காதல் வந்தால், சொல்லி அனுப்பு..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 5,313 
 
 

அவரும் பாவம் தெரிந்த எல்லா முகவரிக்கும் வேலைக்கு மனுப்போடறாப்ல தெரிந்த பிகருக்கெல்லாம் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்புன்னு’ கடிதம் அனுப்பினார். ஆனால், பெற்றுக் கொண்ட யாரும் அதற்குப் பதில் அனுப்பவே இல்லை!

தெரிந்த எல்லாருக்கும் அனுப்ப காதல் ஒன்றும் பொங்கல் வாழ்த்தல்ல..! இளமையில் பூக்கும் இன்ப உணர்வு! இளமையும் காதலும் ஒருமுறைதான் வரும். கதைபல கூறும்., உல்லாச புதுமைகள் காட்டும்…! அப்புறம்…?

அப்புறமென்ன அப்புறம்…??!!

இளமை ட..ட.டா..ட.டா..டா..டா டாடான்னு டாட்டா காட்டிட்டுப் போயிடும். பாட்டைக் கேட்டுப் பாருங்க புரியும்!!

நீ பாட்டுக்கு காதல் வந்தால், சொல்லி அனுப்பு., உயிரோடிரும்ந்தால் வருகிறேன்னு சொல்றே..??

இளமையும், காதலும் மறு ஒளிபரப்பாக தொலைக் காட்சி நிகழ்ச்சியல்ல!

கவிஞர் மேத்தா சொல்றாப்ல, ‘வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது தூங்கினேன்!. வந்த போது தூங்கிவிட்டு, வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்னு ஏங்கக் கூடாது!

வேலையில் ஜாயின் பண்ண நல்ல நேரம் பார்த்துச் சேரப் போனபோது, சகுனம் பார்க்கும் சடகோபனே சொன்னது இன்னும் பசுமையாய் காதில் ஒலிக்கிறது. ‘வேலைக்குச் சேர ஆர்டர் வந்ததே அதிர்ஷ்டம்!. நல்ல நேரம்! அதைவிட, .நல்ல நேரமெல்லாம் பார்க்காதே! ஒரு அஞ்சு நிமிட தாமதம் ஆயுசுக்கும் புரொமோசனையே கூட, பாதித்துவிடும்! சீனியாரிடியே போயிடும்.’ என்றார். வேலைக்கும் சரி. விவாகத்துக்கும் சரி.. சொல்லி அனுப்பச் சொல்லி, காத்திருந்தால், சொல்லாமல் கொள்ளாமல் யாராவது முந்திட வாய்ப்பு உண்டு. புரிஞ்சுதா??!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *