வாசகன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 19,407 
 

சமீப காலத்தில் பூரணி என்ற எழுத்தாளருடைய சிறுகதைகள் , கவிதைகள் கண்ணியமிக்க வார ,மாத இதழ்களில் பிரசுரமாயின. அந்த பெண் எழுத்தாளர் பூரணி விளம்பரத்தையெல்லாம் விரும்புவதில்லை. அவர் தன்னுடைய ஆத்ம திருப்திக்ககதான் எழுதுவதாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடமெல்லாம் கூறுவார். அவருடைய படைப்புகளில் எல்லாம் சமூத்திற்கான உபயோகமுள்ள கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும். எனவே ரமணிக்கு பூரணியின் படைப்புகளை ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான் என்பதைவிட, அந்த பெண் எழுத்தாளர் பூரணியின் எழுத்துக்களை காதலித்தான் என்றுதான் கூறவேண்டும். .

பூரணியின் புதுக்கவிதைகள், புரட்சிக் கவிதைகள் வித்தியாசமான உணர்ச்சி பூர்வமான சிறுகதைகள்’ எல்லாம் அந்த வாசகரை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே பூரணி எழுத்தாளரை தனக்கு மிகவும் பிடித்து விட்டாதாகவும் அவருடைய கவிதைகள் மற்றும் சிறுகதைகளை படித்து விட்டு, தன்னை மறந்து விட்டதாகவும் பூரணிக்கு வாரம் தவறாமல் பாராட்டுக் கடிதம் உணர்ச்சியுடன் எழுதி வந்தான்.

ஆனால் அவன் இதுவரை பூரணி என்ற எழுத்தாளருடைய புகைப்படத்தினை பத்திரிகையில் கூட பார்க்கவில்லை. அவன் பார்க்கவில்லையா அல்லது பார்க்கத் தவறி விட்டானா ? என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால் பூரணி எழுதிய புத்தங்களைத் தேடி தேடி வாங்கி படித்து வந்தான்.

ரமணி நாளடைவில் பூரணி எழுத்துக்களை மட்டுமல்லாமல் பூரணியையே மானசீகமாக காதலிக்கவும் ஆரம்பித்துவிட்டான். எனவேதான் பூரணியை, இன்று தான் சந்திக்க வருவதாக மட்டும் பூரணிக்கு சுருக்கமாக கடிதம் எழுதியிருந்தான்

ரமணி அழைப்புமணியை அழுத்தினான். பூரணி கதவைத் திறந்தாள். கதவை திறந்தவள் புன்னகையுடன் ரமணியை அவள் ஏறிட்டு பார்த்தாள். அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். அழகான முகம் அன்பான பார்வை. அவனை புன்னகையுடன் வரவேற்று உள்ளே வந்து அமரச் சொன்னாள் பூரணி.

பூரணியைப் பார்த்தவுடன், ரமணிக்கு பூரணியின் கவிதைகளைப் போலவே அவளும் அழகாக இருக்கிறாளே ! . இந்த அழகு தேவதையை இதுநாள்வரை தான் பார்க்க தவறி விட்டேனே என தன் மனதிற்குள்ளேயே சொல்லிகொண்டான்.

ரமணி தன்னை மட்டும் பூரணிக்கு அறிமுகபடுத்தி விட்டு , தான் கொண்டு வந்த ப்ரிப் கேஸிலிருந்து ஒரு கத்தைப் பேப்பர்களை, வெளியே எடுத்து பூரணியிடம் பெருமை பொங்கக் காட்டினான். அத்தனையும் பிரபலமான தமிழ் வார, மாத இதழ்களில் வெளிவந்த பூரணியின் புதுக்கவிதைகள்.. பெரும்பாலானவைகள் காதல் கவிதைகலாகவேதான் இருந்தன. ரமணி. தன காதலை பூரணியிடம் வெளிபபடுத்தவே இன்று வந்திருந்தான்.

ரமணி, பூரணியின் புதுக்கவிதை ஒன்றை எடுத்து அவளிடம் படித்துக் காட்டினான். அதில் ‘
அமாவாசை இரவில்,
அழகான முழுநிலவு
எதிரே எழிலாகத் தெரிகிறது !
என்ன அப்படி பார்க்கிறாய்
உன் முகமே முழுநிலவு. ! ‘

“ உங்களுடைய இந்தக் கவிதைதான் எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகும். . உங்க கவிதைகளை எல்லாம் எப்படி நான் பாதுகாத்தும், சேர்த்தும் வைத்திருக்கேன் பார்த்தீங்களா ! அது மாதிரியாகத்தான் உங்களையும் என்னோட இதயத்தில் வைத்திருக்கேன்…. யாருக்கும் தெரியாமல் ..” என்று உணர்ச்சி மிகுதியில் பூரணியிடம் உளறிக் கொட்டினான். அவன் மேலும் உளற ஆரம்பித்தான்.

“ நீங்க எழுதிய இவ்வளவு உணர்ச்சிபூர்வமான காதல் கவிதைகள்தான் என்னை உங்களையே காதலிக்கும்படி செய்தது….உங்கள் கவிதைகள் போன்றே நீங்களும் மிகவும் அழகாக இருக்கிகீங்க பூரணி ” என்றன் ரமணி

“ ரமணி …..! நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க…” என்றாள் பூரணி.

பூரணி கூறியதை காது கொடுத்துக் கேட்காமலே ‘தான் காதலித்த பூரணி, இவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருப்பாள் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்று தனக்குள்ளேயே ரமணி எண்ணிக் கொண்டான்.

பூரணியை மேலும் பேசவிடாமல் ரமணி என்ற அந்த வாசகன் தொடர்ந்து “ உங்களுடைய கதைகள் எல்லாம் என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இருந்ததால் அதில் நான் என்னை அறியாமல் அதிலேயே மூழ்கி விட்டேன்..என்றுதான் சொல்லவேண்டும் பூரணி !.” என்றான்.

“ அப்படியா.. நான் என்ன கூற வர்றேன்னா .. “ பூரணி

“ நீங்க ஒண்ணும் கூறவேண்டாம். உங்க கவிதைகள், கதைகள் எல்லாம் என்னை மிகவும் பாதிச்சிருக்குன்னுதான் சொல்லணும். எனக்கு உங்க கவிதைகள் எல்லாம் எனக்கு ஒரு மன ஆறுதலாகயிருந்தது பூரணி .. உங்களுடைய அன்பு உங்களுடைய துணை எனக்கு நிரந்தரமாக இருந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன். நான் நேனைச்சதிலே ஒன்னும் தப்பு இல்லேன்னு சொல்றேன். நீங்க என்ன நெனைக்கிறீங்க பூரணி ? “ என ரமணி உளறிக் கொண்டேயிருந்தான்.

“சேசே நீங்க .. நெனைக்கிறது எல்லாம் தப்புன்னு நான் சொல்ல வரலே. ஆனால் இதையெல்லாம் ஏத்துக்கரே நீங்க நெனக்கிற பூரணி எழுத்தாளர் நானில்லை ரமணி . அதை முதலே நீங்க தெரிஞ்சுக்கங்க ! “ என்றாள்.

“ என்ன ! அப்படியெல்லாம் சாதாரணமாக என்னிடம் சொல்லி, என்னிடமிருந்து நீங்க தப்பிக்க பார்க்கிறீங்க.. பூரணி அப்படித்தானே ?” என்றான்.

“ ரமணி என்னை இதுவரை நீங்க நேரில் பார்த்ததே இல்லை .. அப்படி என்னைப் பார்க்காமல் பழகாமல் பேசாமல் என்னை எப்படி காதலிச்சீங்கன்னுதான் எனக்கு புரியவில்லை ..? அதை முதலே சொல்லுங்க ரமணி“ அவனுடைய அவசரப்புத்தியை நினைத்தும் வருத்தப்பட்டும் அவனிடம் கேட்டாள்..

“ அதான் சொன்னனே உங்க உணர்ச்சிபூர்வமான காதல் கவிதைகளை படித்ததினால்தான் “ என ஒரே வரியில் ரமணி பதில் அளித்தான்.

“ அதாவது உணர்ச்சிப்பூர்வமான, அதாவது உங்களை காதலிக்க வைத்தது பூரணி என்ற பெயரில் எழுதிய கவிதைகள் மற்றும் கதைகளை எழுதின்வங்களைத்தானே ரமணி ? .”

“ ஆமா , அந்தக் கவிதைகளை எழுதிய பூரணி ஆகிய உங்களைத்தான் காதலித்தேன். “ என்று காரணத்தைக் கூறினான் ரமணி .

“ இந்த கவிதைகள் கதைகள் எல்லாம் நான் எழுதவே இல்லன்னு சொன்னா நான் சொன்னா நீங்க நம்புவீங்களா ரமணி ? “

“ உங்க பேருதானே பூரணி ‘

“ ஆமாம் என் பெயர்தான் பூரணி சந்தேகமே வேண்டாம் ரமணி ! “

‘ பிறகு எதற்கு நான் எதுவுமே எழுதவே இல்லைன்னு கூறிறீங்க “

“ ஆமாம் , நான் நீங்க நேனைக்கிறபடி கவிதை, கதைகள் எல்லாம் எழுதற பழக்கமெல்லாம் எனக்கு இல்லை இல்லைன்னு எத்தனை தடவையானாலும் கூறுவேன் “ மேலும் தொடர்ந்தாள்.

“ எனக்குச் சுட்டுப் போட்டாலும் இந்தக் கவிதை கதைகள் எழுதறதெல்லாம் எனக்கு வராது போதுமா ரமணி ! அதிலெல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட்டும் இல்ல . நீங்க வீணா கற்பனையை வளர்க்காதீங்க ரமணி ! நீங்க கொண்டுவந்த படைப்புகள் எல்லாம் என்னோட அம்மா சத்தியபாமா எழுதியவைகள்தான், நான் எழுதியது இல்லே . என் மீது உள்ள பிரியத்தினால் என்னோட அம்மா, எனது பெயரில் அதாவது பூர்ணிங்கிற என்பெயரில் கதைகள் கவிதைகள் எல்லாம் எழுதி வர்றாங்க போதுமா ? ரமணி இன்னும் உங்களுக்கு விளக்கம் வேண்டுமா? நான் இந்த உண்மையைக் கூற வந்தபோதெல்லாம், என்னை பேசவிடாமல் தடுத்தது நீங்கதான்.. “ என்பதை பூரணி தான் கதைகள், கவிதைகள் எழுதவில்லை என்பதை அவனுக்கு எடுத்துக் கூறினாள்.

“ முட்டாள்தனமாக காதலிக்கிறேன்னு எல்லாம் நீங்க உளறாதீங்க.! உங்க பேச்சிலிருந்து நீங்க பூரணியைக் காதலிக்கல, பூரணி எழுதிய அதாவது எங்க அம்மா எழுதிய எழுத்துக்களைத்தான் காதலிச்சிருக்கீங்க என்னோட அம்மாவின் கவிதை கதைகள் போன்ற படைப்புக்களுக்கெல்லாம் நீங்க நல்ல வாசகனாக இருந்தால் மட்டும் போதும். அதைதான் நானும் விரும்புறேன் . எங்க அம்மாவும் விரும்புவாங்க ! “ .

பூரணி பேசி முடிக்கும் முன்பே ரமணி எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு எழுந்து விட்டான்.

“பூரணி ! நான்தான் தப்பா எண்ணிட்டேன். பூரணின்னு உங்க பெயரைக் கேட்டவுடன், நீங்கதான் இந்தக் கவிதைகள், கதைகள் எல்லாம் எழுதியிருப்பீங்கன்னு தவறா புரிஞ்சுகிட்டேன். அது என் தவறுதான். உங்க பெயரில் உங்க அம்மா எழுதுறாங்கன்னு இப்ப நான் நல்ல புரிஞ்சுகிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க. சரிங்க….. நீங்க சொல்றபடியே இனிமேல் உங்க அம்மாவின் எழுத்துக்கு மட்டும் நல்ல வாசகனாகவே இருக்கறேன். நான் உணர்ச்சி மிகுதியில் ஏதேதோ உங்களிடம் உளறிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்க பூரணி ! நான் வரேன் “ என்று விடை பெற்றான் அசடு வழிந்த முகத்துடன் ரமணி என்ற அந்த வாசகன்

Print Friendly, PDF & Email

கத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023

மாலினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023

அன்பின் அடையாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)