அன்பே தெய்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,903 
 
 

(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்றைக்கு அன்பர் தினமாம்! எங்கு பார்த்தாலும் வாழ்த்துக்கார்டுகளும் மலர்க்கொத்துகளும் பரிமாறிக் கொள்ளப்படும் கோலாகலம்! ஒருவர் மனதை ஒருவர் கவர்ந்து அந்த அன்பிலே திளைத்துக் கிடக்கும் இளையோர் மட்டுமின்றி மூத்தோரும் இந்த நன்னாளில் தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள இன்று தங்களின் பரிசுகளை வேண்டப்பட்டோருக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

கண்ணன் கூடத் தனது தனிமையைத் தவிர்க்க முதியோர் இல்லத்திற்குப் புறப்பட்டுவிட்டார். போகும் வழியில் பேரங்காடியில் சில பரிசுப்பொருட்களை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தில் தனது காரை எடுத்தவர் தனது பக்கத்து வீட்டுப்பையன் சுகுமாறனையும் அழைத்துக் கொண்டார்.

தொடக்கப் பள்ளியில் இரண்டாம் படிவம் படிக்கின்ற இந்த சுகுமாறனுக்குத் தாத்தா என்ற உறவே கிடையாது. அவனது பெற்றோரின் அறிமுகத்தால் அடுத்த வீட்டுப் பெரியவரான திரு கண்ணன் அவருக்குத் தாத்தாவாகி விட்டார்.

கண்ணன் தனது உறவுகளை எல்லாம் விட்டுத் தனியே வாழ்ந்து கொண்டிருப்பவர். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும், மிடுக்காகவும், சுத்தமாகவும் இருப்பார். துணிகளைத் துவைத்துப் பெட்டி போடுவார். சுகுமாறன் அவரிடம் நிறையக் கற்றுத் கொண்டதுண்டு.

அதில் சுத்தம், நேர்மை, துணிவு, சுறுசுறுப்பெல்லாம் அடங்கும். அந்த நற்பண்புகளால் அக்கம் பக்கத்தாரிடையேயும் சுகுமாறன் நல்ல பெயரை எடுத்திருந்தான். கண்ணன் தன் பிள்ளைகளிடம் பெறமுடியாத பாசத்தைப் பக்கத்து வீட்டுப் பையன் மூலம் பெற்று வருவதாக உணர்ந்தார் ஒர் உற்ற நண்பனாய் அவருக்கு அவன் இருந்தான். கண்ணனின் முதுமைப் பருவத்துத் தள்ளாமைக்கு சுகுமாறன் இளந்தென்றலாய்ப் புத்துணர்வு தந்து கொண்டிருந்தான். இருவரும் கடற்கரைக்குப் போவார்கள். நெடுந்தூரம் நடப்பார்கள்! மணற்பரப்பில் உட்கார்ந்து பேசுவார்கள். பூங்காவுக்குச் செல்வார்கள் புதுப்புது உணவு வகைகளைச் சுவைக்க வேண்டும் தாத்தா என்று பலவகை ரெஸ்டலிரண்ஷளுஆப் பேவோமா என்றும் அழைப்பான். முகம் கோணாமல் அவனோடு போய் அவன் விரும்பியதை வாங்கித் தந்து அவனுடைய ஆசைக்காகத் தானும் உண்பார்

அவர்களின் நாட்கள் அன்பு மயமானதாய்க் கழியும்! அந்த அறிவார்த்தமான பையனோடு தனது நாளைக் கழிப்பதில் அவருக்கும் முதுமை மறந்து போனதுண்டு.

கண்ணன் தனது கையில் நிறைய பணம் கொண்டு வத்திருந்தார். பரிசுப் பொருட்களைத் தேடித் தேடி வாங்கினார்கள். சிங்கையிலேயே மிகவும் பிரபலமான பேரங்காடியான அந்த நவீன வசதிகளுடன் கூடிய கடையைப் பார்த்து சுகுமாறன் வியந்து நின்றான். எல்லாப் பொருட்களும் அங்கே மலைபோல் குவித்து இருந்தன. ஒல்வோர் இடமாக இருவரும் புகுந்து வெளியே வந்தார்கள். விளையாட்டுப் பொருட்கள் நிரம்பிக் மிடந்த பகுதியில் சுகுமாறன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

கண்ணன் வேறு இடத்தில் எதையோ தேடிக் கொண்டு போனார்- போன இடத்தில் ஒர் இளம் ஜோடி அவர் கண்களில் சிக்கிக் கொண்டனர். ஒரு பையனும் பெண்ணும் அது பொது இடம் என்பதையும் மறந்து தங்கள் காதலை அன்பை அங்கே தங்களின் முத்தங்கள் வழியாகப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சுற்றி நிற்பவர்களையோ பொருட்களை வாங்க வருபவர்களையோ அவர்கள் கொஞ்சமும் பெரிதுபடுத்தவில்லை. அதிலும் ஆணை விட அந்தப் பெண்ணே மிகவும் மும்முரமாய் இருந்தாள்.

இடையிடையே “இன்றைக்கு எனக்கு நீ என்ன பரிசு தரப்போகிறாய் அன்பே! உன்னுடைய பரிசு என் காதலைவிட உயர்வானதா…?” என்று போதை ததும்ப ஆங்கிலத்தில் கேள்வியும் கேட்டுக் கொண்டாள். கண்ணனுக்கு ஆத்திரமும் அருவறுப்பும் மிகுந்தன.

இது என்ன காதல்! காட்டுமிராண்டிக் காதல்! படித்தவர்கள் நடந்து கொள்ளும் முறையா இது? மனதுக்குள் திட்டிக்கொண்டே அங்கிருந்து நடந்தார். மறுபக்கமாய்ப் போனார், நல்ல வேளையாய் சுகுமாறன் அந்தக் காட்சியைக் காணவில்லை என்ற திருப்தியோடு…

வண்ண வண்ண விளக்குகள் நிரம்பியிருந்த பகுதிக்கு வந்து சிலவற்றைத் தேர்வு செய்து கொண்டிருக்கையில் சற்று முன்னால் அவர் பார்த்த அந்த ஜோடி அங்கே வந்தது. அவர்களின் நடையும் பாவனையும் அவருக்கே வியப்பைத் தந்தன. எந்த ஜோடியைப் பார்த்துத் தன் கண்களை மூடிக்கொள்ள நினைத்தாரோ அந்த ஜோடியை அதே கண்களால் ஆர்வமுடன் பார்த்தார். அந்த இளைஞன் தன் கையினால் அவளின் மென்மையான சின்ன இடையைச் சுற்றியிருக்க அவளும் தன் கையினால் அவன் இடுப்பைப் பற்றியவாறு இணைந்து நடந்தார்கள். நல்ல ஜோடிப் பொருத்தம் என்று மனதுக்குள் வாழ்த்திக் கொண்டு தனது தேடலைத் தொடர்ந்தார். அவர்கள் பொன்னாபரணங்கள் குவிந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றார்கள்.

சுகுமாறன் தாத்தாவிடம் வந்தான். தான் கொண்டு வந்திருந்த கைவினைப் பொருள் ஒன்றை அவரிடம் கொடுத்தான்.

“தாத்தா… வெளிவராந்தாவிலே ஒரு அக்கா இதை வித்துகிட்டு இருக்காங்க… இதோட விலை பத்து வெள்ளிதான்- நாம ரெண்டு வாங்கி அவங்களுக்கு இருபது வெள்ளி கொடுத்தா அவுங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க தாத்தா..” ஆர்வமும் அவசரமுமாய் அவரின் கையைப் பற்றி இழுத்துப் போனான். கூட்டம் கலைந்து திரும்பும் வாயிற்பக்க வராந்தாவில் ஒரு கூடையை வைத்துக் கொண்டு அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள்- அவளின் இடப்பக்கம் அவளைவிட நான்கு வயது அதிகமாக மதிக்கக் கூடிய இளைஞன் ஒருவன் உள்ளடக்கமாய் உட்கார்ந்திருந்தான். அவன் கையில் ஒரு கோலும் கண்களில் கருப்புக் கண்ணாடியும் அவன் ஒரு விழியிழந்தவன் என்பதை எடுத்துச் சொல்லின; உற்றுப் பார்த்தால் அந்தப் இடதுகால் ஊனம்! எல்லோருக்கும் இரக்கத்தை வரவைக்கும்.

கண்ணன் அந்தப் பெ \ண்ணிடம் பேசினார். மனவருந்தங்களைப் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு ஒரே ஒரு மனநிறைவு ஏற்பட்டது.

“இவர் என் கணவர், எங்களுக்குத் திருமணமாகி ஆறாவது மாதத்திலேயே ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துல கண்பார்வை போயிடுச்சி, என்னோட இடதுகால் பாதிக்கப்பட்டுடுச்சி, எங்களோட நிலையைப் பார்த்து எங்க சொந்தக்காரங்கள் எல்லாம் எங்களை ஊனமுற்றோர் இல்லத்தில விட்டுட்டுப் போயிட்டாங்க. நாங்க எங்க பொழுதைக் கழிக்க இப்படி ஏதாச்சும் செய்யுறோம்…

இவர் நல்லாயிருந்தப்ப என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டாரு… இப்பத்தான் அந்த மாதிரி எல்லாம் முடியாமப் போச்சு… ஆனாலும் அவரோட அன்பு ரொம்ப மேலானது என்னையே உயிரா நினைக்கிறாரு… இன்றைக்கு எனக்கு ஏதாச்சும் பரிசு கொடுக்கணும்னு பிரியப்பட்டு இந்த இரண்டு பொம்மைகளையும் தன் கையால செய்து எனக்குப் பரிசு கொடுத்தாரு…

ஆனா எனக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யத் தெரியது. நான் அவருக்குப் பரிசா ஏதாவது வாங்கிக் குடுக்கணுமில்லையா? அதனாலதான் இந்த ரெண்டு பொம்மைகளையும் வித்து அதில கிடைக்கிற பணத்தில பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்கலாம்னு இங்கே வந்தேன் அங்கிள்…! நீங்க என்னை உங்கப் பொண்ணா நினைச்சி கொஞ்சம் உதவி பண்ணணும்…”

கண்ணன் நெகிழ்ந்து போனார் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டன. அவர்களின் உண்மை அன்பின் ஆழம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் கடைசியாக அவள் சொன்ன அந்த வார்த்தை மட்டும் அவர் மனதை ரணப்படுத்தியது.

அவரது ஒரே மகள் அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவரது பொருட்கனை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு, எங்கோ ஒடிப்போனதும், உடல் குணமடைந்து வீடு வந்ததும் வீட்டில் உறவுக்காரர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் வார்த்தைகனால் சுட்டதையும் இன்னமும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர் ஆயிற்றே!

அந்த அன்பான பெண்ணோடு தனது பெண்ணானவளை எப்படிச் சேர்க்க முடியும்? அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டார். இந்தப் பெண்ணை ஏறெடுத்துப் பார்த்தார். அவளிடம் ஐம்பது வெள்ளியைக் கொடுத்தார்.

“இந்தாம்மா! இந்தப் பணத்தை வெச்சுக்கோ… ரெண்டு பேருக்கும் என்னோட அன்பளிப்பு இது. உன் மனசுக்குப் பிடிச்ச உன் புருஷனுக்கு உன் மனசுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடும்மா…”

அவளது கையில் பணத்தை வைத்துத் தன் கையில் மூடி லேசாக ஆதரவாகத் தட்டிக் கொஷது விட்டு நகர்ந்தார். சுகுமாறன் அவரைப் பின் தொடர்ந்தான். ஒட்டமாய்ப் போய் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அவனுக்குத் தாத்தாவின் செய்கை மிகவும் பிடித்திருந்தது. அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும் போல் இருந்தது. அவரின் கையைப் பற்றிக் கொண்டு நடந்தவன்,

“தாத்தா… நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர். உங்க மனசு யாருக்கும் வராது. அந்த அக்கா ரொம்ப சந்தோஷப்படுவாங்க, அந்த அங்கிளுக்கு நெறைய பிரசண்ட் வாங்கித் தருவாங்க இல்லியா?” கண்ணன் சிரித்துக் கொள்கிறார். அவனது முதுகில் தட்டிக் கொடுத்து “ஆமாண்டா கண்ணா… அந்த அக்கா நெஜமாகவே சந்தோஷமா இருப்பா, தனக்குக் பிரியமான புருஷனுக்காக அவ பிரியப்பட்டதை வாங்கித் தருவா!” என்றவாறு மறுபடியும் உள்ளே நுழைந்து தனது பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு இறங்கும் பாதையை நெருங்கியபோது அந்த ஜோடிப் புறாக்கள் மீண்டும் கண்ணில் பட்டன. மனதுக்குள் ஏனோ ஓர் ஆர்வம் துளிர்விட அவர்கள் பக்கம் நடக்கிறார். அவர்கள் ஆபரணங்கள் வைத்திருக்கும் பேழைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எங்கிருந்தே ஒர் இளைஞன் “டிப்டாப்பாக” அவர்களிடம் வந்தான்.

ஹாய்… என்றவாறு இருவருக்கும் கை கொடுத்தான். மூவரும் கலகலப்பாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் சில நகைகளை எடுத்துக் காட்ட அந்தப் பெண் வேண்டாமெனத் தலை அசைக்க சங்கடத்துடன் அவள் காதலன் ஜுவல்லரியை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இருவருக்கும் இடையே மூன்றாவதாக வந்தவன் தன் கையில் ஒரு நெக்லஸை எடுத்து அதை அவன் கையாலேயே அவள் கழுத்தில் அணிவித்து…

“பிடிச்சிருக்கா… !” என்று ஆங்கில மொழியில் கேட்க, மயங்கி விழாத குறையாக அவன் தோளில் சாய்ந்து நின்றாள். அவனே பணத்தைக் கட்ட “Nets” என்னும் பண அட்டையைக் கொடுத்தான். அவளுக்குத் தான் தந்த பரிசை ஏற்றுக் கொண்டமைக்காக நன்றி சொல்லிக் கை குலுக்கினான். அவன் நீட்டிய கையைப்பற்றிய அந்தப்பெண் விடவே இல்லை.

இடது கைவிரல்களை அசைத்து தனது முதல் காதலனுக்கு குட்பை சொல்லியவாறு புதியவனோடு முன்னவன் சிலையாய் நிற்க – வந்தவன் உற்சாகமாய் நடந்து போய்க் கொண்டிருந்தான். இவனும் அவனைப் போலவே இடுப்பில் கையைப் போட்டு வளைத்துக் கொண்டுதான் நடக்கிறான். இவளும் அவன் லப்பில் கையைப் போட்டுச்:கொண்டுதான் நடக்கிறாள். ஆனால் இது இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும்? சற்று முன்வரை கூடவே வந்தவனை புதியவன் வந்தவுடன் கைவிட்டு வந்தவள், இவனோடு மட்டும் எத்தனை மணிநேரம் இருந்துவிடப் போகிறாள்…?

தன் விருப்பத்திற்குக் காதல் பரிசு வாங்கித் தரமுடியாதவன் என்பதால் உடம்புவழிய ஒட்டிப் பழகியவனை உதறித்தள்ள முடிந்தவளுக்கு, இந்தப் புதியவன் எவ்வளவு நேரம் ஒத்துப் போவான்?

ஒரு காரையோ, வீட்டையோ பரிசாகத்தர இன்னொருத்தன் வந்து விட்டால் இவன் கதி அதோ கதி தானா?,

“என்ன தாத்தா… பேசாமலே வர்நீங்க…வேண்டியதை எல்லாம் வாங்கியாச்சு… நாம போக வேண்டிய இடத்துக்குப் போகலாம் தானே!”

அவரின் கையைப் பற்றி சுகுமாறன் இழுத்ததும்தான் சுய நினைவுக்கு வந்ததுபோல் திரும்பிப் பார்க்கிறார்.

“போக வேண்டியதுதான் கண்ணா…! நம்ம கார்ல இதெல்லாம் வெச்சுட்டு… அவுங்களுக்குக் கொஞ்சம் பழங்களும் வாங்கிக்கிட்டுப் போவோம்… இன்னும் முப்பது நிமிஷத்துல நாம போயிடலாம்… நமக்காக அவுங்கள்ளாம் நிச்சயமாகக் காத்துக்கிட்டிருப்பாங்க…”

“தாத்தா அவுங்கள இன்னிக்கு நாம ஏன் பார்க்கணும்… அவுங்களுக்கு இதையெல்லாம் நாம் எதுக்குக் கொடுக்கணும்…?”

விபரம் புரியாது கேட்கிறான் சுகுமாறன். தாத்தாவின் கண்கள் குளமாகின்றன, சிறுவன் பார்க்கும் முன்பாகத் தன் கையினால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

“அவுங்களுக்கெல்லாம் சொந்தங்கள் இருந்தும் சொந்தங்களால நேசிக்க முடியாதவுங்க அவுங்க… சொந்தங்களுக்கே பாரமாப் போனவுங்க, அவுங்களுக் கெல்லாம் கொடுக்க முடியாத பாவிங்களால உதாசீனம் செய்யப்பட்டவுங்கப்பா… தாய் மடி சேரும் மழலைகள் மாதிரி இன்றைக்கு அன்புக்காக அலையும் குழந்தைக் கூட்டம் நாம பார்க்கப் போற இந்த உறவுகள் !”

தாத்தாவின் குரல் கம்முவதையும் கண்கள் சிவப்பதையும் பார்த்துக் கண்ணன் உருகிப் போகிறான்.

“நீங்க சொல்றது எனக்கு நல்லாப் புரியுது தாத்தா… உங்களை நானும் அப்பா அம்மாவும் இந்த மாதிரியெல்லாம் விட்டுட மாட்டோம், எங்க வீட்ல அம்மாவும் அடிக்கடி உங்களைப் பத்தி இப்படித்தான் பேசிப்பாங்க…

கண்ணன் ஸார் நமக்கு அப்பா அம்மா இல்லாத குறையைத் தீர்க்க வந்தவரு_.. கடைசிவரைக்கும் நாம அவரை நம்மோடத்தான் வெச்சிக்கனும்னு பேசிப்பாங்க… எனக்கும் அதே ஆசை தான் இருக்கு தாத்தா…”

காரில் இருப்பதை மறந்து அவனைக் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறார்.

“பாம்பின கால் பாம்பறியும்” என்பது போல் வேதனையை அனுபவித்த உண்மை அவர் முகத்தில் நன்றாகத் தெரிகின்றது.

“ரொம்ப நன்றி கண்ணா… இன்றைக்கு அன்பு பாசமெல்லாம் கடைச்சரக்காகப் போயிடுச்சுப்ப! ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதில் கூட இப்ப பொருளாதாரம் தான் முன்னிலையா இருக்கு வசதி இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னு ஆச்சு! உண்மையான அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. அதுக்கு அன்பைத் தான் விலையாநூ கொடுக்க முடியும். அந்த அக்காவும் பார்வை இல்லாப் பையனும் மாதிரி…,”

“ஆமாங்க தாத்தா… நானும் பார்த்தேன்! அந்த அக்கா அந்த அங்கிள் மேல எவ்வளவு பிரியம் வெச்சிருக்காங்க… இது தான் உண்மையான அன்பு… நெஜந்தான் தாத்தா…”

இருவரும் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்கள். தாத்தாவுக்கு அறிமுகமானவர்கள் வந்து கைகொடுத்து வரவேற்று அழைத்துப் போனார்கன். உன்ளே இருந்த முதியோர்கள் ஆவலுடன் அவருக்குக் கை கொடுத்தார்கன். கண்ணன் முகத்தில் உற்சாகம் பிடிபடவில்லை. எல்லோரும் ஒருவரை ஒருவர் அணைத்து அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள். தாத்தா சுகுமாறனிடம் சொன்னார்

“பார்த்தாயா கண்ணா… இதுக்குப் பேருதான் அன்பர் தினம்! இதை உண்மையாப் புரிஞ்சு நடந்தா இத்த உலகம் எவ்வனவு இன்பமயமானதா… சொர்க்க பூமியா மாறிடும் இத்த உண்மையான சந்தோஷம் … மகிழிச்சியைப் அனுபவிக்கிறதே தனியின்பம் கண்ணா…” சொல்லிக் கொண்டே கை தட்டிப் பாடுகின்மார்.

‘அன்பு என்பதே இன்ப மானது
அன்பு என்பதே தெய்வமானது’

எல்லோரும் பாடுகிறார்கள்… எல்லோரும் கைகளைத் தட்டுகிறார்கள். அந்த இன்பமான காட்சியைக் கண்ட சிறுவனின் மனத் தோட்டத்தில் ஒரு புதிய உத்வேகம்! மனிதாபிமானம், மனித நேயம் வேரூன்றியது. அவனும் பாடுகிறான்

‘அன்பு என்பதே இன்பமானது…
அன்பு என்பதே தெய்வமானது…’

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *