கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2019

86 கதைகள் கிடைத்துள்ளன.

ஜேன் டீச்சர் ஒரு தேவதைதான்

 

 நீர்கொழும்பு நகரத்தைத் தாண்டி ஒரு ஒதுக்குப்புறமான அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த கிறிஸ்தவ பாடசாலை. அது கிறிஸ்தவர்கள் செறிந்து வாழும் பிரதேச மாதலால் அந்த பாடசாலையிலும் கிறிஸ்தவ பிள்ளைகளே அதிகம் படித்தனர். அன்று பாடசாலை ஆரம்பமாகி முதலாவது நாள். நான்காம் தரம் பூர்த்தி செய்து ஐந்தாம் தரத்தில் உள் நுழையும் மாணவர்களுக்கு விசேடமான நாள். அந்த ஆண்டில்தான் அவர்கள் புலமை பரிசில் பரீட்சை எழுத வேண்டும். தாய், தந்தையர்கள், பிள்ளைகள் அதிக புள்ளி எடுக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு


சதிராட்டக்காரி சந்திரவதனி

 

 முகவுரை தேவ தாசிகள் என்ற கோவிலில் நடனமாடும் தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த ஆடற்கலையே ‘சின்னமேளம்’ என்று மக்கள் அழைத்ததாக அறிய முடிகின்றது. அரசவைக் களங்களிலும், சில ஆண்டவன் சந்நிதிகளிலும் ஆடப்பட்டு கால ஓட்டத்தில் எல்லாக் கோயில்களிலும் இடம்பெறும் நிகழ்ச்சியாக வளர்ந்தது. அங்கெல்லாம் கோயில் பூசைகளில் நட்டுவ மேளத்தைக் கண்ட மக்கள், தேவதாசிகள் ஆட்டத்திற்குச் சிறிய அளவிலான மேளம் (மிருதங்கம்) பாவிக்கப்படுவதனைக் கண்டு அதனை (சின்னமேளம்) என அழைக்க முற்பட்டு


அப்பாவின் இந்துமதி

 

 பின்னேரம் கிட்டத்தட்ட மூன்றுமணியாயிருக்கும். அப்பாவின் அறை மிகவும் அமைதியாயிருக்கிறது. அவரின் கண்கள் மூடியிருக்கிறது. தூங்குகிறார் போலும் என்று ராகவன் தனக்குள்ச் சொல்லிக் கொண்டாலும்,அப்பாவின் வாழ்க்கையின் சட்டென்று வந்த அதிர்ச்சியின்; பிரதிபலிப்புத்தான் அவர் தன்னைமறந்து விட்ட இந்நிலைக்குக் காரணம் என்று அவனின் அடிமனம் முணுமுணுத்தது.அவன் மனம் வலித்தது.அந்த வலியின் நோவை அவனால்ச் சகிக்க முடியாமலிருக்கிறது. தன்னால் முடிந்தவரை தனது குடும்பத்தின் வளர்ச்சிக்கு,குடும்பத்தினரின் திருப்திகளுக்காக,அன்பான நெருக்கமான உறவுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மனிதன் இன்று தன்னைச் சுற்றியிருப்பவர்கள் யாரென்று என்று


நீர்க்குமிழி

 

 பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான் அப்படிக்கேட்டேன். அது தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து. சிலநேரங்களில் பி.முட்லூரில் அந்த வகைப்பேருந்துகள் நிற்பது உண்டு. நடத்துனர் கடலூர் பாண்டி சென்னை என்றபடியே என்னைப்பார்த்து நிற்கும் என்பதற்கு சம்மதமாக தலையையாட்டினார். எனக்கு மகிழ்ச்சி. சீக்கிரமாக சென்றுவிடலாம். சீக்கிரமாக செல்வதில் என்ன மகிழ்ச்சி?. நான் சென்றபின்பு அங்கு மகிழ்ச்சி இருக்குமா? மகிழ்ச்சியின்


நானும் என் பஞ்சாயத்தும்

 

 என்னை பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்வது நல்லது. அறிமுகத்தில்தான் என்னுடைய தொழில் இரகசியமே அடங்கியிருக்கிறது.சாதாரணமாக இன்னார், இன்ன வேலை செய்கிறார் என்றால் அது கேட்பவர்களுக்கு சுவாரசியத்தை தராது. அது போல என்னை போன்றவர்களுக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தித்தான் பழக்கம். அதுவும் கையில் ஒரு ஒலிபெருக்கி கருவி இருந்தால் இன்னும் செளகர்யம். இப்பொழுது உங்களுக்கு இலேசாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இப்பொழுது என்னை மற்றொருவர் அறிமுகப்படுத்துவது போல என்னை நானே அறிமுகப்படுத்தி கொள்கிறேன். இந்த பேட்டையிலே பேரன்பு கொண்ட


வனம்மாள்

 

 சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள். சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுடன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும்


படையல் துணி!

 

 துணிக்கடையிலேயே ஆரம்பித்துவிட்டது எனக்கும் என் மனைவிக்குமான முரண். தீபாவளி நெருக்கம். கடையில் கூட்ட கசகசப்பு. தரை தளத்தில் புடவையைத் தேர்வு செய்யத் தொடங்கியதுமே என் மனைவி, ”படைக்க ஒரு வேட்டி துண்டு எடுத்து வந்துடுங்க.” சொன்னாள். அவளால் மாடி ஏற முடியாது. முழங்கால், முட்டி வலி. ”வேணாம் பிரமிளா ! கைலி எடுத்துக்கலாம் !” ”கூடாது.! வேட்டி துண்டு வைச்சுதான் படைக்கனும்.” முகத்தைக் காட்டினாள். அடுத்த விநாடி எனக்கும் சுர் ஏறிவிட்டது. பொது இடத்தில் எப்படி காட்ட


தீர்ப்பு உங்கள் கையில்…

 

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 காயத்திரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நீ, இப்ப பணம் குடுத்து அதிலே நாங்க சந் தோஷமா இருந்துட்டு,அப்புறமா நீ ‘நான் இனிமே பணம் தர முடியாதுன்னு’ சொல்லும் போது வேலை தேடி போய்,வேலை கிடைக்காட்டா,நாங்க என்ன பண்ணுவோம்.அதனால்லெ நாங்க இப்பவே ஏதா வது வழி பண்ணி கொள்றோம்.எங்களை தயவு செஞ்சி தடுக்காதே”என்று சொன்னாள்.ரமேஷ் உட னே “எல்லோரும் என் கூட வாங்க“என்று சொல்லி அவர்களை ஹாஸ்பிடல் போர்ட்டிகோவுக்கு எதிரே இருந்த


படித்துறை விளக்கம்

 

 (இதற்கு முந்தைய ‘மனைவியும் காதலியும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இருவரும் படித்துறையை அடைந்து அமர்ந்தார்கள். “என்ன கேட்டே சுகுணா?” “இப்ப உங்ககிட்ட பேசிட்டுப் போன பிள்ளை யாருன்னு கேட்டேன்.” “இங்கே தச்சுவேலை பாக்குறாரே மாடசாமி ஆசாரின்னு, அவரோட மகள். கொஞ்ச நாள் முன்னாடி அவளை ஆத்துல இருந்து நான் காப்பாத்தினேன். அதனால இவளுக்கு நான் பக்திக்கு உரிய ஒரு காட்பாதர்.” “ஆங்… ஆமா அப்பா சொன்னார். உங்க பைக் தீப்பிடிச்சி எரிஞ்சு போனதுக்கும்


காவலன்

 

 பின் மாலையில் நகரமெங்கும் பனித் தூற்றலடிக்க, கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் மணியோசை ஒரு மெல்லிய இசையாய் படர்ந்தது. சாலை முழுதுமாய், விலத்தமுடியாதபடி நிறைக்கப்பட்ட வாகனங்கள். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமாய், கிணற்றுக் கட்டிலில் பிள்ளையை கிடத்தி வந்த அவசரத்தோடு விரைந்தன. தோளிலொரு ஆட்டுக்குட்டி. சட்டை முழுவதும் குருதி. ஒரு சின்ன இடைவெளியெடுத்து, சைக்கிளை சாலையில் நுழைத்தான் மணியரசன். வேகமெடுத்து விளக்கொன்று எரிந்தணைவதுபோல், பொழுது பட்டுச் செல்கிறது. ஏன் இந்த அவசரம்? எனுமாற் போல் மரங்களுக்குப் பின்னால் ஒளித்திருக்கும் சூரியனை ஒருமுறை