அன்பும் அரையணாவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 10,915 
 

எனக்கு அப்போது பத்து அல்லது பதி-னொன்று வயது இருக்கும். கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறிது தூரத்திலிருந்த ஒரு தெருவில் குடியிருந்தோம். சைனா பஜாரி லிருந்த பச்சையப்பன் கல்லூரி ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். தினம் காலையில் ஸ்கூலுக்குப் போகும்போது என்கூட என் நண் பர்களான கோபுவும் பாலு-வும் வருவார்கள். அமிஞ்சிக்கரையிலிருந்து பாரீஸ் கார்னர் செல் லும் பஸ்ஸில்தான் தினம் காலை 9-15 மணிக் குப் போவோம்.

சில நாட்கள் நாங்கள் மூவரும் அவரவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பி ஒன்று சேர்ந்து புறப்-படும்போது நேரமாகிவிடும். எங்கள் தெரு-வில் ஆரம்பிக்கும் ஓட்டம், பூந்தமல்லி ரோடுடன் எங்கள் தெரு சேரும் முனைக்கு யார் முந்திப் போய்ச் சேருவதென்ற பந்தயத்தில் முடியும். வியர்க்க விறுவிறுக்க அந்த முனை சேர்ந்த-வுடன்தான் முதல் மூச்சு வாங்கு-வோம்.

இதுமாதிரிதான் ஒரு நாள் பஸ் வருவதைக் கண்டு மூவருமாக ஸ்டாண்டை நோக்கி ஓட ஆரம்பித்தோம். எப்போதும்போல் முன்னால் ஓடிக்கொண்டிருந்த என் கையிலிருந்த இன்ஸ்ட் ருமென்ட் பாக்ஸ் கீழே விழுந்ததில் ஸ்கேல், காம்பஸ், ப்ரொட்ராக்டர் எல்லாம் மூலைக் கொன்றாகச் சிதறின. அவற்றையெல்லாம் திரட்டி எடுத்துக்கொண்டு நான் கிளம்புவதற்குள் கோபுவும் பாலுவும் பஸ்ஸை எட்டிப் பிடித்து விட்டனர். கண்டக்டர் விஸில் அடிப்பது எனக்கு நன்றாக கேட்டது. அடுத்த பஸ் (அது எப்போது வருமோ?) பிடித்துப் போவதற்குள் பள்ளிக்கூடத்திற்கு நிச்சயமாக லேட்டாகத்தான் ஆகிவிடப்போகிறது என்று எனக்கு ஆத்திரமாக வந்தது. பாழாய்ப்போன பஸ் புகைப்படலத்-தைக் கக்கிக்கொண்டு நகர ஆரம்பித்துவிட் டது. ஆனால், ஏனோ உடனே நின்றுவிட்டது! தலையை வெளியே நீட்டிய கோபு, “வேகமா வாடா!” என்று கத்-தி-ய-வு-டன், பாய்ந்து வேக மாக ஓடிப்போய் பஸ்ஸின் உள்ளே விழாக் குறையாகத் தொற்றி ஏறிவிட்-டேன்.

டிரைவருக்குப் பின்புறம் இருந்த ஸீட்தான் எப்போதுமே எனக்கு ஆகி வந்த இடம். இன்-றும் அது காலியாக இருக்-கவே, அதில் சென்று உட்கார்ந்-தேன்.வண்டியைக் கிளப்பிய டிரை-வர் என் பக்கம் திரும்பி, “டேய், தம்பி! பார்த்து வரக் கூடாதா? அவசரப்பட்டா இப்-படித்தான். ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுக்க-றாங்க? ஹேஸ்ட் மேக்ஸ் வேஸ்ட்!” என்றார் சிரித்துக்கொண்டே.

அத்தனை நாள் அந்த ரூட்டில் வந்துகொண்டிருந்த டிரைவரல்ல அவர்; புதியவர். 30, 35 வயதிருக்கலாம். அப்போது ஃபாஷனாக இருந்த ஹிட்லர் மீசை வைத்திருந்தார். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து ஓரக் கண்ணால் பார்த்துப் பேசி-னார். புகையிலை போட்டுப் போட்டுக் கறுத்துச் சிவந்து விட்ட பற்களிலும் உதடுகளிலும் ஒரு குறும்புச் சிரிப்பு!

பஸ்ஸை நிறுத்தி எனக்கு அபயம் அளித்ததாலும், அவர் பார்வையிலுள்ள பரிவாலும் எனக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. அவர் ஆங்கி லம் கலந்து பேசி-யது வேறு எனக்கு அதிசய-மாகப் -பட்டது. நன்றியை முறையாகத் தெரிவிக் கத் தெரியாத பருவம்; பதிலுக்கு ஓர் அசட்டுச் சிரிப்புதான் சிரிக்க முடிந்தது என்னால்.

அவருக்குச் சில விதிகள் உண்டு. பஸ் ஸ்டாப்பைத் தவிர, வேறு எங்கும் நிறுத்த மாட்-டார். அவர் வண்டியை ஸ்டாப்பில் நிறுத்துவதே அழகாக இருக்கும். சாலையை ஒட்டினாற்போல் நடை-பாதைக்கு சம இணை கோடு போட்டது போல் வண்டியை நிறுத்துவார். வண்டியை நிறுத்த வேண்டிய சைன் போர்டுக்கு எதிரில் கணக்குப் போட்ட மாதிரி பஸ்ஸின் பின்புற வாயில் வந்து நிற்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பள்ளிக்கூடப் பையன்களுக் குப் பிடித்த விஷயமாக, ஜாலி யாகப் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவார். அவர் வாயிலிருந்து விகல்-பமான, ரசாபாசமான வார்த்தையை நான் ஒருபோதும் கேட்-டதில்லை.

அவர் நண்பர்களெல்லாம் அவரை ‘காக்கா’ என்று கூப்-பிடு-வார்கள். அவர் நிறத்தைக் கொண்டோ, அல்லது அவர் தலையைச் சாய்த்துப் பேசும் தோரணையைக் கொண்டோ அவருக்கு இடப்பட்ட காரணப் பெயர் அது என்று ஊகித்தேன்.. அவருடைய இயற்-பெயர் என்ன என்று எனக்குக் கடைசி வரை தெரியாது.

ஒரு நாள் நண்பர்களுடன் தெருப் புழுதியில் ‘கிளித் தட்டு’ விளையாடியதில் கால் முட்டி யில் அடிபட்டு, நடப்பதே சிரம- மாகிவிட்டது. மறுநாள் காலை என் தோழர்-கள் இருவரும் பூந்தமல்லி நெடுஞ்சாலை முனை சேரும்-போது நான் வெகுவாகப் பின்தங்கி விட் டேன். பஸ்ஸின் ‘பாம்… பாம்…’ சத்தம் நன்றாகக் கேட்டது. அதைப் பிடிக்கவேண்டுமென்று வேகமாக ஓடியதில், முட்டியில் எம வேதனை தோன்றியதே ஒழிய, பஸ் ஸ்டாப்புக்கு வண்டி வரும்போது நான் போய்ச் சேரவேண்டிய அரை பர்லாங் தூரம் இன்னும் பாக்கியிருந்தது. நொண்டியபடியே நான் நடந்து போய் அதைப் பிடிக்கும் வரை யில் பஸ் எனக்காகக் காத்துக் கொண்டி-ருந்தது.

நான் உள்ளே ஏறும்போது, வண்டி தாமதமடைந்ததைப் பற்றி கண்டக்டரிடம் இரைந்து கொண்டிருந்த ஒரு பிரயாணிக்கு டிரைவர்தான் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஐ ஆம் ஸாரி, சார்! அந்தப் பையன் தினம் இந்த வண்டியி-லேதான் வருவான். இல்லேன்னா பாவம், அவனுக்கு ஸ்கூலுக்கு லேட்டாயிடும். அதனால்தான் நிறுத்தி அவனை ஏற்றிக்கொள்ள வேண்டியதாப் போச்சு. மன்னிக்கணும்.”

என் மேல் அவருக்கு இருந்த பரிவை நினைத்தபோது, என் கண்களில் நீர் முட்டியது.

என் வழக்கமான இடம் காலி-யாக இருக்கவே, அதில் போய் உட்கார்ந்தேன். வண்டி-யைச் செலுத்தியவாறே, “என்ன தம்பி! காலை எப்படி முறிச்சுக் கிட்டே?” என்று கேட்-டார்.

எனக்கு அவரிடம் சுவாதீன-மாகப் பேச வேண்டுமென்று தோன்றியது. “ஒன்றுமில்லை, காக்கா…” என்று ஆரம்பித் தேன். “என்ன, ‘காக்கா’வா? எனக்கெப்படா பேர் வெச்சே? பெரிய ரௌடியா இருப்பே போலி-ருக்கே!” என்றாரே பார்க்கலாம்.

எனக்குப் பயமாகப் போய் விட்டது, அவர் கோபித்துக் கொண்டு விட்டாரோ என்று. ஆனால், அவர் முகத்தில் கோபம் துளிக்கூட இல்லை. புகையிலைச் சாறு தோய்ந்த உதடு-களில் எப்போதும் விளை-யாடும் குறும்புச் சிரிப்புதான் இருந்தது.

“இல்லீங்க! உங்க நண்பர்கள் உங்களை அப்படிக் கூப்பிட-றதைக் கேட்டு, அதான் உங்க பேருன்னு நினைச்சுட்டேன்.”

“பரவாயில்லை தம்பி… என் சொந்தப் பேரு எனக்கே மறந்து போச்சு. நீயும் அப்படியே கூப்பிடறதிலே என்ன தப்பு? ஆமாம், காலுக்கு என்ன?” என்றார். நடந்ததைச் சொன்-னேன். “டேய், நீ நெசமாவே பெரிய ரௌடிதாண்டா?” என்-றார், ‘கடகட’ வென்று சிரித்த-வாறே.

அன்று பள்ளியிலேயே எனக்கு சரியான ஜுரம் கண்டு விட்டது. மண்டையைப் பிளப் பது போல வலி. அடி வயிற்றை கலக்கிக் கலக்கி வாந்தி வேறு. மத்தியானமே ஒரு வண்டியில் வைத்து, துணை-யு-டன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

21 நாட்கள் கடுமையான டைபாயிட் ஜுரத்-தில் கிடந் தேன். ஸ்மரணையே இல்லா-மல் இருந்-தேன். பல நாட்கள் காக்கா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, “டேய் ரௌடி” என்று என்னைக் கூப் பிடுவதுபோல பிரமை. அது பிரமையல்ல, அவர் என்னை நிஜமாகவே அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டு இருந்தார் என்று பிற்பாடுதான் எனக்குத் தெரிந்தது.

மூன்று நாட்கள் தொடர்ந்து நான் வராது போகவே, விசா ரித்துக்கொண்டு என் வீடு தேடி வந்துவிட்டா-ராம். ஜுரம் முற்றி ஜன்னி கண்டு, என் வாழ்வே முடிந்துவிடும்போன்ற நிலை வந்தபோது, என் தாயா ருக்கு ஆறுதல் தந்தது முழுக்க முழுக்க காக்காதான் என்று நன்றிக் கண்ணீர் பெருக என் தாயார் சொல்வார்.

ஒருவழியாக நான் பிழைத்-தேன். ஆனால், உடல் ரொம்ப பலஹீனமாகப் போகவே, என்னை இடமாற்றத்திற்காக கோயமுத்தூர் அழைத்துப் போனார்-கள். அதன் பிறகு சீக்-கி-ரமே என் தந்தைக்கும் அங்கேயே மாற்றலாகிவிடவே, அதன்பின் காக்காவைப் பார்க்க முடியாமல் போயிற்று.

பல ஆண்டுகள் கழிந்தன. சமீபத்தில் மாணவர்களுக்கும் போக்கு-வரத்து ஊழியர்களுக்-கு-மிடையே ஏற்பட்ட தகராறில் சிக்கியவர்களில் பஸ் டிரைவ-ராக இருந்த என் மகனும் ஒரு வன். வீடு திரும்பிக்கொண்டு-இருந்தவனை மூன்று நான்கு பேர்களாகச் சேர்ந்து செம்மை யாக உதைத்துவிட்-டார்கள். தகவல் கிடைத்து நான் போய் அவனை வீட்டிற்கு அழைத்து வந்தேன். உடலெல்லாம் காயங் கள். ‘வலி… வலி’ என்று துடித் தான். எலும்புகள் ஏதா-வது முறிந்துவிட்டனவோ என்று கூடச் சந்தேகமாக இருந்-தது.

‘டாக்டர் கன்னையன் எம்.டி., எஃப்.ஆர்.சி.எஸ்.’ என்று பெயர் பொறிக்கப்பட்டி ருந்த பங்களா-விற்கு ஓடிச் சென்றேன். அவர் பெரிய ஸ்பெஷலிஸ்ட் என்று கேள்விப் பட்டிருக்-கிறேன். என்ன பீஸ் வாங்கு-வாரோ? ஆனால், அந்த நேரத்-தில் பணத்தைப் பற்றி கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கவா தோன்றும்?

டாக்டர் வீட்டில்தான் இருந்தார். என் மகனுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றிப் பொறு-மையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, மறு மொழி ஒன்றும் கூறாமல், சைகை காட்டி என்னைத் தன் பின்-னால் வரச் சொல்லி, மாடிக்குச் சென்றார். ஓர் அறைக் குச் சென்று கதவைத் திறந்தார். படுக்கையில் பலத்த காயங்-களுக்குப் போட்ட கட்டுக்களு-டன் ஒரு பையன் கிடந்தான். அவனுக்கு ஒரு நர்ஸ் ரத்தம் செலுத்திக்கொண்டு இருந்தாள். கட்டிலருகில் ஒரு பெண்மணி (டாக்டரின் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்) கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்-திருந்தாள்.

கதவை மீண்டும் மூடிவிட் டுக் கீழே இறங்கி வந்த டாக்ட ரின் பின்னால் நானும் வந் தேன்.

“பஸ் டிரைவராக இருக்கும் உங்கள் பையன் அடிபட்டுக் கிடக்-கிறான் என்கிறீர்கள். மேலே படுத்திருப்பது என் ஒரே மகன். இப்போதுதான் காலேஜில் அடி எடுத்து வைத்-திருக்கிறான். அவனு-டைய இப் போதைய நிலைக்கு யார் கார ணம் என்று நான் சொல்-லித்-தான் தெரியவேண்டிய-தில்லை” என்றார் டாக்டர்.

தந்தையாகிய என்னால் அதே ஸ்திதியில் இருக்கும் அவர் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. வாய் மூடி மௌனியாக தள்-ளாடிய நடை யுடன் வெளியே வந்தேன்.

வராண்டா கோடியில் சாய்வுநாற்காலியில் ஒரு கிழவர் படுத்திருந்தார். நான் வெளியே செல்வதை தலையை ஒருபுற மாக ஒருக்களித்து அவர் என் னைப் பார்த்த விதம், முப்பது வருடங்களுக்கு முன் தெரிந்த காக்காவை எனக்கு ஞாபக மூட்டியது.

அருகில் சென்றேன். ஆம்; சந்தேகமில்லை! காக்காவே தான்! வயதால் கண் பார்வை கொஞ்சம் குறைந்து-விட்டதே தவிர, வாயில் புகையிலையைக் குதப்பிக்கொண்டு, அன்று கண்ட மாதிரிதான் இருந்தார். அவருடைய ‘டிரேட் மார்க்’- மீசை மட்டும் கால வெள்-ளத்-தில் கரைந்து போயி-ருந்தது.

மறுபடியும் பத்து வயது சிறு-வனா-னேன் நான். ஆச்சரிய மிகுதியால் உணர்ச்சி பொங்க, “காக்கா!” என்று கூவிவிட் டேன்.

தலையை ஒருபுறம் சாய்த்து, என்னை நோக்கினார். ஒரு விநாடி தயங்கிவிட்டு “டேய், ரௌடி! நீயாடா? நல்லா இருக் கியா தம்பி?” என்று கேட்டார். அன்று கண்ட பரிவு அந்தக் குர-லில் இம்மியும் குறைய-வில்லை.

நெஞ்சைத் துக்கம் அடைக்க நான் வந்த விஷயத்தைச் சொன்-னேன்.

“இரு, என் மகனைக் கூப்பி-டறேன்” என்று சொல்லி, “கன்னையா!” என்று குரல் கொடுத்-தார். டாக்டர் அவர் மகன்-தானா?!

“என்னப்பா?” என்று அன்-பொழுகக் கேட்டுக்கொண்டே வந்த டாக்டர், நான் அங்கு இன்னும் நிற்பதைப் பார்த்து, “அதான் நான் வர முடியாத தர்ம சங்கட நிலை-யிலே இருக் கேன்னு உங்-களுக்குத் தெரியு மில்லே?” என்-றார்.

“டே, கன்னையா! என்னடா சொல்றே? யாரோ உன் புள் ளைக்கு பண்ணினதுக்கு இவன் புள்ளை என்னடா பொறுப்பு? இது யார் தெரியு-மில்லே..? உன்-னைப் படிக்க வைச்சு ஆளாக்க நான் பஸ் ஓட்டிக்கிட்டிருந்-தப்போ என் ‘ரெகுலர் கஸ்ட-மர்’!

இவன் ஸ்டூடன்ட்டா இருக் கி-றப்போ எனக்கு இவன் பேரிலே ஒரு தனி அன்பு! அதே மாதிரிதான் அவனுக்கும். மனிதனுக்கு மனிதன் என்ற எண்ணம் போய், மனிதனை ஒரு குரூப்பிலே ஒரு அங்கம்னு நினைக்கிறதனாலேதான் இந்த மாதிரி தப்பெண்ணமும், தகரா-றும் ஏற்படுது. யாரோ கொஞ்சம் பேரு தவறு பண்ணி-னாங்-கன்னே வச்சுக்கோ, அதுக்காக அந்த வகுப்பைச் சேர்ந்த எல்-லாரை-யுமே ஒரே மாதிரி முத்திரை குத்திட முடியுமா? போடா..! போய் அவன் புள்-ளையை முதல்லே கவனிச்-சுட்டு வா!”

அவர் குரலில்தான் என்ன கம்பீரம்.! என்ன பார-பட்ச-மின்மை!

தொடர்ந்து, “கன்னையா! உன்னுடைய யூஷூவல் பீஸை தம்பிகிட்டே கேட்காதே! அவன் என்னுடைய ஓல்ட் ஃப்ரெண்ட்.!” என்று என்னைப் பார்த்துப் பழைய குறும்புப் பார்வை மிளிரக் கண்ணைச் சிமிட்டி-னார்.

“காக்கா…” என்று மேலே பேச நா எழாமல் அவர் கரங் களைப் பற்றிக் கொண்டேன்.

– செப்டம்பர், 1969

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *