கதையாசிரியர் தொகுப்பு: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

16 கதைகள் கிடைத்துள்ளன.

கனா கண்டேனடி..!

 

  அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் ‘பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் கூட்டமாக வந்து பொரிகளைத் தின்னும் காட்சி அற்புதமாக இருந்தது. ‘உன் பேர் என்ன?’ என்றபடி ஜெமினி பொரி உருண்டை ஒன்றை என்னிடம் நீட்டுகிறார். நான், ”ஸ்ரீராம்’ என்றபடி வேகமாகப் பொரி உருண்டையை வாங்கி


இது காதல் இல்லாத கதை!

 

  சென்னை. கோல்ஃப் க்ளப். 80 ஏக்கரில் விரிந்திருந்த அந்தப் பரந்த புல்வெளியில், சிறிய பேட்டரி கார்கள் ஆங்காங்கே மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன. புல்வெளியின் தெற்கு ஓரத்தில் தனது பந்துக்கு ஆங்கிள் பார்த்துக்கொண்டிருந்தான் 27 வயது மிதுன். அந்த மிதுன்… அழகன். அவனுடைய தலைமுடிகள் கழுத்தைத் தாண்டி வளர்ந்து, நெளிநெளியாக தோளில் அழகாகப் படர்ந்திருந்தன. டி-ஷர்ட், த்ரி ஃபோர்த், கையில் ஏதோ கச்சாமுச்சா பேண்டு. அவன் பாக்கெட்டில் இருந்த க்ரெஸ்ஸோ கிராண்ட் மொனாக்கோ செல்போனின் மதிப்பு சுமார் ஒன்றரை


ராயல் டாக்கீஸ்

 

  நான் கையில் டிராவல் பேக்குடன் ‘ராயல் டாக்கீஸ்’ தியேட்டர் வாசலை நெருங்கியபோது இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. தியேட்டர் வாட்ச்மேனுடன் பேசிக்கொண்டு இருந்த தேவராஜ் என்னைப் பார்த்தவுடன் வேகமாக வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு, ”வா மகேந்திரா…’ என்றான். நான் லேசாகச் சிரித்தபடி, ”தம்மு வெச்சிருக்கியா தேவா?’ என்றேன். தேவராஜ் சட்டைப் பாக்கெட்டில் இருந்து கிங்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ”நீயும் கிங்ஸுக்கு மாறிட்டியா?’ என்றேன். ”கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே…’ என்றபடி தேவராஜ் சிகரெட்டை நீட்ட… நான்


இளையராஜா

 

  இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி! குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ”யாரு இந்த ஜெஸ்ஸி?’ என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ”இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?’ என்றேன்.


பூக்கள் பூக்கும் தருணம்

 

  கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு ஒன்றும் ஓடவில்லை. ஒரு கணம் ஏன் இந்த வேண்டாத வேலை என்று தோன்றியது. எல்லாம் நேற்று என் நண்பன் மனோகரைச் சந்தித்ததால் ஏற்பட்ட பிரச்னை. பார்ப்பதற்கு மிகவும் சுமாரான மனோகர், கல்லூரி மேகசினில் கவிதை எழுதியே காலேஜின்… மற்றும் எங்கள் முனிசிபாலிட்டியின் ஆகச் சிறந்த அழகியான ஜோதியை வீழ்த்திவிட்டான். “”எப்படிடா?” என்று கேட்டபோது, “”மச்சி…