கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2019

80 கதைகள் கிடைத்துள்ளன.

காத்தாயி

 

 ஊருக்குள்ள ரொம்ப ராசியானவன்னு பேரெடுத்தவ காத்தாயி.. அவளைப் பாத்துட்டுப் போனா நடக்காதுன்னு நினைக்கிற காரியங்கூட நடக்கும்ன்னு நம்ப ஆரம்பிச்சாங்க… முக்கியமா எங்கயாச்சும் போகையில காத்தாயி எருக்கொட்டிட்டு எதிரே வந்தாள்ன்னா போறவுகளுக்கு அந்தக் காரியம் அப்பவே முடிஞ்ச மாதிரி சந்தோஷம். பொண்ணு மாப்ளை பேசுறதுன்னா அவளைக் கூட்டிக்கிட்டுத்தான் போவாங்க. அப்படிப்பட்ட காத்தாயி இன்னைக்கு ஊருக்குள்ள ராசியில்லாதவளா ஆயிட்டா… அன்னைக்கி அவளைப் பாத்துட்டுப் போனா மண்ணெல்லாம் பொண்ணாகும்ன்னு பேசுன சனங்க இன்னைக்கு அவளைப் பாத்துட்டுப் போனா பொச கெட்ட வாய்க்கு


அம்மாவின் கட்டளைகள்

 

 எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை நான் என் அம்மாவைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். அதுவரை அவரை நான் இந்த உலகத்திலேயே இருந்த மிகக் கொடுமையான அம்மா என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என் குழந்தைகளை நான் வளர்க்க முற்படும் போதுதான் தெரிகிறது என அம்மா எவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்டிருந்தார் என்பது. எங்கள் அப்பா எங்களையெல்லாம் தவிக்க விட்டு விட்டு சிறு வயதிலேயே இறந்து போனபோது குடும்பத்தின் முழுச்சுமையையும் என் அம்மாதான்


உண்மை

 

 அம்மா! ரேவதி, சீக்கிரமா எழுந்திரு. கொஞ்சம் எழுந்து வேலையை பாரு! நானே எல்லாம் செய்யனும்! இதுக்கெல்லாம் ஒருத்தன் வருவான் பாரு, அப்ப தெரியும் இந்த அம்மாவோட அருமை. என காலை மந்திரம் ஓதினாள். ரேவதி எழுந்து வந்து அப்பாவைப் பார்த்து கண்ணடித்தாள், எப்படி உனக்கு என் அப்பா மாட்டின மாதிரியா? எனக் கேட்டுக்கொண்டே வந்தாள், காபி கொடும்மா! டேய் பல்லை தேயுடி,! அம்மா, அது நம்ம பல்லு, எப்பவேணாலும் தேய்க்கலாம், நீ காபி கொடு! என்றாள் துடுக்காக!


தமிழ் பெண்!

 

 சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில் புகழ் பெற்ற டாக்டர்கள். சிவராமனின் மகன் ஶ்ரீதர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அமெரிக்காவில் தான்! சிவராமனுக்கு தன் மருமகள் தமிழ்நாட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை! கோவையிலிருக்கும் தந்தை விசுவநாதனுக்கு விபரமாக எழுதி, மகனை ஒரு மாத விடுப்பில் கோவைக்கு அனுப்பி வைத்தார். விசுவநாதன் தன் மனைவி சாந்தியுடன் நியூஜெர்ஸிக்குப் போய் மாதக் கணக்கில்


விஞ்ஞானியின் காதல்

 

 நிசப்தமாய் இருந்த அந்த பெரிய ஹாலில் சுற்றிலும் பிரதம மந்திரி முதல், இராணுவ மந்திரி முதற்கொண்டு, அனைத்து இராணுவ அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். நடுவில் ஒரு இராட்சச கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டு முழுவதும் தண்ணீர் நிரப்ப்பட்டு இருந்தது. அதன் அருகில் ஒரு பெரிய மேசை போடப்பட்டு அதில் கம்யூட்டர் போன்ற உபகரணங்களும் இணைக்கப்பட்டு இருந்தன.அந்த மேசையின் அருகில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டு அதில் விஞ்ஞானி மாதேஸ்வரன் உட்கார்ந்திருந்தார். அவர் அருகே அமெரிக்க, அப்பிரிக்க கலப்பின சாயல் கொண்ட இளம்