கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 1,490 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

உன்னால் எண்பிக்க இயலாத கற்பனைகள் நீ கண்டுபிடிப்பவற்றின் அடித்தளமென்றால், வாழ்க்கையின் மாயா முடிச்சுகளை அவிழ்த்துக்காட்டுவதற்கு ஏன் என்கற்பிதங்கள் அடிப்படையாக அமைய மாட்டா?’ 

அணுவைத் துளைத்து அதன் புகழைப் பரப்பிய விஞ்ஞானி யின் பார்வையில் சந்நியாசி அஞ்ஞானியாகத் தோன்றினான். போலி வேடத்தைக் களைந்தெறிந்து உண்மையை நிலை நாட்டல் வேண்டுமென்ற எண்ணம் அவன் உள்ளத்தில் ஆழமாக வேர் பாய்ச்சியது. ஒரு சமயம் தன் யுத்தியினால் விஞ்ஞானி சந்நியாசியைச் சம்பாவத்திற்குள் இழுத்துக் கொண்டான். 

‘சந்நியாசம் என்றால் என்ன?’ என விஞ்ஞானி அலட்சியமாகக் கேட்டான். 

‘சந்நியாசம் என்றால் எல்லாக் கர்மங்களையும் விட்டு விடுதல் என்று பொருள். உலகத்திலுள்ள கர்மங்களைச் செய்து கொண்டிருந்த போதிலும், அனைத்தும் உருகி ஓடிப்போகும் படியான யுக்தியை அனுசரிப்பதினாற் சந்நியாசங் கிட்டுகிறது. சந்நியாசி அகர்மியுமாவன். அவன் பொறிகளினாற் கர்மம் எதுவும் புரியான். கர்ம சக்தி ஒடுங்கிக் கிடக்கும். இ இச் செயலின்மையே செயலாகவுஞ் சித்திக்கிறது…. சந்நியாசி யல்லாதானுக்குச் செயலே செயலின்மையாகும் யோகம் கிட்டலாம்………’ எனச் சந்நியாசி அக்கறையுடன் விளக் கினான். 

‘செயலின்மையே செயலா? செயலே செயலின்மையா?’ 

‘ஆம். சக்கரம் வேகமாகச் சுழலும்பொழுது, அஃது செயலிற் செய அசைவதாக நமக்குத் தோன்றுவதில்லை. லின்மை யோகம்; செய்யாமையிற் செயல் சந்நியாசம். ஆகா, எவ்வளவு இனிய காவியமயமான கற்பனை!….’ பதிலில் பக்திப் பரவசம் சிலிர்த்தது. 

*பூ….அதுதானே பார்த்தேன்! எல்லாம் வெறும் கற்பனை தானா?‘ விஞ்ஞானி இடக்காகக் கேட்டான். 

கற்பனை என்பது அற்பமா?‘ 

‘அற்பமே தான்! விஞ்ஞானிகள் எதையும் திடமாக நிறுவ வல்லவர்கள்….” 

‘அப்படியானால், கேத்திர கணிதத்தில் ‘அ, இ,உ,என ஒரு முக்கோணம் இருப்பதாக வைத்துக் கொள்’ என்பது எதனால்?’ 

‘அது கற்பனையல்ல; அது தற்புனைவு. அ, இ உ ஆகியன மூன்று புள்ளிகள். அஇ, இஉ, உஅ ஆகியன மூன்று ரேகைகள், அவை முக்கோணம் ஒன்றினைச் சமைக்கின்றன.’ 

‘புள்ளி என்றால் என்ன?” 

‘முப்பரிமாணம் எதுவுமற்றது…. ‘

‘ரேகை என்றால்?’ 

‘அகலமில்லாத நீளம்….’ 

‘முப்பரிமாணமெதுமற்ற புள்ளியையோ, அகலமில்லாத நீளத்தையோ காட்டுக!’ 

விஞ்ஞானி ஒரு கணம் யோசித்தான். பின்னர் கூறுவான்; ‘புள்ளியையும் ரேகையையும் கற்பிதம் என்று வைத்துக் கொண்டாலும், அவற்றினடிப்படையிற் பல தோற்றங்களின் உண்மையை நம்மால் நிறுவமுடிகின்றது….” 

‘புள்ளிகளிலும் ரேகைகளிலும் நீ நம்பிக்கை வைத்திருக்கின்றாய். நான் பகவானிடத்திலும், ஆன்ம ஈடேற்றத்திலும் நம்பிக்கை வைத்திருக்கின்றேன். உன்னால் எண்பிக்க இயலாத கற்பனைகள் நீ கண்டுபிடிப்பவற்றின் அடித்தளமென்றால், வாழ்க்கையின் மாயா முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டுவதற்கு ஏன் என் கற்பிதங்கள் அடிப்படையாக அமைய மாட்டா?’ 

சந்நியாசியின் வாதம் பிழையானதென நிறுவ வல்ல தேற்றத்தைக் கண்டு பிடிப்பதற்கு அந்த விஞ்ஞானிக்குப் புள்ளிகளும் ரேகைகளும் உதவ மறுத்தன!

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *