பேருந்து காதல்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 22,805 
 

அந்த பேருந்து வந்ததும் முதல் ஆளாக முன்டியடித்துக் கொண்டு ஏறினேன். கூட்டம் பேருந்திலிருந்து பிதுங்கி வழிந்தது.

கூட்டத்தில் அகப்பட்டு அல்லோலப்பட்டு நிற்கும் போதுதான் கவனித்தேன்.

அவள் பேருந்துக்குள் ஏறவில்லை.

பேருந்து கிளம்ப தயாரனது.

உடனே சுதாரித்துக் கொண்டு மறுபடியும் கூட்டத்தில் நீச்சலடித்து கீழிறங்கினேன்.

அவளருகிலும் அருகிலில்லாமலும் நின்றேன். நான் ஏறும் போதும் கவனித்தாள். இறங்கும்போதும் கவனித்தாள். அவள் என்னை கவனித்ததை நானும்தான் கவனித்தேன். என்ன செய்ய இப்போது மட்டுமா கவனிக்கிறேன் ? கடந்த ஆறு மாதங்களாக கவனிக்கிறேன். ஒரு முன்னேற்றமுமே இல்லையே…

இன்றாவது என் காதலை சொல்லிவிடலாமென நினைத்தால் நான் பேருந்துக்குள் ஏறி..

அவள் கீழே நின்றிருந்தாள்.

இதில் எங்கே போய் என் காதலை தெரியப்படுத்துவது

வேறு வழியே இல்லை கடிதம் மட்டும் தான் ஒரே வழி…

என்று எனக்குள்ளாகவே யோசித்து கடைசியில் எப்படி செயல்படுத்துவது என்றும் யோசிக்கலானேன்..

என் சிந்தனையை குலைப்பதற்காக அடுத்த பேருந்து சுமாரான கூட்டத்தோடு வந்தது..

அவள் பேருந்துக்குள் முன் வாசல் வழியாய் ஏறினாள். நான் பின் வாசல் வழியாய் ஏறினேன். நடத்துனர் வழக்கம்
போல பின் வாசலில் நின்று பயணச் சீட்டை வினியோகித்துக் கொண்டிருந்தார். கூட்டம் சுமாராக இருப்பினும் அவளாள் நடத்தினரை நெருங்கி பயணச் சீட்டை பெற முடியாமல் போகவே பயணச்சீட்டை பெறுவதற்கு அருகில்
இருந்தவர்களிம் சில்லரையைக் கொடுத்தாள். அந்த சில்லரை ஒவ்வொருவராக மாறி மாறி பயணித்து என்னிடம் வந்து சேர்ந்தது. என்னுடைய ஏழாவது அறிவு அதற்குள் யோசனையை முடித்து அந்த பயணச் சீட்டில் ஐ லவ் யூ என எழுதி கொடுக்க உத்தரவிட்டது. என் மூளை கட்டளையிட்டதை கைகள் கட கட என்று விரைந்து முடித்தது. மறுபடியும் அவளுடைய பயணச்சீட்டு ஐ லவ் யூ என்ற வாசகத்தை தாங்கி அவளிடமே பயணம் செய்து போய்ச் சேர்ந்தது..

அவள் முகத்தைப் பார்த்தேன்.

மாறுதலோடு காட்சியளித்தது. இதற்கிடையில் அவள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. இறங்கிக் கொண்டாள். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

அவள் படிக்கும் கல்லூரக்கும் நான் பணி செய்யும் அலுவலகத்திற்கும் ரொம்ப தூரமில்லை. வழக்கமாக நானும்
அங்குதான் இறங்குவேன்.

இன்று ஏனோ இறங்க சற்று தயக்கம். என் நிறுத்தம் வந்தது..

இறங்கினேன். வழக்கம்போல அலுவலத்தினுள் நுழைந்து எனக்கு தினமும் வரும் கடிதங்களை வரவேற்பரையில் பெற்றேன். ஒவ்வொரு கடிதமும் படிக்கப்பட்டு அந்த அந்த செக்ஷனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது..

கடைசியாக ரோஸ் கலர் உறையிட்ட கடிதம் ஒன்று என் பெயருக்கு வந்திருந்தது…

பிரித்தேன். பார்த்தேன்.

ஒரு பேருந்து வரையப்பட்டு இருந்தது. அதன் அருகில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர். கீழே ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டுருந்தாள்.

” உன் பேருந்து காதலி .. “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *