போங்கடா, நீங்களும் ஒங்க ஓடிபியும்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 4,220 
 
 

‘எதுக்கெல்லாம் ஓடிபி கேட்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு உலகத்துல!. இட்லிக்கு எதுக்கு ஓடிபி எருமை மாடே?! பிசாவுக்கு எதுக்கு பிசாசே ஓடிபி?!’ என ரொம்பவே தன் லேப்டாப்பை நொந்து கொண்டான் லோகசுந்தரம்.

அறிவியல் வளர்ச்சியாம். ஹீம்..! ஏடிஎம்மில் பணமெடுக்கப் போனா, என் பணத்தை நான் எடுக்க, ஓடிபி கேக்குது. ‘மிர்ரர்பிளஸில் மிஸ்யூஸ் பண்ணீடுவாங்களாம். அதுக்கும் ஒடிபி. தாங்க முடியலை சாமி!!’

ஓடிபி தேடித் தேடிக் கண்டுபிடிக்கறது, சின்ன வயசுல ஒளிஞ்சு வெளையாடின திருடன் போலீஸ் ஆட்டத்தைவிட அவஸ்தையா இருக்கு.

ஹாயா உக்காந்து ஐபி எல் பார்க்கலாம்னு டிவி யை ஆன் பண்ணினா.. அது கேக்குது லாக்கின் பண்ணுனு!. ‘சர்ட்டை இன் பண்ணவே சங்கடப்பட்டுத்தானே டிசர்டை டீஷண்டா மாட்டீட்டுத் திரியறேன்?!’.

டிவி பெட்டி, ஐபிஎல்லுக்கு போன் நம்பர் லாகின் பண்ணச் சொல்லிச்சு. என் வீட்டுலயே இருந்துட்டு என் கரண்டையே தின்னுட்டு எங்கிட்டயா போன் நம்பர் கேக்கறே பொறுக்கீனு டிவியைத்திட்ட முடியலை காரணம் ஸ்மார்ட் டிவி. வருஷத்துக்கு பணங்கட்டின பங்காளிகள்ல நானும் ஒருத்தன். நம்பர் டைப் பண்ண செல்லுலயே முடியாத எனக்கு ரிமோட்டைப் பயன்படுத்தி போன் நம்பர் இன்ஸ்டால் பண்றது சிம்ம சொப்பன்மா இருந்துது!

ஒருவழியா அதை பண்ணிமுடிச்சா, ஓடிபி அனுப்பிச்சு.! வந்தது பாரு கோபம்… ஏண்டா வருஷத்துக்குப் பணம் கட்டுனோமே நன்றி இல்லையா உனக்கு..?! தமிழைத் தவிர எதுவும் தெரியாதே எனக்கு?! ஒருவழியா ஓடிபி அனுப்ப ‘சக்சஸ்புள்ளி இன்ஸ்டால்டு’ன்னு வந்து கெக்களிக்க.. உக்கிரமானான் லோகு!

முட்டாள்னு கிரிக்கெட் பார்க்கறவனை(என்னை மாதிரி ஆளை) முந்தா நேத்தல்ல.. மூணு தலைமுறைக்கு முன்னாடியே சொல்லீட்டானே ஒரு

மகராசன். ‘லெவன் பூல்ஸார் பிளேயிங்! அண்ட் லெவன் தவுசண்ட் பூல்சார் வாட்சிங்கினு..! (சொல்லீட்டானேனு பாடவா முடியும் படவா ராஸ்கல்!?’

‘இது நியாயமான்னு கேட்டு புகார் பண்ணலாம்னு தோண…, தூத்தேறி! அது, அதுக்கும் ஓடிபி கேட்டா என்ன பண்றது சொல்லுங்கோ…!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *