கதையாசிரியர் தொகுப்பு: நாஞ்சில்நாடன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

 

  வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த கிழக்கு பார்த்துப் பொங்கல் விடும் முற்றம். குறுக்கே நீளவாட்டத்தில் சுவர்வைக்க, கொத்தனார்களும் கையாட்களும் வந்துவிட்டனர். கைப்பணிப் பலகை, முழுக்கோல், சிறுகோல், ரசமட்டம், குண்டு நூல், கரண்டி, சிமென்ட் சட்டி, மண்வெட்டி சகிதமாக எஞ்ஞான்றும் தகர்க்க இயலாத பிரிவினை. சுட்ட செங்கல்களும், அரித்த பழையாற்றுச் சிறுமணலும் நடுமுற்றத்தில் கிடந்தன. எப்படி அளந்துபார்த்தாலும், முற்றத்தை நெடுநீளமாகப் பார்த்துக்கொண்டு,


பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

 

  நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி மாதக் கொடை நாட்களில் வெளியே எடுத்து, புளி போட்டுத் தேய்த்து, மற்றொரு முறை திருநீறு போட்டுத் துலக்கி, தயாராக உள்கோயிலில் அம்மனின்


சிறியன செய்கிலாதார்…

 

  பேராசிரியர் த மு பூரணலிங்கனார் கனவை பேராசை என்று துணிய முடியாது. ஒருகையில் நின்று யோசிக்கையில் இந்த டாக்டர் பட்டம் அவரது புலமைக்கு அநாவசியம் என்று தோன்றும்.அவர்க்கென தனியான பெருமையை இது எங்கே சேர்த்து விடபோகிறது ? மறு பக்கம் நின்று யோசிக்கையில் அவருடைய கல்வித்தகுதிகளில் மகுடம் வைத்தது போல இது அமையலும் ஆகும். மாடன் கோயில் பூசாரி மகன் மெடிக்கல் காலேஜ் பற்றி யோசிக்கும் சமத்துவம் அன்றும் வந்திருக்கவில்லை.எனவே லோகல் தமிழ்ச் சங்கத்தில் புலவர்


கிழிசல்

 

  காப்பிக் கடையில் சரியான கூட்டம். ஆள் இருக்க இடமில்லை. நீள வாட்டத்தில் போட்டிருந்த பெஞ்சுகளில் நெருக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பெஞ்சின் ஓரங்களில் இருந்தவர்களுக்கு ஒரு கை முட்டியை ஊன்றுவதற்கு மட்டுமே இடம் இருந்தது. கை கழுவிவிட்டு வந்தவர்கள் தேயிலை குடிக்க வரும் முன் காயான இடத்தில் வேறு ஆட்கள் அமர்ந்தாயிற்று. தேயிலையை நின்று கொண்டே குடிக்கும்படி. ஆயிற்று. மூன்று பேர் நான்கு பேராக வந்தவர்களுக்கு எல்லோருக்கும் ஒரே பெஞ்சில் இடம் கிடைக்கவில்லை. வெவ்வேறு பெஞ்சுகளில்


பெருந்தவம்

 

  மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். எப்படிப் பார்த்தாலும் நூற்றிருபது, நூற்று முப்பது ராத்தல் இருக்கும். சிவனாண்டி நல்ல சுமட்டுக்காரன். இருபத்தைந்து ஆண்டுகளாக மலை ஏறுகிறான். மலைக்