கதைத்தொகுப்பு: கிரைம்

277 கதைகள் கிடைத்துள்ளன.

மெளனமான துரோகங்கள்

 

 சத்தமில்லாமல் சென்ற குண்டு,முதுகை காட்டி நின்று கொண்டிருந்தவனின் கழுத்து பகுதியை துளைத்து வெளியே சென்றது. மடக்..என கழுத்து மடங்க அதனை தொடர்ந்தவாறு கால் மடங்கி உடல் கீழே விழுந்து உருண்டு, தொம்..என்ற சத்தத்துடன் அந்த பள்ளத்தில் விழுந்தது.குண்டு புறப்பட்ட இடத்திலிருந்த மூவர் அருகில் நின்று கொண்டிருந்த கார் கதவை திறந்து தங்களை திணித்துக்கொண்ட பின் சர் என சீறிக்கொண்டு கிளம்பியது. சந்துரு, ஏன் இந்த டீலிங்குக்கு ஒத்துக்க மாட்டேங்கறே?கேட்ட ராஜேஸிடம் வேண்டாம் ராஜேஸ், தயவு செய்து இந்த


தூதுவன்

 

 கதை கிடைக்காத போது இப்படி நெடுஞ்சாலை பயணம் அமையும். நானும் தம்பி ராஜ்-ம் ஷைலோவில் ஓர் அற்புதமான பயணத்தில் இணைந்திருந்தோம். எது பற்றியெல்லாமோ பேசி விட்டு எங்கெங்கோ சென்றது தேடல். “என்ன செய்யலாம்…? ஒன்னும் சிக்க மாட்டேங்குதே…! என்றேன். அவன் வண்டியை ஓட்டிக் கொண்டே…சில ஐடியாக்களை கொடுத்துக் கொண்டே வந்தான் வழக்கம் போல. “தம்பி மாட்டிருச்சுடா… ” என்றேன்…..உற்சாகத்தின் விளிம்பில் அமர்ந்தபடி. எனக்கு கதையின் கரு கிடைப்பதுதான்…..எப்போதுமே சந்தோஷமான விஷயம். அவனும் ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்தான்.


பஞ்சதந்திரம்

 

 “அஷோக் இப்ப நீ எங்க இருக்க” “என்னோட ஸ்டேஷன்ல தான், ஏன் ஏதாவது அவசரமா?” “ஆமா, இப்ப வந்தா உன்னை பாக்கமுடியுமா?” “வாடா, என்ன இப்ப மணி பத்தாவுது ஒரு ஹாஃப் அன் அவர்ல வந்துடுவியா?” “வறேன் அஷோக்” மொபைலை கட் செய்த பிரஷாந்த் அருகிலிருந்த தன் நண்பரிடம் சொன்னான். “கவலைப்படாதீங்க மதி, ஏ.சி அஷோக் என்னோட ஃப்ரெண்ட்தான், கண்டிப்பா உங்க பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்” “ அவர் என்ன சொல்றாருன்னு பாப்போம்” இருவரும் ஒரு


மறந்தவனின் திட்டம்

 

 இராணுவத்தில் மன நல மருத்துவராக பணி புரிந்து சலித்துப்போய் வெளி உலக மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய விரும்பி விருப்ப ஓய்வு பெற்று வெளி வந்த டாக்டர் கணேசுக்கு அரசாங்கத்தால் ஒரு இடம் சகாய விலைக்கு கிடைக்கப்பெற்று மருத்துவமனையை கட்டினார். இருந்தாலும் அந்த இடத்தில் அரசாங்க மந்திரிகளும்,அதிகாரிகளுமே இருந்ததால் நான்கு கிலோ மீட்டர் தள்ளி நகரத்துக்குள் ஒரு கிளினிக் வைத்து மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை நோயாளிகளை கவனித்து வந்தார். இரவு


திட்டமிட்டக் கொலை

 

 சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்தக் கம்பெனியில் வனிதாவுக்கு ஒரு தற்காலிக வேலை கிடைத்ததும் பூரித்துப்போனாள். அவளது மூன்று வருடக் கொலைக் கனவு நனவாகப் போகிறது என்பதால் சந்தோஷித்தாள். ஜெயராமனைக் கொல்ல, மூன்று வருடங்களுக்கு முன்பே – வனிதாவின் அக்கா தற்கொலை செய்துகொண்டபோதே – எடுத்த முடிவுதான் என்றாலும், கொலைக்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எம்.காம் படித்திருந்த வனிதா, கடந்த மூன்று வருடங்களாக அந்த ஒரே கம்பெனியில் மட்டுமே வேலைக்கான முயற்சியில் விடாது ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். தற்போது


லட்சியக் கொலை

 

 காலை பத்துமணி. அடையாறு. சென்னை. பிரபல துப்பறியும் நிபுணர் டாக்டர் கோபிநாத் தன் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். அவரது டிடெக்டிவ் ஏஜென்ஸி மிகவும் புகழ்வாய்ந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் அவரது ஏஜென்ஸி உள்ளது. டாக்டர் கோபிநாத் மனித மனங்களை துல்லியமாக எடைபோடுபவர். பெரிய பெரிய மர்மங்ளைக்கூட மிக அனாயாசமாகக் கையாண்டு குற்றவாளிகளை ஆதாரத்துடன் கூண்டிலேற்றியவர். அவரது துப்பறியும் திறமைகண்டு தமிழக போலீஸும், இந்தியன் போலீஸ் அகாடாமியும் அவருக்கு விருதுகள் கொடுத்து சிறப்பித்துள்ளன. வாசுகி அவரைச் சந்திக்க பதினோரு


வேட்டை ஆரம்பம்

 

 அன்று மாலை சரியாக மணி ஆறு. நான் டீ.நகரில் உள்ள அந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தேன். “சுரேஷ் உங்களை டாக்டர் அழைக்கிறார் என்று நர்சின் குரல் கேட்டதும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன். டாக்டர் இளமையாக சற்று வழுக்கையோடு இருந்தார்”. ” சொல்லுங்கள் என்ன பிரச்சனை” டாக்டர் நான் ஒரு வாரத்துக்கு முன் வேலை நிமித்தமாக கோவை சென்றிருந்தேன், அங்கு பேருந்தை விட்டு இறங்கும்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று என் மேல் மோதி விட்டது, அப்போ


கனவு துலங்கிய கொலை

 

 இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தை (சிவா) தன் அலுவலகத்திற்கு உடனே வரும்படி யாழ்ப்பாணம் போலீஸ் அத்தியட்சகர் (Superintendent) ஹரி வாட்சன் என்பவரால் அவசரமாக அழைக்கப்பட்டார். பறங்கி அதிகாரிகள் இலங்கை போலீசில் வேலை செய்த காலத்தில் ஹரி வாட்சனும் அவர்களில் ஒருவர் . வாட்சன் கண்டிப்பான அதிகாரி. இன்ஸ்பெக்டர் சிவா எந்தவொரு கடினமான கொலை வழக்கையும் கையாளக் கூடியவர் என்று மிஸ்டர் ஹரி நம்பியதால் அவருக்கு இன்ஸ்பெக்டர் சிவா மேல் நல்ல மரியாதையும் நம்பிக்கையும் இருந்தது. ஒரு தொழிலதிபர் தங்கராஜா மற்றும்


தப்புத் தப்பாய்……சரி…!

 

 அவசர சிகிச்சைப் பிரிவில், ”சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்…” என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த சுதனுக்கு அதிகமான மின்னதிர்வு. நிர்மலா துவண்ட கொடியாய் கட்டிலில் கிடந்தாள். மறைத்துக்கொண்டு ”என்ன உடம்புக்கு ?.” அவனைக் கேட்டான். ”என்னன்னு தெரியலை சார். இருந்தாப்போல இருந்து காக்காய் வலிப்புப் போல வெட்டி வெட்டி இழுத்து சாய்ஞ்சு… கொஞ்ச நேரத்துல பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம். உயிர் மட்டும் ஓடிக்கிட்டிருக்கு. தூக்கிக்கிட்டு வந்தேன்.” என்ற மகேஷ் வழிந்த கண்ணீரைத்


அறிவுஜீவிகள்

 

 கலிபோர்னியாவில் இருந்த ராம்குமாருக்கு, அவனுடைய மயிலாப்பூர் வீடு முற்றிலுமாக வழித்து துடைத்து கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் துடித்துப்போனான். அடுத்து என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. கம்பெனியின் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக கலிபோர்னியா வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் இருபதுநாட்கள் இங்கேயே தங்கி இருந்து வேலையை முடிக்கவேண்டும். இவன் அமெரிக்காவில் இருக்கும்போது, பாவம் சுஜாதா தனியாக சென்னையில் குழந்தையுடன் தவிக்க வேண்டாமே என்பதற்காக அவளை ஒருநாள் முன்னதாக ஸ்ரீரங்கம் அனுப்பிவிட்டு, மயிலாப்பூர் அபார்ட்மென்ட்டை நன்றாக இழுத்து பூட்டிவிட்டுத்தான்