நாலு வயது மகளோடு பீச்சுக்குப்போய் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.
மகள் முதலில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்டாள். ‘தொண்டையில் பூச்சி வந்துவிடும்’ என்று பயமுறுத்தினேன்.
லாலிபாப் கேட்டவளை, ‘வயிற்றில் பூச்சி வந்துவிடும்’ என்று சொல்லி சமாதாப் படுத்தினேன்.
அந்தப் பக்கமாக பலூன்காரர் வந்து நின்றார்.
மகள் பலூன் வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். ‘அதெல்லாம் வெடிச்சுவிடும். நீ பெரியவளாப்புறம் வாங்கிக்கலாம்’ என்று சற்று உரக்கச்சொல்லி அவளை சமாதானப்படுத்த
முயற்சித்தேன்.
‘சார்…குழந்தைக்கு வயசானப்புறம். பலூன் கிடைக்கும். ஆனாஅதை அனுபவிக்க வேண்டிய இந்த குழந்தை மனசு பறந்து போயிருக்கும்” என்று சொல்லி ஒரு பலூனை ஊதி அவள்
கையில் கொடுத்தார் பலூன்காரர்.
நான் பதில் ஏதும் பேசாமல், அவரிடம் காசை நீட்டினேன். குழந்தைக்கு கூடவே ஐஸ்கிரீமும் லாலிபாப்பும் வாங்கிக் கொடுத்தேன்.
– எஸ்.ராமன் (4-2-2009)