அனுபந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,056 
 

பாரு…காபி கொண்டு வாம்மா! என்றார் ராமன்.

ராமன், இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்று சிறிதாக டவுனில் வைத்துள்ளார். நிலபுலங்கள் கிராமத்தில் இருந்தும் படிப்புக்காக புறநகர் வந்து வீடு கட்டி குடியேறிய நடுத்தர குடும்பம்.

இதோ அப்பா, அம்மா கலந்துண்டுருக்கா! அடுப்படியிலேர்ந்து பதிலோடு வந்தாள் பாரு என்கிற பார்வதி, கல்லூரி படிப்பு முடித்து, திருமணம் வரை மட்டுமே தனியார் கம்பெனியில் வேலை பார்க்க இருக்கும் ,ராமன் குடும்பத்தின் ஒரே செல்ல மகள், பார்வதி.

என்னம்மா! வேலைக்கு கிளம்பிட்டியா? தாத்தாட்ட சொல்லின்ட்டு விபூதி இட்டுன்டு போம்மா என்றார் அப்பா , காபி எங்கம்மா? லேட்டாயிடுத்து, ஜானகி என கத்தினார்

தாத்தா சந்தி பன்றாப்பா ,லேட்டாயிடுத்து நான் வரேன்,எனக்கூறி சிட்டாய் பறந்தாள். பார்வதி.

தாத்தா மனைவியை இழந்து இரண்டு வருடமாக மகனுடன், வேதம் படித்துக்கொண்டு ,அருகில் உள்ள பிள்ளையார் கோவிலை நிர்வாக பொருப்பும் ஏற்று, மூன்று வேளையும் தவறாமல் சந்தியாவந்தனம் செய்பவர், யதாரத்தவாதி,மனதில் பட்டதை பளிச் என பேசுவார் ,சிறிய நட்பு வட்டாரம் இன்றும் உடையவர். ஓய்வு பெற்ற தமிழாசிரியர்,ஆனால் ஓய்வே இல்லாமல் உழைப்பவர்.

அவ எங்க போயாச்சா? என்று கேட்டுக்கொண்டே காபியோட வந்தாள் ஜானகி.

இந்தாங்கண்ணா,காபி! ஜானகி ரெம்ப ஆச்சாரமான குடும்பத்தை சேரந்த கிராமத்து மணம் வீசும் பாஷையுடன், பன்னிரென்டாம் வகுப்பு வரையே படித்தவள். ராமனை கைப்பிடித்து, இக் குடும்பம் ,கணவன்,மகள்,அப்பா மற்றும் பூஜை தவிர வேறொன்றும் அறியாமல் 24 ஆண்டுகள் கடந்தவள்.

டிவியில் உங்களோட ராசிக்கு பலன் சொல்றா கேளுங்கோ!

“விருட்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிக அருமையான நாள்! நல்ல செய்தி ஒன்று மாலைக்குள் வர இருக்கிறது. புதிய உறவுளுக்கான வரவும் உள்ளது என கூறிக்கொண்டே போனார், வழிகாட்டி சோதிடர் குடந்தை குமர பாலன்.”

ராமனுக்கு விருட்சிக ராசி ஆதலால் ஆர்வமாய் கேட்டார்.

என்ன நல்ல செய்தியோ? என நினைத்துக் கொண்டே எழுந்தான்.

ஏன்ணா! ஜோசியர் மாமா வந்து நேத்து சொன்னாரே, பொண்ணுக்கு குரு திசை வந்துடுத்து இப்போலேந்து ஜாதகம் பார்க்க ஆரம்பிங்கோன்னு ,

அதான் ஜாதகம் எடுக்கலாமா? கல்யானத்துக்கு தயாரா? ன்னு . சாயங்காலம் பொன்னுகிட்ட பேசிடுங்க! இது எல்லா அம்மாவின் சர்வ தேச கவலை காலத்துல பெண்பிள்ளைகளை கரையேத்திடனும்னு! செல்லிக்கொண்டே பூஜை வேளைகளில் மூழ்கினாள்.

தாத்தா சந்தி முடித்து ஹாலுக்கு வந்தார். ராமன் காபி அருந்தி ஆபிஸ் கிளம்ப தயாரனான்.

ராமா, இந்த ஜெபமாலை அறுந்துடுத்து, இதை சரி செய்தது வாங்கிட்டு வந்துட்டுடா!

தந்தையை நமஸ்கரித்தான். கடையை திறக்க கிளம்பினான் ராமன்.

அப்பா சாப்பிட வரேளா?னு கேட்டாள் ஜானகி.

அவள் எப்போதும் மாமனாரை அப்பா என்றே அன்போடு அழைப்பது வழக்கம்.

இதோ பத்து நிமிடம் பேப்பர் பாத்துட்டு வரேன். டீ கடை பெஞ்சு மட்டும் விடாமல் படிக்கனும் அவருக்கு.

மாலை பார்வதி வந்தாள், இரவு டிபனுக்கு தேவையான அனைத்து உதவிகளயும் செய்வாள், துணிகளை மடித்து வைப்பாள்,அம்மாவுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து இருவரும் அமர்ந்து டிவி முன் நிகழ்ச்சிகளை பார்ப்பது அறவே பிடிக்காது. இருவரும் தாயம், அல்லது பல்லாங்குழி விளையாடுவார்கள் அவ்வப்போது ராமனும்,தாத்தாவும் சேர்ந்து கொள்வார்கள்.

ராமனும் கடையை கட்டி விட்டி வீடு வந்து சேர்ந்தான்,

அப்பாவின் ஜப மாலை சரி பண்ணினதை கொடுத்தான்.

அப்பா சாப்பிட்டாச்சா? என்று கேட்டவாறே முகம் , கை கால் அலம்பி சாப்பிட அமர்ந்தான்.

ஏம்மா பார்வதி! ஜாதகம் எடுக்கலாம்னு இருக்கும் , உன் அபிப்ராயம் என்னம்மா?

வெட்கத்தோடு அமைதியாக இருந்தாள்.

இப்ப வேண்டாம் அப்பா! நான் சொல்றேனே! என கூறியவாரே பரிமாறினாள்.

ஏம்மா? டைம் நன்னாயிருக்குன்னு ஜோசியர் மாமா சொல்றார், தேடினா சட்டுனு அமைஞ்சிடுமாம்!

அப்பா, நான் ஒருத்தரை மனசுல நினைச்சின்டிருக்கேன்! ஆனா, அது சரியா? தப்பான்னு தெரியலப்பா. சர்வ சாதாரணமாக சொன்னாள்.

அதிர்ச்சியில் அப்பா, இட்லி வாயிலே தங்க, கையில் எடுத்தது கீழே விழ, சுதாரித்து விழுங்கினான் இட்லியையும் ,செய்தியையும்.

அம்மா,மற்றும் தாத்தா ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அம்மா கோபாமாக ஏய்! என்ன சொல்ற? என்னடீ ஆச்சி உனக்கு என்றாள்அம்மா!

எல்லாவற்றையும் கவனித்த தாத்தா, செத்த நேரம் சும்மா இருங்கோ! எல்லாரும்!

நிசப்பதமானது – வீடு. சுதாரித்தது – குடும்பம்.

யாரும்மா அது? அப்பா கேட்க,

தாத்தாவுக்கு தெரிஞ்சவா தானப்பா. என்றாள் பார்வதி.

அதிர்ச்சியில் தாத்தா, ஆச்சரியமாய் பார்த்தார்.

தாத்தாவின் ப்ரன்ட் மாரிமுத்து தாத்தாவின் பேரன்தாம்மா அவர், என்றாள் பார்வதி.

ராமன் எழுந்து சென்றார் வெளியே, ஜானகியும் ஏதும் சொல்லாமல் பின்னால் சென்றாள்.

தாத்தா அருகில் வந்து இது சரியா வருமான்னு யோசிச்சியாம்மா?

தெரியல தாத்தா, ஆனா பிடிச்சிருக்கு.

சரிம்மா நான் அப்பாகிட்ட பேசறேன்.என்று சாய்வு நாற்காலியில் அமர்ந்து யோசிக்கலானார்.

ராமா! எங்கே போனான்? – கூப்பிட்டார் தாத்தா

தனியாக சிறிது நேரம் இருந்து விட்டு வீடு வந்தார்கள் இருவரும்.

ராமன் வத்ததும் அப்பாவிடம் போனார்,

என்னப்பா! இது, நமக்கு வந்த சோதனை.

பெண் பிள்ளையை சுதந்திரமா வளர்க்கனும்னு சொன்னளே!

இவ பன்னினதை பார்த்தேளா?

என்னடா பன்னிட்டா?

மனசுல இருக்குன்னுதானே சொன்னா! ஓடிப் போறேன்னா சொன்னா!.

உங்களுக்கு தெரிஞ்சவானு வேற சொல்றா? யாருப்பா?

ஆமான்டா, மாரி என்னோட நண்பன்,அவனும் என் போல தமிழ் ஆசிரியன், நல்லவன்

அவன் மகன் பெருமாள், நம் ஊரிலே மணிக்கூண்டருகே சலூன் ஷாப் வச்சுருக்கான்.

அவன் பெயரன் கோயம்புத்தூரிலே நல்ல வேலை பார்பதாகச் சொல்வான், அவன் கூட அப்பப்ப தமிழ் பேரவைக்கு ஆர்வமாய் வருவான்,

அங்கதான் இவா பார்த்து பழகியிருக்கனும்.

நல்ல பையனாத்தான் தெரியறான். தமிழ் ஆர்வம் இருப்தால் மெண்மையான குணம் இருக்கும் என்றார் தாத்தா.

அப்பா என்னாச்சு உங்களுக்கு? நீங்க சொல்ற பெருமாளை எனக்கு தெரியும், ஒன்றும் புரியாம அவளுக்கு சப்போர்ட் பன்ற மாதிரி பேசி சம்மதம் வரை பேசறேளே? நாம யாரு? அவா யாரு?

புரியாம பேசலை, ஆமான்டா! நாம யாரு?

என்னப்பா? நேக்கு புரியலை.

பின்ன என்னடா? நாமளும்,அவாளும் முதல்ல மனுஷாடா! அப்புறம்தான்ட மத்ததெல்லாம்,

அதுவும் நீ உன்னோட நேம, அனுஷ்டானத்தை விட்டுட்டே! நாம உடல் தானம் பன்னக்கூடாதுனு தகனம்தான் பன்னனும்னு செல்லுவா! அதையும் நீங்க இரண்டு பேரும் பன்னிட்டேள்!

அப்புறம் என்னடா உரிமை இருக்கு. உனக்கு.

சம்பிரதாய அனுஷ்டானத்தை விட்டுட்டாலும் மனித நேயத்தோடத்தானே இருக்கேன். அப்பா அது என்னோட விருப்பம்,

அப்பா, நீங்க இவா காதலை ஏத்துக்குறேள்!

நானும் காதலுக்கு எதிரி இல்லப்பா! ஆனா இதனால் சொந்தத்திலே பிளவுகள் வந்துடுமேன்னுதான் யோசிக்கிறேன்.

ராமா,எப்பொழுதும் உணர்வால, உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது,அறிவு பூர்வமா சிந்தித்து தான் முடிவுகளை எடுக்கனும்.

இப்போ நமக்கு நம்ம குழந்தையோட சந்தோஷம்தான்டா முக்கியம்.

அதுவம் இந்த பெண்கள் மனசு ன்றது, நம்ம விளை மண் மாதிரி, ஒரு வாட்டி விதையை விதைச்சுட்டா அதை வளர்க்கும் வேலையை அதுவே ஆரம்பிச்டும்.

காதலும் அப்படித்தான்டா ஒரு வாட்டி மனசு ஏத்துன்டுடுத்துன்னா ,மாறாதுடா,

அதுவும் சுத்தம்,அனுஷ்டானம் எல்லாம் உடம்புக்கு மட்டுமில்லடா, மனசுக்கும் சேர்த்துதான்டா!

ஊர் உறவைப்பபத்தியெல்லாம் யோசிக்காதே!. அவாவளுக்கு வரும் சங்கடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வெரு மாதிரி.

அப்பா இவ்வளவு ஸட்ராங்க சொல்றாரே! என யோசித்தவாறே வெளியே வந்தார். நிம்மதியாய் உறங்கப் போனார் ராமன்.

மறுநாள் காலை.

வழக்கம் போல் ஜானகி மற்றும் பார்வதி அடுப்படியில்,

தாத்தா ஜபத்தில்,

பாரு, அதே அன்போடு கூப்பிட்டார் ராமன்.

பயந்தபடியே வந்தாள்,

அப்பா !என்ன மன்னிச்சுடுங்கோ,

இல்லடா! நான் பேசனும்மா!உன்கிட்ட, நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

உனக்கு அவாத்துல செட்டாகுமா? நீயோ சைவம், நம்ம பழக்க வழக்கம் வேற,

பூஜைகள்,பண்டிகைகள் இதெல்லாம் வேற, எப்படிமா?

எனக்கு அதுதான் யேசனை,வேற ஒன்றும் இல்லை.

அது ஒன்றும் பிரச்சினை இல்லைப்பா, நாங்கள் தனியா ஜாகை போய்டுவோம்.

அப்புறம் நீங்க எல்லோரும் வரலாம், அப்படியே நம்மாத்து வழக்கப்படி எல்லாம் செய்வேன்! எனக் கூறி கொண்டே போனாள்.

ராமனுக்கோ கோபம் வந்தது,

அது மட்டும் முடியாது! என்ன பேச்சு பேசற? குடும்பத்தை பிரித்து, தனி ஜாகை வைத்து நீ மட்டும் சந்தோஷமாக இருக்கனும்னு நினைக்கறது தப்பில்லையோ!

காதல்னா அது உறவுகளை பிரிந்து நீங்க இரண்டு பேர் மட்டும் சேர்வது இல்லை ,இருவரும் இணைவதால் அது உறவுகளை வளர்த்தெடுக்கனும்!

நீ தனி ஜாகை போற எண்ணத்தை விட்டுட்டு, அவாத்திலேயே அவா வழக்கப்படி குடும்பம் நடத்தி நல்ல மகளா வளர்த்து இருக்கோம்னு
அவா சொல்றதுதான் எங்களுக்கு சந்தோஷம். இதுக்கு நீ சம்மதிச்சாத்தான் நான் சம்மதம்னு சொல்வேனு சொல்லிட்டு அப்பாவிடம் பேச சென்றான்.

இதை கேட்டு கொண்டு இருந்த தாத்தா, நம்ம வளர்ப்பும் வீண் போகலைனு நினைச்சு, சந்தோஷமாக நண்பர் மாரியை சந்தித்து பெண் கேட்க சொல்ல சொல்லி சென்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *