எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள் செல்வி. நன்றாக படிப்பவள். அவளுக்கு வீட்டில் சில பிரச்சனைகள், அவள் தந்தை மது அறுந்துபவர். அதைத் தவிற அவளிடம் தவறாகவும் நடந்து கொள்ளக் கூடியவர். அவள் அம்மா வீட்டு வேலைக்கு செல்பவள். அவள் அம்மா தான் வேலைக்கும் சென்று குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறாள்.
செல்விக்கு ஒரு பாட்டி இருக்கிறாள், அவள் பாட்டி வீட்டிற்கு சென்று அம்மா வரும்வரை இருந்து கொள்வாள். தன் அப்பா தன்னிடம் தவறாக நடந்து கொள்வது அவளுக்கு பிடிக்காது, ஆனாலும் அதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு, பள்ளிக்கும் செல்வாள். இயல்பாகவும் இருப்பாள்.
ஒருநாள் செல்வியின் அம்மா வேலைக்கு சென்ற நேரத்தில், அப்பா வீட்டில் குடித்து விட்டு வந்து செல்வியை அழைகிறார்.
“செல்வி, ஏய் செல்வி எங்க டீ இருக்க, வா வந்து சோறு வை”, என்று குடிப்போதையில் கத்துகிறார்.
அவள் செல்லப் பயந்து கொண்டு பாட்டி வீட்டிலேயே இருக்கிறாள். அப்போது அம்மா வந்து விடுகிறாள். அம்மா வந்ததும் செல்வி ஓடிசென்று அம்மாவிடம் சென்றுவிடுகிறாள்.
“ஏய் சனியனே, இப்படி குடிச்சுட்டு வந்து கத்தற, இரு சோறு போடற”, என்று செல்லி வீட்டியில் இருந்த சாப்பாட்டைத் தட்டில் போட்டு தந்தாள், அம்மா.
அந்த தட்டைப் பார்த்து விட்டு, தூக்கி வீசிகிறான்.
“எனக்கு என் மக கையில போட்டு தந்த தா நா சாப்பிடுவ” போதையில் தள்ளாடிக்கொண்டு வாசலில் நின்று உளறுகிறார்.
செல்வி வேறு ஒரு தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு, அப்பா அருகே போக தைரியம் இல்லாமல் கொண்டு போய் கொடுக்கிறாள்.
அவள் நடந்து வருவதையே, அவன் தவறாகப் பார்க்கிறான்.
சில நாள் கழித்து, பாட்டி இறந்து விடுகிறாள்.
செல்வி, பாட்டி இறந்த சில மாதங்களிலே பூப்பு அடைகிறாள். சிறு வயதியிலே அழகாக இருந்தவள், இப்போது சொல்ல வேண்டுமா?!.
பாட்டி இறந்ததால், அம்மா வரும் வரை செல்வி, பள்ளி முடிந்தவுடன் தன் தோழி வீட்டிற்க்கு சென்று. படித்துக்கொண்டு வருவாள்.
ஒருநாள் அவள் தோழியும், அவர்கள் அப்பா அம்மாவும் வெளியூர்க்கு சென்று விட்டனர். “வேறு வழியில்லை வீட்டிற்க்கு தான் செல்ல வேண்டும்” என்று நினைத்து செல்வி வீட்டிற்க்கு செல்கிறாள்.
அன்று அவள் அப்பா வழக்கத்தை விட நல்லா குடித்து விட்டு வீட்டிற்க்கு வருகிறார்.
அப்போது செல்வி வீட்டில் தனியாக இருக்கிறாள்.
“ஏய் யாரு டீ உள்ள, வெளிய வாங்க டீ”, என்று கோபமாக கத்துகிறான்.
செல்வி பயந்து உள்ளே இருக்கிறாள். “அம்மாவும் இல்லை, தன் அப்பா ஏதாவது தவறாக நடந்தால், என்ன செய்வது” என்று தெரியாமல் அழுதுக்கொண்டு உள்ளே இருக்கிறாள்.
“இப்ப வெளியே வருல, குடிசைய எரிச்சுருவ , வா டீ வெளியே” என்று அவன் திரும்பவும் கத்துகிறான்.
பயந்து போய் அவள் வருகிறாள்.
என்ன அப்பா? என்று நடுக்கத்துடன் கேட்கிறாள்.
உங்க அம்மா எங்க டீ? என்று கத்துகிறான்.
“அம்மா இன்னும் வரல அப்பா” என்று அவள் சொல்கிறாள்.
“இவ்வளவு நேரம் எங்க ஊர் சுத்துறா? வரட்டும் வைச்சுக்கற”, சரி சோறு கொண்டு வா போ”, என்று கோபத்துடன் சொல்கிறான்.
சாப்பாடு போட, செல்வி குடிசைக்குள் உள்ளே செல்கிறாள்.
அப்போது அவள் தந்தை உள்ளே வந்து செல்வியைப் பார்க்கிறான். பார்க்கும் பார்வையும், தவறானது எண்ணமும் தவறானது.
அவன் செல்வியை கீழே தள்ளிவிட்டு தவறாக நடந்து கொள்ளக் முயற்ச்சிக்கிறான்.
“அப்பா, அப்பா” என்று அவள் அழுகையுடன் கத்துகிறாள்.
அவன் அப்பா அருகில் இருந்த கொல்லிக்கட்டை எடுத்து, காலில் அவளுக்கு சூடு போடுகிறான். வலியில் செல்வி துடிக்கிறாள்.
அவன் மீண்டும் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்ச்சிக்கிறான்.
அப்போது திடீரென்று அவள் அம்மா வந்து விடுகிறாள். செல்வி படும் வேதனையைப் பார்த்து விடுகிறாள்
உடனே அவனிடம் இருந்து செல்வியைக் காப்பாற்றி விட்டாள்.
“நீ எல்லா ஒரு அப்பாவா? நீ மனுச கூட இல்ல, பெத்த புள்ளைய போய் இப்படி தப்பு பண்ண பாக்கிறீரே, குடிச்சா நீ என்ன வேணா பண்ணுவியா, நீ எல்லா,” என்று காரி துப்பிவிட்டு அங்கு இருந்து சென்று விடுகிறார்கள்.
பிறகு அவர்கள் வேறு ஊருக்கு சென்று, அவள் அம்மா வேலைக்கு போய், செல்வியை நன்கு படிக்க வைத்து, அப்பா என்று ஒருவர் செல்விக்கு இல்லாத குறையாக அவள் அம்மா அவளை வளர்க்கிறாள்.
கரு: இப்படி ஒவ்வொரு பெண்களும் ஏதோ ஒரு வகையில், ஆண்களால் பதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்.