கதையாசிரியர் தொகுப்பு: வண்ணதாசன்

30 கதைகள் கிடைத்துள்ளன.

அகஸ்தியம்

 

  ”இன்றைக்கு பௌர்ணமியா?” – நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே தனுஷ்கோடி அண்ணனிடம் கேட்டேன். நிலா முழு வட்டமாக நிறைந்துகிடந்தது. சின்னத் துண்டுமேகம்கூட இல்லை. எட்டுத் திசைகளும் சுத்தமாக இருந்தன. எல்லா இடங்களையும் துடைத்து எடுத்ததால் அப்படியொரு துடிப்புடன், கொதிபால் காம்புச் சூட்டுடன் கறவைச் செம்பில் நுரைத்துக்கொண்டு இருந்தது. நட்சத்திரங்கள் விடுமுறையில் போயிருந்தன. ”நேற்றுதானே கோயிலில் கூட்டமாக் கிடந்துது. பிரதோஷத்துக்கு மினிபஸ்காரன் ஸ்பெஷல்கூட விட்டிருந்தானே. அப்போ நாளைக்குத்தானே பௌர்ணமியா இருக்கும்?” – தனுஷ்கோடி அண்ணனும் இப்போது நிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.


கனியான பின்னும் நுனியில் பூ

 

  இந்தக் கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் மேல் சற்றுச் சாய்ந்தாற்போல நின்றுகொண்டு, ‘சரிப்பா’ என்றாள். அவள் இந்தப் பழக் கடையைப் பார்த்த மாதிரியே தெரியவில்லை. ரயில் வருவதற்காக


எதுவும் மாறிவிடவில்லை

 

  அந்த அறையிலிருந்து சம்போக வாடை அடிக்கிறது. வார இறுதியில் வருகிற என்னுடைய தாதியின் கணவனை, இந்த இரண்டாவது படுக்கை அறையைப் பயன்படுத்திக் கொள்ள நானே அனுமதித்திருந்தேன். அந்த இளைஞன் ஜெயராஜை எனக்குப் பிடித்திருந்தது. அவன் கண்கள் பொய் சொல்லாதவையாக இருந்தன. ‘எனக்குத்தடையில்லை. நீங்கள் அந்த அறையை உபயோகித்துக் கொள்ளலாம்’ என்று சொன்னபோது அவை மிகவும் உண்மையுடன் ஒளிர்ந்தன. அவன் இருந்த பொழுதுகளிலும் அவன் இல்லாத வார நாட்களிலும் நான் பெயர் சொல்லியே, ‘நிர்மலா’ என்று கூப்பிட்டேன்.


அந்தப் பையனும் ஜோதியும் நானும்

 

  ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று தெரியும். தெற்கு கடற்கரை ரஸ்தாவில் பெரிய அட்டைப்பெட்டிகளில் மின்பல்புகளை ஏற்றிக் கொண்டுவந்த கை வண்டியை நிறுத்திவிட்டு என்னோடு ஒரு பழக்கீற்று சாப்பிட்ட அற்புத முண்டாசுக்காரனுக்கு நல்ல தர்பூசனிப்பழங்கள் எந்த ஊரில் கிடைக்கும் என்பது தெரிந்திருந்தது. எரிச்சுடையார் கோவில் பிரகாரத்தில் நிற்கிற மரத்து நெல்லிக்காய்கள் போல வேறெங்கும் கிடையாது என்று அம்மா


ஒரு சதுரங்கம்

 

  மழைதான் இப்படி எல்லாம் செய்யும். ஏற்கெனவே ஒரு பாட்டம் மழை பெய்து ஓய்ந்திருந்த சமயத்தில், அந்த ஆட்டோவைக் கையைக் காட்டி நிறுத்தினேன். ”அன்பு நகர், ஹவுஸிங் போர்டு போகணும்” என்று சொன்னேன். வருமா, எவ்வளவு ஆகும் என்று எல்லாம் கேட்கவில்லை. ஆட்டோக்காரர் பதில் சொல்லாமல், அரை வட்டம் அடித்துத் திரும்பி வந்து ‘ஏறுங்க’ என்பதுபோலப் பின் கதவைத் திறந்துவிட்டார். ”தாத்தாவைப் பாருங்க. மழையோடு மழையா, குடையைப் பிடிச்சுக்கிட்டு வந்து தபால்பெட்டி யில் லெட்டர் போடுறதை…” என்று