கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 16,490 
 
 

நள்ளிரவு.  மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார்.

சுதாரித்துக் கொண்டவள்,  தைரியத்தை வர வழைத்துக் கொண்டு ஒரு கணம் யோசித்துவிட்டு,

‘நில்..! நெருங்காதே, என்னைக் கொல்லப் போகிறாயா?’  என்றாள்.

‘ஆமாம்! எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாத்!  நீ உயிரோடு இருக்கக் கூடாது!’ நெருங்கினான்.

‘இதோ பார், நான் கொரானாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப் பட்டிருக்கேன்…! உனக்கும் தொற்று பரவிவிடப்  போகிறது…!  உன் கையால் சாவது எனக்கு சந்தோஷம்தான்.  நான் சாகலாம்..! ஆனால், நீ சாகக்கூடாது.  உன்னை எந்த அளவு காதலித்திருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.!’

அவள் பேசப் பேச, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது,

‘மாஸ்க் இல்லாமல் வெளியே வரக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? இந்தா.. இதை அணிந்து கொள்… உட்கார்.  பேசி முடிவுக்கு வருவோம்! பிறகு என்னைக் கொல்!’ கைப் பையிலிருந்து ஒரு மாஸ்க்கை அவன் பக்கம் வீசினாள்.

எடுத்து அணிந்தவன் பத்து செகண்டிற்குள் மயங்கி விழுந்தான்.

‘துரோகி, எத்தனை பெண்களைக் காதலிப்பதாய்ச் சொல்லி ஏமாற்றி சீரழித்துக் கொன்றிருக்கிறாய்..??!! உனக்காகவே வைத்திருந்தேன் மயக்க மருந்து தடவிய மாஸ்க்!’ களிப்போடு போலீஸிற்குப்  போன் செய்தாள் மாலினி.

– 28.04.2021

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *