கதையாசிரியர் தொகுப்பு: விஸ்வபாரதி

8 கதைகள் கிடைத்துள்ளன.

மின்சார அடுப்பு

 

  ‘ராசாத்தி ! காபி வச்சு எவ்வளவு நேரமாறது. குடிச்சுட்டு மற்ற வேலைகளைப் பாரு!” ‘சரிம்மா!” ‘எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா’ ‘ஆச்சும்மா!” ராசாத்தி, வாசலில் எடுத்து வைத்திருந்த அந்த இரண்டு ‘கட்டை‘ பைகளையும், ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள். சொன்னமாதிரியே காபி ஆறிப்போயிருந்தது. அவர்கள் கிளம்பும் அவசரத்தில் இருக்க, இந்த நேரம் போய் ‘சூடுபன்னிக்குடு’ன்னு தொந்தரவு பண்ணக் கூடாது. பச்சைத் தண்ணீர் போல, அண்ணாந்து கடகடவென வாயில் ஊத்திவிட்டு எழுந்தான். ‘சாமான் வண்டி எத்தனை மணிக்கு வருதும்மா?” ‘நைட்டு


சென்னைக்கு மிக அருகில்

 

  ‘இன்னும் ரெண்டு நாள்தானே! சனிக்கிழமை போய் பார்த்துக்கலாமே!” ‘இன்னைக்கு, எனக்கு ஆபிஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குது தெரியுமா? அப்படியும் எப்படியோ மேனேஜர்கிட்ட பேசி சிக்லீவ் வாங்கி வச்சிருக்கேன்” ‘அதிலிங்க…. வெண்ணிலா, கணவனிடம் எதையோ சொல்ல வந்தவளாகத், தயங்கிப் பேசினாள். ‘உன்னால வரமுடியலைன்னா, விட்டுடு! நான் மட்டும் போயிக்கிறேன்” கதிரிடமிருந்து, ‘சுள்’ளென்று வார்த்தைகள் வந்து விழுந்தன. வெண்ணிலா, மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாதவாளக, மௌனமாக எழுந்து உள்ளே போனாள். ‘குழந்தைகளுக்கு வேண்டிய பால், பிஸ்கட் எல்லாம்


அவங்க ஊர் விருந்தாளிகள்

 

  ‘நம்ம ஊருல, பிள்ளையாரு, அம்மன், சிவன்னு எல்லா சாமிக்கும் கோயில் இருக்குது. ஆஞ்சநேயருக்கும் ஒரு கோயில் கட்டிடணும். அப்பதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவுப் பொறக்கும்” ‘அட போப்பா! கோயில் கட்டிட்டா, சரியாப் போச்சா? நம்ம பஞ்சாயத்து ஆளுங்க நெனைச்சா, இது ஒண்ணுங் கஷ்டமான வேலையே இல்ல!”. ‘எத்தனவாட்டி மனுக் குடுத்தாச்சு?, மறியல் பண்ணியாச்சு? அட! இளவட்டங்கள்லாம் ஒருதடவ, பஞ்சாயத்து ஆபிசு சுவருல்லயே அவனுகள, அசிங்கமாத் திட்டி, கரியால எழுதி வச்சிட்டானுகத் தெரியுமா?” டீக்கடைப் பெஞ்சில்,


உலகம்மையின் தாலி

 

  ‘சங்கரு ! கொஞ்சம் தேடிக்குடேன். இங்கதான் எங்கேயாச்சும் விழுந்திருக்கும்” மகனிடம் கெஞ்சினாள் உலகம்மை. ‘உனக்கு இதே சோலிதான். இதுக்குதான் இன்னொன்னு கைவசம் வச்சுக்கோன்னு சொல்றேன். கேக்கிறியாமா! நீ” சலிப்போடு சொல்லிவிட்டு சட்டையை மாட்டியபடி, வெளியே கிளம்பி விட்டான சங்கர். ‘காலங்காத்தால எங்கக் கிளம்பிட்ட?” ‘டியூசன் சாரு வீட்டுல இன்னைக்கு வெள்ளையடிப்பு. கூடமாட நிக்கதுக்கு வர சொல்லியிருக்காரு. மதியானம் சாப்பாடு சாரு வீட்டுலதான். கோமுவும் கூட வர்றான்”. சொல்லிவிட்டு சைக்கிளில் சிட்டாகப் பறந்தான் சங்கர். ‘ பள்ளிக்கூடம்


வடக்கத்திப் பையன்

 

  ஓங்கி வளரும் பல அடுக்கு கட்டிடம் அதன் அருகில் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத கூரை வேய்ந்த குடிசை. சென்னையின் புற நகர் பகுதிகளில் பரவலாக காணக் கிடைக்கும் காட்சி முரண் இது. சோமாவுக்கும் அவன் நண்பர்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு குடிசை தான் வசிப்பிடம். பூர்வீகமான, பீகாரின் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் இருந்து கட்டிட வேலைக்காக இங்கு வந்தவர்கள் அவர்கள். அவர்கள் என்னிடம் வந்து வேலைக்கு சேர்ந்த அந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஏஜென்ட்