கதையாசிரியர் தொகுப்பு: முகில் தினகரன்

54 கதைகள் கிடைத்துள்ளன.

தலைமுறைக் கடன்

 

  தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். ‘லொடக்…லொடக்” என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது. ‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு….புஷ் போட்டாச்சுன்னு சொன்னானே அந்த வயர் பின்னறவன்!…வரட்டும்…வரட்டும்…பில் சாங்ஷன் ஆகி…பேமெண்டுக்கு என்கிட்டதானே வரணும்?…கவனிச்சுக்கறேன்!” கோபத்துடன் தனக்குத்தானே பேசிக் கொண்டார். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, ‘சார்…இந்தாங்க சார் பில்லு!” என்று பவ்யமாக வளைந்தபடி


யார் வெற்றியாளர்?

 

  ரயிலில் தன் எதிரில் அமர்ந்திருந்தவருடன் என் கணவர் பேசிக் கொண்டே வர நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடியே பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த எதிர் இருக்கை நபர் தான் எழுதிய ஒரு கவிதை நூலை எடுத்து என் கணவரிடம் தர கவிதைக்கும் தனக்கும் காத தூரம் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பாத என் கணவர் அப்புத்தகத்தை நாசூக்காக என்னிடம் தள்ளினார். ‘த பாரு கனகு… சாரு கவிதை நூலெல்லாம் வெளியிட்டிருக்கார்.” புன்னகையுடன் வாங்கிப் புரட்ட ஆரம்பித்தேன்.


போடா பைத்தியக்காரா…!

 

  பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகrந்ததும் ‘ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான். ‘டேய்… டேய்… என்னாச்சுடா உனக்கு? இப்பத்தான் பஸ்ல செல்போனை யாரோ அடிச்சிட்டதாச் சொல்லிக் கத்திக் களேபரம் பண்ணி… ஆர்ப்பாட்டம் பண்ணி அழுதே… இப்பக் கீழே இறங்கியதும் சிரிக்கறே… உனக்கென்ன பைத்தியமா?” உடனிருந்த நண்பன் சூர்யப் பிரகாஷ் கேட்க, ‘பைத்தியக்காரனா? யாரு நானா?… ம்ஹூம்… பைத்தியக்காரன் நானில்லை… அந்த பஸ்ல இருந்த அத்தனை பேரும்தான் பைத்தியக்காரர்கள்…” சொல்லிவிட்டு அவன்


பரிகாரத் தொழில்?

 

  அந்த அறைக்குள் ஒரு அவஸ்தையான அமைதி பிடிவாதமாய் அமர்ந்திருக்க பிச்சுமணி தன் தொண்டைச் செருமலில் அதை உடைத்தார். தலை தூக்கிப் பார்த்த மகளின் அருகே வந்து அவள் தோளைத் தொட்டு, ‘த பாரும்மா… நான் மற்ற அப்பாக்களைப் போல காதலுக்கு எதிரி அல்ல… காதலை ஆதரிப்பவன்தான்… அது உண்மையான…நேர்மையான… ஏற்றுக் கொள்ளும் வகையிலான காதலாய் இருக்கும் பட்சத்தில்…” ‘அப்பா… எங்க காதலும் உண்மையான… நேர்மையான… காதல்தான் அப்பா” சவிதா மெல்லிய குரலில் சொல்ல, ‘ஆனால்… ஏற்றுக்


காக்கா பார்முலா!

 

  அதிக சூடும் இல்லாமல் அதிக ஜில்லிப்பும் இல்லாமல் இடைப்பட்ட வெதுவெதுப்பிலிருக்கும் இதமான நீரை மொண்டு உச்சந் தலையில் வைத்து நிதானமாய் ஊற்றிக் கொள்ளும் போது மேனியில் ஏற்படும் ஒரு இன்ப சிலிர்ப்பிற்கு இந்த உலகத்தையே எழுதி வைக்கலாம். கண்களை மூடிக் கொண்டு அந்தச் சுகானுபவத்தை சுகித்துக் கொண்டிருந்த நான் பாத்ரூம் கதவு தட்டப்பட, ‘யாரூ” எரிச்சலுடன் கேட்டேன். ‘அப்பா… நான்தானப்பா ரஞ்சனி…” என் ஏழு வயது மகள். ‘எ…ன்…ன…ம்…மா….?” ‘அப்பா… நம்ம வீட்டு மொட்டை மாடில