ஆண்ட்ராய்டு போன்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 4,223 
 
 

ஆன்ட்ராய்டு போனில் அலாரம் அடித்தது. முகத்தில் மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அலாரத்தை ஆஃப் செய்தான் அந்த வாலிபன்.

அப்போது அடுப்படியில் பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்த தாய் ‘சுமதி’ “காலையில எந்திக்கிறது எட்டு மணிக்கு” இதுல அலாரம் வேற இவனுக்கு ”டேய் கார்த்தி எழுந்திரிடா” என்று சுமதி தன் மகன் கார்த்திக்கு தாலாட்டு பாடினாள்.

தந்தை ‘சுந்தரம்’, “குட் மார்னிங் கார்த்தி“ என்றார்.

ஆனால் கார்த்தியோ சுந்தரம் சொன்னதை காதில் வாங்காமல் ஃபோனில் உள்ள பேட்டன் லாக்கை ரிமூவ் செய்துவிட்டு whatsapp ஐ ஆன் செய்தான். பின்பு அதில் இருந்த அவனது காலேஜ் ஃபிரண்ட்ஸ் குரூப்பிற்கும், இதர நண்பர்களுக்கும் “குட் மார்னிங் ஃப்ரெண்ட்ஸ்” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான்.

அதை கவனித்த சுமதி, டேய் கார்த்தி அப்பா உனக்கு ‘குட் மார்னிங்’ சொல்றாரு அவருகிட்ட சொல்லாம நீ என்னடா போனுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லிட்டு இருக்க? என்றாள்.

கார்த்தியோ அட போமா ! இன்னைக்கு சண்டேதான, அப்பா வீட்ல தான இருக்க போறாரு, அவருக்கு எப்பனாலும் ‘குட் மார்னிங்’ சொல்லிக்கலாம். ஆனா என் காலேஜ் ஃபிரண்ட்ஸ்ஸ இன்னைக்கு பார்க்க முடியாதுல? சோ டுடே ஃபஸ்டு ‘குட் மார்னிங்’ அவங்களுக்குத்தான்.

போமா போய் காஃபி கொண்டு வா !

ஆமா இவனுக்கு இந்த ‘வாட்ஸ் ஆப்ப’ இழுத்துட்டா போதும் கோவம் பொத்துக்கிட்டு வந்துரும். எவன் கண்டுபிடுச்சானோ இந்த எலவ என்றாள் சுமதி.

ம்ம் இந்த எலவு மட்டும் இல்லேன்னா துபாய்ல இருக்குற உன் அண்ணன்கிட்ட வீடியோ கால் போட்டு அப்பப்ப உன் பாசக்கண்ணீர சிந்த முடியாது.

சரியா சொன்னடா கார்த்தி! என்றார் அப்பா சுந்தரம்.

ஹ்ம்ம் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என் அண்ணன வம்புக்கு இழுக்காட்டி பொழுது விடியாதே? என்று சொல்லி மகனுக்கு காஃபி எடுத்துவர சுமதி அடுப்படிக்குச் சென்றாள்.

பின்பு சுமதி எடுத்து வந்த காஃபியை குடித்தவாரே கார்த்தி facebook ஐ லாகின் செய்தான். அதில் ஏகப்பட்ட நோட்டிபிகேஷன் இருந்தது. அதை ஒவ்வொன்றாக ஓப்பன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது கார்த்தியின் அருகில் வந்த சுந்தரம், “டேய் கார்த்தி நீயும் உன் அம்மா சொல்ற மாதிரிதான்டா நடந்துக்குற. எழுந்த உடனே ‘வாட்ஸ் ஆப்’, இப்ப ‘ஃபேஸ் புக்கா’ ? அப்புடி என்னதான்டா இருக்கு இந்த ‘ஃபேஸ் புக்குல’.

ம்ம்ம் அதுவாப்பா, நீ ஒரு நாள் அம்மாவுக்குத் தெரியாம உன் காலேஜ் ஃபிரெண்டு கோமதிய இதே ஃபேஸ் புக்’ ல இருக்காங்களான்னு தேடுனியே ! மறந்துட்டியாப்பா?

டேய் ஏன்டா இப்ப கத்துற? உன் அம்மா காதுல கேட்டுச்சு அவ்ளோதான், எனக்கு இன்னைக்கு சோறு போடா மாட்டா நான் பட்டினிதான் என்று சொல்லி அந்த இடத்தை விட்டு சுந்தரம் நைசாக நகர்ந்தார்.

நேரங்கள் கடந்து, மூவருக்கும் காலை உணவு முடிந்தது.

டேய் கார்த்தி, “பாய் கடைக்கு போய் ஒரு கிலோ மட்டன் வாங்கிட்டு வாடா”.

அப்புடியே நெஞ்செலும்பு போட சொல்லு, அம்மா சொன்னாங்க னு சொல்லுடா என்றாள் சுமதி.

அம்மா! சண்டே ஒரு நாள் மட்டும்ந்தா வீட்ல ஃப்ரீயா இருக்கேன், அது உனக்கு பொறுக்கலயா. அப்பாவ போக சொல்ல வேண்டிதான?

ஏன்டா அவரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தானடா ஃப்ரீயா இருக்காரு.

ஆமா நீ உன் லவ்வர விட்டு கொடுக்க மாட்டியே ?

சரி போறேன் ! காசு எடுத்துட்டு வா.

டேய் நீதான் ஒரு அட்ட வச்சு இருப்பியே, அத தேச்சு பெட்ரோல் கூட போடுவியே, அத வச்சு வாங்கிட்டு வாடா.

அம்மா அது அட்டை இல்ல. அதுக்கு பேரு ‘கிரெடிட் கார்ட்’

ம்ம் அந்த கார்டு தாண்டா.

அம்மா அத வச்சு சூப்பர் மார்க்கெட்ல காய்கறி வேணும்னா வாங்கலாம். பாய் கடைல கரி வாங்க முடியாது. போ போய் அப்பா கிட்ட காசு வாங்கி கொடு.

சுமதி சுந்தரத்தின் சட்டை பையில் சலவை நோட்டு ஒன்றை எடுத்து வந்து கார்த்தியிடம் கொடுத்தாள்.

அம்மா கொடுத்த பணத்தை சட்டை பையில் திணித்து, “ அப்பா பைக் சாவி எங்கப்பா வச்ச” கடைக்கு போகணும் என்றான் கார்த்தி.

கொல்லப்புறத்தில் சவரம் செய்து கொண்டிருந்த சுந்தரமோ, “ டேய் இந்தா இருக்குற கடைக்கு எதுக்குடா உனக்கு வண்டி” அதுவும் பெட்ரோல் விக்கிற விலைக்கு.

“நாங்களாம் அந்த காலத்துல” என்று சுந்தரம் வாயை திறப்பதற்குள் கார்த்தி கதவை திறந்து வெளியே சென்றுவிட்டான்.

தன் காதுகளில் ‘இயர்ஃபோன்’ மாட்டிக்கொண்டு செல்ஃபோனை பார்த்தவாறே தெரு வீதியில் நடக்க துவங்கினான். சிறு தொலைவு சென்றவுடன் வேப்ப மரத்து நிழலில் பாட்டியுடன் நின்று கொண்டிருந்த சிறுமி கார்த்தியிடம் “அண்ணா இங்க மினி பஸ் எப்ப வரும்னு தெரியுமா” என்று கேட்டாள். ஆனால் கார்த்தியோ அவள் கேட்டதை காதில் வாங்காமல் அவளை கடந்து சென்றான்.

சிறுமியுடன் நின்று கொண்டிருந்த பாட்டி, “ஏட்டி கழுத அவனே காது கேக்காம இருக்குனு பாவம் செவுட்டு மிஷின் மாட்டிட்டு போறான், அவன் கிட்ட பஸ்ஸு வருமான்னு கேக்குற.

அய்யோ பாட்டி அது செவுட்டு மிஷின் இல்ல, ‘இயர்ஃபோன்’. அது பாட்டு கேக்குறது பாட்டி என்றாள் சிறுமி.

அப்படியாக்கும் நானு செவுட்டு மெஷின்ல நெனச்சேன் என்றாள் கிளவி.

கார்த்தியும் ‘டம்மு டும்முனு’ காது கிழிய பாட்டு கேட்டவாறே மட்டன் ஸ்டாலை அடைந்தான்.

பாய் ஒரு கிலோ மட்டன் போடுங்க. அப்படியே நெஞ்செலும்பு போடுங்க, அம்மா வாங்கிட்டு வர சொன்னாங்க.

சரிங்க தம்பி போற்றுவோம், ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க போட்டு தரேன்.

பாய் வெட்டிக் கொடுத்த கரியை கரு நிற பிளாஸ்டிக் பையில் வாங்கிக்கொண்டு கரிக்கான பணத்தை கொடுத்துவிட்டு கார்த்தி மீண்டும் செல்ஃபோனில் வீடியோ பார்த்தவாறே நடக்கத் துவங்கினான். அப்படி நடந்து கொண்டிருக்க வழியில் அழகான பெண் ஒருத்தி அவளது வலது கையினால் கார்த்திக்கு அணை கட்டினாள்.

தலையை உயர்த்தி அந்த பெண்ணை பார்த்த கார்த்தி, தன் காதுகளில் மாட்டியிருந்த ‘இயர்ஃபோனை’ கழட்டி விட்டு அந்த பெண்ணிடம் “சாரி பியூட்டி ஐ அம் கமிட்டெட்” என்றான். அதற்கு அவளோ “டேய் மூதேவி கீழ குளி இருக்கு பார்த்து போடா” கமிட்டெட்டாம்ல கமிட்டெட்.

நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே கமீட்டெடு டா என்று பீத்திக் கொண்டு போனாள். கார்த்தியின் முகமோ வாடிய பூவை போல சுருங்கிப் போனது. பல பாராட்டுகளை பெற்று விட்டு ஒருவழியாக கார்த்தி வீட்டை அடைந்தான்.

அம்மா ! அம்மா !

இருடா வரேன்.

மட்டன் வாங்கிட்டியா?

வாங்கிட்டேன்.

நெஞ்செலும்பு வாங்க சொன்னேன் வாங்குனியா ?

வாங்கியாச்சு வாங்கியாச்சு ! “இன்னைக்கு வைக்கிற குழம்பானாலும் டேஸ்டா ரெடி பண்ணு” சாப்பிடுற மாதிரி.

ம்ம் பார்க்கத்தான்டா போறேன் உனக்கு வரப்போற பொண்டாட்டி எப்படி சமைக்க போறான்னு, அப்ப தெரியுண்டா இந்த அம்மாவோட அருமை.

தெரியும் தெரியும் நல்லா.

அப்பாவ எங்க காணும்?

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழம, மட்டன் வேற எடுத்தாச்சு, வேற எங்க போவாரு உங்க அப்பா.

ஓ ! அதான் வண்டி கேட்டதுக்கு நடந்து போக சொன்னாரா?

வரட்டும் வரட்டும்.

நேரங்கள் கடந்தது, சமயலும் முடிந்தது.

டேய் கார்த்தி உங்க அப்பாவுக்கு போன் போடுடா, எப்ப போன மனுஷன் இன்னும் ஆள காணும் என்று சுமதி சொல்ல, கார்த்தியும் சுந்தரத்திற்கு கால் செய்வதற்கு ஃபோனை எடுத்தான். அதற்குள் வாசலில் சுந்தரத்தின் பைக் சத்தம் கேட்டது.

அம்மா ! அப்பா வந்துட்டாரு, பைக் சவுண்ட் கேக்குது.

சுந்தரம் பைக்கை நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே நுழைந்தார்.

சுமதி! கரிக்கொழம்பு வாசனை தெரு முனை வரைக்கும் ஆளயே தூக்குதே என்றார் சுந்தரம். சுமதியும் தன் முன்னம்பர்கள் மட்டும் தெரியுமாறு லேசாக புன்னகைத்தாள்.

அம்மா சிரிக்காதமா ! அப்பா எங்க போயிட்டு வர்றீங்க இப்ப?

என் பிரண்ட்ஸ்ஸ பார்க்க போனேன். ஏன்டா உனக்கு மட்டுந்தா பிரண்ட்ஸ் இருப்பாங்களா என்ன ? ஏன் எனக்கு பிரண்ட்ஸ் இருக்க மாட்டாங்களா?

இருக்கலாம், அது நல்ல ஃபிரெண்ட்ஸ்ஸா இருக்கனும்.

சரி விடுடா கார்த்தி! இன்னைக்கு ஒருநாள் தானே என்றாள் சுமதி.

அம்மா அப்பாவ கெடுக்குறதே நீதாம்மா.

“டேய் கார்த்தி பசிக்குதுடா விடுடா வா போய் சாப்பிடலாம்” என்று சுந்தரம் பேச்சை மாற்றினார்.

நான் சொல்றத என்னைக்கு கேட்க போறிங்க நீங்க என்று சொல்லி சுந்தரத்துடன் டைனிங் டேபிளுக்கு சென்றான் கார்த்தி.

சுமதி வாமா நீயு உட்காரு! என்றார் சுந்தரம்.

நீங்க மொத சாப்பிடுங்க, நான் சாப்பிடுறேன் என்று சொல்லி இருவருக்கும் பரிமாறினாள்.

சுந்தரம் நாக்கில் எடுத்து வைத்த முதல் கரித்துண்டிலேயே “ ம்ம்ம் நல்ல ருசிமா சுமதி” நம்ம தெருவுல உன்ன மாதிரி மட்டன் குழம்பு வேற யாராலயும் வைக்க முடியாது. சூப்பர் சூப்பர்

கார்த்தி ! பேசாம உன் அம்மாவுக்கு ஒரு youtube சேனல் ஓபன் பண்ணி கொடுத்துருடா. மட்டன் குழம்பு சமைப்பது எப்படி? ன்னு ஒரு புரோகிராம் பண்ணட்டும்.

என்னமா அப்பா சொன்ன மாதிரி youtube சேனல் ஓபன் செஞ்சு தரேன் வீடியோ போடுறியா ? ஊரே உன் சமையல பாராட்டும்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டா எனக்கு ! ஊரே என் சமையல பாராட்ட வேண்டா. அப்பாவும் நீயும் பாராட்டுனாலே போதும்.

ஓகே மா ! “இன்னைக்கு சாப்பாடு நிஜமாவே சூப்பர்” போதுமா.

சுமதி சிரித்துக்கொண்டே ‘ஓகே ஓகே’ தாங்க்ஸ். நல்லா வயித்துக்கு சாப்புடு, இன்னும் கொஞ்சம் கரி வைக்கவாடா.

போதும்மா.

இந்தா இந்த எலும்ப நல்லா கடி. அப்பத்தா பல்லு நல்லா உறுதியா இருக்கும்.

ம்ம்ம் கொஞ்சமா போடுமா.

ஏங்க உங்களுக்கு கரி வைக்கவா?

வேணாமா போதும் போதும் நானே வச்சுக்குறேன், நீயும் தட்ட போட்டு சாப்புடு வா என்று சொல்லி சுமதியின் கையை பிடித்து நாற்காலியில் அமரச்செய்தார்.

ஒரு வழியாக அன்று பொழுது ஓடியது, இரவும் வந்தது. கார்த்தி அவன் படுக்கையில் கண்களை மூடி படுத்தவாறே காதில் ‘இயர் ஃபோனை’ மாட்டிக்கொண்டு எ.ஆர்.ரஹ்மான் சாங்ஸ் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் அருகில் வந்த தாய் சுமதி கார்த்தி கார்த்தி என்று அவனை அழைத்தாள். அவனுக்கோ பாட்டு சத்தத்தில் காது கேட்கவில்லை. டேய் கார்த்தி என்று அவள் கையை வைத்து கார்த்தியின் தோள்பட்டையை குழுக்கினாள்.

கார்த்தி சட்டென்று எழுந்தான்.

என்னம்மா ?

என்னடா பண்ற கார்த்தி?

அம்மா சாங்ஸ் கேட்கிறேன். எ.ஆர்.ரஹ்மான் சாங்ஸ், நீயும் கேக்குறியா ?

அதெல்லாம் வேணாண்டா, எனக்கு இந்த பாசமலர் படத்துல வருமே மலர்ந்தும் மலராத பாட்டு நீ கேட்டு இருக்கியா ?

ஆமா கேட்டு இருக்கேன்.

அந்த பாட்டு இருந்தா போட்டு விடுடா. கேட்டு ரொம்ப நாள் ஆச்சு

அதுக்கென்ன இருக்கவே இருக்கு youtube இந்தா போற்றுவோம் என்று சொல்லி அம்மா கேட்ட பாடலை ஒலிக்கச் செய்தான் கார்த்தி.

சுமதியும் தன் மகனின் தோளின் மீது சாய்ந்து கொண்டே அந்த பாடலை கேட்டு கண்ணீர் வடித்தாள். அப்போது அங்கு வந்த சுந்தரம் சுமதியின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்து அதை மெல்ல துடைத்துவிட்டார்.

அன்று சுமதியின் வீட்டில் ஆண்ட்ராய்டு ஃபோனில் அடித்த அலாரத்தில் ஆரம்பித்த பொழுது அதே ஆண்ட்ராய்டு ஃபோனினால் அழுகையில் முடிந்தது.

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஆண்ட்ராய்டு போன்

  1. இன்றைய கால கட்டத்திற்கேற்ற கதைதான்.
    எழுத்துப் பிழைகள்: கரி – கறி;
    கரிக்கொழம்பு – கறிக்கொழம்பு
    முன்னம்பர்கள் – முன்னம் பற்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *