கண் தெரியாத காதல்?

 

“திங்கட்கிழமை பாக்கலாம். சீயூ.” பஸ்ஸை விட்டு இறங்கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய் விட்டது.

பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந்தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.”

“அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”

“:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பார்க்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளா வேலை செய்யும் ஒரு குரலை ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்த முறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தெரிஞ்சுடும்.”

“சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள்.

“சரி, இன்னிக்கு சனிக்கிழமை.ஆபிஸ்லே வேலையிருக்கோ?”

“இல்லே கண்ணுசாமி பேங்க் வரைக்கும் போகணும்.”

“அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?”

“ஓயெஸ் போலாமே.”

“என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?”

“இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.”

“சாரி மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?”

“அட. நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக்காங்க. திடீர்னு முடிவாயிட்டா பணம் தேவைப்படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சாக் கேட்டு வைப்போமேன்னு.”

“வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.”

“ஒம்பதரை ஆறது.”

“இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் திறக்கறதுக்கு.”

“ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போனா சரியாயிடும்.”

“அதுவும் சரிதான். ஆபிஸ் இன்னிக்கி திறந்திருக்குமில்லே?”

“ஜி.எம் வருவாரு ப்யூன் நடராஜன் கூட வந்திருப்பார்.”

“அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங்கறீங்க. சரி போயிடலாம்.”

தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்ல சிவந்த உடல். கட்டான தேகம். எவரையும் வசிகரீக்கும் தன்மை.

ஆபிஸ் வந்துவிட்டது.

“அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க”

“என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்சப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன். ரோட்டைக் கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன்னாங்க அது சரின்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாம்னு ரெண்டு பேரும் வந்தோம்.”

“பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?”

“அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கிரமா வாங்க.”

காசை பர்சிலிருந்து எடுக்கப் போனார் கண்ணுசாமி.அதற்குள் தாரணியே கொடுத்தனுப்பினாள்.

“கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தெரியாதா?”

“பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தெரிஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தெரிஞ்சுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச்சல் மாதிரி வந்துச்சு. கண்ணு அப்ப நீல நிறமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனோ வீசின கல்லு என் கண்ணுலே பட்டுக் காயமாயிடுச்சு. ஆஸ்பத்திரிக்குப் போகாம எண்ணெயக் காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தெரிஞ்ச பார்வையும் சுத்தமாப் போயிடுச்சு. அப்புறம் நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. நான் இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்கு வெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணு தெரியாத நான் தனியாப் போக முடியாது .தம்பிதான் கூட்டிட்டுப் போகணும். அவம் பண்ற அட்டூழியம் சொல்லித் தீராது. சோறு போடற அம்மா ஒரு பக்கம் செத்துப் போற மாதிரி பேசுவா. தம்பி ஒரு பக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண்ணியக் குடிச்சுட்டே காலத்த ஓட்டினேன். வாரத்துக்கொரு தாட்டி அப்பா டவுன்லேர்ந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்ச நாள் அவரால சகிக்க முடியாம கிருஸ்டியன் ஹாஸ்டல்ல சேத்தாரு.அங்கதான் பத்தாவது வரைக்கும் படிச்சேன் சேர் பின்ற தொழில கத்துக் கொடுத்தாங்க. பெரிய பெரிய ஆபிஸ்லே வேலை கிடைச்சது என்ன மாதிரி இருக்கறவங்கள வச்சு காண்ட்ராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லே தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்கள மாதிரி நாலு நல்ல சனங்க கூடப் பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அது சரி என்ற கத பெரிசு அது இன்னக்கித் தீராது. நடராசண்ணே வந்தாச்சு போலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்”

“ஆமா சாப்பிடுங்க. மணி பத்தரையாச்சு புறப்படலாம்.”

*****

பாங்கில் ஏகப்பட்ட கூட்டம்.

தாரணி, “கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?”

“இல்ல மேடம். பாஸ் புக் என்ட்ரி போடணும். நான் பாத்துக்கிறேன். நீங்க மானேஜரப் பார்த்துட்டு வாங்க.”

தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்ரியைப் போட்டு விட்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.

“கண்ணுசாமி போகலாமா?”

“என்ன மேடம் அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா?”

“இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம். அடுத்த வாரம் வரச் சொன்னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது.

“ஹலோ”

“நான் அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம் நீ உடனே புறப்பட்டு வா.”

“கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல்லே. ஆஸ்பத்திரிலே சேத்திருக்கா” நா புறப்படட்டுமா?”

“மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, நானும் கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?” என்று கண்ணுசாமி கேட்கவும், தாரணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆஸ்பத்திரி பக்கம் தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரை பார்க்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள் மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே, “சரி வாங்க.” என்று ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.

வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தனர்.

“அக்கா அப்பாவ ஐசியூலே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருபத்தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னோட நகை ஏதாச்சும் வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”

“என்னோட நகைய வச்சாக் கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவப் பார்க்க முடியுமா?”

“இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ண மாட்டா.”

“கண்ணுசாமி அப்பாவ ஐசியூலே வச்சிருக்காங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்க மாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழுலே போய் காந்திபுரத்திலே இறங்கி அங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?”

“மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்ன மாதிரி கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தெரிஞ்சா நான் ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?”

“அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத்தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தெரியல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிடலாமான்னு யோசனை பண்றேன்.”

“மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதை விட இதுதான் முக்கியம். இன்னும் வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம். நீங்க ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பார்த்துக் கட்டுங்க.” தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிரி கிருகிருத்துப் போனது. ஏதை நம்பி எதற்காக கொடுக்கிறார்.

“மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ண வேண்டாம் நா எந்த எதிர்பார்ப்புலேயும் இதைக் கொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவறதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காகக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.”

*****

பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியைப் பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் அப்புறம் சீர் செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒரு லட்ச ரூபாய் முதலில் கொடுத்து விட வேண்டும் என்று கண்டிசன் எல்லாம் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில் வைத்து அப்பாவைப் பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டாள்.

மாலை மணி நான்கு இருக்கும். பத்து நாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,

தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுச்சாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது.

“வாங்க கண்ணுசாமி. அப்பாவா?”

“ஆமாம்மா.”

அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள். கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. அன்று மட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா அன்று முழுக்க ஆஸ்பத்திரி வாசலிலே காத்திருந்து விசாரித்துக் கொண்டேயிருந்தார். இந்தப் பத்து நாளும் தினமும் ஒரு முறையேனும் வந்து விசாரித்து விட்டுச் செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

“எம் பையனுக்கு கண்ணுதான் குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாரிச்சுட்டான். ஒரு கல்யாணத்தையும் பண்ண வேண்டியது என்கடமை. ஆனா பார்வையில்லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப் பொண்ணு கட்டிக்க வருவா?”

தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது.

“அப்பா அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பண உதவி செஞ்சதுக்கு மட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந்தேன்.சரியா கண்ணு. ..சரி சரிங்களா?

“சரிதான்.” என்பது போல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள் மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை… 

தொடர்புடைய சிறுகதைகள்
திங்கட்கிழமை காலைச் சூரியன் கிளம்பி உஷ்ணத்தைக் கூட்டியது. துடியலூர் சந்தை நாள். ஆடு, மாடு வியாபாரம் செமத்தியாய் நடக்கிற நாள். இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்வது நரக வேதனை. சீதா தன் வயிற்றுப் பிழைப்புக்காக தினசரி பெரியநாய்க்கன் பாளையம் வரை சென்று பேக்டரி ஒன்றில் ...
மேலும் கதையை படிக்க...
மாலைநேரம். ஆரஞ்சு வண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான்.மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான் கூடவே ரகுவையும் நினைத்துக் கொண்டான். இம்மாதிரி வேலைகளுக்கு ரகுதான் லாயக்கு. அவனை எங்கே பார்ப்பது நாளொரு திருட்டும் ...
மேலும் கதையை படிக்க...
மாலை வெய்யில் சுத்தமாய் மறைந்தது. தெரு விளக்குகள் எரியத் துவங்கின் ஆற்றின் நீரோட்டம் கூட அமைதியாகவே இருந்தது. தூரத்தில் படித்துறை அருகே ஒன்றிரண்டு பேர்கள் துவைத்துக் கொண்டிருந்தனர். மஞ்சு, சுந்தரபாபுவின் மடியில் எழ மனமில்லாமல் படுத்திருந்தாள். “என்ன மஞ்சு. இருட்டாயிடுச்சே தனியா பயமில்லாம வீட்டுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது. “என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூடநிமிர்ந்து பார்க்காத செல்லாவும் அவள் மகள் சின்னியும் ஆளுக்கு இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக்கென்றிருந்து விட்டு இந்த வேலை செய்திருக்கிறானே? ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போனதும் படுவாவை உண்டு இல்லை என்று பண்ணிவிட வேண்டியதுதான். ஒழுங்கான படிப்பு ...
மேலும் கதையை படிக்க...
மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள். அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சு போட்டு காய்ச்சிய சோளக்கஞசி அடுப்பைச்சுற்றி பரவலாய் ...
மேலும் கதையை படிக்க...
குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ... தாத்தா!” ''அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு" "என்னடி ...
மேலும் கதையை படிக்க...
“உள்ள ராசப்பனிருக்கானுங்களா?” -வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய் கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான். வெய்யில் கண்ணைக் கரித்தது. பக்கத்து வீட்டு அங்காத்தாள். “சாமி ராசப்பா உன்ன எங்கெல்லாம் தொளாவறது போ. ஒரு மணி நேரமா சுத்துசுத்துன்னு சுத்தீட்டு வந்திருக்கம்போ.” “அது ...
மேலும் கதையை படிக்க...
“மத்தியானம் அலுவலகம் மும்முர வேலையில் இருந்தது. கம்பெனி ஜிஎம்மின் பிஏ பாலு அவசரமாய் ஏதோ ஸ்டேட்மென்ட் தயாரிப்பதில் இருந்தான். “ சார்! உங்களைப் பாக்க ஒரு பெரியவர் வந்திருக்கிறார்.” ஆபிஸ் ஊழியர் சொல்லி விட்டுப் போனார். வேலை நேரத்தில் தொந்தரவு கொடுப்பதை விரும்பாத பாலு ...
மேலும் கதையை படிக்க...
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூடடினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடா லென்று கீழே வண்டியோடு சாய்நதாள். எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது ...
மேலும் கதையை படிக்க...
திடீர் மருமகள்!
பணப்பெட்டியுடன் ஓட்டம்!
மாமாவின் பாசம்!
சாப்பாட்டுக்கு சேதமில்ல…?
காகிதக் கால்கள்
ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!
மணியின் மேல் காதல்?
பாட்டி கொடுமை?
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
எங்கே நடந்த தவறு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)