தாமரைக் குளம்

11
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 26,650 
 
 

எப்பொழுதும் போல் அன்றும் பள்ளி முடிந்தவுடன் தோழிகளுடன் மிதிவண்டியில் வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள் கலைச்செல்வி, பள்ளியில் இருந்து அவளது வீடு சுமார் 9.5 கிலோமீட்டர் இருக்கும்.ஆம்,அவள் வசிப்பது கிராமம் தான், படிப்பது பண்ணிரெண்டாம் வகுப்பு என்பதால், சிறப்பு வகுப்பு எல்லாம் முடிய எப்படியும் மாலை ஆறாகிவிடும்.

அதைப்பற்றி அவளுக்கு கவலையோ பயமோ இல்லை, தோழிகள் துணைக்கு இருக்க..!!
ஆம், தோழிகளின் துணையுடன் பாதைகள் பளிச்சிட்றது, நாலு கிலோமீட்டர் வரை.
அதன் பிறகு அவள் தனிமையில் அவளது பயணம் அமைந்திருந்தது .

கிராமம் என்பதால் தெருவிளக்கு கிலோமீட்டருக்கு ஒன்று தான். ஆனால் மிகுந்த பிரகாசம்.

ஒரு கிலொமீட்டரில், தொளாயிரம் மீட்டர் கடந்ததும் தெருவிளக்கின் வெளிச்சம் மெல்ல மெல்ல உருவெடுத்துவிடும் .

பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன என்பதால், தேர்வு தொடங்கும் வரை இதே வாழ்கை சுழற்சி தான் செல்விக்கு.

அன்று, ஆறுமணியிலிருந்து நிமிடத்திற்கு ஒரு முறை அடுப்படிக்கும், வாசலுக்கும் வந்து வந்து பார்க்கும் அவள் அம்மாக்கு தெரியாது சிறப்பு வகுப்பு முடிந்து அவள் வீட்டுக்கு வர இவ்வளவு நேரம் ஆகுமென்று..!!!

முதல் நாள் எப்படியோ இருட்டில் தட்டு தடுமாறி வீடு வந்து சேர்ந்தாள் செல்வி.

ஏழு மணி ஆச்சு, இவ்வளவு நேரமா வரதுக்கு என்று கத்திகொண்டே பூஜையறைக்கு சென்று கும்பிட்டு, செம்புதட்டிலிருந்து திருநீர் எடுத்து வந்தது செல்வியின் நெற்றியிலிட்டாள், அவள் அம்மா.

துணிய மாத்திக்கிட்டு முகம் அளம்பி வா என்று சொல்லிகொண்டே அடுப்படிக்கு சென்று இட்லி ஊற்ற தொடங்கினாள்.

செல்வியின் அப்பா இராணுவத்தில் இருக்கிறார் என்பதால், சேவை காலம் முடியும் வரை, வருடத்திற்கு ஒரு முறை வந்து பதினைந்து நாட்கள் விடுமுறையில் வருவார் அதுவரை அவள் அம்மா தான் அவளுக்கு எல்லாம். செல்வியின் தம்பி ஆறாவது படிக்கிறான் அவனால் அவ்வளவு வேலை இருக்காது அவள் அம்மாக்கு.

இப்படி இயல்பு வாழ்கை இயந்திரமாய் சுற்றியது செல்விக்கும் அவள் குடும்பத்திற்கும்.

மறுநாள் மதியம் வாரம் ஒரு முறை வரும் காய்கறி பழங்கள் ஏற்றிசெல்லும் வண்டி ஊருக்குள் வந்தது,

மண்டிகாரர்கள் செவ்வாய் விடுமுறை என்பதால்,வண்டியல் அன்றைய தினம் தேங்கிய காய்கறிகள், பழங்கள் எடுத்துவந்து மலிவு விலையில் கிராமம் கிராமாக விற்பனை செய்வார்கள்.

அன்றும்,அதே போல் வண்டி வர தொடங்கியது..

வண்டியின் மேல் கட்டியிருந்த ஒலிப்பெருகியின் சத்தம், அந்த கிராமத்து மக்களை பிள்ளையார் கோவிலுக்கு வர செய்தது, வண்டியும் கோவிலுக்கு பக்கத்திலுள்ள காலி இடத்தில் நிறுத்த பட்டது.

செல்வியின் அம்மா ஐம்பது ரூபாயுடன் அந்த அழுக்கு மஞ்சள் கைப்பையை எடுத்து செல்ல, பக்கம் அக்கம் வீட்டின் உள்ள பெண்களும் ஆவலுடன் இணைத்தனர்.

செல்வியின் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளியிருந்த தங்கராசின் அம்மா அமுதவள்ளியும் வந்தாள் சிவப்பு கூடையுடன்.

ஆரஞ்சு மூட்டையை பிரித்து வெளியில் வைத்தார் வண்டிக்காரர் ஒருவர். செல்வியின் அம்மா ஆரஞ்சை மூட்டையிலிருந்து எடுத்து அழுத்தி பார்த்து எடுக்க ஆரம்பித்தாள்.
அமுதவள்ளி. சாத்துக்கொடி பழம் வாங்க நிர்ணயம் செய்து குரஞ்ச காச எடுத்து வர , செல்வியின் அம்மாவை பார்த்ததும் திசை மாறி அவள் அருகில் நின்றாள்.

பழங்களை வாங்கியதில் தங்கராசின் அம்மாவுக்கு ஏழு ரூபாய் அதிகம் ஆனது. செல்வியின் அம்மா அந்த சில்றகாசை போட, பழங்களை இருவரும் வாங்கினார்கள், சிறு தொலைவு நடக்க அருகிலிருந்த ஒரு பூட்டியிருந்த வீட்டின் முன் இருந்த திண்ணையில் அமர்ந்து இருவரும் பேச தொடங்கினார்கள், இவர்கள் இப்படி உட்கார்ர்ந்து பேசுவதற்கும், அவளுக்கு இவள் துண்டு பணத்தை போடவும் ஒரே காரணம் இவர்களின் பிள்ளைகள், ஒரே வகுப்பு படிப்பது தான். ஒரே பள்ளியில் கூட..!

மறுநாள், தங்கராசிடம் பணத்தை கொடுத்து செல்வியிடம் கொடுக்க சொல்லி, அவளின் அப்பாவை பார்க்க சென்றாள் அமுதவள்ளி.

அவன் அந்த பள்ளியில் சேர்ந்த நாலு வருஷத்துல தங்கராசு ஒரு பொண்ணுங்க கூட குடும் பேசியதில்லை. ஆனால் பல பெண்களுக்கு படிப்பில் போட்டியாய் இருந்த ஒரே மாணவன் தங்கராசு. பிரம்புக்கு பெயர் போன தமிழ் ஐய்யாவின் செல்ல பிள்ளையும் இவனே.! அந்த பள்ளியின் அவரிடம் வரலாற்றிலே அடியும், திட்டும் வாங்காத ஒரே மாணவன் தங்கராசு.

அரையாண்டு முடிந்த வேலையில், திருத்தி வைக்கப்பட்ட விடைத்தாளை எடுத்து வர சொன்னார் தங்கராசிடம் தமிழ் ஆசிரியர். யாரும் எதிர்பார்க்காதபடி தங்கராசு அம்முறை முதல் மதிப்பெண் வாங்கவில்லை, வாங்கியது சுரேஷ். தங்கராசிடம் போடியிடும் மாணவர்களின் ஒருவர்.

விடைத்தாளை சுரேஷிடம் வழங்கும் போது, சற்று சங்கடம் ஆசிரியர் முகத்தில் இருக்க, தங்கராசு அதை அறிந்துகொண்டான். பள்ளி முடிந்ததும், சிறப்பு வகுப்பு தொடங்கும் முன் தமிழ் ஆசிரியரை பார்த்து வந்தான், ஆசிரியர் விடைத்தாளில் செய்த தவறையும், திருத்திய பதிலையும் சொல்லி கொடுத்தார்.இந்த பதற்றத்தில், செல்விக்கு கொடுக்கும் பணத்தை கொடுக்க தவறினான் தங்கராசு.

மறுநாள், மாலை செல்வியின் மிதிவண்டி அருகில் காத்திருந்தான் தங்கராசு.
செல்வி அவள் தோழிகளுடன் வர, தங்கராசு கூச்சப்பட்டு சில்லறை காசை அன்றும் கொடுக்காமல் மெல்ல மிதிவண்டியை எடுத்தான்.

வேகமாய் சென்று அவன் ஊருக்கு செல்லும் கூட்ரோடில் திரும்பி, இடது புறமாய் இருந்த பெரிய தாமரைக் குளத்தின் அருகில் காத்திருந்தான் தங்கராசு.

தோழிகளுடன் வந்த செல்விக்கு அந்த கூட்ரோடு திரும்பினாள். தோழிகள் பிரித்தனர்.
செல்வியின் மிதிவண்டி கூட்ரோடு திரும்பியதை கண்டதும், மிதிவண்டியை பழுது பார்ப்பது போல் கீழே உட்கார்ந்து வண்டியின் சக்கரத்தை சுற்றியபடி அவளை பார்த்தான் தங்கராசு.

கண்ணிமைக்காமல் பார்த்த அவனை பார்த்தபடி கடந்து போனாள் செல்வி, சில வினாடிகளில் சுதாரித்து எழுந்து வண்டியை வேகமாக கிளப்பினான் ராசு. செல்வியை நெருங்கும் அவனுக்கு அவளை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு கூட தைரியமில்லை, பழக்கமுமில்லை. வண்டியின் மணியை வேகமாக அடிக்க திரும்பி பார்த்தாள் அவள்.

ஒரு நிமிஷம் க க … கலை..!

என்ன?

அம்மா உங்க கிட்ட இந்த மிச்ச பணத்தை கொடுக்க சொன்னங்க.. இந்தாங்க..

என்று குடுத்து உடனே,

சரி நான் கெலம்பரன் என்றான் ராசு.

செல்வியின் பதிலை எதிர்பார்க்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தான் ராசு.
இரண்டாம் மதிப்பெண் வாங்கியதற்காக செல்வியின் வாழ்த்து சொல்ல ராசு கிளம்பினான்.

அந்த வாழ்த்து ராசுவின் மனதில் ஆழ பதிந்தது,

மறுநாள் பள்ளி முடிந்ததும் மீண்டும் அந்த தாமரைக் குளத்தில் அருகில்.
அவள் வரும் நேரம் வரை தாமரையின் அழகை தொலைவில் இருந்து ரசித்து கொண்டிருந்தான்,

பாசி மிகுந்த குளத்திலிருந்த முதற்படியில் விரால் மீன்கள் இறை தேடி நெளிந்து நெளிந்து பாசியை தின்பதை பார்த்து கொண்டிருந்தான்.

செல்வியின் வண்டி சத்தம் கேட்டதும் புன்முறுவலுடன் திரும்பி பார்த்தான். மெல்ல அவனருகில் அவளின் வண்டி கடக்க, கூப்பிட முயன்றான் ராசு..

செ.., செல்.., செல்வி என்று சீரான இடைவெளியில் கூப்பிட்டான்.

வண்டியிலிருந்து இறங்கிய செல்வியிடம், ராசு.. ரொம்ப நன்றி கலை, நேத்து எனக்கு வேற வேல இருந்துது அதான் சொல்ல முடியல..

சரி சரி பரவாயில்ல என்றாள் செல்வி,
நீங்க தினமும் இந்த வழியாவ போறீங்க என்றான்..

ஆமா, நானும் உன் வகுப்பு தான் ரொம்ப மரியாதை வேணா, நீ வா நே கூப்பிடலாம் என்றால் செல்வி.

சரி சரி.. என்று வண்டியில் பேசியபடி ஊருக்கு சென்றனர்.

நன்கு இருளத் தொடங்கியது.., தெருவிளக்கு இல்லா இடத்தில் சொல்லவா வேணும்..

ஆமா செல்வி, தினமும் எந்த எடத்துல எப்பிடி போற, எவ்ளோ இருட்டா இருக்கும்..?!!

இந்த எடம் வந்த தான் எனக்கு பயம்,வேகமாய் சென்றுவிடுவேன் என்றாள் செல்வி,

சரி சரி.. நாளைல இருந்து அந்த தாமரைக் குளத்தின் அருகில் காத்திரு நானும் வரன் ஒன்னா போகலாம் என்றான் ராசு.

செல்விக்கும் ராசு மேல் ஒரு நல்ல அபிப்ராயம் இருந்ததால்,மறுநாள், செல்வி சிறப்பு வகுப்பு முடிந்ததும், அரட்டை அடிக்காமல் விரைவில் வந்து காத்திருந்தால் குளத்தின் அருகில்..

அன்றோ கணக்கு வாத்தியார் அரையாண்டு விடைத்தாளை மாணவர்களின் முன் திருத்த ஆரம்பிக்க, சிறப்பு வகுப்பில் முடியும் வேலையில் அன்று மாலை ராசு வாத்தியார் முன் நின்றான்.

நேரம் ஆக, குளத்தில் காத்திருந்த செல்வி குளத்தின் இரண்டு படிக்கட்டுகள் இறங்கி மீன்களின் இறை தேடும் அழகை ரசித்தாள்..

மறுநாள் தக்கை பொறியை வாங்கி வரவும், மீன்களுக்கு இறை போடவும் தோன்றியது அவளுக்கு..

விடைத்தாளை கணக்கு வாத்தியாரிடம் திருத்த பெற்றதும் வாங்கியவுடன், விடைத்தாளை திருப்பி கூட பார்க்காமல் பையில் வைத்து அவசரமாக வண்டியை கிளப்பினான் ராசு.., எப்படியும் செல்வி வீட்டுக்கு போயிருப்பாள் என்று நினைத்து கொண்டே அவனது வண்டியின் வேகம் சற்று குறைந்தது.

கூட்ரோடில் திரும்பியதும் காத்திருந்த, செல்வியின் வண்டி..

வண்டியின் அருகில் சென்று, அவள் வண்டியை தொட்டு மணியை வேகமாக அடித்தான்..

குளத்திலிருந்து வரேன் வரேன் என்று சொல்லிகொண்டே படியிலிருந்து ஏறிய செல்வியின் கையில் ஒரு வெள்ளைத் தாமரை.

என்ன பண்ற, அங்க?? என்றான் ராசு..

சும்மா உட்காரலாம்னு பாத்தேன், வெள்ளை தாமரை என்னை பறிக்க அழைத்தது..! அதான்..

சரி சரி, வா வா வீட்டுக்கு போகலாம் அம்மா தேடுவாங்க என்றான்..!!

ஆமா என்று வண்டியை கிளப்பினாள் செல்வி, போகும் வழியில் குளத்தில் இருந்த மீன்களை பற்றியும், இறைக்கு பாசிகளை சாப்பிடுவதும் பற்றி சொன்னாள், நாளை தக்கை பொறி வாங்கி போடலாமென்று சொல்ல, ராசுவின் நம்பிக்கை அதிகரித்தது.

மறுநாள் சனிக்கிழமை, முதல் வாரம் என்பதால் சிறப்பு வகுப்பு இல்லை என்ற அறிவிப்பு காலையே வந்து விட்டது.

வந்ததும் செல்விக்கும் ராசுகும் மட்டும் எல்லையில்லா மகிழ்ச்சி,

உணவு இடைவெளியின் போது, ராசு செல்வியிடம் நாம் மாலை தாமரைக்குளத்தில் பாக்கலாம், நான் தக்கை பொறி வங்கி வருகிறேன் மீனுக்கு போடலாம் என்று சொல்ல, சிரித்தால் அவள்.

சொல்லாமலே மலர்ந்தது காதல் ராசுவிடத்தில்.

அன்று மாலை பள்ளி விட்டதும் ராசு பள்ளி வெளியில் இருக்கும் பொறி கடையில் ஐந்து ரூபாய்க்கு பொறி வாங்கி வண்டியில் மாட்டி கிளம்பினான் குளத்திற்கு,

அவனுக்கு முன்னதாகவே தாமரைக் குளத்தில் காத்திருந்தாள் செல்வி.

செல்வி எப்ப வந்த??

பத்து நிமிஷமாச்சு, சரி இந்தா பொறி..

மீன்கள் துள்ளி துள்ளி அந்த பொறியை வாயில் பிடிக்க.. பொறிகளை தூவியபடி ரசிக்கிறாள் செல்வி.

மீன்களின் பசி அடங்கியதும் பொறி தண்ணீரில் மிதக்க தொடங்கின..

இந்த இடைவேளையில் ராசு அவளுக்கென்று ஒரு வெள்ளை தாமரையை பறித்து வந்து நீட்ட, புன்முறுவலுடன் பெற்றுகொண்டாள் செல்வி .

அப்பொழுது மெல்ல அவன் காதலை சொல்ல ஆரம்பித்தான்.

காதலை கையிலிருந்த வெள்ளை சுண்ணாம்பு கட்டியில் அந்த படிக்கட்டு ஒன்றில் எழுதினான்.

அதை பார்த்த செல்விக்கு என்ன சொல்லுவது என்று தெரியாமல் கிளம்பி சென்றாள்.

போகும் போது ஒன்று சொன்னாள், என் அப்பாவின் சேவைக்காலம் முடிந்து அடுத்த வாரம் வரார், அடுத்த மாதம் எப்படியும் தேர்வும் முடிந்து விடும், நாங்கள் ஊரை காலி செய்து சென்னைக்கு போகலாம்னு இருக்கோம். என்ன மன்னிச்சிரு என்று திரும்பி பார்க்காமல் சென்றாள்.

அன்றிலிருந்து தாமரைக் குளத்திற்கும் வர தவிர்த்தாள் செல்வி.

மிகுந்த ஏமாற்றம் அடைந்த ராசு சிவந்த கண்களுடன், பிடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கினான்.

ஆனால், தினமும் வந்து மாலையில் பொறியை மீன்களுக்கு தூவி சென்று விடுவான், அவளின் நியாபகமாய்.

தேர்வு முடியும் வேலை வந்தது, செல்வியின் அப்பா, சென்னையில் வீடு பார்த்து.. வீட்டிலிருக்கும் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்ய தொடங்கினார்.

தேர்வு முடிந்தது.

மறுநாள் அவள் ஊறிலில்லை. விடியற்காலையிலே கிளம்பிவிட்டாள்.

ராசு அவள் பழைய வீட்டிற்கு தைரியமாக சென்று பூட்யிருந்த வீட்டின் முன் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்தான்.

நினைவுகள் அவன் கண் முன், பழகிய நாட்களை காட்சிகலாக்கியது.

பின், அவன் வீட்டிலிருந்த அரிசி டின்னில் பொட்டலமாய் வைக்கப்பட்ட பொறியை எடுத்து கொண்டு, தாமரைக் குளத்திற்கு சென்றான் ராசு.

முதல் இரண்டு படி இறங்கியதும் அவனுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி,

குளத்தை பார்த்ததும், இவன் கண்கள் ஆனந்தத்தில் நெகிழ்ந்தது.

குளத்தில் தக்கை பொறி மிதக்கின்றன..
கண்டிப்பாய் செல்வி வந்திருப்பாள்..
என்று எண்ணிய படி..

படிக்கட்டில் உட்கார்ந்தாள்,படிக்கட்டு பக்கத்தில் அவன் அன்று சுண்ணாம்பு கட்டியில் காதலை எழுதி இருந்த இடத்தை பார்த்தான்.

இரட்டிப்பு மகிழ்ச்சி அவள் உள்ளத்தில், இவன் எழுதியதற்கு மேலயே அவளும் வண்ண சுண்ணாம்பு கட்டியில் அழுத்தி எழுதிருதாள்.இரண்டாவது வரியில் “தாமரைக் குளத்திற்கு நன்றி” என்றும் எழுதி இருந்தாள் செல்வி.

கலங்கிய கண்களுடன் அவள் எழுதியதின் மேலே மெல்ல முத்தமிட்டு, வெள்ளை உதடுகளுடன் எழுந்தான் இந்த தங்கமான ராசு.

Print Friendly, PDF & Email

11 thoughts on “தாமரைக் குளம்

 1. My apologies, I have not learnt yet to type in Tamizh.

  I liked he story, its menmaiyaana unarchigal.

  Oru nedural enna venraal padikkum vayathil indha kaadal thalai thookuvadhaan. May be it happens in villagees.

  Migavum yathaarthamaaga irundhadhu.

  Mikka nanri.

 2. அதிகமான ‘மதிப்பீடு’ பெற்ற கதையாக பட்டியலில் மேலே இருந்த கதை என்று ஆவலாய்ப் படிக்க வந்தேன்… கொஞ்சம் ஏமாற்றிவிட்டது 🙂

  கதையின் தொடக்கத்தில் இருக்கும் நேர்த்தி தேய்ந்துகொண்டே வருகிறது, இறுதியில் முடித்துவிட வேண்டும் என்று ஒரு அவசரத்தில் எழுதப்பட்டது போல் தோன்றுகிறது (நடை மட்டுமல்ல, இறுதியில் மலியும் எழுத்துப்பிழைகளும், கதை சொல்வதில் இறந்தகால நிகழ்கால தொடர்களின் கூட்டும் என்று பல வகையில் இந்த அவசரம்/கவனமின்மை தெரிகிறது!)

  /நாளை தக்கை பொறி வாங்கி போடலாம் என்று சொல்ல, ராசுவின் நம்பிக்கை அதிகரித்தது/ – இதற்கு முன்வரை ராசு அப்பாவியான நன்கு படிக்கும் மாணவனாக, கூச்சம் உள்ளவனாக மட்டுமே காட்டப்படுகிறான், தீடிரென்று அவனுக்கு ஒரு ‘நம்பிக்கை’ இருப்பது தெரியவருகையில் அவன் மீது ‘அடப்பாவி’ என்ற எண்ணமே வருகிறது (அதாவது, அவனுக்குச் செல்வியின் மீதான ஈர்ப்பை இதற்கு முன்பே கோடிட்டுக்காட்டி இருத்தல் நலம்!)

  கதையும் சற்றே (சினிமாத்தனமாக) வழக்கமாக முடிகிறது… இதை இன்னும் இன்னும் அழகாக மாற்றி எழுதலாம் தோழரே… தயவுசெய்து முயன்று பாருங்கள்…

  (’அடடே, அருமையான கதை’ என்று பட்டையாக சொல்லிவிட்டுப் போக என்னாலும் முடியும்தான், ஆனால், அதில் உங்களுக்கு வளர்ச்சி இருக்காது, ‘ஓ, இது போதுமா’ என்று தேங்கிவிடுவீர்கள், எனவே கசந்தாலும் உண்மையே நன்மை என்ற அடிப்படையில் என் விமர்சனத்தை முன் வைக்கிறேன், ஏற்பதும் விடுப்பதும் உங்கள் தேர்வு…) நன்றி! 🙂

  (விடுப்பதாயின், கசப்பான ஒரு விமர்சனத்திற்கு என் மன்னிப்பையும் இவண் முன்வைக்கிறேன்! ‘நீ நல்லா எழுதி கிழுச்சிடுவியோ?’ சத்தியமாய் இல்லை, நானும் நன்றாய் எழுத முயல்கிறேன், அவ்வளவே… வாசகத் தகுதி!)

  நட்புடன்,
  விஜய் 🙂

  1. உங்களின் நேர்த்தியை பாராட்டுகிறேன். இனி வரும் படைப்புகளில், இது போல் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.

 3. மிக அருமை நான் அந்த கிராமத்தையும் பள்ளி வாழ்க்கையையும் கண்முன்னே கண்டேன் .

 4. அருமை காதலில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

 5. மிக எளிமையான நடையில் எழுதப் பட்ட ஒரு கதை. கதைக் கருவில் காட்டிய நாட்டத்தை தமிழ் மொழி உபயோகத்திலும் காட்டி எழுதும் பிழைகளைத் தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *