கதையாசிரியர் தொகுப்பு: ஷஹான் நூர்

11 கதைகள் கிடைத்துள்ளன.

மங்கிடும் யாவும் மரித்துவிடுவதில்லை

 

 என்னப்பா அப்துல்லா இன்னைக்கு செய்தித்தாள பார்த்தயா? படிச்சயா? அதுக்குத்தானே இந்தப் பக்கம் ஒதுங்கறது ஆனந்த். சரி சரி நீ ஒரு டீ போடுப்பா. ஆமா அப்படி என்னப்பா சுவாரஸ்யமா இருக்கு இன்னைக்கு? அட எப்போதும் போல உங்க ஆளுக சமாச்சாரம்தானப்பா. உம்ம்ம் அதுவா, என்னத்த செய்ய? ஏன் இப்படி செய்றாங்கனுதான் தெரிய மாட்டேங்குது ஆனந்த். எனக்கு ஒரு டீ போடுப்பா ஆனந்த். அட வாங்க அந்தோனி, இதோ போட்டுடா போச்சு. என்ன அப்துல்லா பாய், பேப்பர்ல அப்படி


ஊருக்கு உதவிக்காரன்

 

 ஏப்பா ஏய், யாருப்பா அது விசிலடிக்கறது, செத்த சும்மானு இருக்க மாட்டீங்களாய்யா? அட இங்க வா ரக்கும்பா. ஏன்? என்னவாம்? போப்பா ஏய், மண்டைய உடைச்சுப் போடுவேன் ஆமா. நான் கூப்பிடுல காசிம்ணே கூப்புடுறாப்புளா ரக்கும்பா. சித்த கன்னினுதேன் இரேன்பா. உங்களையோட ஒரே துன்பமா போச்சு. அப்போ டீ வேணாம்ங்கறயா நீ. போப்பா, நீயும் உன் டீயும். ஹோய்… ஓசு சோறா இன்னைக்கு? இந்த பாரு, வந்தண்ணா செருப்பு பிஞ்சிடும் பார்த்துக்கோ. ரக்கு மச்சே நான் இல்லை.


ராசிக்கின் ரசனைகள்

 

 நாட்டு ஓடுகள் பொருத்தி, சற்று குழியும், மடிப்புமாக புறச் சுவர்கள் கொண்டு, தெற்கு நோக்கி ஒரு வாயிலும், கிழக்கு நோக்கி மறு வாயிற்புறமும் கொண்டிருந்து, இரு தெருக்களை இணைக்கும் முனையில் இருந்த அந்த வீட்டிலிருந்து வெளியேறினான், இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க இளையோன் ஒருவன். வெந்நிற ஜீப்பா, தலையில் கருப்புத் துணியால் தலைப்பாகைக் கட்டு, தாடையிலிருந்து கட்டை விரல் அளவில் கீழ் நோக்கியிருக்கும் அடர்த்தியான தாடி, மஞ்சள் வர்ண முகம் கொண்ட ராசிக் என்பவன் அவன். சூரிய


இப்படியும் இருக்கலாம்!

 

 உலர்ந்த காலை வேளை. ஒரு பெருநகரத்தின் சாலையோரப் பூங்கா, நீண்ட நடைபாதை கொண்டதாக இருந்தது. எந்திர மனிதர்கள் தங்களின் இயந்திர வாழ்க்கையில் சங்கமிக்கின்றனர் மெல்ல, மெல்ல. அந்த சாலையோர நடைபாதயானது பெரும்பாலும் நடைப்பயிற்ச்சி, மெல்லோட்டம் மையமாகவே பயன்படும் காலையும், மாலையும். இரண்டு நபர்கள் அப்பூங்காவின் செயற்கை வட்ட நீர்ரூற்றின் புற தடுப்புக் கம்பிகளை ஒட்டியவாறு பேசிக் கொண்டிருந்தனர். அதில் இளையத் தோற்றம் மிகுந்த ஒரு ஆண், தனது எதிர் பாலின, கிட்டத்தட்ட அவரின் வயது ஒப்பும், அல்லது


கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்

 

 ஏனப்பா பக்கீர் சந்தூக்கு போயிருச்சா? ஜாஹிர் அது அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்கம்பா! ஓஹ், சரி குழி வெட்றதெல்லாம் சரியா, ஒழுங்கா இருக்கானு பார்த்துக்கனும் சரியா! சரிம்பா, நான் நின்னு பார்த்துக்கறேன். எப்பேர்பட்ட ஆளு மைய்யத்து, நீதான் அனுபவமான மோதி அதான் உன்கிட்ட இவ்வளவு படிப்படியா சொல்லிட்டு போறேன். என்று கூறிய மசூதியின் தலைமை பொறுப்பாளர் நேரே கோட்டை வீடு நோக்கி பயணமானார். மண் வீதிகள் மிகைத்து காணப்படும், வயல் பரப்புகளும், நீர் நிலையங்களும் குவிந்து காணப்படும் கீரனூர்