ஒரு கிராமத்துக் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 18,957 
 
 

முன்னுரை
கிராமத்துக் காலுக்கும் நகரத்துக் காதலுக்கும் அதிக வித்தியாசங்கள். நகரத்தில் காதல் வளர தொழில் நுட்ப வசதிகளும் சமூக ஊடகங்களும், கடலோரம், பார்க், சினிமா தியேயட்டர், உணவகங்கள் போன்றவை துணை போகிறது. அந்த காதல்களில் சில முகம் பாராது அலை பேசியிலும் மின் அஞ்சலிலும் பழகிய காதல். தொழில் நுட்ப வசதிகள் குறைந்த பின் தங்கிய கிராமத்தில் வளர்ந்த காதலானது இயற்கையோடும கலையோடும் இணைந்தது. அதைக் கருவாக வைத்து உருவான காதல் கதை இது,

****

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசபைப் பிரிவில்அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரும்பசிட்டி. இக்கிராமத்துக்கு அருகே பலாலி விமானத்தளமும், வயாவிளான், புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஆகிய கிராமங்கள் உண்டு.

1970 இல், இக் கிராமத்தில் சுமார் 800 குடும்பங்களை இருந்தன கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கமத்தொழில் ,கைத்தொழில் செய்பவர்கள் போன்ற பலரும் இக் கிராமத்தில் வாழ்ந்தனர்.

இக் கிராமத்துக்கு குரும்பசிட்டி எனப் பெயர் வந்த காரணம் இங்கு குறும்பர் என்ற ஒரு இனத்தவர் கும்பலாக வாழ்தனர் என்றும் ,அதனாலே இப்பெயர் வந்தது என்பது மரபு வழி வந்த கதை. குறும்பர் தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர் குறும்பு என்றால் காடு என்று பொருள். குறும்பர் காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த முல்லை நில மக்களாவர்
தெல்லிப்பலைக்கு அருகே உள்ள குரும்பசிட்டி கிராமம் ஒரு காலத்தில் பின் தங்கிய கிராமம். செம்மண்னின் செழுமையும், கிணற்று நீரும் இங்கு விவசாயக் குடியிருப்புகள் தோன்றக் காரணமாயின. 19ஆம் நூற்றாண்டு வரை கிராமத்து மக்களுக்குக் கல்வியறிவு கிட்டவில்லை. குன்றும், குழிகளும் நிரம்பிய கல் ஒழுங்கைகளும் பற்றைக்காடுகளும், மண்குடிசைகளும்கொண்ட ஒரு பின்தங்கிய கிராமமாக அந்த ஊர் விளங்கி வந்தது நிலங்களினது உரிமையாளர்களாக உயர் சாதியினர் விளங்க, அவர்களது குடிமக்களாக நிலபுலமற்ற, அடிப்படை வாழ்க்கை வசதிகளற்றவர்களாக சில மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த வகுப்பைச் சேர்ந்தவள் தான் பதினெட்டு வயது கிராமத்து அழகி அமுதா என்ற அமுதவள்ளி.

அமுதாவுக்கு தேவையான உயர் கல்வியைப் பெற பண வசதி இல்லாவிட்டாலும் கலை செல்வமான நல்ல குரலில் பாடும் திறமையை இறைவன் அவளுக்குக் கொடுத்திருந்தான். பத்தாம் வகுப்பு வரை படித்த அமுதாவை மேலும் தொடர்ந்து படிக்கத் தந்தை முருகேசு அனுமதிக்கவில்லை பகலில் முதலியார் செலத்தம்பியின் பண்ணையில் உள்ள ஆடுமாடுகளை மேய்ப்பது அவள் வேலை . சில சமயம் சந்தர்ப்பம் கிடைத்தால் குரும்பசிட்டியில் உள்ள அண்ணமார் கோயில், ஆறாத்தை வைரவர் கோயில், முத்துமாரி அம்பாள், மாவிட்டபுரம் முருகன், மற்றும் சுற்றுப்புற கிராமத்து கோவில் திருவிழாக்களிலும் திருமண வைபவங்களில் பாடுவதுமே அவள் தொழில்.

வறுமைக் கோட்டின் எல்லையில் வாழ்ந்த முருகேசு – செல்லம்மாள் தம்பதிககளுக்கு பிறந்த இரு பிள்ளைகளில் மூத்தவன் பார்த்திபன், இளையவள் அமுதா. கவிதைகள் பாடல்கள் இயற்றுவதில் பார்த்திபன் கெட்டிக்காரன். அவன் இயற்றிய நாட்டுப் பாடல்களுக்கு மெட்டு அமைத்து அமுதா தனது இனிய குரலில் பாடி பலரிடம் பாராட்டுப் பெற்றாள்.

*****

இலங்கையில் உள்ள கிராமத்துக் கலைகளையும், முக்கியமாக நாட்டுப் பாடல்களை ஆராய்ச்சி செய்பவர் கொழும்பு பல்கலைகழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் சக்திதாசன் என்ற முனைவர். குரும்பசிட்டி கிராம மக்களின் கலைத் திறனைப் பற்றி அறிந்து அக்கிராமத்துக்கு சென்று, பலரை நேர்கண்டு நாட்டுப் பாடல்கள பற்றி விபரம் அறியத் தீர்மானித்தார். கிராம கோவில் திருவிழாக்களில் இடம் பெறும் நாட்டுக் கூத்து , வில்லுப்பாட்டு , நாட்டுப் பாடல்கள் கேட்டு இரசித்து, அவைற்றின் தொற்றத்தைப் பற்றி விபரம் அறிய. கொழும்பில் இருந்து காங்கேசன் துறைக்கு தினமும் செல்லும் யாழ்தேவியி ரயிலில் பயணம் செய்து காகேசன்துறையில் இறங்கி, அங்கிருந்து குரும்பசிட்டி கிராமத்துக்கு தன் பயணத்தை சக்திதாசன் ஆரம்பித்தார் . திருமணமாகாத அவர் பிறந்தது, வளர்ந்தது கொழும்பில் உள்ள கொழும்பு 7 என்ற கறுவாக் காட்டுபகுதியில். சக்திதாசனின் தந்தை செல்வநாதன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த செல்வந்தரான அவருக்கு முதலியார் பட்டம் கிடைத்தது . கொழும்பில் பிறந்து வளர்ந்து படித்து இலக்கியத்தில் முனைவரான சக்திதாசனுக்கு , அதுவே முதல் யாழ் குடா நாட்டுப் பயணம்.

****

குறும்பசிட்டி கிராமத்துக்கு அருகே உள்ள தெல்லிப்பலையில் அமைந்த ஒரு விடுதியில் ஒரு மாதம் தங்க தாசன் ஒழுங்குகள் செய்து கொண்டார். கிராமத்து இயற்கை காட்சிகளை இரசிப்பதுக்கு சைக்கிளில் செல்வதே சரியென முடிவு எடுத்தார்.

அன்று காலை உணவின் பின், விடுதியில் இருந்து தன் மடி கணனி. ஒலி பதிவுக் கருவி ஆகியவற்றோடு. வேஷ்டி அரை கை வெள்ளை சேர்ட் அணிந்து, சைக்கிளில் புறப்பட்ட சக்திதாசனுக்கு கிரவல் பாதையின் இருபக்கத்திலும் பச்சைப் பசேல் என்று வளர்ந்த புகையிலை, கத்தரி, மரவள்ளித் தோட்டங்கள் கவர்ந்தது .கொழும்பில் அதை அவர் பார்த்ததில்லை.
தோட்டத்தில் உள்ள துலாவில் இருவர் நீர் இறைப்பதைக் கண்டு தன் சைக்கிளை நிறுத்தி அதை பார்த்து இரசித்தார். தலையில் துணி கட்டியபடி ஒருவர் நீர் இறைப்பவர் சக்திதாசனை பார்த்து

“என்ன தம்பி நீர் ஊருக்குப் புதுசோ. ஊரிலை யாரை பார்க்க வேண்டும்”? ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் கேட்டார்.

“ ஓம் ஐயா நான் கொழும்பில் இருந்து வாறன் குரும்பசிட்டியில் நாட்டுப் பாடல்கள் பாடுபவர்கள் இருக்குறார்கள் என அறிந்தேன் . அவர்களைக் கண்டு பேச வந்திருக்கிறன். குரும்பசிட்டிக்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டுமே ஐயா”?

“இல்லை தம்பி, கிழக்கு நோக்கி இன்னும் ஒரு மைல் போனால் ஓரு சுடலை வரும், அதுக்கு அடுத்து இருப்பது குரும்பசிட்டி ஊர் .போகும் பொது ஒரு கத்திரி தொட்டத்து வெருளியைக் கண்டதும் பயப்படாததையும் . அதைக் கண்டவுடன் குரும்பசிட்டி ஊர் கிட்ட விட்டது என்று அர்த்தம் . போகும் பொது ஒரு பெண் பாடியபடி ஆடுகள் மெய்பதைக் காண்பீர். அவளைக் கண்டு பேசினால் அவள் நாட்டுப் பாடல்கள் பற்றி சொல்லுவாள். அவளின் அண்ணன் நாட்டுப் பாடல்கள் எழுதுவான். அதை அவள் தன் குரலில் பாடுவாள்” துலா மிதித்தவர் சொன்னார் .

“தகவலுக்கு நன்றி ஐயா” என்று சொல்லி தன் பயணத்தை சக்திதாசன் தொடர்ந்தார்.

ஒரு மைல் போனதும் சுடலையில் பிணம் ஓன்று எரிந்து கொண்டு இருப்பதைக் கண்டார். அதை அடுத்து, வலது பக்கத்தில் உள்ள ஒரு கத்தரி தோட்டத்தின் நடுவே வெருளி ஓன்று தொப்பியும் . கறுத்த கோர்ட்டும் பானை தலையோடு இரு கைகளையும் நீட்டியபடி தோட்டத்தை காவல் புரிவதை அவர் கண்ட காட்சி, அவருக்கு நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கத்தரித் தொட்டத்து வெருளி என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இன்றும் பலர் நினைவில் நிற்கும் அந்தப் பாடலை வாயுக்குள் முணுமுணுத்தபடியே சைக்கிளை தொடர்ந்து மிதித்தார்.

ஒரு இனிமையா குரலில் ஒரு பெண் குறும்பசிட்டி கிராமத்தை வர்ணிக்கும் பாடல் கேட்டது

“யார் இந்த பெண் . இவள் தான் துலா மிதித்தவர் சொன்ன பெண்ணா?. ஆடு மேய்த படியே பாடுகிறாளே. என்ன இனிமையானா குரல் இந்த கிராமத்துக் குயிலுக்கு என்று மனதுக்குள் நினிந்தபடி சைகிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு கையில் ஒலி பதிவு கருவியோடு அவளை நோக்கி வயல் வரம்பில் நடந்து சென்றார் .

அதுவே அமுதாவுக்கும் சக்திதாசனுக்கும் இடையே ஏற்பட்ட முதல் சந்திப்பு. ஆணுக்கும் பெண்ணுக்கும் சிந்தனையில் ஒற்றுமை இருந்தால் அவர்களிடையே கண்டதும் காதல் மலரும்.

குறும்சிட்டி கிராமத்துக்கு எதை சக்திதாசன் தேடி வந்தாரோ அது அவருக்கு கிடைத்து விட்டது “யாரும் இல்லாத வயல் வெளியில் துணிந்து ஆடு மேய்கிறாளே இவள் என்ன துணிச்சல்காரி “ என்றார் தன் வாயுக்குள் சக்திதாசன்

சக்திதாசன் தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்ட அவள், பாடுவதை நிறுத்திவிட்டு “ஐயா இந்த ஊருக்கு புதுசோ. யாரைத் தேடிவந்தனீர் .இதற்கு முன் உம்மை இந்த ஊரில் நான் பார்த்ததில்லை. ஊருக்குப் புது முகம் போல் தெரிகிறது “ என்றாள் அந்த ஆடுகள் மேய்க்கும் பெண்.

“ஆமாம் பெண்ணே இந்த ஊருக்கு நான் புது முகம். என் சொந்த ஊர் இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு. எனது ஆராய்சிக்க்கு நாட்டுப்பாடல் பாடுபவரை தேடி வந்திருகக்கிறன். உன் பாடல் என்னை கவர்ந்து விட்டது . காலை நேரத்தில் காதுக்குக் கேட்க அருமையான பாடல். பிண்ணனி இசை இல்லாத இனிமையான குரல் ” சக்திதாசன் சொன்னார்.

“ அப்படியா நல்லது. ஊருக்கு ஊர் அந்த மண் வாசனை வீசும் பாடல் உண்டு. இது முல்லை நில குறும்பர் ஒருவர் பாடும் பாடல் ஐயா”

” அப்படியா . என் பெயர் சக்திதாசன் . தாசன் என்று என்னை நீ கூப்பிட்டால் நல்லது”

“ என் பெயர் அமுதவல்லி. ஊருக்கு நான் அமுதா “

“ நீ பாடிய பாடலை இயற்றியது நீயா”

“ நான் இல்லை தாசன். நான் பாடிய பாடல் என் அண்ணன் பார்த்திபன் எழுதினது, அதுக்கு மெட்டு அமைத்துப் பாடினேன் என் அண்ணன் பார்த்திபன் ஓர் தமிழ் ஆசிரியர். கவிஞ்ஞரும் கூட.
..
“ ஓஹோ உன் அண்ணன் ஓருதமிழ் ஆசிரியரா ? அது தன் இவ்வளவு அருமையான நாட்டுப் பாடல் எழுதி இருக்கிறார்”,

“ இப்படி அவர் பல நாட்டுப் பாடல்கள் எழுதி இருக்கிறார் . நான் பாடலுக்கு கரு கொடுப்பேன் அவர் எழுதுவார், நான் மெட்டு அமைத்துப் பாடுவேன்”,

“ எப்படியான கருவுள்ள பாடல்கள் அமுதா”

“ தாசன், பல விதமான கருக்களை கொண்ட நாட்டுப் பாடலகள் உண்டு . தாய்மை உணர்வினை வெளிப்படுத்தும் பாடல் . தாலாட்டுப் பாடல்.
பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் புறப்பாடல்கள். இயற்கை வழிபாட்டுப் பாடல். சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படும் பூப்புச் சடங்குப், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், கரை வலை இழுக்கும் பொது. களை நடும் போதும, நெற் கதிர் வேட்டும் போதும் பாடும் பாடல்கள் வளைகாப்புப் பாடல்கள். கொண்டாட்டப் பாடல்கள் காதலர்களே பாடும் நாட்டுப்புறக் காதல் பாடல்கள் தொழில் செய்யுமிடங்களில் சில பாடல்கள் பிறக்கிறது. வண்டிக்காரனின் தெம்மாங்குப் பாடல். உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும் குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள். கத்தரி தோட்டத்து வெருளி, ஆடிபிறப்புக்கு நாளை விடுதலை போன்ற சிறுவர் பாடல்கள்” அமுதா சொன்னாள்.

“ அடேயப்பா நீண்ட பட்டியல் போல் தெரிகிறதே . நீ இவை எல்லாம் பாடி இருகிறாயா அமுதா”?

“ஓரளவுக்குப் பாடி இருக்கிறேன் தாசன் “

“நல்லது அமுதா. உன்னிடம் நான் ஒரு உதவி கேட்கலாமா அமுதா”?

“கேளுங்கள் தசான், முடிந்தால் செய்கிறேன்:

“ஒவ்வொரு நாளும் நான் உன்னை வந்து இந்த இடத்தில சந்தித்து, உன் பாடல்களை பதிவு செய்ய விரும்புகிறேன்”.

“ ம் ம் . என் பெற்றோறோடும் ,அண்ணரோடும் கலந்து பேசி நான் அவர்கள் சம்மதித்தால் நாளை இங்கே இதே நேரம் வருகிறேன் . அந்த மரத்தின் கீழ் இருந்து பதிவு செய்யலாம். நாளை நான் வராவிட்டால் அவரக்ளுக்கு சம்மதம் இல்லை என்பது அர்த்தம்” என்றாள் அமுதா

“ அது நியாயமானது . சரி நளை இதே நேரம் இந்த இடத்துக்கு வருகிறேன் உன்னை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியும், நன்றியும்” . இருவரும் பிரிந்தனர்.

****

அடுத்த நாள் காலை சக்திசான் கிராமத்தின் இயற்கை காட்சிகளை இரசித்த்படி அமுதவை சந்திக்க ஆவலுடன் வயல் வெளிக்குப் தாசன் போனார். தூரத்தில் அமுதா பாடும் குரல் கேட்டது . அதை கேட்டதும் தன்னை சந்திக்க பெற்றோரினதும், தமையனதும் சம்மததை அமுதா பெற்று விட்டாள் என்று தாசனுக்குத் தெரிந்தது . இப்பொது அவளோடு அவளின்
ஆடுளை காணவில்லை கையில் ஒரு சிறு பார்சலுடன் மரத்தின் கீழ் தாசனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்

உன் பெற்றோரிடமும் பார்த்திபனிடமும் சம்மதம் பெற்று வந்ததுக்கு நன்றி அமுதா. அதென்ன உன் கையில் ஒரு பொட்டணம்”?

“ உங்களுக்கு என் பெற்றோர் தந்து விட்ட ஒடியல் கூலும், பனங்காய் பணியாரமும், கறுத்த கொழும்பான் மாம்பழமும்”

“இவைற்றை எனக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி. இவை கொழும்பில் கிடைப்பது அரிது”, என்று சொலியபடி அமுதாவின் பாடல்களை ஒலிப் பதிவு செய்யும் கருவியில் பதிவு செய்ய தாசன் ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடலையும் பதிவு செய்ய முன் அதைப் பற்றி சுருக்கமாக ஆரம்பத்தில் அமுதா சொன்னாள்.

மூன்று வாரங்களில் தினமும் தாசன் சந்திப்பு மரத்தடியில் நடந்தது பாடல்கள் பதிவு செய்த பின் இருவரும் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். குறும்பசிட்டி சுற்றி உள்ள கிராமங்கள் பற்றியும் கோவில்கள் பற்றியும் அமுதா தாசனுக்குச் சொன்னாள், முக்கியமாக கீரிமலை . மாவிட்டபுரம், காங்கேசன்துறை ஆகிய இடங்கள் பற்றி தாசனுக்குச் சொன்னாள்,

சக்திதாசன் தான் கொழும்பில் இருந்து கொண்டு வந்த பிஸ்கட், சிங்கள உணவு வகைகள், சாக்லேட் ஆகியவற்றை அமுதாவுக்கு கொடுத்த போது அதற்கு அவள் .
“தாசன் நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே உங்கள் கையால் எனக்கு ஊட்டி விடுங்கள்” என்றாள் அமுதா.

தாசன் மறுக்கவில்லை. ஒரு நாள் தான் கொண்டு வந்த மல்லிகைப் பூ மாலையை அவளின் தலையில் சூட்டினார். இனொரு நாள் சிவப்பு நிற பருத்திச் சேலை ஒன்றை பரிசாக அமுதாவுக்கு கொடுத்து கேட்டார்

“அமுதா, உன் இனிமையான குரலுக்கு நீ சினிமாவில் பாட சந்தர்ப்பம் கிடைக்கலாம் . நல்ல காசு கிடைக்கும் அதை பற்றி நீ யோசிக்கவில்லையா”?

“ஐயோ தாசன் எனக்கு சினிமா வேண்டாம். காசு வந்தால் என் குணம் மாறி விடும். என் கிராமத்தையும் உறவினர்களையும் மறந்து விடுவேன். எனக்கு கடவுள் தந்த கொடையை கோவில்களில் பாடி அதை இறைவனுக்கே திருப்பிக் கொடுக்கிறேன்”

“அது சரி அமுதா நீ எப்போதாவது கொழும்புக்கு போய் இருகிறாயா”?

“ அந்த ஊரைப் பற்றி கேள்வி பட்டனான் ஆனால் போகவில்லை. ஒரு தடவை நான் படித்த பாடசாலையினால் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு இசைப் போட்டிக்கு என்னை கூட்டி போனார்கள் . அந்த போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சுது “

“அமுதா நீ இந்த குரும்பசிட்டி கிராமத்தின் சொத்து. உனக்கு இந்த கிராமமே உலகம் “ சக்திதாசன் சொல்லி சிரித்தார்

அவர்களின் காதல் மல்லிகை மாலையோடு மலர்ந்தது. அவர்கள் பிரிய வேண்டிய கடைசி நாள் வந்தது. அன்று தாசன் அமுதாவின் பெற்றோரும், அண்ணன் பார்த்திபனும் அவளோடு தன்னை சந்திக்க வருவார்கள் என்று தாசன் எதிர்பார்க்கவில்லை .

“ ஐயா நீங்கள் அதிகம் படித்தவர். ஆராய்ச்சியாளர். நாங்களோ பின் தங்கிய கிராமவாசிகள். அதிலும் அதிகம் படிப்பு அறிவு இல்லாதவர்கள். என் தங்கை அமுதா பாடும் திறமை உள்ளவள். இந்த மூன்று வாரங்களில் உங்களை அவளுக்கும் எங்களுக்கும் வெகுவாக பிடித்துக் கொண்டது. நீங்கள் என்ன சாதி என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் தமிழர் என்று மட்டுமே தெரியும் . என் தங்கச்சி உங்களோடு வாழ விடும்புகிறாள். உங்கள் முடிவு என்ன “? பார்த்திபன் சக்திதாசனைக் கேட்டான் .

தான் எதிர்பார்த்த முடிவை அமுதா எடுத்து விட்டாள் என அறிந்த போது தாசனுக்கு மனதுக்குள் பெரும் மகிழ்ச்சி.

” :பார்த்திபன் எனக்கு அமுதா போன்ற துணை கிடைக்க நான் கொடுத்து வைத்தவன். என் மறைந்த பெற்றோர் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்கள். செல்வந்தர். நான் இப்போ தனித்துப் போனேன் அவர்கள் எனக்கு விட்டு சென்ற வீடு கொழும்பில் விலைஉயர்ந்த பகுதியான கொழும்பு 7 யில் உள்ளது. அமுதா அங்கு வந்து என்னோடு வாழ விருப்பப் படமாட்டாள் . அதனால் நான் அந்த வீட்டை வாடகைகு கொடுத்து விட்டு இந்தக் கிராமத்துக்கு வர சிந்திக்கிறேன் எனது தொழிலை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் தொடர நினைக்கிறேன் “என்றார் சக்திதாசன்.

“அது நல்ல முடிவு தம்பி “ என்றார் முருகேசு. . பார்த்திபனும் முருகேசுவும் சக்திதாசனின் கைகளைப் பிடித்துக் கொஞ்சினார்கள் . எல்லோரும் மகிழ்ச்சியில் கல கல வென்று சிரித்தார்கள் . மரத்தில் இருந்து மலர்கள் காற்றில் சொரிந்தன. எங்கிருந்தோ குயில் ஒன்று கூவியது,

(யாவும் புனைவு)

ஒரு நாள் களுவம்மா தேனும் திணை மாவும் பாலைப் பழமும் அவனுக்கு வீட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்தாள். அவன் இரசித்து உண்டான். இன்னொரு நாள் தேனில் ஊற வைத்து பதப் படுத்தப் பட்ட மான் இறச்சியும் மரவள்ளிக் கிழக்கு சுட்டுக் கொன்டு வந்து கொடுத்தாள். தான் மாமிசம் உண்பதில்லை என்று சொல்லி மான் இறச்சியயை உண்ண மறுத்து விட்டான் அருனா . அதன் காரணத்தை அவளுக்கு விளக்கினான்”
“நீங்கள் மாமிசம் சாப்பிடாவிட்டால் நானும் இனி சாப்பிட மாட்டேன்:” என்றாள் அவள். .
“அது சரி மான் வேட்டை ஆடுவது உன் கிராமவாசிகளின் தொழிலா?

“என் தந்தையும், சித்தப்பாவும் அம்பும் வில்லும் பாவித்து மான் வேட்டை ஆடுவதில் வல்லவர்கள் அது தங்கள் இனத்தின் பூர்வீக தொழில் அந்தக் குணத்தில் இருந்து எனது கிராமவாசிகளை மாற்ற முடியாது, கிராமத்தை சுற்றி ஒரே காடு. பெரிய மதுறு ஓயாக்குளம் உண்டு யானை, சிறுத்தை , கரடி, நரி. எருமை போன்ற வனவிலங்குகளும் பல இன பறவைகளும் உண்டு அவை எங்கள் கிராமத்தின் கனி வளம். காட்டுப் பழங்கள்.. விதம் விதமான பூக்கள ஏராளம். மூலிகைகளை ஏராளம். அதை வைத்து வைத்தியம் செய்ய, வேலுஹாமி என்ற ஒரு வேடவர் இருக்கிறார்;. அவர் எங்கள் கிராமத்தில் குடிசையில் உள்ள முருகன் கோவில் கப்புராலாவும் அவரே . அவர முகம் பார்த்து சொல்லும் வாக்கு பலிக்கும்” என்றாள் களுவம்மா.
“அவர் உனக்கு என்ன சொன்னார்.:”
சாமியா
நீன்காஹல் சொலி கொடுத்தல்

சந்தையில் சநதிப்பு
கிரகாட்டம்

நாட்டுப்புறக் கலைகள்
நாட்டுக் கூத்து
நாட்டுப்புற பாடல் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தாலாட்டுப் பாடல்கள்
2. குழந்தைப் பாடல்கள்
3. காதல் பாடல்கள்
4. தொழில் பாடல்கள்
5. கொண்டாட்டப் பாடல்கள்
6. பக்திப் பாடல்கள்
7. ஒப்பாரிப் பாடல்கள்
8. பனிமலர்ப் பாடல்கள் [1]

நாட்டுப்புற நடனங்கள் அல்லது நாட்டார் ஆடல்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டடுள்ளன.

கும்மியாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, பாவைக் கூத்து, கரக ஆட்டம் தோற்பாவைக் கூத்து, காவடியாட்டம், மயிலாட்டம்

“நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்” என்கிறார் முனைவர் சு.சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு : பக்கம் : 22). எனவே நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமைப்பாட்டிற்குப் பல வகையினைக் காண முடியும். அவை,
1) நாட்டுப்புறப் பாடல்கள்
2) நாட்டுப்புறக் கதைகள்
3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
4) நாட்டுப்புறப் பழமொழிகள்
5) விடுகதைகள்
6) புராணங்கள்

நாட்டுப்புறப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பெற்றவை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத பெருமையினைக் கொண்டவை. இப்பாடல்கள் எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக் கிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.
• நாட்டுப்புறப் பாடல் வகைப்பாடு
நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் எட்டாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.
• தாலாட்டுப் பாடல்கள்
தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் தன்மையினை நான்கு கூறுகளாகப் பிரித்துள்ளார்.
1) குழந்தை பற்றியன.
2) குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன.
3) குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன.
• குழந்தைப் பாடல்கள்
குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும்,
1) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்.
2) (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது.
3) சிறுவர் பாடல்கள்.
என்றும் பிரித்துப் பார்க்கலாம்.
• காதல் பாடல்கள்
காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1) காதலர்களே பாடுவது, 2) காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் போது பாடுவது. ஆனால் பெரும்பாலும் நாட்டுப்புறக் காதல், தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் காதல் சுவையைக் காணலாம். உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும்.
• தொழில் பாடல்கள்
மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். பாடல்களை ஏலோலங்கிடி பாட்டு, தில்லாலங்கடி பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, ஏற்றப் பாட்டு,வண்டிக்காரன் பாட்டு என்றெல்லாம் வழங்குவர்.
• கொண்டாட்டப் பாடல்கள்
மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கலந்து கொண்டாடுகிறான். அவ்வெளியீட்டில் தொன்மையான கலைச் சிறப்பையும் மக்களது பண்பாட்டின் சிறப்பினையும் அறியமுடியும். மனிதனின் உழைப்பிற்குப்பின், அவனது மனமானது ஆடல், பாடல்களில் ஈடுபடுகிறது.

புறப்பாடல்

என்பது தாய்மை உணர்வினை வெளிப்படுத்தும் . தாலாட்டுப் பாடல்
பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் புறப்பாடல்கள். இயற்கை வழிபாட்டுப் பாடல் சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படும். பூப்புச் சடங்குப், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், வளைகாப்புப் பாடல்கள் கொண்டாட்டப் பாடல்கள் காதலர்களே பாடுவது, நாட்டுப்புறக் காதல், தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும் குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள். கத்தரி தோட்டத்து வெருளி, ஆடிபிறப்புக்கு நாளை விடுதலை போன்ற போன்ற சிறுவர் பாடல்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *