Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2020

60 கதைகள் கிடைத்துள்ளன.

தொங்கட்டான்கள்

 

 வழியெல்லாம் வட்டில் கிணறு நிறைந்து நீர். பாத்தி கட்டி பசுமை. சங்கரி துர்க்கம் தாண்டிற்று ரயில்வண்டி. ஐந்தாம் முறையாய் காதுக்குள் இளையராஜாவின் குடகு மலை காற்றில் ஒரு பாட்டு. கண்களைக் கடக்கும் மொட்டை பனைகளை போல, துடைச்சுவிட்ட மாதிரி இருக்கு மனசு. ரயில்நிலையம் நெருங்கியதும் தோள் பையும் பெட்டியுமாய் எழுந்தாயிற்று. இறங்கியதும் ‘வணக்கம்’ என்றவாறு அருகில் வந்த இளைஞனை முருகன் என்று அனுமானிக்க முடிந்தது. ‘சங்கரையா..’ என்றதும், ‘ஆமாம், அவர்தானம்மா என்னை அனுப்பிச்சார் . முருகன் .


அன்பைத் தவிர என்னிடம் சொல்ல எதுவும் இல்லை

 

 ‘ஆண்டவா.. இருக்கற எல்லா பிரச்சனைக்கும் விமோச்சனமே இல்லையா..?’ என மனதிற்குள் வேண்டிக்கொண்டே தொழிற்சாலைக்கு கிளம்பினார் குருசாமி… எடுபிடி வேலை தான்.. ஆனாலும் வயது அதிகமாகிவிட்டதால் ஓடியாடி வேலை செய்ய முடிவதில்லை.. ஒரே பரபரப்புடன் காலை வேலை முடிந்து சுள்ளென்று பசிக்க ஆரம்பித்தது. துளி நேரம் ஒருவரும் உட்கார விடவில்லை. கை அலம்பி வரும் போது தான் அந்த சத்தம் கேட்டது. “தயிர் இல்லாத மதிய சாப்பாடா? சான்ஸே இல்ல.. எனக்கு தயிர் வேணும்.. இந்தா பத்து ரூபா..


தேன்சிட்டு கூடு

 

 காலையில இந்த தண்ணி வண்டிக்காரனுங்க தொல்லை தாங்கமுடியல. ஓயாம ஹாரன் அடிச்சிட்டே தெரு முழுக்க சுத்தி சுத்தி வர்றான். வீட்ல தண்ணியில்லாதவங்களுக்கு ஒரு தடவ ஹாரன் அடிச்சா கேக்காதா. ஏன் இப்படி காது கிழியிற அளவுக்கு ஹாரன் அடிக்கிறான்? இதை கேக்க யாருமே இல்லையா. ஒருத்தர் இந்த தெருவுல இருக்காரே. போன வாரங்கூட ரோட்டில வேகமா கார் ஓட்டிக்கிட்டு போன ஒருத்தர மறிச்சு எதிர் வீட்டுக்கார் சண்டை போட்டாரே. அவரு இதையெல்லாம் தட்டி கேக்கமாட்டாரா? கேட்கமாட்டார். ஏன்னா


காலம் மறைத்த மக்கள்

 

 அத்தியாயம்–1 | அத்தியாயம்–2 | அத்தியாயம்–3 நான் மலைச் சிகரங்களுக்கு மேலே பறக்கும்போது கண்ட கேஸ்பக்கின் என் முதல் அனுபவத்தை என்றும் மறக்க மாட்டேன். பனி மூட்டத்துக்குக் கீழே மங்கலாகத் தெரிந்த நிலப்பரப்பை நோக்கினேன். குளிர்ந்த அண்டார்க்டிக்கின் காற்று கேஸ்பக்கின் வெப்பமான ஈரப்பதமுள்ள வளி மண்டலத்துடன் கலப்பதால் அங்கே ஒரு புகை மண்டலமாகக் கட்சி அளித்தது. அதனால் அது மெல்லிய நாடா போன்று நீர்த்திவலைகளைப் பசிபிக் கடலில் நீண்ட தூரம் பரப்பியது. மிக பிரமாண்டமான பாவியல் ஓவியம்


மாமியின் அட்வைஸ்

 

 ஜன சந்தடியற்ற அந்த நெடுஞ்சாலையில் வேகமாக ஸ்கூட்டரில் போவது பரசுராமனுக்கு சுலபமாக இருந்தது. மாலதிக்கும் அந்த சுத்தமான காற்று சுகமாக இருந்திருக்க வேண்டும். பரசுராமன் ஏதோ சொல்ல, காற்றின் வேகத்தில் அவள் காதில் எதுவும் விழவில்லை. அவனை இன்னும் நெருங்கி, ”என்னங்க” என கத்தினாள். ஆமாம், கத்தினால்தான் என்ன? யார் காதில் விழப் போகிறது? இது என்ன அவர்கள் குடியிருக்கும் ஒண்டுக் குடித்தனமா, குரலைத் தாழ்த்திப் பேச! இப்பப் பார்க்கப் போகிற வீடு, ஆயிரம் சதுர அடியாமே!


ஆலமர பேய்

 

 நண்பர்களுக்குள் விளையாட்டாய் ஆரம்பித்த பேச்சு சீரியசாகிவிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள், அட விட்டுத்தொலையுங்கப்பா என்றுஅந்த பேச்சை திசை திருப்ப முயற்சித்தாலும் பேச்சு மீண்டும் மீண்டும் அந்த இடத்திலேயே வந்து நின்றது. இதற்கும் இவர்கள் இளைஞர்கள். வயது இருபதுக்கு மேல் இருபத்தை ஐந்துக்குள் இருக்கலாம். சிலர் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள், சிலர் படிக்காமல் ஊரை சுற்றி வலம் வந்து கொண்டிருப்பவர்கள்.. பேசிக்கொண்டிருந்த இடம் கிராமங்களுக்கே உரித்தான பெரிய ஆலமரமும், அதை சுற்றி போடப்பட்டிருந்த திண்டும். உச்சி வெயில் தாண்டி சாப்பிட்ட


தோ.. தோ..!

 

 படு வேகமாக வந்து தெரு ஓரத்தில் சர்ரென திரும்பியது அந்த வண்டி..! தூக்கி வாரிப் போட்டு .. எழுந்து ஓரமா ஓடினேன் நான்..! அம்மா டக்குனு பயந்து போய்ட்டாங்க.! “உன்ன தெரு ஓரமா படுக்காதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்.! ஒழுங்கா இங்க வந்து ஓரமா மரத்தடியில படு”..ன்னு பயத்தோட அதட்டினாங்க…. ! எனக்கும் ரொம்ப பயமாப் போச்சி.. பேசாம சைலன்ட்டா ஓடிப் போய் அம்மா கிட்ட படுத்துகிட்டேன்..! அக்காவும் ஏற்கனவே அம்மா கூடத்தான் இருந்தா..! எனக்கு தூக்கம்


மேடம்..! மேடம்…!! மர்டர்..!!!

 

 அதிகாலை நேரம். கருப்பும் வெளுப்புமான காலம். சூரியக் குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடு. வானமகள் வலியால் வெளுத்துக் கொண்டிருந்தாள். மெரினாவின் கடற்கரை ஓரச் சாலையில்….கருப்பு கண்ணாடிகளை ஏற்றி விட்டுக் கொண்டு அந்த வெள்ளை நிற இன்னோவா கார் பத்துக் கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவான வேகத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பலப்பல பெரிய மனிதர்களிருந்து சாமான்யர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஓடிக்கொண்டும், நடந்துக் கொண்டும் , இன்னும் பலப்பல யுக்தி, வித்தியாசங்களில் உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருந்தார்கள். உணவே விஷமாகப்


ஆடிய ஆட்டம் என்ன, தேடிய செல்வம் என்ன…

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 கொஞ்ச நேரம் கழித்து வரதன்”இதோ பாருங்க.உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லே.நம்ப ‘பாக்டரி’ இப்போ ரொம்ப நஷ்டலே போயிண்டு இருக்கு.இந்த நிலைமைலே என்னால் நீங்க கேக்கற சம்பள உயர்வு,போனஸ் உயர்வு ‘இன்சென்டிவ்’ உயர்வு எல்லாம் இப்போ தர முடியாது” என்று சொன் னார்.ஆனால் ‘யூனியன் தலைவர்கள்’ உடனே அவர்கள் கேட்டதை வரதன் கொடுத்தே தீர வேண்டும் என்று கேட்டு பிடிவாதம் பிடித்து வந்தார்கள். வரதன் அவர்களைப் பார்த்து “தயவு செஞ்சி ‘ஸ்ட்ரைக் மட்டும் பண்ணாதீங்க.நம்ம


தெனாலிராமன்

 

 தெனாலிராமன் (கி.பி. 1509 – 1530) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் விஜய நகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப் புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப் பட்டார். உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச்