கதையாசிரியர் தொகுப்பு: என்.சொக்கன்

27 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

 

  அவன் காலை விழித்தெழுந்தபோது அறைமுழுக்க தண்நீர் நிரம்பியிருந்தது, அவனும் பிற நண்பர்களும் படுத்திருந்த பாய்கள் நீரின்மேல் தெப்பம்போல் மிதந்தாடிக்கொண்டிருந்தன. அவன் எழுந்து உட்கார்ந்து கண்ணைக் கசக்கியதும் நிறைந்திருந்த நீரெல்லாம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு எங்கோ ஓடி மறைய, அவர்கள் தரைக்கு வந்தார்கள். அவன் கண்கள் இன்னும் எரிந்துகொண்டிருந்தது. கண்ணாடியில் பார்த்தால் செக்கச் செவேலென்று சிவந்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். சீக்கிரமே படுத்துவிட்டாலும், ராத்திரி சரியாய்த் தூக்கமில்லை. எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது என்றே தெரியாதபடிக்கு யோசனைகளின், கற்பனைகளின் அவஸ்தை,


சல்யூட்

 

  நான் என் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்ப, அவன் எப்போதும்போல் என்னை நெருங்கி, விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான். காரணமில்லாத அனிச்சையாய் என் தலை கவிழ்ந்துகொண்டது. இனம்புரியாத குற்றவுணர்ச்சி மனதினுள் நிரம்ப, கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்காமல் விறுவிறுவென்று உள்ளே நடந்தேன். இந்த ஹோட்டலில் சாப்பிடத் துவங்கிய நாள்முதலாகவே, இது அன்றாட நடவடிக்கையாகிவிட்டது – வண்டி நிறுத்துமிடத்தில் அந்த அவன் எனக்கு வணக்கம் போடுவதும், பதிலுக்குக் காசு எதிர்பார்ப்பதும், அதைத் தரமுடியாது என்று நான் பிடிவாதமாயிருப்பதும் ! இத்தனைக்கும்,


பூட்டு

 

  முதன்முதலாக நானொரு சாவிக் கொத்தைக் கையில் வாங்கியது, கல்லூரிக்குச் சென்றபிறகுதான். அதற்குமுன்பே சைக்கிள் சாவியொன்று என்வசமிருந்தது. என்றாலும், அது வெறும் சாவி மட்டுமே, சொல்லப்போனால், அதைவிட மீச்சிறியதானதொரு இரும்புத் துணுக்குதான். காந்தத்தைக் கண்டு இரும்பு நகர்வதுபோல, எப்படியோ அந்த உலோகத் துண்டுக்கு பயந்து எங்கள் சைக்கிள் திறந்துகொண்டிருந்தது. அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் செல்கிறவர்கள்தான். ஆனால், எங்களோடிருந்த அத்தை எந்நேரமும் வீட்டில்தான் இருப்பார் என்பதால், நானும், என் தம்பியும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோதுகூட, எங்களிடம் வீட்டுச் சாவியைத்


பொதி

 

  எங்கும் பச்சைப்பசேலென்றிருக்கிற ஒரு புல்வெளியில் அந்த தேவதையின் பக்கத்தில் உட்கார்ந்தபடி ப்ரியா ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள். ஊஞ்சலுக்கான கயிறு வானத்தில் எங்கிருந்தோ திடீரென்று துவங்கியிருந்தது, இதமான சிலுசிலு தென்றல் அதைத்தொட்டு இயக்கிக்கொண்டிருக்க, பல வண்ணங்களில் உடையணிந்த அழகிய தேவதை அவளை மெல்ல அணைத்தபடி இருந்தது. வேகமில்லாத வேகத்தில் முன்னும்பின்னும் அசைந்தாடிய ஊஞ்சலின் தாலாட்டில் கண்மயங்கி, தேவதையின் தோளில் சாய்ந்தபடி அவள் தூங்க முயன்றுகொண்டிருந்தபோது, தேவதை அவளை உலுக்கி எழுப்பி, ‘ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சு’ என்றது. சட்டென்று ஊஞ்சலின் இயக்கம் நின்றுவிட்டது.


எழுத்தாளன் மனைவி

 

  காலையில் ஆ·பீசுக்கு வந்து உட்கார்ந்து தினமணியைப் பிரிப்பதற்குள் அதற்காகவே காத்திருந்ததுபோல் ·போன் வந்தது. எதிர்முனையில் உச்ச சத்தத்தில் ‘ஹலாவ்’ என்கிற குரலைக் கேட்டதும் தெரிந்துவிட்டது. சங்கரலிங்கம். ‘சொல்லுங்க சார், நான் விஜயன்தான் பேசறேன்’ ‘விஜயன் சார், விஜயன் சார்’, ஆக்ஸிஜனுக்குத் திணறுகிறவர்போல் எதிர்முனையில் சங்கரலிங்கம் திக்குமுக்காடினார், ‘என்னாச்சு சார், ஏன் ஒரு மாதிரி பேசறீங்க ?’ பேப்பரை மேஜைமேல் போட்டுவிட்டு ரிசீவரை சரியாய்ப் பிடித்துக்கொண்டேன். ‘சந்தோஷம் சார், சந்தோஷம், ஆனந்தக் கண்நீர்’ என்றார் சங்கரலிங்கம். அந்தக்