இன்பமான பூகம்பம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 2,161 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்கு, இருபத்தெட்டு அல்லது முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கேட்டைத் திறந்து கொண்டு வருவதை ரேவதி பார்த்தாள், யார் இவள் என்ற கேள்வி எழுந்த கணத்திலேயே பாபுவின் மனைவியாக இருக்கக்கூடும் என்ற ஊகமும் பிறந்தது. வீட்டில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. பெரியம்மா ஒரு அவசர காரியமாக மயிலாப்பூர் மாடவீதி வரை போய் வருவதாகக் கூறிவிட்டு இரண்டே முக்கால் மணிக்குப் போனாள். நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டின் விற்பனை விஷயமாக பெரியப்பா மதிய உணவை முடித்த கையோடு புறப்பட்டுப் போனார். சுபா கூர்வலோ சாலையில் ஒரு பேராசிரியைப் பார்க்கக் காலையிலேயே சென்றாகிவிட்டது. வைதேகி ஆபீஸ் போய்விட்டாள். பாபு, வீரா மற்றும் சத்யா தத்தம் அலுவலகங்களுக்குப் போயிருக்கிறார்கள்.

திண்ணையில் நின்று கொண்டிருந்த ரேவதி, அப் பெண் நெருங்கி வருவதைக் கண்டு ஒரு கணம் யோசித்தாள். பிறகு. “யார் நீங்க?” என்று கேட்டாள். 

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பெண் துணுக்குற்றாள். கோபம் மின்னலாய் முகத்தில் பளிச்சிட்டது. 

“நீ யார்னு எனக்குத் தெரியும், ஆனா நான் யார்னு உனக்குத் தெரிய நியாயமில்லை. நான் சாந்தா, மிஸர்ஸ் பாபு.” என்றாள் அவள். 

”ஓ, ஐ.ஸீ!” என்ற ரேவதி, அவள் படியேறும்வரைக் காத்திருந்தாள், பிறகு. “என்ன வேணும்?” என்று கேட்டாள். 

“நான் என் கணவன் வீட்டுக்கு வர்றேன். என் புகுந்த வீட்டுக்கு வாறேன்… என்ன வேணும்னு கேட்கிறாயே? இதான் உன் அமெரிக்க நாகரிகமா?”

ரேவதி கலகலவென்று சிரித்தாள்.

”உன்னைப் பத்திக் கேள்விப்பட்டேன்.”

”என்னென்று?”

“இங்கே இருக்கிறவங்ககிட்ட, அதுவும் முக்கியமா மாமியார்ட்ட முரண் பிடிச்சுட்டு நீ அடிக்கடி உன் பிறந்த வீட்டுக்கு மூட்டை கட்டுவாயாமே!” 

“இட் இன் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்”

“அஃப்கோர்ஸ் இட் இஸ் நெள மை பிசினஸ்… அமெரிக்க நாகரிகத்தில, கவியாணமானதும் பெண் புருஷனோட தனி வீடு பார்த்துக்கிட்டுப் போயிடுவா. மாமியார் – மாமனார் வீட்டுக்கு அப்பப்ப குசலம் விசாரிக்க வருவா. மாசத்துக்கு ஒருதடவை, முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு லஞ்சுக்கோ, டீக்கோ, டின்னருக்கோ வருவா. இது உனக்கு புகுந்த வீடா இல்லை. இஷ்டப்பட்டப்ப தங்கற சத்திரமா இருக்கு.”

“இதையெல்லாம் சொல்ல நீ யார்?”

”ஐ’ம் ரேவதி பஞ்சநதம்.” 

“உன் பெயரைக் கேட்கவில்லை.”

“அப்ப உரிமையைக் கேட்கிறாயா? நான் இந்த வீட்டு ஓனர்!”

“நான்சன்ஸ்.”

“மாமனார் வீடுன்னு நினைச்சுட்டுப் பொருமறியா? உனக்கு மனசில திராணியும் உடம்பில சூடும் சுரணையும் இருந்தா நீ தனிக் குடித்தனம் போ! ராத்திரி பெரியப்பா சொன்னார், நீயும் பாபுவும் மாசாமாசம் ஐயாயிரத்து எண்ணூறு கொண்டு வாறீங்களாம். ரெண்டு பேர் சிலவுக்குன்னு ஆயிரமோ ஆயிரத்து இருநூறோ பிச்சை போடறீங்களாம்.. பாக்கியைப் பாங்கில போட்டு பாஸ் புக்மேல உட்கார்த்துக்கறீங்களாம்.” 

“இது எங்க குடும்ப விஷயம்..” 

“இப்ப நானும் குடும்பத்தில் ஒருத்தி. மத்த எல்லாரையும்விட கேட்கிற அதிகாரம் எனக்கு இருக்கு!” 

”நான்சன்ஸ்” 

”வேற வார்த்தையே தெரியலையா?”

”உன் மனசில என்ன நினைச்சிட்டிருக்கே நீ? உன் திமிரை அமெரிக்காவிலேயே வைச்சுக்க”

”என் திமிர் நான் போற இடத்துக்கெல்லாம் என் கூடவே வரும். நீ மறுபடியும் இந்த வீட்ல தங்கணும்னா, நான் சில கண்டிஷன் போடுவேன்.” 

“சபாஷ்! கண்டிஷன் போடுவியா? என்ன அது?”

“மாசம் நாலாயிரம் வீட்டுச் சிலவுக்குக் கொடுக்கணும். இது நம்பர் ஒன். நம்பர் டூ, நீ பெரியம்மாவுக்கு கார்த்தாலே முடிஞ்ச வரைக்கும், சாயங்காலம் பூராவும் சமையல் வேலையில் உதவி செய்யணும், நம்பர் த்ரீ, நீ உன் இஷ்டத்துக்கு மாமியார்ட்ட கோபிச்சுக்கிட்டு பிறந்த வீட்டுக்கு ஓடக்கூடாது.” 

“எனக்கு வர்ற கோபத்துக்கு..”

“உன்னால எதுவும் செய்ய முடியாது. இப்ப இந்த வீட்டு வாடகை மாசம் மூவாயிரம் ரூபா. என்ன சொல்றே?” 

”நீ சொல்லி தான் கேட்க வேண்டிய அவரிவம் எனக்கு இல்லே!” 

“அப்ப யார் சொன்னாக் கேட்பே?”

“யாரும் சொல்லவும் மாட்டா. நான் கேட்கவும் மாட்டேன்!”

“மை டியர் சாந்தா, நீ உன் மூக்கு நுனிக்குள்ளேயே வட்டமிடறே.. முதல்ல நீ… அப்புறம் சத்யா” 

“அப்புறம் வைதேகி… அதுக்கு அப்புறம்…”

“கரெக்ட்., இன்னும் கொஞ்ச நாள்ல வைதேகிக்குக் கலியாணம் ஆயிடும். அப்புறம் சுபாவுக்கும் சத்யாவுக்கும் மாரேஜ், வீரா எப்ப வேணும்னாலும் வேலை மாறி வெளியூர் போயிடுவான், அப்புறம் இந்த வீட்ல யார் இருப்பா சொல்லு! பெரியப்பா, பெரியம்மா. அப்புறம் நான்…” 

“திட்டம் போட்டுத்தான் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டியா?” 

“கரெக்ட், திட்டத்தை எழுதியே வைச்சிருக்கேன். காட்டட்டுமா?” 

“அதோ என் மாமியார் வர்றா, அவகிட்ட உன் திட்டத்தைப் படிச்சுக் காட்டு” என்றாள் சாந்தா. 


சாரதம் மாடவீதிக் காரியத்தை முடித்து விட்டுக் திரும்பி வந்து கொண்டிருந்தான். பஸ்ஸில் செல்ல முடியாத இடத்தில் வீடு இருக்கிறது. போகும்போது ரிஷாவுக்கு ஏழு ரூபாய் அழுதாகிவிட்டது. இன்னொரு ஏழு ரூபாயைத் தூக்கி எறிய மனம் வரவில்வை. நடக்கலானாள். 

ரேவதி மனத்தில் அமர்ந்து கொண்டாள். 

நேற்று இரவு அவளும் ரேவதியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டார்கள்- முப்பதை நோக்கித் தன்ளாடிக் கொண்டிருக்கும் வைதேகிக்கு, முப்பத்தைந்து வயதான ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் இருப்பதாகவும், தன் அப்பாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும், நிச்சயமாக அவனுக்கு வைதேகியைப் பிடித்துப் போகும் என்று கூறிய அவள், அந்த புரொபசர் சார்நாத் இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை வரப் போவதாகவும் சொன்னாள். அவனுடைய அம்மா தன் பெண்ணுடன் அண்ணா நகரில் இருப்பதாகவும் கூறினாள். வரதட்சணை பற்றியோ, கலியாணச் சிலவு பற்றியோ பெரியப்பா கவலைப்பட வேண்டாமென்றும் சொன்னாள். கேட்கக் கேட்க சாரதத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வைதேகியின் கலியாணம் நடக்க கற்பகாம்பாள் அருள் புரியவேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள். 

வைதேகிக்குப் பிறகு பேச்சில் பாபுவும் சாந்தாவும் வந்தார்கள். 

“பெரியம்மா, பெரியப்பாவுக்கு இப்ப வயசு அறுபது ஆகப் போறது, இனிமேலும் அவர் கையில் குடை எடுத்துக் கொண்டு ஹவுஸ் பிரோக்கர் தொழிலுக்கு ஓடணுமா? நான் ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோ முதல் போடறேன். இந்த வீட்டு மாடியை ஆபீசாக்கிடலாம். என் அப்பா பெயர்ல ‘பஞ்சந்தம் ரியல் எஸ்டேட்’னு வியாபாரத்தை ஆரம்பிக்கட்டும். வீட்டில போன் இருக்கவே இருக்கு. நிலங்களை மத்தலங்களுக்கு வாங்கிக் கொடுக்கறதுக்கு பதிலா அவரே ஒரு தொகையை அட்வான்சாக் கொடுத்து ஆறுமாசம் டயம் கேட்கட்டும். அப்புறம் அவரே நிலத்தில லே அவுட் போட்டுட்டு, ஃப்ளாட் கட்டறதா ஹிந்து பேப்பரில விளம்பரம் கொடுக்கட்டும். அடுத்த வருஷமே இந்த வீட்ல எல்லார்க்கும் தனித்தனி ஃப்ளாட் கிடைக்கும் பாருங்க!” என்றாள். சாரதம் திக்கு முக்காடிப் போனாள். ஏன் இந்தமாதிரி எண்ணம் கணவருக்கோ மற்றவர்களுக்கோ வரவில்லை? 

ரேவதி தொடர்ந்தாள். 

“இந்த வீட்ல ரெண்டு என்ஜினியர்கள் இருக்காங்க. ஒண்ணு வீரா, இன்னொண்ணு சத்யா, சொல்லப் போனா, வீரா சியில் என்ஜினியர், சத்யா ஆர்க்கிடெக்ட், இந்த ரெண்டு பேரும் பெரியப்பாவும் வியாபாரத்தில் கூட்டாளியா இருக்கட்டும். இந்த ஐடியாவெல்லாம் என் மனசிவ உதிச்ச ஐடியான்னு தப்புக் கணக்கு போடாதீங்க. ரொம்ப நாளா அப்பா சொல்லிட்டிருப்பார். ‘அண்ணா குடும்பத்துக்கு ஏதானும் செய்யனும்னு. முதற் காரியமா, இந்த வீட்டை அண்ணா பெயருக்கே மாத்தணும்’னு. இப்ப மாத்தற உரிமை எனக்கு இருக்கு பெரியம்மா, மாத்திடறேன்.”

“ரேவதி நீ என்ன சொல்றே.. இந்த வீடு உன் பெரியப்பா போலேதானே இருக்கு! எலக்ட்ரிசிட்டி கார்ட்ல உன் தாத்தா பேர்லதானே இன்னும் இருக்கு?”

“அதை இன்னும் மாத்தலே.. அப்பா கடைசியா வந்தப்ப பெரியப்பாவின் பணக் கஷ்டத்தைப் பார்த்து, லட்சம் ரூபாய் கொடுத்து. அவருடைய பங்கைத் தன் பெயருக்கு மாத்தியாச்சு, டாகுமென்ட் ரிஜிஸ்டரும் ஆயாச்சு.” 

“இது எனக்குத் தெரியவே. தெரியாதே.. பிதுரார்ஜிதமா வந்த வீடு அண்ணன் தம்பிகளுக்கு சமபாகமா இருக்குன்னு தானே நினைச்சுட்டிருந்தேன், இத்தனை நாளா?”

“இது பத்தி நீங்க பெரியப்பாகிட்ட பேசப்படாது பெரியம்மா. விஷயத்தை உங்களுக்கு தெரியாம மறைச்சு வைச்சதுக்கு நீங்க அவர்ட்ட கடுமையா நடத்துக்கப்படாது” 

சாரதம் மௌனத்தில் உறைந்து போனாள். 

“அப்புறம் பாபு!”

“அவனுக்கு என்ன ரேவதி” என்று சாரதம் கேட்டாள். 

“பாபுவுக்குக் கலியாணமாகி நாலு வருஷம் ஆறது. இந்த வீட்டுக் கூட்டத்தில் அவனும் அவன் ஒய்ஃபும் இருக்கிறது நல்லது இல்லை. இப்படியே தொடர்ந்து இருந்தால் ரெண்டு பேருக்குமே பொறுப்பு வராது”. 

“அதனாலே.. நீ என்ன சொல்ல வாறே, ரேவதி!” 

“தனிக் குடித்தனம்”

“பாபு மாட்டேம்பான். சாந்தா பத்ரகாளியா ஆடுவா.”

“நான் பார்த்துக்கறேன் பெரியம்மா.”

”மெட்ராஸ்ல வீடு லேசில் கிடைக்காது. கிடைச்சாலும் ரெண்டாயிரம் மூவாயிரம் வாடகை கேட்பா.” 

“ஆயிரத்து ஐநூறு கொடுக்கட்டும்.”

“வீடு!”

“இதே அண்ணாமலைபுரத்தில், இதே ஆறாவது மெயின்ல ஒரு வீடு இருக்கு. ரெண்டு மாடி, முதல் மாடியில் குடித்தனம் இருக்கு, மாடியில ரெண்டு பெட்ரூம் ஹால், கிட்சன், ஆயிரம் சதுர அடி!” 

“யார் வீடு?” 

“வெட்டர்னரி டாக்டர் கைலாசம் இருக்கிற விடு”

“உனக்கு இதெல்லாம் எப்படித் தேரியும், ரேவதி இன்னிக்குத்தான் அமெரிக்காவிலிருந்து நீ வந்திருக்கே. ரொம்ப காலமா மெட்ராஸ்ல இருக்கிற மாதிரிப் பேசறே?” 

“கடைசியா அப்பா வந்தப்ப இந்த வீட்டை வாங்கினார்”. 

“அப்படியா? எனக்குத் தெரியவே தெரியாதே?” 

“சத்யாவுக்கு மட்டும்தான் தெரியும். யாரிட்டேயும் மூச்சு விடப்படாதுன்னு அப்பா அவன்ட்டே சொல்லியிருந்தார். என்னிக்காவது இந்தியாவுக்குத் திரும்பினா தங்கறதுக்கு வீடு வேணுமே? பழைய சொந்தக்காரர் டாக்டர் கைலாசம் நாலு லட்சம் ரூபாய்க்கு வித்துட்டு, அதிலேயே மூவாயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருக்கார். பாபுவுக்கு கன்சஷன். அதில பாதி கொடுத்தாப் போதும். அந்த வாடகையை சத்யா வாங்கி பாங்க்ல கட்டுவான்” 

“இது பத்தியெல்லாம் நீ ஏற்கெனவே அவன் கூடப் பேசியாச்சா?”

“மாசத்துக்கு ஒரு தடவை சத்யாவோட அப்பா போன்ல பேசுவார்ல ஆபீஸ்ல. அப்பாவுக்கு இதைத் தவிர மகாபலிபுரம் போற ரோட்ல, உத்தண்டியில் பத்து ஏக்கா தோட்டமும் இருக்கு!” 

“எல்லாமே. ராமாயணமா இருக்கு எனக்கு, ரேவதி.”

”அப்பா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல போயிருக்கலேன்னா வருஷா வருஷம் ஒரு மாசமாவது இந்த உத்தண்டி தோட்டத்தில தங்கி இருப்பார். ஒரு நாள் நான் அதைப் போய்ப் பார்க்கணும், ஐநூறு தென்னை, இருபது மா, முப்பது நாப்பது சப்போட்டா எல்லாம் பணத்தைக் கொழிக்கறது!” 

“இதுவும் சத்யாவின்…”

“ஆமாம். சத்யாதான் அப்பாவோட இண்டியன் ஏஜன்ட்”

“மாசத்துக்கு ரெண்டு வாட்டி, ஞாயித்துக் கிழமைகள்ல காலங்காத்தால ஸ்கூட்டர்ல போவான், திரும்பி வர்றப்ப சாயங்காலம் ஆயிடும். இது வரையில் ஒரு தேங்கா, ஒரு மாங்கா, ஒரு சப்போட்டாகூட தோட்டத்திலேந்து கொண்டு வந்ததில்லே…. சரியான கல்லுள்ளி மங்கன்.” 

“அப்படிக் கொண்டு வந்திருந்தா நீங்க கேள்வி கேட்பீங்க.. பதில் சொல்லத் திண்டாடுவான். சத்யா பொய்யே பேசமாட்டான் என்கிற அபிப்பிராயம் அப்பாவுக்கு உண்டு”

”இவ்வளவு சொத்துக்களை நீ இங்கே வைச்சுக்கிட்டு அமெரிக்காவில எவ்வளவு காலம்தான் இருப்பே, ரேவதி?” 

“இதுபத்தி நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலே, பெரியம்மா!” 

“நீ இப்ப எங்களுக்கெல்லாம் ஒரு அதிர்ஷ்ட தேவதையா வந்திருக்கே, ரேவதி. சத்தியமாச் சொல்றேன், நீ வர்றத்துக்கு முன்னாடி என் மனசில ஒரே வெறுப்பா இருந்தது. வீட்ல இவ்வளவு சுமை இருக்கறப்ப இன்னொரு சுமையான்னு எரிச்சல்கூட வந்தது.” 

“உங்க சுமையைக் குறைக்கத்தான் நான் வந்திருக்கேன் பெரியம்மா. மொதல்ல பாபு – சாந்தாவை வெளியே அனுப்புவோம்.” 

“அது என்னால முடியாத விஷயம்?”

“எங்கிட்ட விட ரெடியா, பெரியம்மா?”

“நான் குறுக்கே வரமாட்டேன், உன் பெரியப்பாவும் வராம நான் பார்த்துக்கறேன். போதுமா?”

“போதும், ஆனா எப்ப சாந்தா வருவா?”

“தெரியாது.” 

“வரவழைக்க ஒரு வழி இருக்கு, பெரியம்மா”

‘”என்ன அது?”

“அமெரிக்கன் ஜார்ஜட்” 

“புரியலே” 

“பாபுகிட்ட சொல்றேன், ‘உன் ஒய்ஃப் வந்து அவளுக்குப் பிடிச்ச ரெண்டு புடவைகளை எடுத்துக்கட்டும்’னு, பாபு அவகிட்ட சொல்லுவான். நீங்க வேணும்னா பாருங்க, அவ நாளைக்கு சாயங்காலமே வந்து நிப்பா!” 

சாரதம் சிரித்தாள். 

முந்தின இரவு பேசிய பேச்சுக்களையெலிலாம் நினைவு கூர்ந்து கொண்டே வந்த சாரதம், வீட்டு காம்பவுண்டு கேட்டைத் திறக்கையிலேயே சாந்தா நிற்பதைப் பார்த்து விட்டாள். 

இந்த ரேவதி சாமர்த்தியமும் சாதுரியமும் திறைந்த பெண்தான் என்ற அபிப்பிராயம் அவள் மனத்தில் மேலோங்கி நின்றது.

– தொடரும்…

– இன்பமான பூகம்பம் (நாவல்), வெளியானது: ஜூலை 1995, மாலைமதி மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *