கதையாசிரியர் தொகுப்பு: சிவசங்கரி

13 கதைகள் கிடைத்துள்ளன.

ராட்சஸர்கள்

 

  அத்தை ஊஞ்சலில் ஒரு காலை மடித்து, இன்னொன்றைத் தொங்கவிட்டபடி அமர்ந்து இருந்தார். கைத்தறிப் புடைவை, வெள்ளை ரவிக்கை, கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் விபூதிக் கீற்று, அழுந்த வாரி கோடாலி முடிச்சாக முடியப்பட்ட வெள்ளைத் தலைமுடி. பார்வை மட்டும் வழக்கம்போலவே, பால்கனி வழியாகத் தெரிந்த வெட்டவெளியை வெறித்துக்கொண்டிருந்தது. ”அத்தே… நா கமலி வந்திருக்கேன்… என்னைப் பாருங்கோ… ரெண்டு நாள் முன்னாலதான் அமெரிக்காலேர்ந்து வந்தேன். என்னோட இவரும் லாவண்யாவும் வந்திருக்கா. கொழந்தையப் பாருங்கோ… எல்லாரும் இவ உங்க


சோறு ஆறுதுங்க

 

  நடராஜன் தன் போட்டோ ஸ்டுடியோவின் மாடி வராந்தா குட்டை கைப்பிடிச் சுவரில் சாய்ந்து வண்ணம் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே அவனுக்கு வேலை எதிர் பார்க்காத விதமாய் ஒன்று மாற்றி ஒன்று சரியாய் இருந்தது. முதல் நாள் கல்யாண முகூர்த்த நாள் போலிருக்கிறது. மூன்று புதுமண ஜோடிகள், ஒரு பள்ளி தோழியர் கூட்டம், அம்மணமாய், அரை நிக்கருடன் என்று பல கோணங்களில் எடுக்கப்பட்ட குழந்தை ஒன்று என வாடிக்கைக்காரர்களின் பட்டியல் நீண்டு போனது. பத்து


ட்ரங்கால்

 

  அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி – அதான் அந்தப் பெண்மணி – அடாது மழைபெய்தாலும் வெள்ளிக்கிழமை காலை ஆறரைக்கெல்லாம் ‘பாப்பா’ என்று அழைத்துக்கொண்டு வருவது தப்பாது. மிளகும் வெந்தையமும் போட்டுக் காய்ந்த எண்ணெயில் ‘சொய்ங்’ என்று சப்தம் எழ ஒரு வெற்றிலையைப் பொரித்து எடுத்து, ஒரு கிண்ணம் எண்ணெயை


விழிப்பு

 

  தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது. வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் நுழைந்த நாய்கள் அவன் கவனத்தை ஈர்த்தன. தெரு நாய்கள்தாம். ஒன்று கறுப்பு. அடுத்தது பழுப்பு …முன்னால் வந்தது கொஞ்சம் சோனியாக “ஙே” என்று இருந்தது. பின்னால் வந்த பழுப்பு நாய்.


நெடுஞ்சாலையில் ஒரு சாவு

 

  அன்று இவர் ஊரில் இல்லை-தூங்கி எழுந்த எண்ணெய் தேய்த்து ஸ்னானம் செய்தேன். இவர் இல்லாததால் வீட்டில் வேலை ஒன்றுமே இல்லை. என்ன செய்து பொழுதைப் போக்கலாம் என்று தவித்தவள், இவருடைய பட்டன் இல்லாத ஷர்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பட்டன்களைத் தைத்துக் கொண்டிருந்தேன். சமையற்கார அம்மாள் எட்டிப் பார்த்தாள் – “சாப்பிட வரலையா? கார்த்தாலேந்து வெறும் வயத்தோடு இருக்கியே!” “ம்?…வரேன். இருங்கோ…இன்னும் ரெண்டு ஷர்ட் தான் பாக்கி…” இவர் இருந்தால் எட்டரை மணிக்கு டிபன்; ஒரு மணிக்கு