கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 18, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

ரோமியோவும் ஜூலியட்டும்

 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர்கள் ஆடவர் 1. கப்பியூலத்துப் பெருமகன்: ஜூலியட்டின் தந்தை. 2. மாண்டேகுப்பெருமகன் : கப்பி யூலத்தின் வரன்முறைப் பகைவன் – ரோமியோவின் தந்தை. 3. ரோமியோ : மாண்டேகுப் பெருமகன் புதல்வன் – ஜூலியட்டைக் காதலித்து மறைவாய் மணந்தவன். 4. பொன்வாலியோ: ரோமியோவின் நண்பர்கள் 5. மெர்குதியோ: ரோமியோவின் நண்பர்கள் 6. டைபால்ட்: ஜூலியட்டின் அருமை மைத்துனன் – ரோமியோவை மல்லுக்


நம்பிக்கை ஒளி…

 

 சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். ‘சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ஒரு நிமிடம். என் நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றுசொல்லி விட்டு முன்னால் வந்து” என்ன சாகுல் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். சாகுலும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரிய


சீருடை

 

 மூட்டையை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வரும் துரும்பனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் காயலான் கடைக்காரர். கடைக்குள் வந்து தோளில் இருந்த சிறிய மூட்டையை மெதுவாக கீழே இறக்கினான். பிறகு மூட்டைக்குள் இருந்து ஒவ்வொரு காலி மது பாட்டிலையும் எடுத்து வெளியில் வைத்தான். கடைக்காரர் பார்வையாலேயே கணக்கு போட்டார், மொத்தம் பத்து பாட்டில்கள். டேய்.. இந்தா முப்பது ரூபா.. காயலான் கடைக்காரர் நீட்டிய பணத்தை வாங்காமல் அமைதியாக அவர் முகத்தையே பார்த்து கொண்டு நின்றான் துரும்பன்.


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 அந்த நேரம் பார்த்து தான் வெளியே போய் இருந்த பரமசிவம் வீட்டுக்கு வந்தார்.அத்திம் பேரும்,அக்காவும் அழுதுக் கொண்டு இருப்பதையும்,அத்திம்போ¢ன் அப்பா உடம்பு தரையில் ‘மல்லாக்காக’ படுத்து இருப்பதையும் பார்த்த அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. உடனே அவனும் அக்கா,அத்திம்பேர் பக்கத்தில் உட்கார்ர்ந்துக் கொண்டு அழுதான். விஷயம் கேள்விப் பட்டு,அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ராகவன் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்து விட்டுப் போனார்கள். ஒரு மணி நேரம் கழித்து ராகவன்


வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்

 

 “மாப்பிளை வீட்டுக்காரர் வருகினம்!” எனக் குரல் கொடுத்தார் சபாபதி. அதைக் கேட்டுப் பெண்வீட்டுக்காரர் ஏதோ விசித்திரம் நடக்கப் போவதைப்போலப் பரபரப்படைந்தனர். “மாப்பிளை வீட்டுக்காரர் வருகினமாம்!” – செய்தி குசினிவரை ஓடியது. ஒழுங்கையின் செம்மண் புழுதியைக் கிளப்பிவிட்ட வாறு வளவினுள் புகுந்து புளியமரத்து நிழலில் நின்றது அந் தக் கார். அங்கு விளையாடிக் கொண்டு நின்ற ‘குஞ்சுகுருமானு களெல்லாம்’ அதைக் கண்டு குதூகலத்துடன் அண்மையில் ஓடி னார்கள். வண்டியிலிருந்து இறங்குபவர்களைச் சுற்றி நின்று வினோதமாகப் பார்த்தார்கள். ஒருவன், காருக்கு


சாவித்ரி

 

 மணையில் சேர்ந்தாற்போல் பத்து நிமிஷம் :சாவித்ரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரத்திற்கு ஒரு முறை மாடிக்கும் கீழுக்குமாய் நடமாடிக்கொண் டிருந்தாள். கல்யாணத்தில் ஆயிரம் ஜோலி இருக்கையில், இந்தச் சாஸ்திரிகளுக்கு என்ன வேலை? சமையல்காரன் சாம்பாரை என்ன பண்ணிண்டிருக்கானோ தெரியவில்லை. (அண்டா ஈயம் போதாதென்று அவளுக்கு நினைப்பு) அப்புறம் அப்பளாத்தை இட்டு வைத்தால் ஆச்சா? பொரித்துப் போடவேண்டாமா? பந்தியில் எல்லாவற்றை யும் பரிமாறி விட்டு, அப்பளாத்தை எடு என்கிற வேளைக்கு அப்பளாத்தைத் தேடினால் என்ன பண்ணுகிறது? எல்லாவற்றையும் பண்ணிவிட்டுக் கடைசி


அட பைத்தியமே!

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கந்தர்வா ஸ்டுடியோ அன்று கல்யாணம்பட்டபாடு பட்டது. ‘காளி யம்மன்’ என்னும் மஹோன்னத படப்பிடிப்பின் கடைசி நாள் ஷூட்டிங் அன்றுதான்! ‘காளியம்மன’ன் கலர் விளம்பரங்கள் ஒரு வருஷமாகயே தமிழ்நாட்டு ரசிகர்களின் உள்ளக் கோட்டைகளை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்திருந்தன. படம் எப்போது வெளிவரும் என்று பஞ்சப் பிரதேசத்தானர் மழையை எதிர்பார்ப்பது போல் காத்திருந்தனர். பேசும்பட ரசிகர்கள்! நட்சத்திர திலகம் கண்ணாமணி பாய் நடிக்கும் படம் என்றும்


ஏன்..? – ஒரு பக்க கதை

 

 சிறிது நாட்களாகவே அமிஞ்சிக்கரை ஆறுமுகத்தின் பெயரை தின, வார, மாத பத்திரிகை, இதழ்களில் காணாதது கண்டு கணேசனுக்குள் ஏகப்பட்ட திகைப்பு, வியப்பு. ஆறுமுகம் இவரின் சமகால எழுத்தாளன் மட்டுமல்ல. இருவரின் கதை, கட்டுரைகளில் குறை நிறைகள் இருந்தால் இருவரும் பேசி, கலப்பது வழக்கம். இப்போது பெயரே காணவில்லை என்பதால்… ‘ஏன்.., என்ன காரணம்..? உடல்நிலை சரி இல்லையா..? ஆளே இல்லை இறப்பா..? ‘ – கணேசனுக்குள் வண்டு குடைந்தது. பொறுக்கமாட்டாமல் கைபேசி எடுத்தார். நண்பன் எண்களைத் தேடி


யார் அவள்?

 

 சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள் திரையிடப்பட்ட அந்த அறையில் சூரிய ஒளியின் ஊடுருவல் தென்பட்டது. கண்களைத் திறந்த அடுத்த நொடி அவன் தேடியது அவனது கைதொலைபேசியைத்தான். வழக்கமாய் அவனது கட்டிலின் வலதுபுறம் அமைந்து இருக்கும் மேசையை அங்குக் காணவில்லை, அதன் மேல் இருக்க வேண்டிய கைதொலைபேசியையும்தான். அளவுக்கு அதிகமான உடல் சோர்வுடன் அவனின் இடதுபுறம் திரும்பியவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி,


என் மகள்

 

 அது ஒரு பின்னிரவு. எங்கள் படுக்கை அறையில் என் மனைவியின் செல்போன் அடித்துக்கொண்டே இருந்தது. அதை எடுத்துப் பேசாமல் அவள் தவிர்த்துக்கொண்டே இருந்தாள். எங்கள் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். செல்போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும், அவள் அதைத் தவிர்த்துவிட்டாள். மீண்டும் அது அடித்தது. எனவே நானே அதைக் கையில் எடுத்துப் பேசப்போனேன். திடுக்கிட்ட என் மனைவி திடீரென குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள். நான் எழுந்துசென்று கதவைத் தட்டினேன். அவள் திறக்கவில்லை. பயந்துபோன நான் கதவை