக்காரர்கள் சாப்பிடுவதற்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள் அவர்களைப் பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக இருந்தது நான் வீட்டுக்கு வந்து உங்கள் ஒருவருக்கும் தெரியாமல் அந்த உண்டியலில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பிச்சைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டேன்

“அவர்களின் சந்தோஷத்தில் கடவுளை காண்கிறோம்! உங்கள் பணம் போக வேண்டிய இடதுக்குப் போய் விட்டது அம்மா”

“நீ என்ன சொல்லுகிறாய் அகிலா பணம் எல்லாவற்றையும் கூண்டில் இருந்து எடுத்து விட்டாயா?”

“உன்னை யார் இந்த பணத்தை எடுக்க சொன்னது அந்த அம்மன் உண்மையை கொடுக்கப் போகிற போக்கில் உனக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்”

“அப்படி நடக்காது அம்மா நீ ஒன்றுக்கும் யோசிக்காதே நான் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது தாடி வைத்த பிச்சைக்காரர் ஒருவர் வந்தவர் சொன்னார்”

“குழந்தை நீ அடுத்தவருடம் உன் தம்பியோடு எனக்கு வந்து இப்படி தானம் செய்ய வேண்டும் நான் சொல்வது நிச்சயம் நடக்கும் நீ ஒன்றுக்கும் யோசிக்காதே என்று சொன்னவர் அதன்படிதான் போது நடக்கப்போகிறது அந்த இறைவன் அந்த பிச்சைக்கார கிழவன் உருவத்தில் வந்து தான் அந்த வார்த்தைகளை சொல்லி இருக்கிறார்” என்றாள் அகிளா.

அதை கேட்டு அந்த வீட்டில் எல்லோரும் அப்படியே அதிர்ந்து போனார்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *