கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 2,310 
 
 

பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது. நானும் மனைவியும், என் மகளும் மருமகனும், ஒன்ராறியோவில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில் வாழ்ந்த காலமது. ரொன்றோவிலிருந்து மேற்கே சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள கேம்பிரிஜ் நகரத்தை “கிராண்ட்” நதி பெயருக்கேற்ற கம்பீரத்துடன் தழுவிக் கொண்டு செல்கிறது. அந்த ஊரின் பெயர் பலத்த போட்டிக்குப் பின் நகரசபையால் 1973ல் சூட்டப்பட்டது. அமைதியான சூழல் நிறைந்த அந்நகரத்து மக்கள் அமைதியானவர்கள். இனத்துவேஷமின்றி பழகும் சுபாவம் உள்ளவர்கள். 24ம் எண் பெரும் பாதை நகரத்தின் பிரதான பாதை யாகும். அதைவிட வழமை போல எல்லா ஊர்களிலும் இருப்பது போல் கிங் வீதி, குவீன் வீதி என்ற பெயர்களில் வீதிகள் இருக்கத்தான்; செய்கிறது. அவ் வீதிகளுக்கு அரச பரம்பரக்குரிய கௌரவம் இருந்தாலும் வியாபர ஸ்தலங்கள் அவ்விரு பாதைகளை விட்டு ஒதுங்கி பெரும் பாதை அருகே வளரத் தொடங்கியுள்ளது. எங்கள் குடும்பம் அவ்வூருக்குக் குடிபெயர்ந்த சமயம் “மோல்”; என்று அழைக்கப்படும் சந்தை போன்று பல கடைகளை உள்ளடக்கிய நிலையம் ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வெகு விரைவில் கட்டிட வேலைகள் முடிந்து பிரமாண்டமான நிலையமாக கேம்பிரிஜ் நகரத்துக்கு பொலிவைக் கொடுத்தது அந்த மோல்.

எனது மகளின் இருபத்தைந்தாவது பிறந்த தினம் ஒரு கிழமையில் வர இருந்தது. அவள் ஆச்சரியப்படக் கூடியதாக ஏதாவது ஒரு பிறந்த நாள் பரிசை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மனைவி எனக்கு நினைவூட்டினாள். ஒரு சனிக்கிழமை வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. அந்த வெய்யிலையும் பாராது மோலுக்கு போய் புதுக்கடைகளை ஒரு நோட்டம் விடுவோம், எதாவது மனதுக்குப் பிடித்த நல்ல பரிசு கிடைத்தால் வாங்குவோம் என்று இருவரும் முடிவெடுத்தோம். நாங்கள் மோலுக்குப் புறப்படுவதைக் கண்ட என் மகளும் மருமகனும் எங்களுடன் ஷொப்பிங் செய்ய வர வெளிக்கிட்டார்கள். நாம் வாங்கும் பிறந்த நாள் பரிசு அவளுக்குத் தெரியக்க கூடாது என்பது என் விருப்பம். மோலுக்குள் போனவுடன் ஒவ் வொரு கடையாக “விண்டோ ஷொப்பிங்” செய்த படி நடக்கத் தொடங்கினோம். அதில் ஒரு கடையில், வீட்டில் அன்புடன் வளர்க்கும் பூனை, மீன,, பறவைகள், நாய் போன்றவை விற்பனைக்கு இருந்தன. அவை எனது கவனத்தை ஈர்;த்தன. ஒரு பெரிய கண்ணாடி கூட்டுக்குள், பல நிறங்களில் பல சாதி நாய்குட்டிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் துள்ளிக் குதித்து விளையாடுவதைக் கண்டு அதில் நின்று இரசிக்கத் தொடங்கினோம். அக் குட்டிகள் பிறந்த திகதி, வருடம், பால். எந்த இனத்தைச் சேர்ந்தது, கலப்பு இல்லாத என்ன சாதி, பிறந்து எத்தனை மாதங்கள், அதன் விலை, போன்ற விபரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அக்குட்டிகளில் கலப்பில்லாத லப்ரடோர் சாதியைச் சேர்ந்த மாநிறக் குட்டி பார்ப்பதற்கு அழகாகவும் சுறுசுறுப்பாகவும் தோற்றமளித்தது. அதன் பார்வையில் ஒரு வித சாந்தமும் கவர்ச்சியும் இருந்தது. எம்மைக் கண்டவுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு கண்ணாடிச் சுவருக்கருகே வந்து நின்று முகத்தை ஒரு பக்கம் சரித்தபடி எங்களைப் பார்த்து வாலாட்டத் தொடங்கியது.

“என்னை உங்களுடன் வீட்டுக்கு அழைத்துப் போங்கள். இக் கண்ணாடிக் கூண்டிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள்” என்று அது எமக்கு சொல்வது போலிருந்தது. நான் என ;மனைவியைப் பார்த்தேன். என் பார்வையின் அர்த்தத்தை புரிந்த மனைவி.
“இந்த குட்டி பார்க்க அழகாகயிருக்கு இல்லையா? அவளுக்கு இது பிடிக்கும். இதை பிறந்தநாள் பரிசாக வாங்குவோம்” என்றாள். அந்த சமயம் என் மகளும் மருமகனும் அருகே வந்து நின்று அந்த நாய்க் குட்டியின் அங்க அசைவுகளை இரசித்தபடி நின்றனர்.

“உனக்கு இந்த நாயக் குட்டி பிடித்திருக்கா?” என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

“இந்தக குட்டியை பிடிக்காமல் இருக்குமுடியுமா அப்பா? ஆனால் எனக்கு பிடித்தால் மட்டும் போதுமா? உந்த விலை கொடுத்து வாங்க எனக்கு காசு வேணுமே” என்றாள்.

விலையைப் பார்த்தேன் ஐநூறு டொலர் போட்டிருந்தது. சாதிகேற்ற விலை. எனது பட்ஜட்டுக்குள் அந்த தொகை இருந்தது.
“விலையைப்பற்றி யோசிக்காதே. உனது பிறந்த நாள் பரிசாக இந்த நாய்க் குட்டியை வாங்கித் தரப்போகிறோம். எங்களுக்கும் பிடித்துக் கொண்டது” என்றேன் ஒளிவு மறைவு இல்லாமல். அவள் என் பதிலை எதிர் பார்க்கவில்லை. புன்சிரிப்புடன் “ தாங்கியூ அப்பா. அம்மாவுக்கும் கூடத்தான் “ என்றாள்.
நாங்கள் லப்பிரடோர் நாய் குட்டிமேல் விருப்ம் காடடுவதைக் அவதானித்த கடை உரிமையாளர் எங்கள் அருகே வந்து. “ நீங்கள் இக்குட்டியை வாங்குவதாக இருந்தால் இந்த நாயினத்தைபற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது” என்றார்.

“அப்படியா. உங்களுக்குத தெரிந்ததைச் சொல்லுங்கள்.”
“அதிகமாக விற்பனையாகும் இனம் இந்த இனம் தான். ஒரு வேலை லப்பிரடோர் (Labrador) என்ற இடம் கனடாவில இருப்பதாலோ என்னவோ என்றார் சிரித்தபடி.

“நல்லது மேலும் சொல்லுங்கோ”.

“இந்ந நாய் இனம் துன் சொந்தக்காரருக்கு அருகேயே எப்போதும் இருக்கப் பார்க்கும். சரியான புத்திசாலியான நாய் இனம். பழக்குவது இலேசு . வீட்டுக்காரருடன் ஒத்துழைக்கும். தேடிப் பிடிப்பதில் இந்த இனம் பெயர் போனது. இவை மஞ்சள,. சோக்கலேட் , கறுப்பு நிறங்களில் உண்டு. முன்னைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனும் ரஷ்ய ஜனாதிபதி பூடினும் கூட இந்த இன நாயை தான் வைத்திருந்தனர். வளர்ந்தால் கிட்டதட்ட 45 கிலோ நிறையை அடையும். இந்த இன நாயின் தோல் குளிரையும் நீரையும் தாங்கக் கூடியது. பலமுள்ள தாடையுள்ளவை. வேலை செய்யும் போது உதவிக்குப் பயன்படும். இது ஒரு மீட்டுக்கொடுக்கும் நாய் அதனால தான டுயடிசழனயச சுநவசநைஎநச எனவும சருக்கமாக் டுயடி எனவும் அழைப்பார்கள். இந்த குட்டி நல்ல கலப்பு இல்லாத உயர் சாதி லாப்ரடோர் குட்டி . இந்த சாதி நாய்கள் நியூபௌண்ட்லன்ட் மாகாணத்தைச் சேர்ந்தவை. மீன் பிடிகாரரின் தொழிலுக்குப் பெரும் உதவியாக இருப்பது இச்சாதி நாய்கள். நன்றாக நீந்தக் கூடியவை. அதுவுமல்லாமல் மோப்பம் பிடிக்கக் கூடியவை. கனடாவில் பிரபல்யமான சாதி நாய்களில் இதுவும் ஒன்று” என்று அந்த நாய் குட்டியின் சாதியை பற்றி ஒரு சிறு பிரசங்கமே வைத்தார் கடையின் சொந்தக்காரர். அவருக்கு குட்டியை விற்றாகவேண்டுமே.

ஐந்நூறு டொலர் நாய்குட்டி அந்த அறைக்குள் இருந்த தன் நண்பர்களிடமிருந்து சந்தோஷமாக விடைபெற்று என் மகளின் இரு கரங்களுக்குள் ஒரு குழந்தையைப் போல் சுருண்டு படுத்துக் கொண்டது, தாய் நாயின் அணைப்பில் இருந்து விடுபட்டு சில வாரங்கள் இருந்திருக்கும் என நினைத்தேன். நாயுடன் கூட அதற்கு வேண்டிய உணவுகள், பாவனைக்கு வேண்டிய சாமான்களுக்கு எல்லாம் சேர்த்து மேலும் ஐம்பது டொலர் துண்டு விழுந்தது.

காhரில் வீடு திரும்பும்போது “ குட்டிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய் ?” என்று மகளைக் கேட்டேன்.

அவளிடம் இருந்து பதில் வரமுன் என் காரை ஓட்டிக் கொண்டிருந்த என் மருமகன்
”மாமா அவ பெயரை எப்பவோ தெரிந்தெடுத்துவிட்டா. கன காலம் தனக்கு ஒரு நாய்க் குட்டி வாங்கித் தரச் சொல்லி எனக்கு ஒரே கரைச்சல்” என்றார்.

“என்ன பெயர் வைக்கப் போகிறாய்” என் மனைவி என் கேள்வியை அவளிடம் திருப்பிக் கேட்டாள்.

“இன்வா ( Invar)” என்று அவளிடம் இருந்து பதில் வந்தது.

“கேட்காத புதுப் பெயராக இருக்கே. வழக்கத்தில் ஜிம்மி , டைகர் , ஜொனி , பூமர் என்று ஊரிலை கடுவன் நாய்க்கு வைக்கிற பெயர் ஒன்று வைப்பாய் எண்டு நினைத்தேன்”; என்றேன்.

“இன்வா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா அப்பா உங்களுக்கு?” என்று அவள் கேட்டாள்.

“தெரியாது. நீ சொல்லு”

“இன்வா என்பது ஒரு வகை உலோகக் கலவை. இதனை சுவிஸ் நாட்டு விஞ்ஞானி ஒருவர் 1896ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். ஆங்கிலத்தில் நிக்கல்- இரும்பு கலந்த அலோய் என்பினம். வெப்பமாற்றத்தினால் இதன் விரிவு அல்லது சுருக்கம் மிகக் குறைவு. இந்த உலோகம் செய்மதிக்கு தேவையான உபகரணங்கள் செய்ய பாவிப்பார்கள். அந்த அலோயின் நிறமும் இந்த நாய்க் குட்டியின் நிறத்தை போலத்தான்” என்றாள் அவள்.

“நல்லது. இன்வாவுக்கு ஆக செல்லம் கொடுத்து வளர்க்காதே. சில சமயம் வீட்டுக்குள் மல சலம் கழிக்கப் பார்க்கும். வெளியே போய் காலைக் கடன்களைச் செய்ய வீட்டுப் பழக்கத்தை (house training) பழக்கிப் போடு” என்றேன். சும்மா சும்மா குலைக்க பழக்காதே.” என்றேன் நான்.

“சரி அப்பா. கடைக்காரர் சொன்னதைக் கேட்டியல் தானே. நீங்கள் ஒரு கனேடியப் பிரஜை என்பதை மறக்காதீர்கள். இந்த நாயின் இனத்தின் பெயர் டுயடிசழனயச” என்றாள நக்கலுடன்.

***

இன்வாவுக்கு மூன்று மாதங்களாகிய போது அதற்குத் துணையாக விளையாட இன்வாவை வாங்கிய கடையில் லாப்ரடோரும் அல்சேஷனும் கலந்த இன நாய் குட்டி யொன்றை என் மகள் வாங்கிவந்தாள். அதற்கு கரடிக் குட்டியைப் போல் தேகம் முழுவதும் கறுத்த உரோமம். அதற்கு கிரேக்க அரிச்சுவட்டில் 24வது கடைசி அட்சரத்தின் பெயரான “ஒமேகா” என்ற விலையுயர்ந்த சுவிஸ் கடிகாரம் ஒன்றின் பெயரை என் மருமகன் தெரிந்தெடுத்து வைத்தார். இன்வாவும் ஒமேகாவும் சில நாட்களில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடத் தொடங்கின. ஒற்றுமையாக ஒரே தட்டில் உணவுண்பது யாரும் பார்த்தால் மிருகங்களுக்கிடையே இவ்வளவு ஒற்றுமையா என நினைப்பார்கள். இவை இரண்டில், இன்வாவின் வளர்ச்சி விரைவான வளர்ச்சி. தூரத்தில் இருந்து பாய்ந்து ஓடிவரும் போது சிங்கத்தின் அசைவைப் போன்ற ஒரு தோற்றம். உடம்பில் ஒரு மினுமினுப்பு. தடி ஒன்றை கிராண்ட் நதிக்குள் எறிந்தால் குளிர், ஆழம் என்று பாராது பாய்ந்து தண்ணீருக்குள் மூழ்கி நீந்தி அத் தடியை எடுத்து வருவது ஒரு தனி அழகு. நீரில் நீந்தும் போது அதன் பாதங்கள் வாத்தின் பாதங்களைப் போன்று விரிந்து தோற்றமளிக்கும். யார் அதற்கு அப்படி நீந்தக் கற்றுக் கொடுத்தார்களோ தெரியாது. இன்வாவுக்கு எதிர் மாறான குணம் கொண்டது ஒமேகா. தண்ணீரைக் கண்டால் பயந்து விலகி ஓடும்.

இன்வாவுக்கு ஒரு வயதான போது என் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வீட்டுக்கு வரும் என் மகள் குடும்பத்தின் நண்பர்கள் குழந்தையைத் தூக்கி கொஞ்சிக் குலாவுவதை இன்வா அவ்வளவுக்கு விரும்பவில்லை என்பது அதன் உறுமலில் இருந்து தெரிந்து கொண்டேன். குழந்தையை அவர்கள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் அதற்கு. எஜமாட்டிக்கு அத்தனை விசுவாசமாக இருந்தது அது.

இன்வாவின் வளர்ச்சியில் ஒரு மதாளிப்பு தெரிந்தது. நிறை கூடிய காரணத்தால் அதன் உணவின் அளவை தினத்துக்கு இரண்டு தடவை குறைத்து கொடுக்கும் படி கால்நடை வைத்தியர் ஆலோசனை கூறினார். காலையில் ஒருமணி நேரம் இன்வாவும் ஒமீகாவும் வீட்டின் பின் தோட்டத்தில் களைக்கும்வரை ஓடி விளையாடுவார்கள். எங்களுக்குத் தெரியாமல் வேலிக்கு கீழே குழி தோண்டி இருவரும் வீட்டுக்கு வெளியே சென்று உலாவி வரத் தொடங்கினார்கள். அப்படி தன்னிச்சையாக சென்று வரும் போதுதான் ஒரு நாள் அந்தச் சம்பவம் நடந்தது.

***

ஒரு நாள் காலை “ உங்கள் வீட்டு நாயை ஒரு கார் மோதிவிட்டு சென்றுவிட்டது” என்று பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னபோது நாங்கள் பதைபதைத்துப் போனோம். “எந்த நாய் அடிபட்டதுஃ” என்று நான் அவரைக் கேட்டேன். பக்கத்து வீட்டுக்காரனுக்கு இன்வா நன்கு அறிமுகமான படியால் “ உங்கள் இன்வா தான் அடிபட்டது. நாய் எழும்ப முடியாமல் ரோட்டில் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது” என்றார் அவர். நாங்கள் விழுந்தடித்துக் கொண்டு வீதிக்கு ஓடினோம். நடு ரோட்டல் வலியால் துடித்துக் கொண்டிருந்தது இன்வா. அதை முகர்ந்து பார்த்தபடி ஒமேகா முனங்கிக் கொண்டிருந்தது. அதுக்கு மட்டும் பேச வாயிருந்தால் நடந்ததை சொல்லியிருக்கும். நேரத்தை வீணடிக்காமல் நாங்கள் ஒமீகாவை கூட்டுக்குள் அடைத்து விட்டு இன்வாவுடன் அவசரம் அவசரமாக கால் நடை வைத்தியரிடம் கொண்டு சென்றோம். போகும் வழியில் இன்வாவின் முனகல் கேட்டு என் மகள் ஒரே அழுகை. “ எந்த ஈவிரக்கமற்ற பாவி இந்த வாயில்லா ஜீவனை மோதி விட்டு எங்களுக்கு அறிவிக்காமல் ஓடிப் போயிட்டான். கடவுள் தான் அவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என வாய்விட்டு கதறி அழுதாள்.”

வெட்டினரி சேர்ஜன்; இன்வாவை பரிசோதித்துவிட்டு தன் உதட்டைப் பிதுக்கினார். இன்வாவை அவருக்கு ஏற்கனவே தெரியும். பல தடவை தடுப்பு ஊசி போடுவதற்கு அவரிடம் இன்வாவை மகள் அழைத்துச் சென்றதுண்டு.

“என்ன டொக்டர் இன்வாவின் நிலமை எப்படி? என்று மருமகன் கேட்டார்.

“மன்னிக்கவும்…. இன்வாவின் உடம்பில் பல பாகங்களில் முறிவு அதுவும் விலா எழும்புகள் முறிந்திருக்கிறது. இன்வாவை கீழே மோதி விழுத்திவிட்டு அதன் உடம்பின் மேல் வாகனம் போயிருக்கிறது. இதோ டயரின் அடையாளம். அதனால் இருதயமும் ஓரளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கலாம்” என்றார் அமைதியாக அவர்.

“அறுவைச் சிகிச்சை ஏதும் செய்து என் மகன் இன்வாவை தப்பவைக்க முடியாதா டொக்டர்?;” என் மகள் அழுதபடி டாக்டரைக் கேட்டாள். அவளுக்கு இன்வா மூத்த மகன் போல்.

“அறுவைச் சிகித்சை செய்தால் இன்வா பழைய நிலைக்கு வருமா என்பது எனக்குச் சந்தேகம். எழுந்து நடக்கமுடியாதபடி ஊனமாகக் கூடிய சாத்தியக் கூறுகள் மிக அதிகம். அதுவுமல்லாமல் சிக்கலான ஒப்பரேஷன் செய்ய வேண்டிவரும். அதன் பின்னரும் உயிர் பிழைத்தால் அதிக காலம் உயிர் வாழுமோ என்பது எனக்குச் சந்தேகம். மலசலம் கழிக்கமுடியாமல் கஷ்டப்படலாம். சுருங்கச் சொன்னால் சுயமான வாழ்க்கை அதனால் வாழ முடியாது. அது அழுந்துவதைப் பார்த்து நீங்களே கவலைப்படுவீர்கள். இவ்வளவுக்கு அன்பாக நீங்கள் வளர்த்த இன்வா கஷ்டப்படாமல் இருக்க ஒரே வழி …” என இழுத்தார் டொக்டர்.

மகளும் மருமகனும் டொக்டர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை உணர்ந்து எங்களைப் பார்த்தார்கள். நான் மௌனமானேன்.

“டொக்டர் நான் இன்வாவை என் பிள்ளையைப் போல் கஷடப்படாமல் வளர்த்தனான். இனியும் அது கஷ்டப்படக் கூடாது. என் பிள்ளையை அழ்ந்த நித்திரைக்கு அனுப்புங்கள்” என்றாள் என் மகள் விம்மியபடி. நான் என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.

“கண்ணாடிக் கூட்டுக்குள் சுறுசுறுப்பாய் ஓடிவிளையாடி எங்களைக் கவர்ந்த இன்வாவுக்கு ஒரு வருடத்துக்குள் இந்த முடிவா?” என்றாள் என் மனைவி.

“விதியை யாரால் மாற்றமுடியும். 15 வருடங்கள் மட்டில் வாழக் கூடியது. ஒருவயதுக்குள் போகப் போகுது. அதன் ஆயுள் குறைந்த ஆயுளாக்கும். அந்த சொற்ப காலத்தை சந்தோஷமாக எங்களுடன் கழித்துவிட்டது. ஏதோ போன பிறவியில் அந்த ஜீவனுக்கும் எங்களுக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்க வேண்டுமாக்கும்.” என்றேன் நான்.

ஊசியைப் போட முன் எங்களை கடைசித் தடவையாக இன்வாவை பார்க்கும் படி டொக்டர் சொன்னார். நாங்கள் அமைதியாக போய் ஒவ்வொருத்தராக அதை தடவிக் கொடுத்தோம். உடம்பில் சூடு ஆறவில்லை. இருதயம் பலமாக அடித்ததை உணரக் கூடியதாயிருந்தது. கண்களைச் சற்றுத் திறந்து எங்களைப் பார்த்தது. பார்வையில் ஒரு ஏக்கம். அதன கண்களில கண்ணீர் தெரிந்தது.

அதைப் பாhத்த என் மகன் “இன்வா என் மகன்” என்றாள் கண்ணீர்த் துளிகள் அதன் உடம்பின் மேல் விழ.. அந்த ஜீவனும் என் மகளின் குரலைக் கேட்டவுடன் தன் வாலை கஷ்டப்பட்டு ஆட்டியது.

நாங்கள் அறைக்கு வெளியே வந்த சில நிமிடங்களில் இன்வாவின் அனுங்கல் சத்தம் கேட்டது. அது தான் இந்த உலகில் அதன் கடைசிக் குரல். சில நிடங்களுக்குப் பின் டொக்டர் வெளியே வந்தார். அவர் முகத்திலும் சோகம் தெரிந்தது.

“இன்வா நிரந்தரமாக தூங்குகிறது. நீங்கள் போய்ப்; பாருங்கள்” என்றார். நாங்கள்போய் பார்த்த போது அதன் அங்க அசைவுகள் ஓய்ந்து விட்டன. கண்கள் மூடியிருந்தன. சூடுமட்டும் குறையவில்லை. அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. கண்ணீர் மல்க நாங்கள் வெளியே வந்தோம். மருமகன் டொக்டருடன் இன்வாவின் ஈமக் கிரிகைகளைப் பற்றி பேசி ஒழுங்குகள் செய்தார். சில நாட்களின் பின் அதன் அஸ்தி ஒரு குவளைக்குள் பிறந்த – இறந்த திகதிகள், பெயர்; எழுதி தரப்படும் என்றார் டொக்டர். பொறுப்பை அவரிடம் விட்டு விட்டு வீடு திரும்பினோம். காருக்குள் ஒருத்தரும் பேசவில்லை. அவ்வளவுக்கு இன்வாவின் மறைவு எங்களை பாதித்திருந்தது.

கூட்டுக்குள் இன்வாவின் தோழன் ஒமேகா தன் தோழனின் பிரிவால் அமைதியின்றி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். அவன் தன் பழைய நிலைக்கு வர சில மாதங்கள் எடுத்தன. உறவுகளின் சக்தி அவ்வளவுக்கு வலிமை வாய்ந்தது.

என் மகளிடம் ஏதோ ஒரு இனந்தெரியாத கவலை உள்ளுக்குள் வாட்டிக் கொண்டேயிருந்ததை நான் அவதானிக்க முடிந்தது. பேச்சுக் கொடுத்தபோது அதன் பிரிவை விட இன்வாவின் உயிர் பிரிக்கப்பட்ட விதத்தைத்ததான் அவளால் தாங்க முடியவில்லை என அவள் மிகவும் வருந்துவது தெரிந்தது.

“மகளே!.. இது ஒரு கருணைக் கொலை. பிழைத்துக் கொள்ள ஒரு சிறு வாய்ப்பிருந்தால் கூட நாங்கள் முயற்சித்திருக்கலாம். தப்ப மார்க்கமேயில்லை என்னும் போது வாயில்லாத அந்தச் ஜீவன் ஏன் தன் வாழ்நாள் முழுவதும் வருந்தவேண்டும்? அகிம்சவாதி காந்தி கூட சொல்லியிருக்கிறார் தீர்க்க முடியாத வியாதியால் ஒரு பசு கஷ்டப்படுவதிலும் பார்க்க அதன் உயிரை பிரிப்பதே மேல். ஏன் கால் முறிந்த பந்தயக் குதிரைகளைக் கூட மேலை நாடுகளில் அழுந்த விடமாட்டார்கள். உன் முடிவின் படி அதற்கு நாங்கள் நன்மைதான் செய்திருக்கிறோம். இரங்கிச் செய்யப்படும் எதுவுமே கருணை தான். இதை நீ இதய பூர்வமாக சிந்திப்பதைவிட புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும்.” என்றேன் நான்.

தலையை நிமிர்த்திய அவளது பார்வை எனது கரத்தைப் பற்றி உறுதிசெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *