கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

177 கதைகள் கிடைத்துள்ளன.

மகா ஸ்வாமிகளின் தீர்க்க தரிசனம்!

 

 ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத் துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் காஞ்சி மகா பெரியவர். போகும் இடங்களில் எல்லாம் அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர் களை ஆசீர்வதித்தபடியே தனது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் காஞ்சி மகான். வேக வேகமான நடை அவருக்கே உரிய தனிச் சிறப்பு! அவருடன் சென்ற மடத்துப் பணியாளர் களால் ஸ்வாமிகளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் பாதங்கள் சிவந்தும், காயம் பட்டும் ரத்தம் கசியும் நிலையில் இருந்தன.


செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?

 

 மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில் வல்லவர். மூலே சாஸ்திரியின் நண்பர் புட்டி சாகேப். நாக்பூரில் வசித்து வந்த இவர், ஷீர்டி சாயிபாபாவின் பக்தர். ஒரு முறை புட்டி சாகேப்பை சந்திக்க விரும்பினார் மூலே சாஸ்திரி. அவர் ஷீர்டிக்குச் சென்றிருப்பதை அறிந்து, தானும் அங்கு சென்றார். அங்கு, சாயிபாபாவை தரிசிக்க துவாரகா மாயீயிக்குக் (பாபா தங்கியிருந்த மசூதியையே துவாரகாமாயீ என்பர்) கிளம்பிக் கொண்டிருந்தார் புட்டி


கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?

 

 சீடனுக்கு வந்த சந்தேகம் பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத் தோரணங்கள்… வாழைப் பந்தல்கள்… வண்ண அலங்காரங்கள் என கோலாகலமாகக் காட்சியளித்தது. குறுநில மன்னர்கள், மாமுனிவர்கள், கலைஞர்கள் மற்றும் சாஸ்திர மேதைகள் பலரும் தலைநகரில் குழுமி இருந்தனர். வெற்றி விழாவுக்கு மகரிஷி பதஞ்சலியையும் அழைத்திருந்தார் புஷ்யமித்திரர். பதஞ்சலியின் தலைமையில் வெகு சிறப்பாக யாகம் நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பாகக் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அழகிகளும் நடன மங்கையரும்


கிரிவலமும் பிரகலாதனும்!

 

 திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது, திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக் கூடாது. அதற்குப் புராணம் கூறும் காரணம் இது: மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம் பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி. அப்போது, அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்த நாரதர், ‘திருவண்ணாமலை திருத்தலம் சென்று,


பகவான் கேட்டு அணிந்த ஆடை!

 

 மதுரா நகர மன்னரின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர் திரிபுரதாசர். அவர் «க்ஷத்ராடனம் செய்ய விரும்பியதால், மன்னரும் முறைப்படி மரியாதை செய்து, அவரை வழியனுப்பி வைத்தார். மதுராவில் உள்ள தனது சொத்துகளை ஏழை எளியோருக்கு தானம் செய்து விட்டு, பிருந்தாவனத்தை அடைந்த திரிபுரதாசர் அங்கேயே தனது ஆயுளைக் கழிக்க விரும்பினார். தினந்தோறும் இறைவன் புகழ் பாடிப் பிச்சை எடுத்து, அதை பாகவதர்களுக்கும் அளித்துத் தாமும் உண்பார். நாம சங்கீர்த்தனம் செய்வதையே வாழ்க்கை லட்சிய மாகக் கொண்டிருந்தார். ஒரு ஜன்மாஷ்டமி


பக்தைக்கு அருளிய பாண்டுரங்கன்!

 

 இசை வேளாளர் குலத்தில், சியாமா என்ற பெண்மணியின் மகளாகப் பிறந்தவள் கானோபாத்திரை. நல்ல அழகி. பக்தி மிகுந்தவள். இவளது இனிமையான குரலில் எல்லோரும் மயங்கினர். இசையில் மட்டுமின்றி, நாட்டியத்திலும் தேர்ந்தவள் கானோபாத்திரை. அவளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே பாண்டுரங்கரை மிகவும் பிடிக்கும். எனவே இவளது பாட்டும், நடனமும் பெரும்பாலும் பகவான் பற்றியதாகவே இருந்தது. இவளும் பண்டரிநாதனைத் தன் கணவராக நினைத்து, கற்பனையில் பகவானுடன் வாழ்ந்தாள். பகவானை நோக்கி பக்தன் ஒருவன் ஓர் அடி நடந்தால், உடனே கடவுள்


அமாவாசை பிறந்த கதை!

 

 கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட அவள், பித்ரு தேவதைகளை எப்படியும் தரிசிக்க விரும்பினாள். அதற்காக அவள் அச்சோதம் நதிக்கரையில் 8,000 வருடங்கள் தவம் செய்தாள். அதனால் மனம் இரங்கிய பித்ரு தேவதைகள், ஒரே நேரத்தில் அவளுக்குக் காட்சி அளித்தனர். ‘என்ன களை… என்ன அழகு… என்ன கம்பீரம்!’ என்று அவர்களைப் பார்த்து வியந்தாள் அச்சோதை. அவர்களில் மாவசு என்ற பித்ரு தேவதை


மதிவாணியின் மறுபிறவி!

 

 தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில் குரல் கொடுக்கும் பசுக்கள். இந்தச் சூழலில், இறைவனை தியானித்தபடி இடுப்பளவு நீரில் நின்ற கௌதம முனிவர், கதிரவனை நோக்கிக் கரம் குவித்து அனுஷ்டானம் செய்தார். அப்போது அவர் உடலில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. நிஷ்டை கலைந்த அவர் கண்ணில் பெண் ஒருத்தியின் உடல் தென்பட்டது. சட்டென்று அந்தப் பெண்ணை இழுத்துக் கரையில் போட்டார். சற்று நேரத்துக்குப்


அம்பலப்படுத்த வந்த அந்தணர்!

 

 சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதன் பாடல்கள், எட்டு அடி கொண்டதால், ‘அஷ்ட பதி’ என்று வழங்கப்படுகிறது. கீதகோவிந்தத்தில் ‘வதஸியதி’ எனத் துவங்கும் பாடலை இறைவனே இயற்றியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இந்த ஒப்பற்ற காவியத்தை நமக்கு அளித்தவர் ஸ்ரீஜயதேவர் சுவாமிகள். ஒரு முறை கண்ணபிரானிடம், ‘‘முப்பிறவி எடுத்து உனது திருவிளையாடல்களைப் பாட வேண்டும்!’’ என்று விண்ணப்பித்தாராம் வேத வியாசர்.


வெல்லத்துடன் கலந்த எலி பாஷாணம்!

 

 கேசவ ஸ்வாமி என்பவர், கண்ணனின் பால லீலைகளில் நெஞ்சைப் பறி கொடுத்து, கண்ணனது புகழ் பாடி ஊர் ஊராக அலைந்தவர். இவரது குரல் இனிமையால் பெரிய கும்பல் இவரை எங்கும் சூழ்ந்து விடும். ஒரு முறை தன் குருவுடன் மராட்டிய மாநிலத்தில் உள்ள விஜயபுரத்துக்கு வந்தார். அங்குள்ள பக்தர்கள் இவரிடம் ஏகாதசி வரை தங்கி பஜனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஏகாதசியன்று பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் (விரதம்) இருந்ததால், வறட்சியின் காரணமாக நா உலர்ந்து