இறைவனின் கருணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,613 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீண்ட நாட்களாகவே கரீமிடம் அதைப் பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த காசிமுக்கு இன்றைய பொழுது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. கடைக்கு வந்ததில் இருந்து அவரை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவர் சரியாகப் பத்து மணிக்கு மேல் அவரை அழைத்து அது பற்றிப் பேசிவிட முடிவு செய்து கொண்டிருந்தார்_ அதே நினைவுடன் கல்லாவில் வந்து உட்கார்த்தபோது கசம் மிகுந்த சுறுநறுப்புடன் அந்தக் காலை நேரப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கரீமுக்கு இப்போது வயது அறுபதைக் கடந்திருந்தாலும் ஒரு முப்பது வயது இளைஞனைப் போலத்தான் அந்தக் கடையில் அவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். இரண்டு வருட வேலை அனுமதியின் பேரில் ஊரிலிருந்து வந்து குப்பை கொட்டுவதிலும் மேசையைச் சுத்தம் செய்வதிலும் செய்து கொண்டிருக்கிற மற்ற இளைஞர்களை விட இவரது இயக்கம் தான் அந்தக் கடையின் வருமானத்துக்கும் வாடிக்கையாளர்களின் வருகைக்கும் காரணமாய் இருந்தது.

கரீம் நாற்பது ஆ ண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்குத் தண்ணிக் கப்பலில் வந்தவர். வந்த ஏழாம் நாளிலேயே இந்தக் கடையில் வந்து ஒண்டியவர்தான். இன்று வரை அவர் அங்கிருந்து நகரவே இல்லை. அவரின் சுறுசுறுப்பும், நல்ல ஒழுக்கமும், வாய்வார்த்தைகளும், அடக்கமும் எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடமிருந்த நாணயமும் அவரை அங்கிருந்து விலக்க முடியாத அளவுக்குக் கடை உரிமையாளருக்குப் பிடித்துப் போயிற்று. சொல்லப் பேரனால் முதலாளியின் வலது கரம்போல் இருந்தார் கரீம்.

தாய் மண்ணில் குறைவரக் கற்றிருந்த தமிழ் அவரை நல்ல பேச்சாளராகவும் மாற்றியிருந்தது. தன் ஒய்வு நேரத்தில் படிப்பார். தான் படித்ததைத் தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்வார். அவரது வாலிபப் பருவித்தில் அவரைச் சுற்றி ஓர் இளைஞர் பட்டாளம் இருக்கும்.

கரீமுக்கு வாய்ப்பழக்மாகவே மலாய் மொழியும் ஆங்கில மொழியும் வந்து ஒட்டிக் கொண்டன. சரளமாக, தெளிவாகப் பேசாவிட்டலும் கூடத் தடையின்றித் தயக்கமின்றி அந்த மொழிகளில் பேசிக் கொண்டிருப்பார் அவர்.

கரீமுக்கு முப்பது வயதில் ஓர் அழகிய நங்கையின் தொடர்பு கிடைத்தது. பிறப்பால் அவள் ஏழையாக இருந்தாலும் அழகினால் அவள் கோடீஸ்வரியாக இருந்தாள். அசூரா என்ற அந்த அழகுப் பெண் அவரிடம் உணவுப் பண்டங்கள் வாங்க வருவதாகத்தான் நினைத்தார் காசீம். ஆனால் அவளோ தனது வயிற்றுப் பிழைப்புக்கு வேலை தேடி வந்திருக்கிறாள் என்பது அவளோடு பேசிய பின்புதான் அவருக்குப் புரியவந்தது.

அந்தப் பெண்ணை முதாலாளியிடம் கூட்டிப் அவளைப் பற்றிச் சொன்னபோது அவளைச் சில நிமிடங்கள் பார்வையால் அளந்த முதலாளி…

“ஒரு வாரம் கழிச்சு வந்து பார்க்கச் சொல்லுப்பா”, என்று அனுப்பி விட்டார். அந்தப் பெண் எந்தப் பதிலும் சொல்லாமல் அவருக்கு நன்றியைத் தன் தலையை அசைத்துக் காட்டிவிட்டுப் போய் விட்டாள். கரீமுக்கு முதலாளி மீது ஏகப்பட்ட வருத்தமும் கோபமும் வந்தது. வேலையை மறந்து தனிமையில் போய் உட்கார்ந்து சிந்திக்கலானார்.

“என்ன மனிதர் இவர்… ஓர் ஏழைப் பெண்! உழைத்துச் சாப்பிடத் தானே வேலை கேட்டு வந்தாள். அவளுடைய முகத்தைப் பார்க்க வேண்டாம், அவளின் நிலையை அறிந்தாவது ஒரு வேலை போட்டுக் கொடுத்திருக்கலாமே”, என்று மனதுக்குள் கடிந்து கொண்டார்.

இரண்டு மூன்று தினங்கள் ஒடிய பின் அவரை அழைத்த முதலாளி,

“அந்தப் பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறதா கரீம்… ஏழைப் பெண்ணாக இருந்தாலும் நல்ல பெண்ணாகத் தெரிகிறாள். உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற தன்னம்பிக்கை அவளிடம் இருக்கிறது. அவளுக்கு நம் கடையில் வேலை கொடுப்பதை விட உனக்கு நிக்காஹ் செய்து வைத்தால் உனக்கும் நன்மையாய் இருக்கும், எனக்கும் சந்தோஷமாய் இருக்கும்னு நினைக்கிறேன், என்னப்பா சொல்றே…?”

என்று கேட்டபோது உண்மையிலேயே அவர் நெகிழ்ந்து போனார்.

“அல்லாஹு அக்பர்…முதலாளி எனக்கு நீங்க சகோதரன் மாதிரி… நீங்க சொல்ற…செய்ற காரியம் எதுவாயிருந்தாலும் அது என்னோட நன்மைக்காத்தான் இருக்கும்… வசதி வாய்ப்புள்ளவங்க ஒர் ஏழைப் பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறது இஸ்லாத்தின் மிகப் பெரிய கடமையை நிறைவேற்றின புண்ணியம் கெடச்ச மாதிரி…”

என்று அவரது இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டார். அடுத்த மாதத்திலேயே அசூரா என்ற அழகுப் பெட்டகம் கரீமுக்குச் சொந்தமானாள். அந்த அன்பான பெண்ணை மனைவியாக்கிக் கொண்டபின் தன் பெற்றோருக்குத் தபால் எழுதித் தகவல் தெரிவித்தார் கரீம். அவர்களிடமிருந்து ஆசீர்வாதம் வரும் என்று காத்துக் கொண்டு இருந்தவரை ஏமாற்றமே தழுவிக் கொண்டது. அவருக்காக ஊரில் உறவுப் பெண்ணைப் பார்த்து வைத்திருப்பதாகவும் அந்தப் பெண்ணை தலாக் சொல்லி மஹர் பணத்தையும் கொடுத்து விட்டு உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டும்,இல்லாவிட்டால் எங்களையும் மறந்துவிட வேண்டும் என்று பெற்றோர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். அசூரா அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்து அழுதாள்.

“என்னால்தானே உங்களுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்.. என்னை விட்டுவிடுங்கள்… நான் உங்கள் நினைவிலேயே வாழ்ந்து விட்டுப் போகிறேன்…நீங்கள் ஊருக்குப் போய் உங்கள் பெற்றோரைப் பார்த்து அவர்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அவர்களின் மனதைக் குளிர வையுங்கள்…”

என்று அழுதான். கரீம் அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

“உன்னை விட்டுவிட்டுப் போவதை விட என் உயிரையே நான் விட்டுவிடுவேன் அசூரா… இன்றைக்கு நான் அவர்களை விட்டு பிரித்தாலும் இன்னும் சில காலத்தில் அவர்களின் கோபம் மறைத்து உறவு மலர்ந்துவிடும். ஆனால் உன்னை நான் இந்த வயதில் விட்டுவிட்டுப் போனால் என்னை அல்லாஹுவும் மன்னிக்க மாட்டார்… என் நிம்மதியும் போய் விடும்… எல்லாம் செயல்… நீ அமைதியாய் இரு”

என்று ஆறுதல் சொன்னார், காலம் ஒடியது அவர்களின் அன்புக் கடலில் வினைந்த முத்தாக முஸ்தபா பிறந்தான். கோடி செல்வம் அந்தக் குடிலில் கொட்டியது போன்ற ஆனத்த வெள்ளத்தில் அவர்கள் மிதந்தார்கள். குழந்தையை அழைத்துக் கொண்டு ஊருக்குப் போய் உற்றார் உறவினர்களோடு சந்தோஷமாய் ஒரு மாதம் இருந்துவிட்டுத் திரும்பினார்கள். கரீமின் வாழ்க்கையில் ஆனத்தப் பூங்காற்று வீசிக் கொண்டிருந்த நேரம் அது…! முதலாளியின் மகளுக்குச் சீரும் சிறப்புமாய் நிக்காஹ் ஏற்பாடாகித் திருவிழா போல் மிகப் பெரிய மண்டபத்தில் வைபவம் நடைபெற்றது. கரீமும், அசூராவும் முக்கிக்யமானவர்களைக் கவனிப்பதிலும் உபசரிப்பதிலும் மூழ்கிக் மிடந்தார்கள். திருமண விருத்துக்குப் பின் எல்லோரும் ஓய்வாக இருந்த நேரத்தில் தன் தாயிடம் விட்டு வத்த பிள்னையைப் பார்க்கப் போன அசூராவுக்கு அம்மா சொன்ன வார்த்தை இடியாய் விழுந்தது.

“நீ மட்டும் தனியா வர்றீயே… எங்கேம்மா உன்னோட பிள்ளே…! எங்கிட்டே இருக்க மாட்டேன்னு அடம் பிடிச்சி அங்கே வந்தவன் அப்பா கூட ஒட்டிக்கிட்டானா…?”

“என்ன சொல்றே… முஸ்தபா எங்கிட்டே வந்தானா… இல்லியேம்மா… அவங்க அப்பாகிட்டேயும் இல்லியே… அய்யோ மவனே… எங்கேடா போனே…? ஓடினாள் அசூரா கணவனிடம்.

எல்லோரும் தேடினார்கள். மணவீட்டில் சோகம் சூழ்ந்து கொண்டது. செல்லப் பிள்ளை என்பதால் நன்றாய் உடுத்தி விட்டு நகைகளை மாட்டி விட்டு அழகுபார்த்தது எவ்வளவு தப்பாகிவிட்டது.

நகைக்காகத்தான் யாரோ பிள்ளையைத் தூக்கிப் போய் விட்டார்கள் என்ற குரலே எங்கும் ஒலித்தது அசூரா மயக்கம் போட்டு விழுந்தவள்தான். அவளின் துயரம் துன்பம் அவளை விட்டுப் போகவே இல்லை அழுது அழுது ஒய்ந்து கரீமுக்கு வேலையில் நாட்டம் குறைந்தது. அவரும் நோயாளியானார். அவர்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் கடையைக் கவனிக்க வைக்க முதலாளிக்கு மாதம் மூன்றாகிப் போனது. கரீம் அசூராவை ஆறுதல் சொல்லி அமைதிப் படுத்தினார்- நாட்கள் ஒடின, வயதும் ஓடியது காணாமல் போன பிள்ளையைப் பற்றிய தகவல் அவர்களுக்குத் தெரியவே இல்லை யாராவது அழைத்து வருவார்கள், அல்லது அங்கே இங்கே பார்த்தேன் என்று கூறுவார்கள் என்ற நப்பாசையும் நாளடைவில் மறைந்தது.

“நமக்குப் பொறந்தது தான் பிள்ளையா… பத்துமாதம் சொமந்தா தான் பிள்ளையா… எத்தனையோ பிள்ளைங்க ஆதரவு இல்லாம நிக்குதுங்களே… அதில ஒன்ன எடுத்து நாம வளர்த்தா என்ன மச்சான்… வெறுங்காடா கெடக்கிற இந்த வீடு பசுஞ்சோலையா மாறிப் போயிடுமே…”

கரீமின் மார்பில் சாய்ந்து கொண்டு அசூரா சொன்ன போது கரீமுக்குக் கண்களில் நீர் தேங்கி நின்றது. அவளின் தாய்மைத் தாகத்திற்கு அவரால் தீர்வு காண முடியாமல் போய்விட்ட தன் நிலையை எண்ணித் தனக்குள் உருகினார். அவள் ஆசையை நிறைவேற்ற இரண்டு வசதியற்ற பிள்ளைகளைக் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தார். அவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்துக் கல்வியும் கற்க வசதி செய்து கொடுத்தார்.

அசூராவுக்குப் பொழுதெல்லாம் பொன்னாய் மாறியது. இந்தக் குழந்தைகளோடு நாட்கள் கழிந்தன. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். பெண் பிள்ளைக்கு நல்ல இடமாய்ப் பார்த்து நிக்காஹ் முடித்து அனுப்பி வைத்துப் பூரித்துப் போனாள் அசூரா.

அன்பும் பாசமும் நல்ல பழக்க வழக்கமும் கொண்ட பையன் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டான். மறுபடியும் தம்பதியர் தனிமையில் வாழ வேண்டிய சூழ்நின்ல ஏற்பட்டது. அசூராவுக்குத் தீடீரென்று ஓர் ஆசை பிறந்தது_ வாழ்க்கைப்பட்ட நாளில் இருந்து அவள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் செய்து வந்த கணவரிடம் தயக்கமின்றிக் கேட்டாள்_

கரீமுக்கு ஒருபக்கம் சந்தோஷம் மறுபக்கம் கவலை. அந்தக் கவலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒரே வருடத்தில் மகளின் மணவிழா, பையனின் மேல்படிப்பு என்று சேர்த்து வைத்திருந்த பணமெல் லாம் கரைந்து அசூராவின் ஆசையை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போய் விட்டதே என்ற கவலைதான் அது.

இருந்தாலும் அன்பு மனைவியை ஆசையோடு அணைத்துக் கொண்டு சொன்னார்.

“நிச்சயமா அல்லாஹ் நமக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பார். நாம ரெண்டு பெரும் சேர்ந்தே அந்தக் ஹஜ் கடமையை நிறைவேற்ற நமக்கு அதிர்ஷ்டம் வரும்”

மனைவியிடம் அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லி வருடங்கள் மூன்று ஒடி விட்டன. அதன் பின் வந்து போன ஹஜ்ஜுப் பெருநாளின் போதெல்லாம் மௌனம் சாதித்தே ஒட்டிவிட்ட கரீம் வரும் ஆண்டாவது ஹஜ்ஜுப் பயணம் போகவேண்டும் என்று தயாரானாலும் அல்லாஹுவின் அருளும் கூடவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். இப்போதும் அதே கவலைதான் அவருக்கு…!

அந்தக் கவலை வந்து விட்டால் அவருக்குச் சோர்வு வந்து விடும். வேலை ஓடாது, அந்த அறுபது வயது வாட்டத்தைக் கண்ட முதலாளியின் மனம் அவரையே சுற்றி நின்றது. மதிய வேளையில் அவரோடு பேசியபின் அவரின் மனதில் படிந்து கிடந்த வாட்டம் வெளியே வந்தது.

“இதை எங்கிட்டே சொல்லியிருக்கக் கூடாதா… வாப்பா போனதுக்கப்ஹம் எனக்கு நீங்கதானே அந்த இடத்தில இருக்கிறதா நான் நினைச்சிருக்கேன். ஆனா நீங்க என்னை அன்னியனாத் தானே நெனைச்சிக்கேன்… நான் இல்லியா உங்களுக்கு? என்னை நீங்க உங்க பிள்ளையா நெனச்சிக்கக் கூடாதா?”

கரீம் அப்படியே உருகிப் போனார், கண்கள் பனித்தன. காசீமின் கைகளைப் பற்றிக் கொண்டார். காசீம் தொடர்ந்தார்.

“கவலையை விடுங்க, அல்லாஹ்வுடைய அனுக்கிரஹத்தால அடுத்து வரும் ஹஜ்ஜுடைய காலத்தில் நீங்க ஹஜ்ஜுப் பயணம் போக இப்பவே நான் எல்லா ஏற்பாட்டையும் செய்கிறேன். பயணத்துக்கு நீங்க ரெண்டுபேரும் தயாரானாப் போதும்…”

அன்று மாலை அளவு கடந்த உற்சாகத்துடன் வீட்டுக்குத் திரும்பினார் கரீம். சாலையோரத்தில் இருந்த கடையில் மனைவிக்காகப் பழங்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்தவரைக் காற்று வேகத்தில் வந்த டாக்சி ஒன்று வேகமாக மோதித் தள்ளி விட்டு மாயமாய் ஒடி மறைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரத்தில் போய் விழுந்தார் கரீம் அடுத்த வார்த்தை அவர் பேச வாய்ப்பில்லாமல் போனது. நினைவு தப்பியது. அப்படியே சுருண்டு போனார். யாரோ வந்து அவரைக் கைத்தாங்கலாய் வாகனத்துக்குள் கொண்டுபோய்க் கிடத்தியது மட்டும் அவருக்குக் கனவுபோல் தெரிந்தது. அப்புறம் எதுவுமே புரியவுமில்லை; தெரியவுமில்லை.

மறுநாள் கண்விழித்தபோது முதலாளியின் வீட்டுத் தொலைபேசி எண்களை மருத்துவரிடம் கொடுத்தபின் அசூராவும் காசீமும் பதறிக் கொண்டு வந்தார்கள். மாலை மாலையாய் அழும் அசூராவை அமைதிப் படுத்தினார் கரீம். அந்த நேரத்தில்தான் அந்த இளைஞர் வந்து மருத்துவரிடம் பேசினார். காமின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார். காமின் அருகில் வந்து அவரை நலம்விசாரித்தார் காம்நன்றியுடன் அவரின் பற்றிக் கொண்டு கண்ணீர் மல்கின்ர். அந்த வலிமை மிகுந்த கைகளைத்தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டார். “எல்லாம் அந்த அல்லாஹ்வின் கருணையாஞ்தான் இருக்கணும். எங்கே அசூராவோட ஆசையை நிறையை நிறைவேத்த போயிடுமோன்னு பயந்தே போயிட்டேன்”

பேசிக் கொண்டே அந்தக் கைகளைத் தடவியவர் திடுக்கிட்டுப் போய் இடது கையை சட்டென்று விரித்துப் பார்க்கிறார். கண்கள் பரபரக்க அந்தக்கையை மூடியிருந்த சட்டைத் துணியை சரேலென்று தள்ளிக் கொண்டு பார்க்கிறார்…, முழங்கையில் தெரிந்த அந்தக் கருமையான மச்சம் அவருக்கு ஒர் உண்மையை தெளிவுபடுத்துகின்றது.

“முஸ்தபா… மகனே… முஸ்தபா…” படுக்கையிலிருந்து எழுந்து அந்த இளைஞனை ஆரத் தழுவிக் கொள்கிறார். அந்த இளைஞனுக்கும் எதிர்பாராத அதிர்ச்சி…

“என் பேரு முஸ்தபா தான் அது எப்படி உங்களுக்குத் தெரியும்…” சொல்லுங்க பெரியவரே… சொல்லுங்க…?” படபடப்புடன் கேட்கிறான். அசூராவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிப் பார்வையை மறைக்கிறது காசீம் அந்த இளைஞனின் தோள்களைப் பற்றிக் கொள்கிறார்.

வழக்கம்போல் முஸ்தபாவை அழைத்துச் செல்ல அவன் தந்தை இமாம் அன்ஸாரி மருத்துவ மனைக்குள் நுழைகிறார்.

காசீம் டாக்டர் முஸ்தபாவிடம் உன்னை மூன்று வயதுலத் தொலைச்சுட்டு, நானும் உங்கம்மாவும் இதுவரைக்கும் தேடாத இடம் இல்லே, பட்ட கஸ்டத்துக்கு அளவே இல்லப்பா… ! என்று சொல்லி முடிப்பதற்குள் மருத்துவனைக்கு, வந்த அன்ஸாரி காசிம்தான் முஸ்தபாவின் தந்தை என்பதை உணர்கிறார்.

“முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் வழக்கம்போல் காலை (சுப்ஹு) தொழுகைந்குச் சென்றேன் பள்ளி வாசல் கதவு தாழிட்டிருந்தது. அக்ஞவைத் திறப்பதற்காக நான் சாவிக்கொத்தை எடுத்துக் கொண்டு திரும்பினேன். அங்கே ஒரு குழந்தை சுருண்டு கிடந்த நிலையில் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. தேம்பித் தேம்பி அழுத முகத்தோடு உறங்கிப்போன வடு முகத்தோற்றம் மகனே… !குழந்தாய்… !!! என்று அழைத்து உங்க தெளிவாகத் தெரிந்தது. பூவாய்த் தூங்கும் முகத்தைக் கண்கொட்டாமல் கணநேரம் பார்த்துவிட்டு. தட்டி எழுப்பினேன்.யாரு உன்பேரு என்னா? உன் வீடு எங்கப்பா இருக்கிறது என்று கேட்டேன். அவன் தூக்கக்கலக்கத்தில் என்னைப்பார்த்ததும் மிரண்டுபோய் அழத்தொடங்கினான். அவனை அன்போடு அணைத்து என்னுடைய அறையில் உறங்கச் சொல்லி… நான் காலைத் தொழுகையை நடத்தி முடித்ததும்… அவனைக் குளிக்க வைத்து, ஆடை அணிவித்து, உண்ண பிஸ்கட் போன்றவற்றையும் கொடுத்து_..;

தம்பி நீயாரு, உன்பேரு என்ன? என்று கேட்டேன். முஸ்தபா என்று மட்டும் சொன்னான். முஸ்தபா எங்க வீட்டுக்கு வருகிறாயார அங்கே அம்மா, அனை, தம்பி எல்லாரும் இருக்காங்க என்றேன். அதைக் கேட்டதும் பூவாய்ச் சிரித்துக் கொண்டு தலையை அசைத்தான்.

காவல் நிலையம் சென்று முஸ்தபா கிடைத்திருப்பதைப் பற்றிப் புகார்கொடுத்தேன். பத்திரிகைகளிலும் அவனைப் பற்றிய தகவல் ஏதாவது வருமா ன்ன்று காத்திருந்தேன். மாதங்கள் ஒடின. முஸ்தபாவை வீட்டோடு வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அவனை அனாதையாக்கி விடாமல், நான் என் பிள்ளைகளுள் ஒருவனாய் வளர்க்க எண்ணினேன் முஸ்தாபாவுக்கு அன்பும், பாசமுமும் ஊட்டி, எந்தக் குறையும் இன்றி மகிழ்ச்சியோடு வளர்க்க வேண்டி என்னால் முடிந்தவரை…” என்று கூறியதும்… கரீமின் கண்களில் நீர் திரையிட்டது.

“முஸ்தபாவுக்கு இவ்வளவு உயர்வான கல்வியைக் கொடுத்து அவனை ஒரு சிறந்த டாக்டராக ஆக்கி உங்களின் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறீர்கள். எனக்குப் பெருமையாக உள்ளது” என்றார் கரீம்… “முதலாளியின் மகள் திருமணத்தின் போது என்பிள்ளை முஸ்தபாவைப் பறி கொடுத்து விட்டுத் தவித்தோம். என் பிள்ளை எப்படியும் வீடு திரும்பிவிடுவான் கிடைத்து விடுவான் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதனால் காவல் நிலையத்திற்குச் செல்லவில்லை. நாங்கள் வணங்கி வந்த அல்வாஹ்வின் கருணையினால் முஸ்தபா பள்ளியில் அதுவும் உங்கள் கையில் கிடைத்திருக்கிறான்”.

“முஸ்தபா அறிவும், பண்பும், அடக்கமும், மிகுந்தவன். அவனுக்கிருந்த திறமையினால்தான் அவனை நல்ல டாக்டராக்க முடிந்தது. இவ்வளவு அறிவார்ந்த மகனை வளர்க்கவும், அவனை உயர்வாக்கவும் எனக்கு வாய்ப்பு தந்த அந்த இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக்கக்கடமைப்பட்டுள்ளேன்”, என்றார் அன்ஸாரி.

“இன்று முதல் முஸ்தபா உங்கள் பிள்ளை. நான் ஒரு வளர்ப்புத் தந்தையே…” என்றதும் முஸ்தபாவின் கண்களில் நீர் வழிகிறது. முஸ்தபாவைப் பார்த்ததும்… “மகனே” என்று அம்மா கண்கலங்கியபடி நிற்க காசீமும் அன்ஸாரியின் கைகனைப் பற்றிக் கண்ணீர் வெள்ளத்தில் பூரித்து நிற்கின்றார்.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *