கதைத்தொகுப்பு: குங்குமம்

119 கதைகள் கிடைத்துள்ளன.

தீராப்பகை

 

 அந்த ஆலமரம் கம்பீரமாக தன் பெரிய கிளைகளையும், விழுதுகளையும் பரப்பி, பெருநிழல் தந்து கொண்டிருந்தது.அதன் கீழே பெருங் கூட்டம். அதில் அனலும், புழுதியும் பறந்து கொண்டிருந்தது. கூடவே கூச்சலும், குழப்பமும். நடுநாயகமாக இருந்த தலைவர் யூதநாதருக்கு சம்பிரதாய வணக்கம் போட்டுவிட்டு, பெரியவர் நாக மதோற்கடர் எழுந்து நிற்க முயற்சித்தபோது தன் பெருத்த உடம்பு கோபத்திலும் வயதின் மூப்பிலும் ஆடுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினார். பல இக்கட்டான சமயங்களில் இவரது யோசனைகள் பலன் தந்திருக்கின்றன என்றாலும் இப்போது இவருக்கு


பட்சி

 

 பிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ எழுதும்போது, அதுவும் ‘பட்சி’ என்ற தலைப்பிட்டு அதை எழுதும்போது – ஒரு சிறு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. ஒரு வழியாக அவர் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘‘‘ஒரு மணி நேரமா எதையோ மிகுந்த ஈடுபாடோடு எழுதறீங்க. கதையா? கட்டுரையா?’’ என்றபோது அவர் முகத்தில் ஒரு சிறு மலர்ச்சி உண்டானது. ‘‘கதைதான்…’’ என்றார். தொடர்ந்து


கோவிந்தசாமி

 

 அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாமியறை. அடுத்து உக்கிராண அறை. பிறகு தட்டு முட்டு சாமான்கள் வைக்கிற அறை. வலப்புறம் படுக்கை அறை. படுக்கையறையை அடுத்து சுவரில்லாமல் மேடை போல் மேலேறிய காற்றும் வெளிச்சமுமாய் இருக்கும் சமையலறை. காற்று விறகடுப்பை அணைத்து விடாதபடி இடுப்புயரம் கட்டப்பட்ட ஒற்றைச் சுவர். கீழே தரையில் அடுப்பு.திண்ணைக்கு கம்பிக் கிராதி போட


சொந்த வீடும் சமையல் மாமியும்

 

 உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக சமையல் மாமிக்கு ஃபோன் போட்டேன். அடைத்துக் கிடந்த வீட்டைத் திறந்ததும் கப்பென்று முகத்தில் அறைந்தது புழுக்க வாடை. காற்றாடத் திறந்து கிடந்தால் அழுக்கு வீடு கூட நாற்றமடிக்காது. வீட்டிற்குள் சூரிய ஒளி பட்டால் ஆரோக்கியம். ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. மாமி சமையலில் பிஸி. ஹால் ஜன்னலைத் திறந்தேன். உதித்த சூரியனின் ஒளிக் கீற்றுகள் சரேலென்று உள்ளே பாய்ந்தன. என் வீட்டிற்கு அழகே அதுதான். காம்பவுண்ட் சுவரில் நடந்து கொண்டிருந்த பூனை,


பொய் – ஒரு பக்க கதை

 

 எளிமையான கல்யாண நிகழ்ச்சி. தீபக்கும் அவன் மனைவி தன்யாவும் மணமக்களை வாழ்த்திவிட்டு, மொய் எழுதும் இடத்திற்கு வந்தார்கள். “என்னங்க… வசதியில்லாத குடும்பம். கஷ்டப்பட்டு கல்யாணத்தை நடத்தறாங்க. ஒரு ரெண்டாயிரம் ரூபா மொய் எழுதிடுங்க, கவுரவமா இருக்கும்!” “இல்ல தன்யா! வெறும் இருநூறு ரூபாதான் என் பேருக்கு எழுதப் போறேன்.” “என்னங்க நீங்க… ரெண்டு பேரும் ஐ.டி கம்பெனியில வேலை செய்யறோம். மாசம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம். ரெண்டாயிரம் ரூபா மொய் எழுதினா குறைஞ்சா போயிடுவீங்க..?”


புத்தக உலகம்

 

 மணிப்பர்ஸ் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தகம் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டதில்லை. இப்படிக் கேள்விப்படாதவ ரெல்லாம் திருமான் வேங்கடத்தைச் சந்தித்ததில்லை என்று சொல்லிவிடலாம். புத்தகங்களை ‘அசத்துவதில் அவர் சமர்த்தர்; மாநிபுணர். இந்த விஷயத்துக்கென்று ஒரு நோபல் பரிசு ஏற்பட்டிருந்தால் வருடா வருடம் அது வேங்கடத்துக்குத்தான். பரிசுக் கமிட்டியார் டாலராகக் கொடுப்பதைவிட அதே தொகைக்குப் புத்தகங்களாகவே கொடுப்ப தென்றால் ரெட்டிப்புச் சந்தோஷம். நாங்கள் அந்த மகானுபாவனை முதலில் சந்தித்தது ஒரு நூலக ஆண்டுவிழாவில், நூலகம் அந்த ஆண்டுவிழாவில், ஒரு பெரிய


குடை கொண்டான் குமார்

 

 “எங்க அது..? தொலைச்சுட்டு வந்தாச்சா..?” மிரட்டலான குரலை தொடர்ந்து, இரவில் நடுத்தூக்கத்தில் என் பூத உடல் வேரோடு உலுக்கப்பட்டது. “அதுழ்ழா.. எழு..?” தூக்க தைரியத்தில் என் பேச்சு அசால்ட்டாக இருந்திருக்கும் போல. அடுத்த நிமிடம், இடி முழக்கத்துடன் ஒரு பக்கெட் அளவிலான தண்ணீர் என் தலை வழியாக உடல் முழுவதும் இறங்கி வழிந்ததை உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு முழு தூக்கத்தில், கால்பாகம் கண்விழித்தேன்.முக்கால் தூக்க கலக்கமாக இருந்ததால், மழை என்று நினைத்து, ‘குழை, குழை’ என்று,


மொய் கவரில் ஒரு வெடிகுண்டு!

 

 கோ யம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே கல்யாண மண்டபங்கள் வண்ண விளக்குகள் மூலம் கண்ணடித்துக்கொண்டிருந்தன. மூன்று தளங்கள். மூன்று கல்யாண மண்டபங்கள். ஓலாக்களும் ஊபர்களும் ஊர்வலம்போல் உள்ளே வந்துகொண்டிருந்தன. வாசலில் வாட்ச்மேன்கள் பரபரப்பாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் கேள்விகளை அம்புகள் மாதிரி தொடுத்துக்கொண்டிருந்தார்கள்.பின்னே? ஒரு மண்டபத்தில் நவீன் வெட்ஸ் மதுரா. மற்றொன்றில் ஷோபா வெட்ஸ் நவீன். எந்த நவீன் எந்த மண்டபத்தில்? ஏகமாய் கலாட்டா. சிலர் மதுரா எந்த ஃப்ளோரில்? சிலர் ஷோபா எங்கே… கேள்விகள்…


வாராது வந்த மணி

 

 மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தாமதிக்கலாமா இல்லை நாளை பார்த்துக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருந்தவனை செல்ஃபோன் வைப்ரேஷனில் அழைத்தது. தொடுதிரையில் ரெனே வெள்ளைப் பற்களுடன் சிரித்தாள். செவி உபகரணத்தைக் காதில் நுழைத்துக்கொண்டு, “ஹாய் டார்லிங்” என்றான். “இன்னும் கிளம்பலியா? இன்று


கலவரக் குழி

 

 ரயில் துரித கதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. விந்தியாவின் மனதில் ஒரு சின்ன நெருடல் தோன்றி அது பெருகிக்கொண்டே வந்தது. மனதில் ஓர் அமைதியின்மை தோன்றியது. குழந்தையை அவனிடம் கொடுத்திருக்கக் கூடாதோ? எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ‘‘ஏம்மா, குழந்தையைக் கொடுத்தனுப்பினீங்களே… அவர் உங்களுக்குத் தெரிஞ்சவரா?’’ என்று கேட்டார். ‘‘இல்லை அங்கிள்…’’ என்று விந்தியா பதிலளிக்க அவர் முகத்தில் ஒரு சிறிய எரிச்சல் தோன்றியது. ‘‘இப்படி அஜாக்கிரதையா இருக்கலாமா? இந்தக் காலத்திலே யாரையும் நம்பிடக் கூடாது…’’ என்று அவர்