பளீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 7, 2013
பார்வையிட்டோர்: 17,390 
 
 

சுற்றிலும் காகித பூக்களின் நடுவே வைரமுத்துவை தோற்கடித்துவிடும் அளவுக்கு கவிதைகளை எழுதி குவித்து கொண்டிருந்தான் சேகர். டேய் இந்த நேரத்துல என்னடா பண்ற? என்று சலிப்போடு கத்தினான் கணேஷ். இன்னைக்கு எப்டியாது குடுத்ருவேண்டா . என்றான் வீராப்புடன். ஆமா தினமும் இததான் சொல்ற நீ குடுக்ரதுகுள்ள அந்த பொண்ணு பாட்டி ஆகிடும்டா என்றான் கணேஷ் கிண்டலாய்.

அவனின் வாயை அடைத்து படுக்க வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் புரண்டு புரண்டு தனக்குள்ளே பேசி கொண்டிருந்தான் சேகர். டேய் இப்படி பைத்தியமா இருக்கியே ஒரு நாளாது அவ கிட்ட போய் பேசிருக்கயாடா என்றான். எப்படிடா போகுறது அவளோ தாம்பரம் போறா நானோ கிண்டி போறேன் ரெண்டும் ஆப்போசிட் ரூட் மச்சி அதோட அவ எப்போ பாத்தாலும் கூட்டத்தோட வராடா பின்ன எப்படிடா என்றான். ஆமா இல்லைனாலும் நீ போய் குடுத்துருவ போடா பயந்தான்கொள்ளி என்றான் கணேஷ் . இன்னைக்கு கண்டிப்பா குடுப்பேன்டா நீ வேணும்னா பாரு என்றான். சரிடா இன்னைக்கு மட்டும் நீ குடுக்கல அப்புறம் நான் குடுத்ருவேண்டா சொல்ல்லிட்டேன் என்றான்.

மறுநாள் விறு விறு என பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான் அவள் வருகைக்காக. நல்ல நீல நிற சுடிதாரில் நின்று கொண்டிருந்தாள் சிலையாக. அப்படியே அவளை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்த சேகரை கணேஷ் கிள்ளிவிட்டு போய் குடுடா என்றான் அவன் அசராமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். போடா என்று அவனை பேருந்து நிறுத்தத்திலிருந்து கீழே தள்ளி விட்டான் கணேஷ். படார் என ஒரு இரு சக்கர வாகனம் மீது விழ போனான் சேகர். போடா சாவு கிராக்கி நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா? என்று சீறி விட்டு வண்டியில் சீறி போனான்.

மறுபடியும் பஸ் நிறுத்ததுக்கே வந்த சேகரை நண்பர்கள் முறைத்தனர். வேண்டாம்டா இன்னைக்கு சகுனமே சரி இல்ல நாளைக்கு கண்டிப்பா குடுதுருவேண்டா என்று அசடு வழிந்தவனை காரி துப்பாத குறையாய் பார்த்தனர் நண்பர்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது . சேகரின் கல்லூரி வாழ்க்கை முடிவடையும் தருணத்திற்கு வந்தது. அன்று மனதில் தைரியத்தை வர வழைத்து கொண்டு யாருக்கும் சொல்லாமல் அவள் நிற்கும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். ஒரு வருடத்தில் அன்று தான் முதல் முதலாய் அவளை புடவையில் பார்க்கிறான். ஆ ! வானத்து தேவதை அப்படியே பூமிக்கு வந்தது போல இருந்தது அவனுக்கு. அவனுக்கு முன்னே நின்றாள்.

அவள் அவளின் சேலை தலைப்பு வந்து வந்து அவனை தாலாட்டி சென்றது. 5 நிமிடம் கண் மூடி நின்றவன் சட்டென்று விழித்து பார்த்தான் அவள் அங்கு தான் நின்று கொண்டிருந்தாள். அப்பாடா என்று மூச்சு விட்டு சட்டை பையில் இருந்த காகித துண்டை அவளிடம் நீட்டி குரலை சற்று செருமினான். அவள் கண்டு கொள்ளவே இல்லை. மறுபடியும் செருமி விட்டு ஹலோ என்றான். அவள் திரும்பி பார்த்தாள். அவளை மிக அருகில் கண்டது இதுவே முதல் முறை அப்படியே அசராமல் பார்த்தான். அவள் அவன் கையில் இருக்கும் காகிதத்தை பார்த்ததும் சேகரின் எண்ணத்தை புரிந்து கொண்டவளாய் அவனை முறைத்து விட்டு தன் காலை பார்த்தாள். சேகரும் அவளின் கோவத்தை புரிந்து கொண்டு தலை குனிந்து தரையை பார்த்தான். அப்போது “பளீர்” என்று அறைந்தது அவள் காலில் அணிந்திருந்த “மெட்டி”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *