(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் கத்தியால் வெட்டப்பட்டது. நெருப்புக் கம்பி தன்னைத் துளைத்தபோது “ஐயோ உடல் புண்ணாகிறதே” என்று கதறி அழுதது.
“கொஞ்சம் பொறுமையாக இரு” மூங்கிலைப் பார்த்து ஆறுதல் சொன்னது காற்று.
மூங்கில் புல்லாங்குழல் ஆனது.
மேடையில்
உலகமே மயங்கும் இசையை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த புல்லாங்குழலைப் பார்த்து மேனி சிலர்த்தது காற்று.
அது சொன்னது-
“புண்பட்டவன்
பண்பட்டவன்”
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.