‘டியானா-லோகன்’

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 5,451 
 

‘எனது அப்பா மிகவும் நல்லவர்,மற்ற அப்பாக்கள் மாதிரியில்லாமல் என்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்றுதான் இதுவரையும் நினைத்திருந்தேன்’ டியானா தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.அவளின் தகப்பன் மிஸ்டர் டேவிட் மாஸ்டன் ஒரு வழக்கறிஞர் மனித உரிமைகளுக்காக வாதாடுவதில் பெயர் பெற்றவர். மற்றவர்களை;மதிக்கத் தெரிந்தவர்.

தனது மகளில் மிகவும் அன்பு வைத்திருக்கும் தகப்பனின் மகளான டியானாவின் சினேகித சினேகிதிகள் அவளை மிகவும் அதிர்ஸ்டசாலிகளாக நினைக்கிறார்கள்.

அவள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்க முதல் பத்தொன்பது வயது வரை அப்பா அம்மா அணைப்பில் வாழ்ந்தவள். டியானா,பல்கலைக் கழக விடுதியில் தங்கிப் படிப்பதாகச் சொன்னபோது டியானாவின் தாயும் தகப்பனும்; தடுக்கவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்து,முப்பது நிமிட புகையிரத பயண தூரத்தில் அவர்களின் வீடு இருக்கிறது. ஆனால் அவள் வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் பிரயாணம் செய்யாமல், தனது புதிய சினேகித சினேகிதிகளுடன் ஒன்றூக வாழ்வதை அவர்கள் வரவேற்றார்கள்.

‘பல்கலைக்கழகம் செல்வது என்பது எதிர்காலத்திற்குரிய படிப்பை மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலமிருந்து வரும் பன்முகத்தன்மையான மாணவ மாணவர்களுடன் சேர்ந்து பழகும் அனுபவங்களும் எதிர்காலத்தில் நாங்கள் சந்திக்கும் பல தருணங்களில் உதவும்’ தன்னைப் புரிந்து கொண்ட தந்தையார் சொன்ன விளக்கத்தை டியானா சந்தோசத்துடன் ஏற்றுக் கொண்டாள்.
ஆனால் நேற்று அவர் அவளுக்குத் தந்த அதிர்ச்சியை அவளால் தாங்கமுடியாதிருக்கிறது.அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவளின் அன்பன் லோகனின்,காதல்பொங்கும் தழுவலுக்காக,அவள் இப்போது பல்கலைக்கழகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறாள். மேற்கு லண்டனை ஊடறுத்துக் கொண்டு கிழக்கு லண்டனிலிருக்கும் பல்கலைக்கழகத்தை நோக்கிப் பாதாள ட்ரெயின் இருளைத் துளாவிக் கொண்டு விரைகிறது.

இன்று,இருகிழமை விடுமுறைக்குப் பின் அவளின் அன்பனான லோகனின் அழகிய புன்சிரிப்பை,அவனின் அணைப்பை எதிர் பார்க்கிறாள். ஆனால் நேறு;று அவன்,டியானாவின் வீட்டுக்குச் சமயற்காரனாக வந்த அதிர்ச்சி அவளை இன்னும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.லோகன்,பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு,தனது பகுதி நேர வேலையாக ஏதோ ஒரு றெஸ்ட்டராண்டில் செய்கிறானா? எப்படித் திடிரென்று தங்கள் வீட்டுக்குச் சமயல்காரனாக நேறு;று வந்தான்ஃ அதுவும் அவளுக்குத் தெரியாது.

பல்கலைக் கழகம் சென்ற ஒருவருட இடைவெளியில்,டியானா, ‘வெஜிடேரியனாக’உருவெடுத்ததன் பின்னணி லோகநாதன் என்ற தமிழ் மாணவன் என்று அவளின் தந்தைக்குத்; தெரிந்திருக்க இடமில்லை.

பல்கலைக் கழக ஆரம்ப நாட்கள் பலதுறைமாணவர்களும் சாப்பாட்டு ஹாலில் சந்தித்துக் கொண்டபோது,லோகன் மாமிசமற்ற உணவுகளைத் தட்டில் நிரப்பிக் கொள்வான்.
அப்போது அவனைப் பற்றி அவளுக்கு அவ்வளவாகத் தெரியாது. அவள் பையோலஜி படிக்கிறாள். வைரஸையும் பகடிரியாக்கள் பற்றியும் நிறைய ஆய்வுகள் செய்ய ஆசைப்படுபவள்.

மருத்துவ துறை மாணவனான லோகன், இறந்த மனிதரின் உடலை வெட்டிப் பிரித்து, உதிரத்தை வகைப்படுத்தி. நரம்புகளை நார்களாகப பார்த்து, தசையைத் தடவி;த் தனது படிப்பைத் தொடர்பவன்.அதனால் அவன் மிருக உணவை விரும்பாமல் விட்டிருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

அவர்களின் உறவு நெருங்கியபோதுதான்; ஏன் வெஜிடேரியனாக மாறினான் என்ற கதைலையச் சொன்னான்.

லோகன் எப்போதும் அம்மாவின் சமயலை விரும்புபவன். காலக்கிரமத்தில,அவனின் தாய் ஏன் அசைவ உணவை விரும்புகிறாள் என்ற காரணம் தெரியாமலே அசைவ உணவுடன் இணைந்தான். ஆனால் தனக்கு அசைவம் உண்பவர்களில் அருவருப்போ,வெறுப்போ கிடையாது என்றான்.

‘ஆதி மனிதர்கள் அத்தனை பேரும் மிருகத்தை வேட்டையாடி வாழ்ந்தவர்கள்தானே’? என்று சிரித்தபடி,டியானாவுக்கு வியாக்கியானம் சொல்வான்.

கடந்த இருவருடங்களாக, பல்கலைக்கழகத்தில் தனது சகமாணவர்களுடன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருக்கிறாள்.அதற்குக் காரணம்,அவளது பிறந்த தினம், வாரநாளில் வந்ததும், அன்று பின்னேரம் மாணவர் விடுதியில் சினேகிதர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடுவார்கள்

இந்த வருடம், அவளது இருபத்தோராவது பிறந்த தினத்தை, உற்றார் உறவினருடன் கொண்டாடவேண்டும் என்று அவளின் தகப்பன் மிஸ்டர் மாஸ்டன் சொன்னபோது அவள் மறுதலிக்கவில்லை.,
அவளது முக்கியமான இருபத்தியொராவது வயதை லோகனுடன் செலவழிக்கவில்லை என்ற துயர் உணர்வைப் பெற்றோருக்காக மறைத்துவைத்தாள். அடுத்த பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு அவள் பல்கலைக்கழகத்தை விட்டுப் போய்விடுவாள்.அதனால், தனது கடைசி வருடப் பிறந்த தினவிழாதை; லோகனுடன் ‘தனியாகக்’ கொண்டாடும் திட்டம் தகப்பனின் வேண்டுகோளால் தவிடுபொடியானது.

அவர்கள் வீட்டில் அவளது அவளது பிறந்த தின விழாவுக்கு சொந்தக்காரருக்கு அழைப்பு விடுத்தார்.அவளுக்குப் பிடித்த அசைவ உணவை எல்லோருக்கும் பரிமாற,ஒரு இந்தியக் கடையிலிருந்து விசேடமாகத் தயாராக்குவதாகவும் சொன்னார்.

நேற்று அவளின் பிறந்த தின வைபவத்திற்கு இந்தியக் கடையிலிருந்து சிலர் வந்து உபசரிப்பார்கள் என்றும் சொன்னார்.ஆனால்,இந்தியக் கடையிலிருந்து வந்த உபசரிப்பாளர்களில் ஒருத்தனாக லோகன் வருவான் என்று நினைக்கவில்லை.இந்தியக் கடையிலிருந்து தயாரித்துக் கொண்டு வந்த உணவுகளை,டியானாவின் வீட்டில் சூடாக்கி விருந்தினர்களுக்கு அவர்கள் பகிர்வார்கள் என்றதான் அவள் தந்தை சொல்லியிருந்தார்.

நேறு;று, அவள் வீட்டுக் கதவு மணியடித்ததும் அவள் கதவைத்திறந்ததும் லோகனைக் கண்டதும் திணறி விட்டாள். அவன் இங்கு என்ன செய்கிறான்.?அவள் வாய் திறக்கமுதல், அவளின் தகப்பன் வந்து வந்திருந்த இந்திய சமயற்காரக்; கூட்டத்தை வரவேற்றார்.

‘இவள்தான் எனது மகள் டியானா. இவளுக்கு இன்று இருபத்தியோராவது பிறந்ததினம்.எனது மகளுக்காகத்தான் இந்த ஏற்பாடே நடக்கிறது.’ மகளை அணைத்துக் கொண்டு மிஸ்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, டியானா லோகனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் அவளை நேரே பார்க்காமல் அவளின் தந்தையின் பேச்சைக் கொண்டிருந்தான்.

இந்தியக் கடையிலிருந்து வந்த உணவுகள் டியானாவின் பிறந்த தினத்தைக் கொண்டாட வந்த உற்றார் உறவினர்களுக்குப் பரிமாறப் பட்டன.அவர்களில் ஓரிருவர், டியானாவின் தாய்வழியினர், ஒரு நாளும் இந்தியச் சாப்பாட்டைத் தெரியாத ஆங்கிலேயர்கள்.

‘டியானாவைப் போலவே அவளின் அப்பா டேவிட்டுக்கும் இந்தியச் சாப்பாடு பிடிக்கும்’ டியானாவின் தகப்பனின் சொந்தக்காரர் ஒருத்தர், டியானாவின் உறவினர்களுக்குச் சொன்னார்.

மிஸ்டர் டேவிட் மாஸ்டன்.தனது மகளைப் பாசத்துடன் பார்த்துக் கொண்டு,’எங்கள் பழைய பரம்பரை இந்தியாவுடன் தொடர்புள்ளவர்கள’ என்றார்.

‘ ஓ,அப்படியா, காலனித்துவ நிர்வாகிகளா’?

டியானாவின் மாமா ஒருத்தர், மிகவும் முற்போக்குவாதி கிண்டலாகத் தன் மைத்துனரைக் கேட்டார்.

‘ம்ம்.’ டேவிட் மாஸ்டன்,அதிகம் சொல்லாமல்; தனது மகளை அன்புடன் பார்த்தடி ‘ம்’; கொட்டினார். அவளுக்குத் தனது தந்தை தன்னில் வைத்திருக்கும் பாசத்திற்கு எல்லையில்லை என்று தெரிந்தவள்.

டியானா, அசைவம் உண்ணத் தொடங்கிய காலத்தில் எப்போதோ ஒரு நாள், அவர் தனது,தாய்வழி மூதாதையர் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
டியானாவுக்குத் தனது தந்தையின் பாட்டியைத்; தெரியும்.டியானாவுக்குப் பெயர் வைத்தவளே அந்தப் பாட்டி ஜேன்,.தனது தகப்பன் ஜேம்ஸ்,டியானாவின் தந்தையான பாட்டியின் பேரன் டேவிட் மாஸ்டனாகப் பிறந்திருப்பதாகப் பல தடவைகள் டியானாவின் பாட்டி ஜேன் பாசத்துடன் சொல்வாள்.

டியானாவுக்குப் பத்துவயதாகவிருக்கும்போது அந்தப் பாட்டி ஜேன் இறந்தபோது அவளின் தந்தை குழந்தைமாதிரி அழுதார். அந்தப் பாட்டியின் பரம்பரைதான் இந்தியாவுடன் தொடர்புள்ளவர்களா? அப்படி எல்லாம் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம்,டியானாவுக்கு இதுவரை வரவில்லை.

அந்த ஞாபகங்களுக்காகவா,இந்திய உணவை வீட்டுக்கே அழைத்தார்? அவளின் மனதில் பல கேள்விகள்; தொடர்ந்து கொண்டிருந்தன.நேற்று முழுக்க வீட்டில் ஆரவாரமாகவிருந்ததால் லோகனுக்குப் போன்பண்ணி அவனிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. அத்துடன் தனது அதிர்ச்சியை அவனிடம் நேரே கேட்கவேண்டமென்று துடித்தாள்.

டியானாவின் வரவிற்காக லோகன் காத்திருந்தான்.அவன் அவளையணைத்து ‘ஹப்பி பேர்த்டேய் டார்லிங்’ என்று சொல்லி முடிக்கமுதல்,’ஏன் நேற்று சமயற்காரனான வீட்டுக் வந்தாய்?’ என்று அதிர்ந்தாள்.
அவன் அவளின் கோபத்திற்குக் காரணம் தெரியாமல் புருவங்களையுயர்த்தினான்.’ஹேய், என்ன ஆரவாரப படுகிறாய்? எனது நண்பனின் தந்தை றெஸ்ட்ராரண்ட் வைத்திருக்கிறார். சிலவேளைகளில் அவரின் கஸ்டமர்ஸ் வீட்டுக்குச் சாப்பாடுகளைக் கொண்டு வந்து பரிமாறச் சொல்வார்கள். நேற்று ரெஸ்ட்ராண்டில் சரியான பிஸி,அத்துடன் ஒருசிலர் வேலைக்கும் வரவில்லை. எனது நண்பன் சாப்பாடு பரிமாறுவர்களுடன் தானும் உதவிக்குச் செல்வதாகச் சொன்னபோது நானும் சரி என்றேன்.ஆனால் உனது வீட்டுக்குத்தான நான் வருகிறேன் என்று தெரியாது’.

அவன் விளக்கியபோது அவள் இன்னும் கலங்கிவிட்டாள்.இவன் ரெஸ்ட்ராரண்டில் பகுதி நேர வேலை செய்கிறானா?.அவள் மேலே கேள்விகள் கேட்கவில்லை. அதற்கு அவளுக்குத் துணிவில்லை.அவன் தனது வகுப்புக்கு ஓடவேண்டும் என்பதால் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

ஐரோப்பா நாடுகளிலும் இங்கிலாந்திலும்;,யுனிவர்சிட்டி மாணவர்கள்,வாரவிடுமுறையில் பகுதிநேர வேலை செய்வது மிகமிகச் சாதாரணமான வியடம்.லண்டன், பாரிஸ் போன்ற பல நகரங்களிலும் அழகாகச் சிரித்துக்;கொண்டு ஆடி ஓடி வேலை செய்யும் இளம் கூட்டத்தில் கணிசமானவர்கள் மாணவர்களாகவிருப்பார்கள்.படிக்கும் காலத்தில், சமூக ஓட்டத்தையும் கிரகித்துக்கொள்ள இப்படியான தொடர்புகள் மிகவும் தேவை என்பது மேற்கு கல்வி வழிமுறையுடன் இணைந்தது.

அது டியானாவுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், இதுவரை அவளின் காதல் பற்றி அவளின் தாய் தகப்பனுக்கு அவள் சொல்லியதில்லை.தனது இருபத்தியேராவது பிறந்த தினத்தின் பின் சொல்வதாகவிருந்தாள். ஆனால் லோகன் சாப்பாட்டுத் தட்டுகளுடன் வந்தபோது குழம்பி விட்டாள்.அதிலும் அவளின் அத்தனை உறவினர்களும் அவளின் மாமா மாதிரியான முற்போக்குவாதிகளல்லர்.

தாய்வழியினரில் பெரும்பாலோர்,அவளின் தாயின் தம்பியான ஒரு ‘முற்போக்கு (சோசலிஸ்ட்) மாமா தவிர மிகுதி அத்தனைபேரும் மிகவும் மேல்தட்டு வாழ்க்கைமுறையில் வாழ்பவர்கள்.அடுத்த இன,நிற மக்களுடன் அதிக தொடர்பற்றவர்கள்.

இப்போது, இன்னொரு சந்தேகம் அவளின் மனதில் முளைவிட்டது.பல்கலைக்கழகத்தில், அவளுக்குக் காதல் இருப்பதை அப்பா மோப்பம் பிடித்திருப்பாரா, அவளின் காதலன் வெள்ளையன் அல்லாதவன் என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்குமா? அவர் மிகவும் நல்ல முற்போக்குக் கருத்துடையவர்.

மற்றவர்களிடம் துருவித் துருவி விடயங்களைப் பெற்றுத் தனது வழக்குகளளை வெல்பவர் என்று அவள் தனது தந்தைலையப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். தனது மகள், ஆங்கிலேயன் அல்லாத ஒருத்தனிடம் மனதைப் பறிகொடுத்திருக்கிறாள் என்று தெரிந்தால் அவர் என்ன சொல்வார் என்று அவளுக்கு ஒட்டுமொத்தமாகத் தெரியாவிட்டாலும், தனது மகளின் விருப்பத்திற்கு எதிராக நிற்கமாட்டார் என்று தெரியும்.

ஆனால் தனது மகளின் காதலன் பகுதிநேர வேலையாக ஒரு ரெஸ்டராண்டில் சமயற்காரனான இருக்கிறான் என்று தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வார்? அவளின் தாயின் குடும்பத்தினர் எப்;படி எடுத்துக் கொள்வார்கள? லோகன்,ரெஸ்ட்ரோடண்டில் பகுதிநேர வேலை செய்பவனா? அப்படியிருந்தாலும் அவளுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை.

லோகன் தனது நண்பனின் தகப்பனின் கடையில் இன்று மிகவும் பிஸியாகவிருந்ததால் அவனின் நண்பன் தனது தகப்பனுக்க உதவும்போது,தானும் வந்ததாகத்தானே லோகன் சொன்னான்?
டியானா பலதையும் நினைத்துக் கொண்டாள்.அன்று அவளுக்குப் படிப்பில் கவனம் செல்லவில்லை.லோகனுககுக அன்று பின்னேரம் வரையும் லெக்ஸர்ஸ் இருப்பதால் இரவுக்கு ஹாஸ்டலில் அவளை வந்து சந்திக்கிறேன் என்று காலையில் சொல்லியிருந்தான்..

மதிய உணவின் பின் உள்ள இடைவெளி நேரத்தில், வழக்கம்போல், மாணவர் கிளப்பில் தோழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது தகப்பனின் அழைப்பு வந்தது. இந்த நகரத்தில் உள்ள கோர்ட்டில் ஏதும் வழக்குகள் இருந்தால் அவர் இந்தப் பக்கம் வரும்போது.மகளையும் வந்து பார்த்து விட்டுச் செல்வார்.

‘ அப்பாவுடன் காப்பி சாப்பிட எனது இளவரசிக்கு நேரமிருக்குமா’ அப்பாவின் குரலில் வழக்கத்திற்கு மாறான ஒரு நெகிழ்வு தெரிந்தது.
நேற்று அவளின் பிறந்த தின வைபவத்திற்குப் பல உறவினர்கள் வந்ததால் இரவு நீண்ட நேரமாக அவர்,தூரத்திலிருந்து வந்திருந்த அவர்களின் சொந்தங்களுடன் பிஸியாகவிருந்தார்.
விடுதியிலிருந்து,டியானா வெளியே வந்தபோது,ஆகஸ்ட் மாத மாலை நேரத்தின் தென்றல் அவளை அன்புடன் வருடிச் சென்றது. தகப்பன் காரை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்தார். டியானாவைத் தூரத்தில் கண்டதும் முகத்தில் பெரிய புன்னகையுடன் விரைந்து வந்தார்.

‘எப்படி எனது இருபத்தியொரு வயது மகள்?’ அவர் குறும்பாகக் கேட்டார்.இங்கிலாந்தில் இருபத்தியொரு வயது என்பது மிகவும் முக்கியமான வயது. தாய் தகப்பனின் அனுமதியில்லாமல் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கம் காலமாக ஆங்கிலேய மத்திய வர்க்கத்தால் நடைமுறைபடுத்தப படுகிறது. டியானா அப்பாவுக்கு மறுமொழி சொல்லாமல் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு,அவர் முகத்தில் முத்தமிட்டாள்.

அவர் ஒரு சில நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் அவளை இறுக அணைத்துக் கொண்டார். ‘காப்பி சாப்பிடப் போகாமல் பார்க்குக்குப் போகலாமா’ அவர் குரலில் அவளிடம் கெஞ்சும் வேண்டுகோள் தொனி.

அவளின் பன்னிரண்டு பதின்மூன்று வயது கால கட்ட இளவயதில் அவளின் தாயுடன் முரண்டுபிடித்துக் கோபமாக இருக்கும்போது அவர் வேலையால் வந்ததும்,தாயும் மகளும் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்து, வீட்டில் ஏதோ பிரச்சினை என்று தெரிந்து கொள்வார். சாப்பாடு முடியவிட்டு, வசந்த காலமென்றால் பக்கத்திலிருக்கும் பார்க்குக்கு மகளை அழைத்துச் செல்வார்.

அங்கு திரண்டு வழியும் உலகத்தின் பல நாட்டு மக்களின் மொழிகள், குழந்தைகளின் இரைச்சல்கள், பறவைகளின் சப்தங்கள்,யாரோ கேட்டுக் கொண்டிருக்கும் வானோலி பாடல்கள், ஒரு பக்கத்தில்,கால்பந்தாட்ட விளையாட்டாரின் கல கல வென்ற கூக்குரல்கள்,இன்னொரு பக்கத்தில் கூட்டமாய் அமர்ந்திருந்து அரசியல் அல்லது சினிமா அல்லது.கிரிக்கட் பற்றி விவாதம் செய்யும் இளைஞர்கள் என்ற சந்தடியில் அவளது மனது திசை திரும்பும் என்று அவருக்குத் தெரியும். அதன்பின் மகளிடம் ஒரு’ வழக்கறிஞராகத்’ தனது பாசக்குரலில் அவளின் வாடிய முகத்திற்க விளக்கம் கேட்பார்.
டியானா அந்த வீட்டில்; ஒரே ஒரு மகள். தாயார் ஒரு ஆசிரியை, சாடையான கண்டிப்புத் தன்மையுள்ளவள். டியானா செல்லமாக வளர்கிறாள். அவள் கேட்பது பெரும்பாலும் அவளுக்குக் கிடைக்கும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் சிலவேளைகளில் தாயின் பொறுமையை,டியானா சோதித்துப் பார்ப்பதுண்டு.

பார்ககு;கு வந்ததும் கொஞ்ச நேரத்தில் அவள் தனது தாயிடமிருந்த கோபத்தை மறந்துவிட்டிருப்பாள். அவரின் கேள்விக்கு, ‘ ஓ டாடி, சாரி டாடி, வழக்கம்போல் எனது பிடிவாதத்தால்,நான்தான் அம்மாவை வருத்தி விட்டேன்’ என்று உண்மையை ஒப்புக்கொள்வாள்.

அதன்பின் பலதையும் பத்தையும் தகப்பனும் மகளும் பேசிக் கொள்வார்கள்.வீட்டுக்கு வந்ததும்,அம்மாவைக் கட்டிக் கொண்டு, யாம் சாரி மம்மி’ என்று கொஞ்சுவாள்.

இப்போது டியானாவுக்கு இருபத்தி ஒரு வயது. அவளின் மனதை ஏதோ அழுத்துகிறது.அவர் அதை அவளிடம் எப்படிக் கேட்பது என்று திண்டாடுகிறார்.

பல்கலைக் கழகத்தை விட்டுச் சற்றுத் தூரத்திலிருந்த பார்க்கில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பார்க்கின் ஒரு மூலையில் சிறிய காபிக் கடையிருந்ததுஅங்கு சன நடமாட்டம் நிறைந்திருந்தது.
டேவிட் மாஸ்டன் மகளிடம் ஏதோ மாற்றமிருப்பதை அவதானித்தார்.அவளாக அவரிடம் ஏதும் பேசாமல், அவர் கேடகும் கேள்விகளுக்க ஏனோ தானே என்ற மறுமொழி சொல்கிறாள்.

அவளின் மனதை எதோ நெருடுகிறது என்று அவருக்குப் புரிந்தது. என்னவாகவிருக்கும்?

வந்திருந்த உறவினர்கள் அவளுக்குப் பிடிக்காத ஏதும் கேள்வி கேட்டார்களா?.

நேற்றைய அவளுடைய பேர்த்டேய் பார்ட்டி பற்றிப் பேசினார்களா?

அதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் இன்று அவர் வந்திருக்கும் விடயம் அவரைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவிடயம்.அவளின் இருபத்தியொருவயது வரைக்கும் அவர் சொல்லாமல் வைத்தருந்த குடும்ப ரகசியம். தனது மூன்ற வருட படிப்பு முடியவிட்டு, இந்தியா சென்று ஏழைகளுடன் வேலை வெய்ய வேண்டும் என்று டியானா சொன்னபோது அவர் மனதில் உண்டாகிய பூகப்பத்தை அவள் அறியாள்.

தகப்பனும் மகளும் இருந்த இடத்தைத் தாண்டி, ஒரு ஆங்கிலேய இளைஞனும் இந்திய இளம் பெண்ணும் கைகோர்த்தபடி ஒருத்தரை ஒருத்தர் அணைத்தபடி சென்று கொண்டிருந்தார்கள்.இரண்டு இனக் காதலர்கள். ஒருத்தரில் ஒருத்தர்,உயிரை வைத்திருப்பது அவர்களின் பார்வையில், அணைப்பில், உடலசைவில் உலகத்திற்குப் பறைசாற்றகிறது. டியானாவின் தந்தையின் பார்வை அந்த இளம் காதலர்களிடம் பதிந்திருந்தததை அவள் கவனிக்கவில்லை.

அவளும் லோகனும் எவ்வளவு தூரம் இணைந்திருக்கிறார்கள் என்பது அவளின் தாய் தகப்பனுக்குத் தெரியுமா என்பதில் அவள் சிந்தனை பரந்திருந்தது.

லோகன் இல்லாமல் அவளால் வாழமுடியாது என்பதை டியானா தனது குடும்பத்திற்குச் சொன்னால் அவளை ஒரு பைத்தியக்காரி என்று சொல்வார்களா?

தங்கள் மகள் மிகவும் நேர்மையானவள், அத்துடன் பிடிவாதமுள்ளவள் என்று அவர்களுக்குத் தெரியும். அவளின் ஆசையைப் புரிந்துகொண்டு லோகனை ஆசிர்வதிப்பார்களா:அவள் மனதில் பல கேள்விகள்.

அவர்களை வைத்த கண்வாங்காமல் டியானா பார்த்துக் கொண்டிருப்பதை அவள் தந்தை கவனிக்கவில்லை என்பது அவளுக்குத் தெரியாது.

அவரைத் தாண்டிச் சென்ற அந்த இந்தியப் பெண் அவர் மனதில் என்ன கலக்கத்தை உண்டாக்கினாள் என்பதை அவரால் தாங்க முடியாதிருந்தது என்பதை அவள் அறியாள்.

தனது பார்வையைத் தனது தகப்பனிற திருப்பியபோது அவர் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். அப்பா ஏன் அந்த இளம் சோடியைக் கண்டு கண்கலங்குகிறார்.டியானா இப்போது, லோகனையும் தன்னையும் பற்றி யோசிப்பதை விட்டுத் தகப்பனைப் பற்றிக் குழம்பினாள். அப்பா ஒருகாலத்தில் யாரோ ஒரு இந்தியப் பெண்ணைக் காதலித்தாரா?

டியானா,தகப்பனின் கைகளை அன்புடன் வருடினாள். தனது தலையைத் தகப்பனின் தோள்களில் சரித்துக் கொண்டாள். அப்பாவுக்கு ஒரு காலத்தில் ஒரு இந்தியப் பெண்ணிடம் காதலிருந்து. அவரின் அல்லது அவளின் குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் அவர்களின் காதல் முறிந்திருக்குமா? நிற,இனபேதம் இடையில் வந்து அவர்களின் காதலைத் துண்டாடியிருக்குமா?

அப்படி நினைத்ததும் அவளுக்கு அப்பாவில் பரிதாபம் வந்தது. தகப்பனின் கன்னங்களை வருடிக்கொண்டாள்.’ ஐ லவ் யு சோ மச் டாடி’ என்றாள்.

அவர் மகளின் முகத்தைப் பார்த்தார்.அவர் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. ‘ஐ லவ் யு வித் ஆல் மை லைவ் மை டார்ளிங் டாட்டர் டியானா,டியானா’ அவர் குரல் அடைக்கச் சொன்னார்.அவள் பெயரைத் திரும்பத் திரும்பச் சொன்னார்.

‘டாடி,ஏன் இப்படிக் கலங்குகிறீர்கள்? நேற்று நான் உங்களுக்குப் பிடிக்காதமாதிரி நடந்து கொண்டேனா?’ அவள் பதறினாள். லோகனைப் பற்றிய சிந்தனை அவளிடமிருந்து ஒருகணம் மறையத் தனது தகப்பனின் சோகத்திற்காக அவள் பதறினாள்.

‘நான் இன்று ஒரு முக்கிய விடயம் பேசவந்திருக்கிறேன்’அவர் அவளின் கண்களை உற்றுப் பார்த்தபடி சொன்னார்.

அவளுக்கு வயிற்றைப் பிசையத் தொடங்கிவட்டது. ‘நீ எக்காரணம் கொண்டும் ஆங்கிலேயன் அல்லாத ஒருத்தனைக் காதலிக்க முடியாத. ஏனென்றால் உனது தாயின் குடும்பம் அதை விரும்மாட்டார்கள் என்ற சொல்லப் போகிறாரா,’ அவளால் அப்படி நினைத்ததும் அவளின் அழுகை கரை புரண்டோடியது. லோகன் இல்லாமல் நான் வாழ முடியாது என்ற கதறவேண்டும்போலிருந்தது.

தனது படிப்பு முடித்ததும் ஏழை மக்களுக்கு உதவும் உலக மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியவேண்டும் என்று லோகன் சொல்லியிருக்கிறான். அவனின் படிப்பு முடிவதற்கிடையில் அவளின் படிப்ப முடிகிறது. அவள் இந்தியா போவதற்கான காரணத்தை அப்பாவுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தபோது ஏதோ பெரிய விடயத்தைச் சொல்ல வேண்டுமென்கிறாரே!

டியானா பதறினாள். தகப்பனின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

‘ நீ இப்போது, நான் சொல்லப் போவதைக் கவனமாகக்கேள் மகளே’ அவர் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

வசந்தகாலத் தென்றல் பார்க்கில் பூத்துக் குலுங்கிய பல மலர்களின் வாசனைகளை அள்ளிக்கொண்டு அவர்களைத் தடவிச்சென்றது.

‘இப்போது எங்களைக் கடந்து போன அந்த இந்தியப்பெண் எனது பழைய காலத்தை நினைவூட்டினாள். எனது பாரம்பரியத்தை நினைவூட்டினாள்’.

டியானா மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.அவரின் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று முரணாகவிருந்தன. எனது பழைய காலம், எங்கள் பாரம்பரியம’ என்ற அவரது வார்த்தைகள் ஒரு சரித்திரத் தொடரின் வார்த்தைகளாகத் தெரிந்தன.

மாலைக் கதிரவன் மிகவும் தயக்கத்துடன் தனது பூமிக்காதலிலைப் பிரிய மனமின்றி,செவ்வானத்தில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான்.

‘உனக்குப் பெயர் வைத்தது எனது பாட்டியார் ஜேன் என்று சொல்லியிருக்கிறேன் தெரியுமா? எனது பாட்டி.தனது தகப்பன் ஜேம்ஸின மறுபிறப்பாக என்னை நினைக்கிறாள்..அவளின் தகப்பன் ஜேம்ஸின ஆருயிர்க் காதலியான தியானாவின் பெயரைத் தன பேத்திக்கு வைத்தாள் எனபதன் சரித்திரத்தைச் சொல்லப் போகிறேன். ஏனென்றால் நீ லோகனைக் காதலிப்பது எனக்குத் தெரியும்.’

அவர் மகளின் அழகிய முகத்தை அனபுடன் தடவிக் கொண்டார்.’அப்பா மேலும் சொல்லுங்கள்’; என்ற பாவனையில் தலையை ஆட்டிக்கொண்டு டியானா அவரைப் பார்த்தாள்.தனக்கும் லோகனுக்குமள்ள காதலைத்,தன்னில் உயிரையே வைத்திருக்கும் தனது தகப்பனுக்குச் சொல்லாத குற்ற உணர்வு அவளை மௌனமாக்கியிருந்தது.

‘எனது பாட்டியின் தாயாரின் பெயர் தியானா-ஒரு அழகிய இந்திப் பெண் என்று கேள்விப் பட்டிருக்கிறேன. நீP பிறந்ததும் ஆங்கிலேய- இந்திய கலப்புக் காதலர்களின் முதலாம்; தலைமுறையான எனது பாட்டியார்,மூன்றாம்; தலைமுறையாக முழுக்க முழுக்க ஆங்கிலேக் குடும்பத்துப் பெண்ணான் உனக்கு அந்தப் பெயரை வைத்தார்.’ மிகவும் தெளிவாகச் சொல்லி விட்டு டேவிட் மாஸ்டன் மெல்லிருள் பரவும் செவ்வானததில்; தன் பார்வையைப் பதித்துக் கொண்டார். கதையைத் தொடர்ந்தார்.

இந்தியா-1885:

அமெலியா ஹார்ப்பர் என்ற அழகிய ஆங்கிலம் பெண்,தனது இருபத்தி இரண்டாவது வயதில்,இந்தியாவிலுள்ள ஒரு பிரித்தானிய இராணுவ உயர் உத்தியோகத்தரின் வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியையாக இங்கிலாந்திலிருந்து இந்திய தென்னகரானத் தலைநகரான மட்ராஸ் பட்டினத்தில் வந்திறங்கினாள்.அவள் வந்திறங்கிய அதே வருடம்தான் பிரித்தானிய காலனித்துவத்திறகெதிரான இந்தியன் நாஸனல் கொங்கிரஸ் உண்டாக்கப் பட்டது என்றும் அவளுக்குத் தெரியாது

கிழக்கிந்தியக் கம்பனியின் நிர்வாகத்த்pல்,1757 தொடக்கமிருந்த இந்திய உபகண்டத்தில் , 1857ம் ஆண்டு,கிழக்கிந்திய ஆட்சிக்கு எதிராக வெடித்த கலவரத்தால்,1858ம் ஆண்டு தொடக்கம் பிரித்தானிய மகாராணியின் நேரடி ஆடசிக்குக் கீழ் வந்தது.பிரித்தானிய மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவை’விருத்தி’ செய்யும் தொழில், கல்வித் துறைகளில் ஈடுபடப் பல்யாயிரக் கணக்கில் வந்தார்கள்.

1861ம் ஆண்டு கணிப்பின்படி, இந்தியாவில் ஒட்டு மொத்தமாக, 125.945 வெள்ளையினத்தவர்கள் இருந்தார்கள். ஆதில் 84.083 வெள்ளையினப் ‘பொது மக்களும்;’,இந்தியா என்ற உபகண்டத்தைத் தன் பிடியில் வைத்திருக்க 66.000 வெள்ளையினப் படையினரும்,130.000 இந்தியப் படைவீரர்களுமிருந்தனர் அத்துடன் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆட்சி புரிந்து கொண்டிருந்த சிறறரசர்களின் படைகளாக 350.000 வீரர்களுமிருந்தனர்.

இங்கிலாந்தில்.ஒரு மத்தியவர்க்கக் குடும்பப் பெண்ணான அமெலியாவின் குடும்பத்தில் பல பெண்கள் உயர்வர்க்கக் குடும்பத்தினர்களின் கல்வியை முன்னெடுக்கும் தொழிலில் பலகாலம் ஈடுபட்டவர்கள்.

அமெலியாவின் தமக்கை மிகவும் முற்போக்கான கொள்கைகளையுடையவள். இங்கிலாந்தில் பெண்களுக்கும் வாக்குரிமை கிடைக்கவேண்டும் என்ற கருத்து பரவிக்கொண்டிருந்தற்குக் காரணமான பெண்களில் அமெலியாவின் தமக்கையும் ஒருத்தி.அமெலியாவும் அப்படி
‘அரசியல்’ கருத்துக்களில் ஈடுபடமுதல் அமெலியாவை இந்தியாவுக்கு அல்லது. பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் ஒன்றான கனடா, அவுஸதிரேலியாவுக்குக் கல்வி கற்பிக்கும் சாட்டில் அனுப்ப யோசித்துக் கொண்டிருக்கும்போது,இந்தியாவிலுள்ள ஒரு சொந்தக்காரப் பெண்மணியின் சிபாரிசால் அமெலியாவுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தது.

புதிய கலாச்சாரம், புதிய சூழ்நிலை என்பன அமெலியாவைத் திணறடித்தன. இந்தியாவிலிருந்த கொடுமையான பல பழக்க வழக்கங்கள்;,அதிலும் பெண்களுக்கிருந்த நிலை அவளை ஆத்திரத்தில் துடிக்கப் பண்ணியது.அவைக்கு எதிராக அவளதல் ஒன்றும் செய்ய முடியாது.எப்போது இங்கிலாந்துக்குத் திரும்புவேன் என்ற ஏங்கினாள்.
இந்தியாவில் பிரிட்டிஸார் படாடோபத்துடன் வாழ்வதைக் கேள்விப் பட்ட அவளின் உறவினர்கள் அவளை இந்தியாவிலுள்ளு பிரித்தானியர் ஒருத்தரைத் திருமணம் செய்யச் சொல்லி ஆலோசனை சொன்னார்கள்.அவள் அதை விரும்பவில்லை. காலம் பறந்தது. அவள் வேலைசெய்யம் இராணுவ அதிகாரியின் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு இராணுவத் தலைவன்;, வில்லியம் ஹரிஸனின் காதல்,அமெலியாவுக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது.

அமெலியாவின் கணவன், காலனித்துவ வக்கிரமான குணங்களற்றவன்.சாதி மத,இனக் கொடுமையால் மிகவும் கொடுமையாக நடத்தப் படும் பொது மக்களுக்க நன்மை செய்ய முனையும் பிரித்தானிய நிர்வாகத்தின் ஒருசிலரை மனதாரப் பாராட்டுபவன்.ஆனால் அவன் காலனித்துவத்தைக் காப்பாற்றம் இராணுவத் தளபதி.

அமெலியாவின்’ பொதுநல சிந்தனையைக்’காலக் கிரமத்தில் புரிந்து கொண்டாலும் அதைத் தன் மனைவி வெளியில் சென்று செய்வதை அவன் விரும்பவில்லை.அவர்களின் வீட்டில் பல வித வேலைகளுக்கும் வேலைக்காரர்கள் இருந்தார்கள்.அந்த வாழ்க்கையமைப்பில உள்ள கொடுமைகள் அவளை வாட்டியெடுத்தன.

அவளின் பெரிய தாய் லண்டனின் கிழக்கிலுள்ள ஏழைக் குழந்தைகளுக்காக ‘தோமஸ் பார்னாடோ’ என்பரால்; ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம் ஒன்றில்ப் பாடம் சொல்லிக் கொடுப்தைக் கேள்விப் பட்ட,அமெலியா,தானும்;,இந்திய ஏழைப் பெண்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கலாம் என்றும் சொன்னான்.

அவர்களின் திருமணத்தின் பின்னர்,அவனின் பதவி உயர்வு காரணமாக வடக்குக்குச் சென்றதும்;. தங்கள் இந்திய வேலைக்காரர்களை அமெலியா அன்புடன் நடத்தினாள்.அவர்களின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தாள். காலம் நகர்ந்தது,அவளுக்கு ஒன்றுக்கு அடுத்து என்று நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.ஒரு பெண் குழந்தையும்,மூன்று ஆண்குழந்தைகளும் அவளுக்குக் கிடைத்த சொர்க்கங்கள் என்று சீரும் சிறப்புமாக வளர்த்தாள்.

முதலாவது பெண்குழந்தைக்குப் பத்து வயதில்,வருத்தம் வந்து இறந்தபோது அவளின் துயர் தாங்க முடியாதிருந்தது. தனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்காதா என்று இரவு பகலாகப் பிரார்த்தனை செய்தாள்.அவள் எதிர்பார்ப்பின் தோல்வி அவளை வருத்தியது.

பல மாதங்கள்,வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தாள்.அவள் மனத்துயரை நீக்க மருந்தொன்றும் வேலைசெய்யவில்லை.

அக்கால கட்டத்தில் அவர்களின்,சமயல் வேலைக்காரர்களாக வந்த இளம் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.தேவதைபோன்ற அந்த அழகிய குழந்iயைத் தடவி முத்தமிட்டாள் அமெலியா. தியானா என்று பெயர் வைத்தாள்.அந்தக் குழந்தையை அன்புடன் நடத்தினாள் அமெலியா. தனது துயரை அந்தக் குழந்தையின் புன்சிரிப்பில் மறந்தாள்.தாழ்த்தப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்களாக நடத்தப்படும் எழை வேலைக்காரர்களுக்கு,சமயற்காரனின் குழந்தையைக் கொஞ்சும் அமெலியா ஒரு ஆச்சரியமான ஆங்கிலப் பெண்ணாகவிருந்தாள்.

அமெலியாவின் மகன்கள் வளர்ந்தார்கள்.முதல் இரு மகன்களும,லண்டனிலிருந்த அமெலியாவின் குடும்பத்தினரின் மேற்பார்வையில், மேற்படிப்புக்காக,இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார்கள்.ஐந்து வயதான கடைசிமகன் ஜேம்ஸ்; மட்டும் அப்போது இந்தியாவிலிருந்தான். தோட்டத்தில்,இரண்டு வயதான தியானாவுடன் ஓடிப்பிடித்து விளையாடுவான்.

இந்திய வேலைக்காரப் பெண்ணுடன் இங்கிலிஷ் பையன் விளையாடுவதை அமெலியாவின் பல ஆங்கிலேய சினேகிதர்கள் அருவருப்புடன் பார்த்தார்கள்.அமெலியா அவர்களின் இனவாதத்தில்; அதிகம் கவனம் செலுத்தவில்லை.

அப்போது,இந்தியாவில் பல அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. விவேகானந்தரால் இந்தியாவுக்கு 1898ல்,அவரின் சீடையாக அழைக்கப்பட்டு வந்த,நிவேதிதா அம்மையார்,என்ற வெள்ளையினப் பெண்மணியால்; இந்தியப் பெண்களின் கல்வி சம்பந்தமான பல மாற்றங்கள நடந்தன. ஏற்கனவே நடந்து கொண்டிருந்தது

அமெலியாவின் கடைசி மகன் ஜேமஸ்அவன் அவனின் பதினோராவது வயதிலேயே,இந்தியாவிலிருந்த பிரித்தானியரின் வழக்கப்படி இங்கிலாந்துக்குக் கல்வி கற்க அனுப்பப் பட்டான்.ஒன்பதுவயது தியானா தேம்பித் தேம்பி அழுதபோது அமெலியா அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.

மூன்று குழந்தைகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பிய அமெலியாவின் தனிமையை தியானாவுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ந்தாள்.

அமெலியாவும், கணவரும் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கொருதரம், இந்தியாவுக்கு வந்து தாய்தகப்பனுடன் வசந்தகால விடுமுறையைக் கழித்தார்கள்.அல்லாது அமெலியாவும் கணவரும் லண்டனுக்கு வந்து சென்றார்கள்.

தியானா, ஒரு வேலைக்காரனின் மகள் என்ற அடையாளத்திற்கப்பால் அறிவும் அழகாகவும்,அமெலியாவின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவளின் தாய் தகப்பன்,அவர்களின் சாதி வழக்கப்படி. தியானா பருவமடைந்ததும் அவளுக்குத் திருமணம் செய்ய முடிவ கட்டினார்கள். தியானாவுக்க அப்போது கிட்டத்தட்டப் பதின்மூன்று வயது.
அமெலியாவும் கணவரும் அதைத் தடுத்தார்கள்.அவள் ஒரு குழந்தை அவளுக்குக் கல்யாணம் செய்து வைப்பது கொடுமை என்று தியானாவின் தாய் தகப்பனுக்குச் சொன்னார்கள்.தாய் தகப்பனுப்பாக இளவயதில் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப் படும் தியானாவை,ஒரு ஆசிரியையாக்கவேண்டும் அமெலியா பிரார்த்தனை செய்தாள்.

அப்போது இந்தியாவில் பல அரசியல்,சமூகமாற்றங்கள் ஆரம்பித்தன.மோகன்லால் காந்தி தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தாh.;ஆன்னி பெசன்ட் என்ற ஐரிஷ் வெள்ளை மாது, இந்தியாவில் பல முன்னேற்றமான மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தார். ஆன்னி பெசன்ட இந்திய அரசியல் கட்சியில் சேர்ந்தார்.பெண்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தினார்.
1914ம் ஆணடு முதலாம் உலகப்போர் ஆரம்பித்தது.பிரித்தானியா,இரஷ்யா.பிரான்ஸ் போன்ற நாடுகள்,ஜெர்மனி, ஆஸட்ரியா-ஹங்கேரி யத்துடன் இத்தாலி போன்ற நாடுகளை எதிர்த்துப் போராடினார்கள்.
ஜேர்மன் கூட்டணியுடன், அன்றைய கால கட்டத்தில் பிரமாண்டமான சக்தியாக,மத்தியதரைக்கடல் நாடுகளை ஆட்சி செய்து கொண்டிருந்த ‘ஒட்டமான் வல்லரசும’;(இன்றைய துரக்கி) சேர்ந்து கொண்டது.

அமெலியாவின்மூத்த இருமகன்களும்,இங்கிலாந்தில் இறுக்கமாக இணைந்து விட்டார்கள். மூத்தமகன் தனது படிப்பு முடிய.தன்னுடன் படித்த பெண்ணை மணந்து கொண்டு ,இங்கிலாந்திலேயே தங்கி விட முடிவு செய்திருப்பதாகத் தாய் தகப்பனுக்குச் சொன்னான்.

இரண்டாவது மகன், மருத்துவப் படிப்பைத் தொடங்கியிருந்தான்.

மூன்றாவது மகன்,1917ம் ஆண்டின் நடுப்பகுதியில்,இந்தியா வந்திருந்தான். பிரித்தானிய-இந்தியப் போர்வீரர்கள்,முதலாம் உலகப்போரில் தீpவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.போருக்குத் தேவையாகப் பல்லாயிரக் கணக்கணக்கான, ஆங்கிலேய,இந்திய இளைஞர்கள் இணைக்கப் பட்டார்கள். அமெலியாவின் கணவர் வில்லியம் ஒரு இராணுவ அதிகாரி. அவர் மகன் இராணுவத்தில் சேர்வது எதிர்பார்க்கப் பட்டது.

மூன்றாவது மகன்,பத்தொன்பது வயதான,ஜேம்ஸ்;,இந்தியாவுக்கு வந்து சில மாதங்களில் இராணுவப் பயிற்சிக்காகச் சென்றான். பயிற்சி முடிந்ததும்,மொசப்பத்தேமிய பிரதேசத்தில் பிரித்தானிய கூட்டணிக்கும் ஜேர்மன் கூட்டணிக்கும் நடந்த உக்கிரமான போருக்கு அனுப்ப் பட்டான்.முதலாம் உலகப்போர் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொண்டது. பிரித்தானிய கூட்டணியுடன் அமெரிக்காவும் 1917ல் இணைந்து கொண்டது. போர் கொடிய உக்கிரத்துடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.அமெலியா,தன் மகனின் பாதுகாப்புக்குக் கடவுளை வேண்டிக்கொண்டாள்.

கோடிக்கணக்கான இளைஞர்களை முதலாம் உலகம்போர் பல இடங்களில் பலியெடுத்தது. அதில் ஒருத்தன் அமெலியா-வில்லியம் தம்பதிகளின் மகன் ஜேம்ஸ்,போர்முனைக்குச் சென்று இருமாதத்தில எதிரியால் மொசப்பத்தேமியப் பிராந்தியத்தில் எதிரியுடன் நடந்த போரில் வீழ்த்தப்பட்டான்,; என்ற செய்தி வந்தபோது, அமெலியவால் தாங்க முடியவில்லை.பல கோடி இளைஞர்களைப் பறி கொடுத்த ஒரு தாயாக அவள் கதறினாள்.

மகன் இல்லாத இடத்தில் அவளால் ஒரு நிமிடமும் வாழவிருப்பமில்லாமல் துடியாய்த் துடித்தாள். அவள் இந்தியாவைப் பிரிந்து தனது இரண்டு மகன்கள்களையும்காண இங்கிலாந்து வரததுடித்தாள்.

;அது முடியாத காரியம் என்று அவளுக்கத் தெரியும். அவளின் கணவர்,இந்தியாவிலுள்ள பிரித்தானிய இராணுவ அதிகாரிகளில் ஒருத்தர்.போரில் அவர் பங்கு இன்றியமையாததது. அத்துடன் அவள், இந்தியாவை விட்டு, இங்கிலாந்துக்குக் கடல் வழியாக வருவது அபாயம். எதிரிகளின் கடற்படை,இ.ந்திய சமுத்திரத்தில் பல பகுதிகளிலும் படர்ந்து கிடந்தது.

அதே சமயம், தியானாவுக்குக் கல்யாணம் பேசும் விடயம்,உக்கிரமமான கட்டத்தைக் கண்டது. ஓரு பின்னேரம், அமெலியா, இறந்துபோன போன தனது மகன் ஜேம்ஸை நினைத்து அழுது கொண்டிருந்தபோது, தியானா ஓடி வந்து அமெலியாவின் காலில் வீழுந்து கதறினாள்.

‘எனது குடும்பம் என்னைக் கொலை செய்யப்போகிறது’ பதினாறு வயதுப் பெண்மை, துடித்தழுதது.

‘கல்யாணம் செய்ய மறுத்து விட்டாயா’ அமெலியா அந்த அழகிய இளம் பெண்ணை அணைத்தபடி கேட்டாள்.

தியானா,நீண்ட நேரம் அமெலியாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள். அமெலியாவுக்கு,தியானாவின் மனத்துயருக்குக் காரணம் கல்யாணம் மட்டுமாக இருக்க முடியாது என்று புரியத் தொடங்கியது.

‘தியானா, என்ன பிரச்சினை’ ஒரு தாயின் பரிவுடன் தியானாவை அணைத்தபடி கேட்டாள். இந்திய சாதியமைப்பில் தியானா ஒரு தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தபெண்.

அமெலியாவின் மனித நேயத்தில் அப்படியான கருத்துக்களுக்கு இடமில்லை.

தியானா, மிகவும் தயக்கத்துடன் அமெலியாவிக் கையை எடுத்துத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு,அழுகையின் நடுவே ‘ஜேம்ஸின் குழந்தை, உனது பேரன் என் வயிற்றில் வளர்கிறான்’.
அமெலியாவுக்க ஒரு கணம் உலகம் தலைகீழாகச் சுற்றுவதாக உணர்ந்தாள்.தனக்கு முன்னால், தனது வாரிசைத் தாங்கி நிற்கும் இந்த அழகிய இந்திய இளம் பெண்ணை ஊடுருவப் பார்த்தாள். அமெலியாவின் சிந்தனையில் ஜேம்ஸ்,இந்தியாவுக்கு வந்து நின்ற காலத்தில் அவனின் முகத்தில் பளிச்சிட்ட மகிழ்ச்சியான புன்னகைகள் வந்து மறைந்தது. ஜேம்ஸ போருக்குப் போன அன்று, தனிமையிலிருந்து அழுத தியானாவின் சோகத்திற்குக் காரணம் புரிந்ததது.

தியானா பிறந்த நாட்களிலிருந்தே,நினைவு தெரியாத வயதிலிருந்தே தியானாவை ஜேம்ஸ் காதலித்திருக்கிறான் என்பதை அமெலியாவின் உள்ளுணர்வு சட்டென்று உணர்த்தியது.

தனது ஒரே மகள் இறந்த சோகத்தை மறக்க அமெலியா தியானாவை அணைத்து வளர்த்தபோது வந்த அன்பு இப்படித் திசை திரும்பும் என்ற அவள் நினைக்கவில்லை.

பிரித்தானிய உயர் இராணுவ அதிகாரி ஒருத்தரின் மகன் அவர்களிடம் ஊழியம் செய்யும் ஒரு இந்தியப் பெண்ணின் காதலனா?.

அந்த நிமிடத்தில் அமெலியாவால் ஒன்றையும் சீராக சிந்திக்க முடியவில்லை. தியானாவின் குடும்பம் அவளைக் கவுரவக் கொலை செய்வது நிச்சயம்,அnலியாவின் கணவர் வில்லியத்திடம் தியானா-ஜேம்ஸ் பற்றிய உண்மைகளைச் சொன்னால்; என்ன நடக்கும்? வில்லியம் மிகவும் நல்ல மனிதன். ஆனால் அவர்,இந்தியாவை ஆளும் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் அதி உயர்ந்த இராணுவத் தளபதிகளில் ஒருத்தர்.அவரின் மகன், இந்தியக் கலாச்சாரத்தில் தீண்டத் தகாதவர்களாக நடத்தப் படும் தியானாவின் குடும்பப் பெண்ணைக் காதலித்ததை ஏற்றக்கொள்வாரா, தியானாவின் குடும்பத்தையே ஊரை விட்டுத் துரத்துவாரா?அமெலியா தனது கணவரையும், தனது அன்பு மகனின் குழந்தையைத் தாங்கும் தியானவையும் நினைத்து இரவிரவாகத் தனியாக இருந்து அழுதாள்.

தாய் தகப்பனிடம் எதுவும் சொல்லவேண்டாம் என்ற அமெலியா,தியானாவுக்குக் கட்டளையிட்டாள்.அவசர அவசரமாகத் தன்னுடைய நெருங்கிய சினேகிதியிடம் உதவி கேட்டாள். தியானா பற்றி உண்மை அத்தனையையும் சொல்லவில்லை. அவளின் தந்தைக்கு விருப்பமில்லாத ஒருத்தனை தியானா விரும்பியதால், தியானாவின் உயிருக்கு அவளின் குடும்பத்தால் ஆபத்து என்றுமட்டும் சொன்னாள்.
தங்களுக்கு விரும்பியதைத் தங்கள் மகள் செய்யாவிட்டால் அவளைக் கொலை செய்யத் தயங்காத சில இந்தியரை அமெலியாவுக்குத் தெரியும்.தியானாவைக் காப்பாற்றுவது அவளது தலையாய கடமையாயிருந்தது.

ஆங்கில அறிவுள்ள தியானாவை ஏதும் கன்னியாஸ்திரி மடத்தில் சேர்த்தால் அங்கு அவள் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றக் கொடுக்க முடியும் என்று அமெலியா தன் சினேகிதிக்குச் சொன்னாள்..
அவர்களிருக்கும் இடத்திலிருந்த பல நூறு மைல்களுக்கப்பால் தியானா அனுப்பப் பட்டாள்.

அவளின் பெற்றோர், அவளைப் பற்றிய விடயம் மற்றவர்களுக்குத் தெரிய முதல். அவள் தொலைந்தது பெரிய காரியம் என்பது போலிருந்தது அமெலியாவுக்குத் தெரியும். ஆனாலும், அந்தப் பெற்றொர்கள்.’தங்கள் மகள், தூரத்திலிருக்கும் தங்களின் சொந்தக்காரரின் வீட்டுக்குப் போயிருப்பதாக மற்ற வேலைக்காரர்களுக்குச் சொன்னார்கள் என்பதும் அமெலியாவுக்கத் தெரியும். காலக்கிரமத்தில்,தியானா பற்றிய ஒரு தகவலும் தெரியாத அவனின் பெற்றோர்,தியானா சென்ற இடத்தில் அவளுக்குக் கல்யாணம் ஆகி விட்டதாகவும் அவளின் பெற்றோர்கள் சொல்லத் தொடங்கியது அமெலியாவுக்க நிம்மதியாகவிருந்தது.

1918ம் ஆண்டு ஆரம்பித்த,ஸ்பானிஸ் வைரஸ் என்ற கொடிய கிருமியால் உண்டான தொற்று நோயால் பல்லாயிரம் இராணுவ வீரார்கள் இறக்கத் தொடங்கினார்கள். வைரஸ் பொது மக்களுக்கும் பரவியது. முதலாம் உலகப் போரும் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்தது. போர்வீரர்கள் மட்டுமல்லாது,பொது மக்களின் இறப்பும் பொருளாதார நெருக்கடியும் போரை ஒரு முடிவுக்குக் கொணடு;வரும் அறிகுறிகளைக் காட்டின.

அமெலியாவின் அருமை மகன் இறந்து ஆறுமாதங்களில் தியானா ஒரு அழகிய பெண்ணைக் கன்னியாஸ்திரி மடத்தில் பெற்றெடுத்த செய்தி வந்தபோது, அமெலியா பெருமகிழ்ச்சி கொண்டாள்.தனது மகன் ஜேம்ஸின் ஞாபகமாகத் தன் பேத்தியாருக்கு ஜேன் என்று பெயர் வைக்கச் சொன்னாள். ஆனால் தியானாவைப் பற்றி எப்படித் தன் கணவருக்குச் சொல்வது? அவர் எப்படி அதை எடுத்துக் கொள்வார் என்று அவளுக்குத் தெரியவில்லை.

போர் முடிந்ததும், அவள் கணவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவதாகவிருந்தார்.அத்துடன் தங்கள் மகன்களுடன் இருவரும் இங்கிலாந்தில் வாழப்போவதாக அமெலியாவிடம் அவர் சொன்னார். அமெலியாவோ, தனது பேத்தி ஜேனையும் தியானாவையும் இந்தியாவில் விட்டுச் செல்ல விரும்பவில்லை.

போர் முடிவதற்கிடையில் எப்படியும் தியானாவையும் பேத்தியாரையும்பற்றி அவருக்கச் சொல்ல எண்ணியிருந்தாள்.அவர்களை எப்படியும் தங்களுடன் கூட்டிச் செல்ல அவரிடம் கெஞ்ச அவள் காத்திருந்தாள்.

ஆனால், தியானா,எக்காரணம் கொண்டும் தான் இந்தியாவை விட்டு நகரமாட்டேன் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள்.ஜேம்ஸ் பிறந்த, வாழ்ந்த பூமியில் அவர்களின் குழந்தையும் வளரவேண்டும் என்ற பிடிவாதம் பிடித்தாள். தியானாவுக்கு அப்போது வயது பதினேழு மட்டுமே. அமெலியாவின் பார்வையில் தியானா உலகம் தெரியாத அப்பாவியாகத் தெரிந்தாள்.தகப்னில்லாமல் ஒரு குழந்தைக்கத் தாயானவள்.கணவனையிழந்த விதவைகளைப் பராமரிப்பதைத் தவிர்க்க,கணவருடன் இறப்பது ஒரு கற்புள்ள மனைவியின் கடமை என்று,விதவைப் பெண்களைக் கணவருடன் எரிக்கும் கலாச்சாரத்தைக் கொண்டநாட்டில்,என்னவென்று வாழப்போகிறாள்?

இப்போது, கன்னியாஸ்திரி மடத்தில் தியானா படிப்பிக்கத் தொடங்கியிருக்கிறாள்.

; ஆனால் வாழ்க்கை முழுதும் அந்த வாழ்க்கை நீடிக்கும் என்ற என்ன உத்தரவாதம்?

அத்துடன், அமெலியாவின் கணவருக்கு உண்மை தெரிந்தால் தனது பேத்தியாரைத் தியானாவிடமிருந்த கைப்பற்றத் தயங்க மாட்டார் என்று தெரியும்.

அமெலியாவின் கணவர் விலலியம் இந்தியாவில் பெரும்பாலான காலத்தைக் கழித்தவர்.அமெலியாவை இந்தியாவில் சந்தித்து,காதல்கொண்டு,கல்யாணம் செய்து நான்கு குழந்தைகளையும் இந்திய மண்ணில் பெற்றெடுத்தவர்.ஆனாலும்,அவரது பத்தொன்பது வயதுக் கடைக்குட்டிப் பையனைப் போரில் இழந்தது அவரின் உளநலத்தை மிகவும் பாதித்து விட்டது.

இங்கிலாந்துக்குப்போய், தனது இருமகன்களுடனும் அவர்களின் வாரிசுகளுடனும் தனது எதிர்காலத்தைக் கடத்த நினைப்பதை அமெலியா புரிந்துகொண்டாள்.ஆனால் அமெலியாவால் தனது அருமை மகன் ஜேம்ஸின் மகள் ஜேன் இந்தியாவில் வாழ்வதைத் தாங்கமுடியாதிருந்தது.

1918ம் ஆண்டு போர் முடியும் தறுவாயில்,அமெலியா எதிhபார்க்காத இடி அவள் தலையில் விழுந்தது. இராணுவ அதிகாரியின் வேலை அடிக்கடி இராணுவ வீரர்களைச் சந்திப்பதும் அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கப் படுத்துவதுமாகும். அதைத்தான் அவர் செய்தார் அந்த அன்பான தலைவன்,தடிமல் காய்ச்சல் காரணமாக, ஒருநாள் சுருண்டு படுத்தார்.

மகன் ஜேம்ஸின் இறப்பின் துயர் அவரை வலுவிழக்கப் பண்ணியிருந்தது. சரியான நேரத்திற்குச் சாப்பிடாமல் ஜேம்ஸின் அறையில்போயிருந்த எதையோ படித்துக் கொண்டிருந்தார்.அவர்களின், மூத்த குழந்தைகள் இருவரும் வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்துத் தாய்தகப்பனைப் பிரிந்து சென்றபோதும்,தகப்பன் மாதிரியே தானும் ஒரு இராணுவத் தளபதியாகவரவேண்டும் என்று படித்த தனது மகன் ஜேம்ஸ் அவரது நினைவிலும் கனவிலும் நிறைந்து நின்றான்.அன்று,ஜேம்ஸ் அறையில் படுத்திருந்தார். அடுத்தநாள் அவரின் உடல்நிலை மோசமாகவிருந்தது.

என்ன வருத்தம் என்று மற்றவர்கள் புரிந்துகொள்ள முதல்,இந்தியா,’ஸ்பானிஸ் புளு’ என்ற நோயால் பல்பலாயிரம் உயிர்களை இழந்து கொண்டிருந்தது.பெருமபாலானவர்கள் 20-40 வயதுக்குட் பட்டவர்கள்.பம்பாய் மட்ராஸ் போன்ற இடங்களில்’ஸ்பானிஸ்புளு கோர தாண்டமாடியது.

தலையிடி காய்ச்சல்காரணமாகத் தனது மகனின் அறையிலுள்ள படுக்கையில் விழுந்த வில்லியம் ஹரிஸன் என்ற இராணுவ தளபதி எழவேயில்லை.

அமெலியா மனமுடைந்தாள். தனது அன்புககணவன் ஒருசில தினங்களல்,; நேற்றைய சரித்திரமானதும் துடித்துப் போனாள்.அந்த நோய் இந்தியாவில் மட்டும் 17-18 இலட்சம் மக்களைப் பலி கொள்ளப் போகிறது என்பதை யாரும் அன்று எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவிலிருந்த பல்லாயிரம் பிரித்தானியர்கள்,தாய் நாடு திரும்பத் துடித்தார்கள்.

ஆனால் பிரயாணக் கப்பல்கள் நிரம்பி வழிந்ததால், எல்லோரும் அவர்கள் நினத்த மாதிரி இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.

கணவர், குழந்தைகளின்றி,இந்தியாவில்த தனியாகத் தவித்த அமெலியா,துனது பேத்தியாருடன் தியானாவையும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லத் துடித்தாள்.

தியானாவுக்க நாட்டு நடப்பு தெரிந்தது. பயங்கரமான தொற்றுநோயால் மக்கள் இலையானாக விழுந்து மரிணித்துக் கொண்டிருந்தார்கள்.

அமெலியாவின் கெஞ்சலுக்கு அடிபணிந்து தியானா குழுந்தையுடன் வந்தாள்.

அமெலியா இந்தியாவை விட்டுப் போகமுதல்,அவளின் பேத்தியாரைக் காட்ட வந்ததாகச் சொன்னாள்.ஆனால் தியானா இந்தியாவை விட்டுப்போகத் தயாராகவில்லை என்று அழுத்தமாகச் சொன்னாள்.
அமெலியாவின் ஆத்திரம் எல்லை கடந்தது.’ எனது பேத்தியை இங்கு பரவும் தொற்று நோய்ககுகப் பலியாக்க நினைப்பது அன்புள்ள தாய் செய்யக் கூடிய ஒரு நல்ல காரியமா’ அமெலியா சோகத்தில் வெடித்தாள்.

குழந்தை ஜேன் பாட்டியைப் பார்த்துக் கை அசைத்துச் சிரித்தபோது அமெலியாவின் மகன் ஜேம்ஸ் சிறுகுழந்தையாக முன்வந்து நிற்பதுபோலிருந்தது.அமெலியா அந்தக் குழந்தையைப் பார்த்துக் கதறிக் கதறி அழுதாள்.

‘தியானா,நீ ஒரு அன்பான தாய் என்று தெரியும்.எனது மகனை உன் மனதில் வைத்து வாழ்கிறாய் என்ற தெரியும். ஆனால் நானும் ஒருதாய், எனது மகனின் மகளை இங்கு விட்டுச் செல்ல என்னால் முடியாது.நானும் இங்க இருந்த எல்லோரும் இந்தக் கொடிய தொற்று நோயால் மடிந்து விடுவோம்.’ அமெலியாவின் கதறல் தியானாவைச் சிந்திக்கப் பண்ணியதோ என்னவோ, ஒரு சில நிமிடங்கள், அமெலியாவைக் கண் கொட்டமல் பார்த்தாள் தியானா. அவளின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டிக் கொட்டிக் கொண்டிருந்தது.

தியானா தனது ஆருயிர் செல்வமான ஜேனை அமெலியாவிடம் நீட்டினாள். ‘ஜேம்ஸ்,பிறந்த, வாழந்த இந்த இந்திய பூமியை விட்டு நான் நகரமாட்டேன்.’தியானா அழுத்தமாகச் சொன்னாள்.அமெலியா தனது பேத்தியை வாங்கிக் கொண்டதும், தியானா மின்னலென அந்த இடத்திலிருந்து மறைந்து விட்டாள்.

இங்கிலாந்துக்கு வந்த பேத்தியுடன் வந்த அமெலியா தனது இருமகன்களுக்கும் அவர்களின் சகோதரனின் மகளைக் காட்டினாள். குழந்தையின் தாய் யார் என்று அமெலியாவின் மகன்மார் கேட்கவில்லை. ஏனென்றால் காலனித்து ஆளுமைகள் இந்திய உயர்வர்க்கத்துப் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது பரவலான’இரகசியம்’.

ஜேம்ஸ் மாதிரியோ சிரிக்கும் நீலக் கண்களுடைய அந்தப் பேரழகு பாட்டியினதும் பெரியப்பாக்களினதும் அமரிமிதமான அன்பில் வளர்ந்தது.

தியானாவுக்கு எழுதிய கடிதத்தில் உனது மகள் எந்தக குறையுமில்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஓரு காலத்தில் உனது மகளுக்குப் பெண்குழந்தை பிறந்தால்,அந்தக் குழந்தைக்கு உனது பெயரை வைப்பேன்’; என்று அமெலியா எழுதினாள்.

ஜேன் வளர்ந்தாள்.அவளுக்கு அவளின் தாய தகப்பனின் காதல் பற்றிய கதையை அமெலிய சொன்னாள்.தகப்பனின் அகால மரணம் பற்றிச் சொன்னாள். ஜேன் எழுதப் படிக்கும் காலம் வந்ததும் தனது தாய் தியானாவுடன் நீடித்த தொடர்பில் மகிழ்வு கண்டாள்.

தியானா தனது வாழ்க்கையை ஏழைப் பெண்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதில் ; கழித்தாள்.ஜேனும் தனது தாயைப்போலவே ஆசிரியையாக வரவேண்டும் என்ற ஆசையைச் சொன்னாள்.
ஜேன் எத்தனையோதரம் தனது தாய் தியானாவுக்கு எழுதிக் கேட்டும்; தியானா லண்டனுக்கு வரவில்லை. தனது படிப்பு முடிந்ததும்,தனது தாயைப் பார்க்க இந்தியா போகப்போவதாக ஜேன் தனது பாட்டிக்குச் சொன்னாள்.

1939ம் ஆண்டு,ஜேன் தனது இருபத்தியோராவது வயதில் தனது காதலனை பாட்டியாருக்கு அறிமுகம் செய்ய அழைத்து வந்தாள்.அவனும் ஜேன் மாதிரியே ஒரு ஆசிரியன். இனபேதமற்ற உலகத்தையுண்டாக்கப் பாடுபடும் ஒரு சமத்துவவாதி! தொழிற்; கட்சி என்ற அரசியல் கட்சியிலிருப்பதாகவும் காலனித்துவ நாடுகளின் சுதந்தித்துற்குப் பாடுபடுவதாகவும் சொன்னான்.தனது பேத்தி ஜேன் தனது பூவீகம் பற்றித் தனது அன்பனுக்குச் சொல்லியிருக்கிறாள் என்ற அமெலியாவுத் தெரிந்தது.

ஜேனின் திருமணத்துக்கென்றாலும் தியானா வரவேண்டும் என்ற அமெலியா விரும்பிளாள். ஆனால் அது நடக்கவில்லை. ஹிட்லரின் கொடுமையை அடக்க,இரண்டாம் உலகப்போர் மூண்டது. பிரயாணங்கள் தடைசெய்யப் பட்டன.
பிரித்தானிய காலனித்துவ நாடான இந்தியா இன்னொருதரம் ஆயிரக் கணக்கான இiளுஞர்களைப் போர்க்களத்தில் பலியிட்டது. ஹிட்லரின் குண்டுகள் லண்டனைத் துளைத்தெடுத்தன.

அமெலியாவின் குடும்பம், லண்டனை விட்டு வெளியேற முயன்ற அன்று வந்து விழுந்த ஹிட்லரின் குண்டு, வீட்டிலிருந்த அமெலியாவைப் பலி கொண்டது.

ஜேனும் அவளது கணவனும்,காலனித்துவ நாடுகளின் விடுதலைகளுக்கான தொழிற்கட்சிக் கூட்டத்திற்குப் போயிருந்ததால் அன்று அவர்கள்; வீட்டில் இல்லாதபடியால் அவர்கள் தப்பினார்கள்.
1942ல் போர் முடிந்ததும். தனது மூத்த மகனைத் தனது தாய் தியானாவுக்குக் காட்ட இந்தியாவுக்குச் செல்லும் ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தபோது, நாற்பதே வயதான தியானாவின் மரணச் செய்தி வந்தது.

தன்னைப் பெற்றெடுத்த தாயைக் காணாத சோகம் ஜேனை வாட்டியது.தனக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கவேண்டும் அந்தக் குழந்தைக்குத் தன் தாயின் பெயரை வைக்கவேண்டும் என்ற ஜேனின் ஆவல் அவர்களின் அடுத்த குழந்தையும் ஆணாகப் பிறந்தபோது தவிடு பொடியாகிறது.

1970 ஆண்டு தனது மூத்தமகனு;க்கு மகன் பிறந்தபோது, அந்தக் குழந்தை அச்செடுத்தமாதிரி தனது தகப்பன் ஜேம்ஸ்போல் இருப்பதைப் புகைப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆச்சரியப் பட்டாள் ஜேன். அந்தக் குழந்தைதான் டியானாவின் தகப்பன்,டேவிட் மாஸ்டன்.

‘நான் வளர்ந்து வரும் காலத்தில் என்னிடம் உனது பாட்டி பல கதைகள் சொன்னாள்.உனக்குப் பெண்குழந்தை பிறந்தால் எனது தாயின் பெயரை,எனது கொள்ளுப் பாட்டியின் வைக்கமுடியுமா’ என்று தனது பேரனைக் கெஞ்சினாள் ஜேன்.

1997ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த பல பெண்குழந்தைகளக்கு,அக்கால கட்டத்தில அகால மரணத்தை அடைந்த பிரித்தானிய இளவரசி டையானவின் பெயரைப் பலர் வைத்து மகிழ்ந்தார்கள்.

டியானாவின் தகப்பன்,’எங்கள் குழந்தைக்கு டியானா என்ற பெயரை வைக்கலாமா?’ என்ற தனது மனைவியைக் கேட்டார். அவளுக்குத் தனது கணவனின் பூவீகம் தெரியாது.அதைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமும் அவருக்கிருக்கவில்லை.ஆனாலும் அழகான பெயர் என் ஒத்துக் கொண்டாள். டியானாவைக் கொஞ்சும்போது தனது கொள்ளப் பாட்டியான அழகிய தியானாவின் ஞாபகம் அவருக்கு வரும். டியானாவின் இருபத்தி ஓராவது பிறந்த தினத்திற்கு, அவளுக்குப் பிடித்த மரக்கறிச் சமயலை வீட்டில் பரிமாற அவர் முயன்றபோது, அங்கு வந்திருந்த லோகனுக்கம் தனது மகளுக்கும் உள்ள காதல் அவருக்கு எள்ளளவும் தெரியாது.

அவனைக் கண்டதும் அவளின் முகத்தில் வந்த மாற்றம் அதைத் தொடர்ந்து அவளின் தர்மசங்கடம் என்பனவற்றின் காரணமும் அவருக்குத் தெரியாது.

ஆனால் அடுத்த நாள் அதிகாலையில் தனது தகப்பனிடம் சொல்லாமல் கொள்ளாமல் பல்கலைக் கழகத்திறக டியானா அவசரமாக ஒடியது அவரின் மனதைக் குழப்பியது.

சமயற்காரனாக வந்த லோகனுக்கும் டியானாவுக்கும் காதலா? இந்தக் கேள்வி அவரின் மனதில் சம்மட்டியாக வந்து அடித்தது.சட்டென்ற தனது சயற்காரக் கொள்ளுப் பாட்டியும் அவளது காதலானான தனது கொள்ளுப் பாட்டன்,பிரித்தானியக் காலனித்தவ,இராணுவத் தளபதியின் மகன் ஜேம்சும் அவரின் நினைவிற் தட்டினார்கள்.

அடுத்த நாள் டியானாவின் பல்கலைக் கழகத்திறகு அண்மையில் அவருக்கு ஒரு கோர்ட் கேஸ் இருந்ததால் அவர் அந்தப் பக்கம் வந்தார். டியானாவின் பிறந்த தின விழாச் சமயலுக்கு ஒழுங்க செய்த ரெஸ்ட்ரோரண்ட் முதலாளியும் அவரின் நண்பருமானவரிடம் லோகளைப் பற்றி விசாரித்தார்.

லோகன் சமயற்காரன் இல்லை. தனது மகனின் சினேகிதன். லோகன் ஒரு மருத்துவ மாணவனாக இருக்கிறான்.1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப் பட்ட இன ஒழுpப்பு நடவடிக்கையால் அனைத்தையும் இழந்த தமிழ் அகதிகளாக லண்டனுக்;கு வந்த இலங்கையைச் சேர்ந்த ஒரு பல்கலைக் கழக முனைவரின் மகன் என்றும் சொன்னார். அத்துடன், லோகன்,தற்செயலாகத் தனது நண்பனைப் பார்க்கக் கடைக்கு வந்தபோது, வெளியில் ஆர்டர் போட்டவர்கள் வீடு;களுக்கு அனுப்ப போதிய ஆட்கள் இல்லாதபடியால் தனது மகனுடன் லோகன் வந்ததாகச் சொன்னார்.

ஆனால். ஓரு சமயற்காரனுடன் தனக்குக் காதல் இருப்பது தெரிந்தால் என்ன நடக்கும் என்ற பயத்தற்தான் டியானா அதிகாலையில் வீட்டை விட்டு ஓடினாள் என்ற நினைத்தபோது அவராற் தாங்க முடியவில்லை. ‘எனது பாரம்பரியம் ஒரு இந்திய சமயற்காரப் பெண்ணுடன் ஆரம்பிக்கிறது,சாதி சமய,இன மத பேதங்களுக்க எதிராக எனது கொள்ளுப் பாட்டி அமெலியா வாழ்ந்தார் பாட்டி ஜேனும் அவள் கணவரும் தொழிற் கட்சி மூலம் காலனித்துவத்திவ நாடுகளின விடுதலைக்குப் போராடினார்கள். நான் எனது வாழ்க்கையையே மனித குல சமத்துவத்திற்காகச் சமர்ப்பித்துப் போராடுகிறேன்.உனது தாய் வழி உறவினர்களுக்கு உனது எதிர்காலத் துணையைத் தேடிக் கொண்டதைக் கேள்வி கேட்க எந்த உரிமையுமில்லை. லோகனையும் உன்னையும் இணைத்துவைத்து மகிழ்வதைவிட வேறு எந்த மகிழ்வும் எனக்கில்லை என்பதை உனக்குச்; சொல்லி உன்னைத் தேற்றத்தான் ஓடிவந்தேன’; என்பதை டியானாவுக்குச் சொல்லி,மகளுக்கு முத்தமிட்டுச் சென்றார்!

தனது அறைக்கு வந்ததும்.தனக்காகக் காத்திருந்து லோகனைக் கட்டியணைத்த டியானா பல முத்தங்ளைச் சொரிந்தபோது அவன் ‘ஐ லவ் யு ரு டியானா’ என்று அவளை அணைத்துக்கொண்டான். அவர்களின் காதலுக்குப் பின்னணியான 1918-2018 வருட சரித்திரம், டியானாவின் முத்தமழைக்குக்காரணம் என்பது லோகனுக்குத் தெரியாது. இன்னும் சில வினாடிகளில், அவர்கள் காதல் புரியும்போது, டியானா அதை லோகனுக்குச் சொல்லலாம.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *