அச்சம் தவிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 20,853 
 
 

திருவாரூர் மாவட்டம், வேதபுரி கிராமம்…..

மொத்த மாவட்ட காவல் துறையும் அமைச்சர் பாண்டியன் வீட்டில்….

அமைச்சர் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்க, மோப்ப நாய் சகிதம் காவலர்கள், கட்சித் தொண்டர்கள் ,பொது மக்கள் சைரன் ஒலிக்க வாகனங்கள் என ஏகக் கூட்டம்.
காவல்துறை மேலதிகாரி வருகை, விசாரணைகள்,அதிகாரம் என அல்லோகோலப்பட்டது. எப்படி நடந்திச்சு, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? பாதுகாப்பு காவலர்கள் யார், யார்?
அவங்க எங்கே போனாங்க? கூட இருந்த தொண்டர்கள் எங்கே?

என கேள்வியால் வருத்தெடுத்தபடி காவல் அதிகாரிகள்…

ஒரு உயர் காவல் அதிகாரி முன் வந்து நடந்ததை விவரித்தார்.

சார், சம்பவம் காலையிலே 8.20 மணிக்கு நடந்து இருக்கு.

அமைச்சர் வீட்டிலே யாரும் இல்லை.

உதவியாளர்கள் எல்லாம் சம்பவ இடத்திலே இல்ல, விசாரிக்கனும்.

முதல் கட்ட விசாரனையிலே அதிர்ச்சியான தகவல் கிடைச்சு இருக்கு. இங்கே உள்ள CCTV புட்டேஜ் பார்த்ததிலே அதை உறுதி செய்ய முடியுது. இதை செஞ்சது ஒரு ஐயர் னு மட்டும் இப்போதைக்கு உறுதியா தெரியுது.

என்னது ? எப்படி ? என ஆச்சரியமடைந்தார்.

கொலைக்கான ஆயுதம் ஏதுமில்லை, ஆனால், கழுத்து அறுப்பட்டதைப் பார்த்தால் தர்பை எனும் புல் வகையைக் கொண்டு அறுத்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

புட்டேஜ்ல ஐயர் வந்தது தெளிவா இருக்கு. என தெரிந்தவற்றைக் கூறினார்.

உடனடியா ஆக்‌ஷன் எடுங்க! மீடியா தொல்லை பண்ணுவாங்க!

பாடியை ஆஸ்ப்பிட்டால் அனுப்பிடுங்க! என உத்தரவுகள் பறந்தன.

அந்த இடமே கொதி நிலையின் உச்சத்தில் இருந்தது.

ஐயர் வீடும் பூட்டிக் கிடக்கு. அக்கம் பக்கம் விசாரித்ததில், ஐயரோட மனைவி் போன மாசம் மூளைக் காய்ச்சல் வந்து கவனிக்க வசதியில்லாம இறந்து போயிட்டதாகவும், வேற எதுவும் அவரைப் பற்றித் தெரியாது. என்றும் சொன்னார்கள்.

அக்ரஹாரத்தில் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, மேலத் தெருவில் இரண்டு மாதம் முன்புதான் குடியேறியுள்ளார் எனத் தெரியவந்தது.

சரிவர தகவல் கிடைக்காமல் கழிந்தது அன்றைய பொழுது

மறுநாள் காலை.. இராமேஸ்வரம்..கடற் கரையில் ..

திதி கொடுத்து முடித்து எழுந்துச் கோவிலுக்குச் செல்கிறார். ஒரு பெரியவர் சுமார் 65 வயதிருக்கும், மனம் மலர தரிசனம் செய்து விட்டு மாவட்ட நீதிபதி அலுவலகம் சென்றார், திருவாரூர் மாவட்டம் வேதபுரி கிராமத்தைச் சேர்ந்த புரோகிதம் பண்ணுகிற குப்புசாமி ஐயர்.

அய்யாவைப் பார்க்கனும்,

நீங்க? என்றார் கோர்ட் கண்கானிப்பாளர். சொன்னார்.
அதிர்ந்து போய் உள்ளே தகவல் சொல்ல, உடன் அனுமதிக் கிடைத்தது.
என்ன சொல்லுங்க!

ஏன்? எதுக்காக, எப்படி, எல்லாம் விவரமாச் சொல்லுங்கள். என்றார் நீதிபதி.

என் பேர் குப்புசாமி. வேதபுரிதான் எனது சொந்த ஊர்.

நானும்,என் ஆம்படையாளும்தான்.ஆத்திலே, நேக்குன்னு யாரும் இல்ல.

இரண்டு மாசம் முன்னாலே ,நோய் வந்து அவளும் என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டா! தனி மரமாயிட்ட நான் வேதனையிலே துடிச்சேன்.அதற்கு காரணமாயிருந்த அந்த அமைச்சர் மேலேதான் என் கோபம் அதிகமாயிடுச்சு.

அமைச்சர் எங்கே இதிலே வந்தார்?

இவர் இப்பத்தான் அமைச்சர்.
இருபது வருடம் முன்னாலே அவன் ஒரு காலி பய !

அந்த நாகராஜன் அமைச்சரானுடன் சேர்ந்து இவனும் பெரிய ஆளாயிட்டான். முன்னாள் அமைச்சர் நாகராஜன் கூடவே இருந்து அவரை கவிழ்த்து சட்டமன்ற உறுப்பினராகி, இப்போ அமைச்சரும் ஆயிட்டார்.

சரி, சாப்பிட்டிங்களா?
இல்லை.
ஏதாவது சாப்பிடறிங்களா!
வேனாம்ங்க!

என் பொண்னு நல்லா படிப்பா, பன்னிரெண்டாம் வகுப்பிலே நல்ல மார்க் எடுத்து இருந்தா, ஒரே பெண்னுங்கிறதாலே செல்லமா வளர்த்தோம், பொறியியல் கல்லூரியிலே இலவசமா ஒரு இடம் வாங்கித் தருகிறேன்னு சொல்லி அமைச்சர்கிட்டே அழைச்சுகிட்டுப் போயி சின்னா பின்னமா ஆக்கிட்டான் , அந்த கம்மநாட்டி.. படுவா.. எனச் சொல்லி ஓலமிட்டுத் அழத்தொடங்கினார்.

நீங்க உட்காருங்க! எனக் கூறிவிட்டு, கண்கானிப்பாளரைக் கூப்பிட்டு கோர்ட் வேலைகளை நாளைக்கு ஒத்திவைக்கும் படி கூறினார்.

ஐயா,உட்காருங்க, பராவாயில்லை.

கீழே தரையில் அமர்ந்தார்.

ம் ..சொல்லுங்கள்.

வீட்டுக்கு வந்தவ, நடந்த எல்லா விஷயமும் சொன்னாள்.

எல்லாத்துக்கும், இவனும் , இன்னொரு அமைச்சரும் தான் காரணம். அதன் பிறகு அவன் வளர்ச்சி அடைந்து பல பதவிகள் பெற்று உயர்ந்துட்டான். நாங்கள் அவனை நெருங்கக் கூட முடியாது.

எங்க கையாலாகாதனத்தால, நொந்து போயி அவ அடுத்த மாதமே தூக்கில தொங்கிட்டா! நானும்,என் மனைவியும் நடைப் பிணங்களானோம்.

ரொம்ப நாளைக்கப்புறம் தான் இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தது.

அவரே என்னைக் கூப்பிட்டு அனுப்பினார், அவங்க அப்பாவிற்கு திதி கொடுக்கனும்,அவசியம் நான்தான் வரனும்னு ஆளை அனுப்பி இருந்தார்.

அப்பக்கூட எனக்கு அந்த மாதிரி யோசனையே இல்லைங்க!

பாதுகாப்பு சோதனை போடும்போது ஒருத்தன் ஆயுதம் ஏதாவது வச்சு இருக்கியான்னு கேட்டான், இல்லைங்க, என்றேன்.

ஏன் வச்சு இருந்தா மட்டும் என்ன செய்திடுவேனு? கேலியா பேசினான்.

தன் பெண்ணை இழந்ததுக்கே ஒன்றும் செய்யலை, இப்ப என்னப் பண்ணப்போறான், இந்த கிழவன். போய் மணியாட்டத்தான் முடியும் னு கேவலமா பேசினான்.
அது என்னை உசுப்பேத்தி விட்ட மாதிரி இருந்திச்சு, பழசு எல்லாம் ஞாபகம் வர அப்ப முடிவு பண்ணினேன். ஏதாவது செய்யனும், இவனை ஏதாவது செய்யனும்,
திவசம் பண்ணும் போது யாரும் இருக்க வேண்டாம் எனச் சொன்னேன், எல்லேரும் வெளியே போய்விட்டனர்.

முடிந்து நமஸ்காரம் பண்றதுக்கு குனிந்தபோது பாய்ந்து அவன் முதுகில் ஏறி அமர்ந்து கழுத்தில் தர்பை புல்லை கொத்தாக வைத்து அழுத்தி இழுத்தேன், அவன் ரத்தத்தில் கிடந்தான். பின் பக்க வாசல் வழியாக நான் தப்பித்து வெளியேறினேன். எனக்கூறி முடித்தார்.

நீங்க இப்ப எப்படி பீல் பண்றீங்க! அவசரப்பட்டு கோப பட்டுட்டமோ?
அப்படின்னு நினைக்கிறீங்களா?
கண்டிப்பா!
இவனைக் கொன்றதால என் மகள் மீண்டு வந்துவிடவாப் போறா! தப்பு பண்ணிட்டேன். என வருந்தினார்.

பிராமணனா பிறந்தவன் அடுத்தவன் யாரையும் இம்சிக்கக்கூடாது.

நான் கொலையே பண்ணிட்டேன். இந்தப் பிறப்பில் எனக்கு பிரம்மஹத்தி தோஷம் வந்துடுத்து, அதை போக்கிக்க அக்னி தீர்த்த ஸ்நானம் பண்ணிவிட்டு சரண்டர் ஆகனும்னுதான் நினைச்சு இங்கே வந்து உள்ளதாகக் கூறினார்.

நெஞ்சில உறுத்திக்கிட்டே இருந்தது. இப்ப நெஞ்சுக்குழி காலியா இருக்கிற மாதிரி இருக்கு. அந்த நிம்மதியே போதும் எனக்கு.

மதுரை சிறைச் சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போகும் வழி கடைகளெல்லாம், “அமைச்சர் கொலை” “கொலைக் கார ஐயர்” கைது என பேப்பர் வியாபாரம் களைக் கட்டி இருந்தது.

ஏதோ ஒரு பேப்பர் விளம்பரம் மட்டுமே மிகச் சரியாக

காமூக அமைச்சர் கொலையில் பெண்ணின் தந்தை கைது என போட்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *