கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 19, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

திரிபு

 

 புதுவை நகரில் ஒரு பங்களாத் தெரு. ஒரு பங்களாவின் முன்வீடு அது பங்களா எப்பவும் பூட்டியே இருக்கும். அதன் சொந்தக்காரர் “தெகோல்” லில் இருக்கிறார். ரெண்டு வருசத்துக்கு ஒருக்க, நினைத்தால் வந்து கொஞ்சநாள் தங்கிவிட்டுப் போய்விடுவார். முன்வீடு வீதிக்குப் பக்கத்தில் அந்த பங்களாவை ஒட்டி அமைந் திருந்தது ஆரல்ச் சுவரில் பெரிய்ய கிரில்கேட் அதில் ஒரு சிறிய கதவு. முன்விட்டில் இருப்பவர்களுக்கு அது போதும். மூன்றே பேர்கள்; அம்மா, அப்பா, ஒரு குழந்தை குழந்தைக்கு எட்டுமாசம் இருக்கலாம்.


ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது

 

 பனங்கூடலுக்கு மேற்புறமாக ஒக நாரை பறந்து வந்தது. அந்த நாரையின் இறக்கைகள் மெதுவாகவே அசைந்ததில், அது களைப்படைந்திருக்கிறதென்பதும் விரைவில் எங்காவது ஒரு பனை மரத்தில் இறங்கித் தரிக்கும் என்பதும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது. பனங்காணி கடற்கரையில் மணல் புட்டி ஒன்றில் நின்று அந்த நாரையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அருளப்பன். “என்ன மச்சான் ஆகாயத்த பாத்துக் கொண்டு நிக்கிறாய்…” “இல்ல, ஒரு கூளக் கிடாய் பறந்து போகுது அங்காரன்…” “இப்பதான் இந்தியாப் பக்கம் கிடந்து பறந்தந்திருக்கிறார்…” “எங்கவண்டாலும்


அன்புக்கு நன்றி

 

 பஸ் ஸ்டாண்டில் டிரங்குப் பெட்டியும் படுக்கைச் சுருணையும் வைத்துக் கொண்டு நின்றிருந்த அந்த இளைஞனைப் பார்த்ததும் ரமணி ஐயருக்கு மனசிலொரு மூர்க்க சந்தோஷம் பிறந்தது. நாம்ப வெச்ச வத்தி பத்தி எரிஞ்சுட்டுது போல இருக்கே முகத்தில் விஷமத்தனமான நமுட்டுச் சிரிப்பு விகஸிக்க இளைஞனின் அருகே வந்து நின்றார் ஐயர். அவன் எங்கோ பார்த்தவாறு நின்றிருந்தான் முகத்தில் துயரமும் திகைப்பும் கண்ணீர் கலங்கும் கண்களூம்… ”இந்த மாதிரிப் பசங்களுக்கெல்லாம் பாவம், பரிதாபம் பார்க்கக் கூடாது,,” என்று நினைத்துக் கொண்ட


மழலை

 

 திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா@ பெரியப்பா@ குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக்


கான் சாகிப்

 

 கான் எனத் துணைப்பெயர் கொண்ட சில மேதைகள் நினை வில் நின்றனர். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான், எப்போது கேட்டாலும் கண்கள் நிறைறந்து சொட்ட ஷெனாய் வாசித்த உஸ்தாத் பிஸ்மில்லா கான், ‘பாபா ஹாஜி அலி’ எனத் தொடங்கிப் பரவசத்தில் ஆடச் செய்யும் பாகிஸ்தானி சூஃபி பாடகர் நுஸ்ரத் ஃபத்தே அலிகான், இந்திய இசை மேதைகள் அலி அக்பர் கான், ரஷீத் கான், அம்ஜத் அலி கான், யாவர்க்கும் மேலான உஸ்தாத் படேகுலாம்