Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: தினமணி

558 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை வீடு!

 

 நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது. வீட்டைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் வீடு கட்டிய பின் நன்றாகவே தெரிந்தது. வீட்டின் வெளியே நீரின்றி அசுர வேகத்தில் வளரும் வேலிக் கருவேலம், எருக்கன் செடிகளை அகற்றுவதிலேயே சோர்ந்து போய் விடுவேன். அடுத்த ப்ராப்ளம் மழை பெய்தால் வீட்டினுள் எப்போது தண்ணீர் எட்டிப் பார்க்கும் என்பதுதான். ஒருநாள் மழையிலேயே தவளைகள் ” கெக்கபிக்கே’ என்று கச்சேரியை


48-ஆவது பெண்

 

 மகேஷுக்கு பெண் பார்க்கப் போவது என்றால் திருநெல்வேலி அல்வாவைச் சுடச்சுட சாப்பிடுவதுபோல அவ்வளவு பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு திருவிழா கொண்டாட்டத்திற்குத் தயாராகும் உற்சாகம் தாண்டவமாடும். மனசுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத பறவை ரெக்கை கட்டி வட்டமடிக்கும். சரி, கல்யாணம் கட்டிக் கொள்ளத்தான் அலைகிறான் என்று நீங்கள் நினைத்தால், அது தப்புக்கணக்கு. நாலாவதோ, ஐந்தாவதோ அல்ல நாற்பத்தெட்டாவது முறையாக பெண் பார்க்கும் வைபவமாக இன்று சீஷமங்கலத்தை நோக்கிய பயணம். “இவர்தான் மாப்பிள்ளை, இவர்தான் மாப்பிள்ளை’ என்று பிறர் அடையாளப்படுத்தும்


குரங்குகளுடன் ஒரு மதியம்

 

 எளியவனாய்த் தீர்மானிக்கப்பட்டவன் வலியவனாய் வீரம் வெளிப்படுத்துகிறான். அந்த பராக்கிரமத்தை மேலும் மேலும் தொடர்ந்து நிரூபித்து… இதோ இன்னும் அதே விதமாய்…! எதிரணியினர் எனும் நிஜத்தையும் மீறிய மெய்யான பாராட்டுணர்வுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் இந்திரா. அவ்வளவு அற்புதமாய் ஆடிக்கொண்டிருந்தார்கள் அயர்லாந்துக்காரர்கள். வேர்ல்ட் கப்… கிரிக்கெட்டின் மகாபாரத யுத்தம்…! பயமோ பதற்றமோ கொஞ்சமும் இன்றி… துணிந்தவனுக்கு எதுவுமே துரும்புதான் போலும். ஆடட்டும், பரவாயில்லை. “நீ வீரன் என்றால் நான் மாவீரன்…’ – தோனி டீம்னா சும்மாவா…! வியந்து வியந்து ரசித்துக்


தனி மரம்

 

 “”பத்ரோஸ் சார் காலையில இவ்வளவு வேகமா எங்கப் போறீங்க…. கூட்டுக்கார போலீச காணோம்….” என்ற செல்லப்பனின் கேள்விக்கு, “”அவன் வீட்டுக்குத்தான் போறேன்….” எனக் கூறிக் கொண்டு வேகவேகமாக நடந்தார் பத்ரோஸ். மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து சென்ற மண் சாலையில் இறங்கி சிறிது நேர நடைக்குப் பின் பெரிய கேட் போட்ட அந்த வீட்டை அடைந்து கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார். வீட்டின் முன்பகுதியில் இருந்து கார் செட்டில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத நிலையில் ஒரு மாருதி கார் நின்று


பயனுற வேண்டும்

 

 ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம். “”என்னம்மா விக்கித்து நிக்கற… போய் கம்ப்யூட்டர ஆன் பண்ணு.. மணி ஆயிட்டு..” மலர்விழி, வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். குறிப்பிட்ட இணையதளத்திற்குள் நுழைந்தாள். இன்னும் ஒரு சில நிமிடங்களே இருக்க.. கண்களை மூடி மனதிற்குள் அம்மாவை கொண்டு வந்தாள். கண்களை திறந்தபோது அப்பா ஹாலில் அம்மா படத்திற்கு எதிரே குளித்து முடித்து ஈர உடையோடு அமர்ந்திருப்பதை


வீடெனும் பெருங்கனவு

 

 ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால் நேரம் கடந்தும் தனபாலன் அங்கு வந்து சேரவில்லை. ஜெயசீலியும் செல்வகுமாரும் சில வருஷங்கள் அபுதாபியில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார்கள். மறுபடியும் அபுதாபிக்குத் திரும்பிப் போக வேண்டாமென்றும் அங்கு சேமித்த பணத்தில் சென்னையின் ஏதாவதொரு புறநகரில் வீடு கட்டி செட்டில்


அம்மி

 

 விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் திண்ணையில் படுக்கையில் கிடந்த சண்முக ஆசாரிக்கு வீட்டில் கசமுசா என்ற பேச்சைக் கேட்டு எரிச்சல் எரிச்சலாக வந்தது. “”காலத்த என்னத்தல பேசிட்டிருக்க…” எனக் கேட்டுக் கொண்டே படுக்கையிலிருந்து எழ முயற்சித்தார். ஆனால் படுக்கை எழுப்பிய கடமுடா சத்தத்தை அடுத்து மெதுவானார். வாழ்நாள் முழுவதும் மரவேலை செய்த பின்னும் தனது தேவைக்கு ஒரு நல்ல கட்டில் செய்து கொள்ள முடியவில்லை. வேலைக்கு போன வீட்டில் வேண்டாமென்று ஒதுக்கிய பழைய மரத்துண்டுகளை ஒடிந்து போன


கொள் எனும் சொல்ல்லும்மா

 

 - ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் . – வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு. – எனக்கு நல்லா கேக்குது. – ம்… நல்லாருக்கே நல்லாருக்கேம்மா… பேரப்புள்ளீக சொகந்தான? – ம். இருக்கா. அவளுக்கென்ன? – நா வெளீல இருக்கேம்மா…. அம்மா வீட்லதே இருப்பா. – ஆமா… சலூன் கடைல பேப்பர் பாக்க வந்துருக்கேன். – ஆமாமா, வேல நாலுமணிக்கு முடிஞ்சிருதுல்ல. வீட்டுக்குப் போய்ட்டு வந்துட்டேன். சரி, நீங்கல்லாம் நல்லாருக்கீங்கள்ல? – மருமகெ? சரி சரி


கிணறு

 

 காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு குளித்திருந்தது இந்த மழை இரவே துவங்கியிருக்க வேண்டும். தூக்கத்தில் கவனிக்கவில்லை மழையுடன் சேர்ந்து வந்த காற்றின் வாசனையில் சற்று நேரம் லயித்தேன். இரவு தூக்கத்தில் கண்ட கனவு நினைவு வந்தது. அந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நாளாகவே எனக்கு அந்தக் கனவு தொடர்ந்து வருகிறது. வெட்ட வெளி பொட்டல் காடு நட்ட


புகார்ப் புத்தகம்

 

 திருவரசு தம் மனைவியுடன் கடலூருக்குப் போவதற்காகக் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தார். கோடைகாலப் பகல். கேட்க வேண்டுமா? வெயில் தகித்தது. பாட்டிலில் தண்ணீர் தீர்ந்துவிடவே, நிலைய அண்டாவில் நிரப்பிக் கொள்ள எண்ணி, அருகில் போய்ப் பார்த்தால், காலி! பெருத்த ஏமாற்றம். பயணியர் சேவையில் இன்றியமையாததல்லவா குடிநீர் வழங்கல்? அதுவும் வெயில் காலத்தில்? கடமை தவறிய நிலையத் தலைவர்மீது கோபங் கொண்டார். துணைவியின் அருகில் வந்தமர்ந்து, “”தண்ணீர் இல்லை; கடமையைச் செய்பவர்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். யாராவது