
பா.அய்யாசாமி
தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன்.
பிறந்த ஊர்: சீர்காழி.
நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில் இணைத்துக் கொண்டு மக்களுக்கான சேவைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளேன்
நான் தமிழ் இலக்கணம் படிக்காவிட்டாலும் ,தமிழில் இலக்கிய வகையில் கவிதைகள் ,சிறுகதைகள் மூலம் சமூக பணியாற்றிடும் ஆசையில் எழுதத் துவங்கினேன். மேடைபேச்சு,நாயன்மார்களின் வரலாறு கூறுதல் என சில பக்தி பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளேன் .இதுவரை இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நல்லோரின் ஆசியோடும் ,ஆதரவோடும் வளரத் துடிக்கும் தளிர் நான், என பணிவோடு கூறிகொள்கின்றேன் .
சமூகம் சார்ந்த பணிகளில் என்னை இனைத்துக்கொண்டு நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை சிறுகதைகளின் மூலம் வாசகர் மத்தியில் கொண்டு சேர்க்க முயல்கின்றேன், என்பதை தங்கள் அறிமுகத்திற்காக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.வணக்கம்.
AYYASAMY P
paa.ayyasami@gmail.com