(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்து குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
“ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல சிறகு இல்லை?’
தாய்க்குருவி சிரித்தது.
“மாட்டுக்கு நம்மைப்போல சிறகு தேவையில்லை’
என்றது தாய்.
தாய்க்குருவி சொன்னது:-
“வானத்தில் புல் முளைத்தால்
மாட்டுக்கும் சிறகு முளைக்கும்”
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.