சோளப் பூ

 

‘பாப்கான் வாலா’

மூன்று மாதமாகத்தான் அவன் பாப்கான்வாலா.

இந்தத் தொழிலை வேறு யாரும் செய்யாததால் போட்டிக்கு ஆளில்லாத தனிக்காட்டு ராஜா இவன்.

அப்பாவின் அகால மரணத்துக்குப் பின் ‘பி.காம்’ மோடு படிப்பை முடித்துக்கொண்டு சென்னையில் தன் தாய் மாமன் டிக்கெட் கிழிக்கும் சினிமா தியேட்டரில் ‘பாப்கார்ன் ஸ்டால்’ கான்ட்ராக்டரி டம் வேலை பார்த்தான்.

முதலாளி டி.என்.பி.எஸ்.சி எழுதி அரசு வேலை கிடைத்து சென்றுவிட்ட பிறகு இவனே தனியாக பாப்கான் பொரித்து விற்று முதலாளிக்கு வாரம் தோறும் வாடகை தந்தான்.

கொரோனாவால் சினிமா தியேட்டர்களில் வருமானம் இல்லை. சொந்த ஊருக்கே திரும்பினான்.

கொரோனா மனித வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை செய்ததைப் போல இவனையும் மாற்றியது.

பி.காம்., படித்தவன் அல்லவா..! அணுகுமுறை தெரிந்திருந்தான்.

வங்கியில் சுய தேவைகளுக்காக முதலீடு கேட்டு விண்ணப்பித்து

‘நடமாடும் பாப்கார்ன் வண்டி’ வாங்கினான்.

கடையில் ஒரே இடத்தில் நின்று பாப்கான் வியாபாரம் செய்ததைப் போல இல்லாமல் இது சற்று வித்தியாசமாக இருந்தது.

சரியாக இரண்டரை மணிக்கு சோளம் ஊறும் 10 லிட்டர் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பக்கெட் வண்டியில் ஏறி உட்காரும். தொடர்ந்து எண்ணை, காரப் பொடி, மசாலாப் பொடி என்று சுவையூட்டிகள் வரும். இரண்டே முக்காலுக்குள் முதல் ஈடு பொரியத் தொடங்கி வாசனை கிளம்பும்.

பாப்கான் வண்டி வரும் பின்னே பாப்கான்வாலா அடிக்கும் வெண்கல மணி ஓசை வரும் முன்னே!.

உப்பும் காரமும் மசாலா மணமும் கலந்த வாசனையை கிளப்பிக்கொண்டு மதியம் மூன்று மணிக்குப் புதிய பேருந்து நிலையத்தில் வண்டி நிறுத்துவான்.

அடுத்த ஸ்டாப், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கூடம்தான்.

சரியாக ஐந்து மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்டில் கோர்ட், ஏடிஎம் இரண்டுக்கும் இடையில் உள்ள மரத்தடியில் நிறுத்துவான். 6 மணி வரை அங்கு நல்ல வியாபாரம் நடக்கும்.

ஆறு மணிக்கு அங்கிருந்து நகர்ந்து, அம்பேத்கார் வீதி, சுந்தரனார் தெரு’ பூந்தோட்டம் , வடிவேல் நகர் என்று சுற்றிவிட்டுக் கடைசியில் காமராஜர் காலனியில் உள்ள தன் வீட்டை அடையும்போது மணி 8 அடிக்கும்.

சித்தாள் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிய அம்மா சமைத்து வைத்திருப்பாள்.

கோர்ட் வளாகத்துக்கு எதிரே பெரிய துணிக்கடைக்கும், இரும்புக் கடைக்கும் நடுவில் பிளாட்பார விளிம்பில் ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பி நிற்கும் தூங்கு மஞ்சி மரத்தடியில் நாலுக்கு மூன்று டைனிங் டேபிள்மேல்.. மல்லிகை, முல்லை, சாமந்தி என பூப் பந்துகளும் குவியல் குவியலாய் உதிரிப் பூக்களும், அரும்புகளும், நேர்த்தியாய் சின்னப் பீங்கான் பானையில் நிற்க வைத்த பெங்களூர் ரோஸ்களுமாய்க் கண்கவர, பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து தொடர்ந்து பூ தொடுத்துக் கொண்டு இருக்கிறாள் மலர்மங்கை.

ஒரு மாதத்திற்கு முன்பு வரை இவளும் இவள் அம்மாவுமாய் சேர்ந்துதான் இந்த இடத்தில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். ‘வயசுக்கு வந்த பெண்ணுக்கு நாலு காசு சேர்க்கணுமே!’ என மனம் உந்த, ஒரு மாதத்திற்கு முன்னர்தான் தியேட்டர் முக்கூட்டில் தாயார்காரி தனியாகக் கடைபோட்டாள்.

அதன் பிறகு ஒரு மாத காலமாக மலர்மங்கை மட்டும் இங்கே வியாபாரம் செய்கிறாள்.

வழக்கமாய் தன் பாப்கார்ன் வண்டியை நிறுத்தும் மரத்தடியில் ஒரு டாங்கர் லாரி நின்றதால் எதிர் சாரியில் பூக்கடைக்குப் பக்கத்தில் வண்டி நிறுத்தி மணியடித்தான் வாலா.

கோவில் மணியின் சுருதியோடு இணைந்து தோத்திரம் சொல்லும் குருக்களைப் போல பாப்கான் வாலாவின் மணியோசையோடிணைந்து “இன்னிக்கு வழக்கதை விட லேட்டு போலருக்கு..?” என்ற கேள்வி இன்னிசையாய் அவன் காதில் ஒலித்தது.

யாரெனச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு.. மலர் மங்கையைப் பார்க்க, லாகவமாய் மலர் தொடுத்துக் கொண்டிருந்த அவள் நாணிக் கோணி வெட்கித் தலைகுனிந்தபடி ஓரப் பார்வை பார்த்தாள்..

‘கிட்டத்தட்ட மூன்று மாதங்களாய், தான் வரும் நேரத்தைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறாள் இந்தப் பெண்!’ என்பதை நினைத்தவுடன், தான் செய்யும் குறும்பை யாரேனும் பெரியவர்கள் பார்த்துவிட்டால் குழந்தை எப்படி வெட்கப்பட்டு நாணிக் கோணி, அந்த இடத்திலிருந்து விலகி ஓடி தன்னை மறைத்துக் கொள்ளுமோ, அதுபோல பாப்கான் வாலா வேக வேகமாக வண்டியைத் தள்ளிக் கொண்டு போயே போய்விட்டான்.

ராத்திரி முழுக்க தூக்கம் இழந்தான் வாலா. “இன்னிக்கு வழக்கதை விட லேட்டு போலருக்கு..?” என்ற கேள்வியை எத்தனை ஆயிரம் முறை மனதிற்குள் உச்சரித்திருப்பானோ அவனுக்கே தெரியாது.

எந்த வேலையும் ஓடவில்லை. வழக்கமாகப்புறப்படும் நேரத்துக்கு முன்பே கிளம்பி, பஸ் ஸ்டாண்ட், பள்ளிக்கூட முகப்பு என எங்கும் நிற்காமல் மூன்று மணிக்கெல்லாம் பூக்கடையின் முன் வந்து நின்றான் வாலா.

“இன்னிக்கு ரொம்ப சீக்கரம் வந்துட்டாப்ல…!” முதல் நாளை விட கேள்வியில் நெருக்கம் உணர்ந்தான் வாலா.

முதிர்ந்த இளமஞ்சள் சரக்கொன்றை இதழ்கள், தன் ஊடாய்த் புகுந்து செல்லும் காற்றைக் காரணம் காட்டி, வண்டுகள் மது உண்டு

ம‌யங்கும் நறுமணமிக்க அன்றலர்ந்த புதிய மலர்களை விட்டு விலகி, மரத்தைச் சுற்றிலும், அங்குமிங்குமாய் உதிருமே..; அது போல , மூன்று பக்கக் கண்ணாடி அடைப்போடு இருந்த பாப்கான் வண்டியின் அடித்தட்டு வைப்பறையிலிருந்த சிறிய காஸ் சிலிண்டரிலிருந்து தொப்புள் கொடியாய் மேலெழும்பிய செந்நிற ரப்பர் குழாய் ஊட்டிய எரிவாயுவை மேற்கூரையில் தொங்கிய ஓவனுக்குள் பாய்ச்சிய உயர் வெப்பத்தால் ‘பட..பட்..பட்ட்..பட்..’ டெனப் பொரிந்து புகைகிளம்ப சோளப்பொறி ஓவனைச் சுற்றிப் பூவாய் உதிர்ந்து உப்பும் காரமுமாய் மணம் வீசியது.

பட்டாசுச் சரம் ‘ பட்…படார்…பட.பட்..’ டென வெடித்துப் புகை கிளப்பி கந்தக வாசனையைக் கிளப்புமே அதையும் நினைவூட்டியது அந்தக் காட்சி

அன்றலர்ந்த நறுமலர்களை கொய்வதற்கு முன், இலைச் சருகுகளோடு பரவலாய் உதிர்ந்து கிடக்கும் இதழ்களை நந்தவன மூலையில் குவிக்கும் ‘கோவில் கூட்டி’ போல், அந்த பாப்கான் இளைஞன் கையடக்கமான பிளாஸ்டிக் முறத் துடுப்பால் சோள பூக்களை வலது எதிர் மூலையில் குவித்தான்.

“என்ன கேட்டீங்க..?”

“….ங்க…வேண்டாமே..!”

“ஓ..கே!… சொல்லு? என்ன கேட்டே.?”

அங்கும் இங்கும் கண்களை ஒட்டியபின் “இன்னிக்கு ரொம்ப சீக்கிரம் வந்துட்டாப்ல…..” என்றாள். அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு பளிச்சென ரகசியமாய் ‘ஐ லவ் யூ!’ சொல்வதைப் போல் இருந்தது மலர்மங்கையின் குரல்.

பல்வேறு வண்ணங்களில் சிறிதும் பெரிதுமாய், சங்கீதக் குறியீடுகளும் கொடிகளும், இதயங்களும் செவ்விதழ்களுமாய் ‘கொலாஜ்’ செய்யப்பட்டு, அழகாய் நின்ற கூம்பு அடுக்கிலிருந்து ஒற்றைக் கூம்பை உருவி எடுத்து, குட்டி முறத்தால் பொங்கப் பொங்க நிறைத்துப் பாப்கான் வாலா அன்பாய்க் கொடுத்த ‘சோளப் பூவை’; விரல் தொட்டுப் பெற்றுக் கொண்டாள் மலர்மங்கை.

விற்பனைக்காகப் பாங்காய் தண்ணீர்ப் பானையில் இலைகளும் முட்களுமாய் நின்ற கிளை உச்சியை அலங்கரித்த ‘பெங்களூர் ரோஸ்’கள் எல்லாம் ‘தனக்கே… போட்டியாய்’ வந்த ‘சோள பூவின்’ துணிச்சலைப் பாராட்டி மகிழ்வோடு மலர்ந்து வரவேற்றன.

(08.03.2022 மக்கள் குரல் நாளிதழில் பிரசுரமான சிறுகதை) 

தொடர்புடைய சிறுகதைகள்
உரத்து ஒலிக்கும் பெண்ணியம் என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர் சாரதா. சாரதா திருமணமாகி தன் கணவரோட கிராமத்துக்கு வருகிறாள். கிராமத்தில் வீட்டு வாசலின் முன் கார் நிற்க இவர் முதலில் இறங்க கார் ஓட்டிய கணவர் அடுத்து இறங்கினார். அம்மா ஆரத்தித் தட்டு எடுக்க உள்ளே ...
மேலும் கதையை படிக்க...
‘கடன் அன்பை முறிக்கும்!’ ‘கடன் கேட்காதீர்!’ ‘இன்று ரொக்கம் நாளை கடன்!’ இப்படியெல்லாம் போர்டு மாட்டிக்கொண்டு நிறைய மளிகைக் கடைகளும், பல சரக்குக் கடைகளும் இருந்தன அந்தத் தெருவில். அதே தெருவில் புதிதாக ஒரு மளிகைக் கடை துவங்கினர் எம் பி ஏ பட்டதாரி அமலன். அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
மாடிப் பால்கனியிலிருந்து ஹரிணியின் பெற்றோர் எதிர் வீட்டு ரோமியோ 'ஹரனை'க் கண்காணித்தார்கள். மகள் ஹரிணி ஆபீஸ் கிளம்புகிற போது அவளைப் பார்த்து ஹரன் செய்யும் சேட்டைகளை செல்போனில் வீடியோ எடுத்தார் தகப்பன் குரு. "ஹரனோட தகப்பனுக்கு இந்த வீடியோவை அனுப்பி. இதுக்கு ஒரு முடிவு ...
மேலும் கதையை படிக்க...
மகாத்மா காந்தி சிலை கம்பீரமாக நின்றது. சிலைக்கு எதிரே ஒரு கடை உதயமானது. திறப்பு விழா அன்றுதான் தெரிந்தது அது ஒரு மதுக்கடை என்று. மது அருந்திவிட்டு மகாத்மா காந்தி முன் களித்தனர் மதுப் பிரியர்கள். முகம் சுழித்தனர் ஊரார். கலெக்டருக்கு மனு போட்டார்கள். அரசியல் செல்வாக்கு கலெக்டரின் ...
மேலும் கதையை படிக்க...
அமிர்தா ஆவி பறக்கும் ஸ்நாக்ஸ மற்றும் தேநீரோடு வரும்போது எல்லாம் மானேஜர் கரிகாலம் முகம் சுழிப்பார். அமிர்தா அலுவலக துப்புறவுப் பணியாளர். அவள் கணவன் அலுவலகத்துக்கு டீ, ஸ்நாக்ஸ் சப்ளை செய்பவன். இவள் வருகைக்குப் பின் அலுவலக ரெஸ்ட் ரூம் அனைத்தும் ஆபரேசன் ...
மேலும் கதையை படிக்க...
"இதென்ன வீடா சினிமா தியேட்டரா..??" நந்தினியின் எதிர்பாராத தாக்குதலில் மூவரும் நடுங்கினார்கள். குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டார்கள். "என்னதான் மனசுல நெனச்சிக்கிட்டிருக்கீங்க.. நீங்க செய்யிறது உங்களுக்கே நல்லாருக்கா.." வால்யூமைக் குறைத்தார்கள். "எதிர்த்த வீட்டு கோபு சார் மாதிரி டிவியே கூடாதுன்னு கண்டிப்பா இருந்திருக்கணும். அவர் அப்பிடி ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ...” “சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்...” “கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்...” “ஓ... தாராளமா...!” “எப்ப கூப்பிடலாம்...?” “இப்பவே நான் ஃப்ரீ தான்... காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க...” “காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?” “காதல் ...
மேலும் கதையை படிக்க...
“டாக்டர் பசுபதி. பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணரின் வருகைக்காக அந்த அந்த முதியோர் இல்லம் தயாராக இருந்தது. “ரொம்ப கைராசி டாக்டராம்..” “நோயாளிகளை ரொம்ப அக்கரையோட கவனிப்பாராம்…” “அவரோட பிஸி ஷெட்யூல்ல நம்ம இல்லத்துக்கு வாரம் ஒருநாள் சேவை செய்ய வர்றது நம்ம அதிர்ஷ்டம்.” இல்லம் முழுதும் இதே ...
மேலும் கதையை படிக்க...
ஆங்கில விரிவுரையாளர் பரதன் போர்டிகோவில் உட்கார்ந்து ஆங்கில நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். வாசல் கேட்டுக்கு வெளியே நின்று யாரோ அழைப்பு மணி அடித்தார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்து யாரென பார்வைக்குத் தெரியாததால் “கதவு திறந்துக்கிட்டு உள்ளே வாங்க..” என்று குரல் கொடுத்தான் பரதன். ஒரு மாணவன் ...
மேலும் கதையை படிக்க...
கங்கா மிகவும் டென்ஷனாக இருந்தாள். சமீபத்தில் பிரசவத்தின் போது இறந்த வாணி கண் முன் தோன்றினாள். தலைப் பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என்று தன் மாமியார் கூறியது நினைவில் நிழலாடியது.. “டாக்டர்...ஒண்ணும் பயமில்லையே…” கங்காவின் உடல் நடுங்கியது. “நார்மல் டெலிவரிதான் ஆகும். ...
மேலும் கதையை படிக்க...
நுனிப்புல் – ஒரு பக்க கதை
வியாபார வெற்றி ரகசியம்
ஆடி அடங்கல் – ஒரு பக்க கதை
மாற்றம் – ஒரு பக்க கதை
மைண்ட்ஃபுல்னஸ் – ஒரு பக்க கதை
அடிக்ட் – ஒரு பக்க கதை
காதல் கத்தரிக்காய் – ஒரு பக்க கதை
எக்ஸசைஸ் – ஒரு பக்க கதை
வெறியேற்றல் – ஒரு பக்க கதை
அரைகுறை ஆன்லைன் அறிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)